“ஒரு வேண்டுகோள்”

 

மீ.விசுவநாதன்

விபாண்டகமகரிஷி சிவலிங்க வடிவாக

தீயின் நிறத்து மேனியனே – உமை

தேவி மனத்து நாயகனே – எம்

தாயின் குணத்துத் தந்தையனே -உயிர்த்

தாகம் தணிக்கும் கங்கையனே – மனக்

காயம் தீர்க்கும் பரம்பொருளே – உன்

காலைப் பிடித்துக் கேட்கின்றேன் – பலர்

மாயும் தீய மதப்பித்தை – ஒரு

மாயம் செய்து திருத்திடுவாய்.

 

(இன்று (28.01.2018) பிரதோஷம் )

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “சிவபிரதோஷம்

  1. பிரதோசவழிபாடு
    =======;======;====
    #$சந்திரர்க்கு உகந்த திங்கள்
    நந்தியம் பெருமான் _ எங்கள்
    நலங்களை காத்து நிற்க!!
    நல்லவைகள்அள்ளிக்கொடுக்க!!
    #$சோமவாரப்பிரதோசம்
    சோகங்களை விரட்டிவிடும்
    நடனத்தின் நாயகனை
    நாடுவோர்க்கு துயர்விலகும்
    #$கருணையே வடிவான
    காருண்ய மூர்த்தியாம்
    கயிலைநாதன் அகமகிழ்ந்து
    களித்திருக்கும் இனியதினம்!
    #$ஆனந்தத்தை வாரித்தரும்
    அருமையான கிழமையிலே
    அவன்பாதம் சரணடைவோம்
    சிவன்சேவடி பணிந்திடுவோம்!!
    ????????????????
    ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி…
    பவானி…ஈரோடு9442637264…
    ???????????????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *