-மேகலா இராமமூர்த்தி

How To Draw Mahatma Gandhi Easily Mahatma Gandhi Drawing Pictures Please - Drawing Of Sketch - Great Drawing

வெள்ளைப் பரங்கியன் ஆட்சிகூட உம்மைப்
பத்திரமாய்ப் பாதுகாத்த தையா!
கொள்ளை போனதே உந்தனுயிர் இங்கே
இந்துச் சோதரன் கையாலே அந்தோ!

பாழ்பட்டு நின்றதேசம் தன்னை
வாழ்விக்க நீயிருந்தாய் அன்று
தாழ்வுற்று நிற்கின்றோம் இன்று – எமைக்
காத்திடவோர் உத்தமனும் இல்லை!

இங்கே,
சாதியின் பெயராலே சண்டை – நிதம்

சாமியின் பெயராலே சண்டை
வீதிகள் தோறும்தினம் சண்டை
நாதியற்றுப் போனோமே நாங்கள்!

வாராது வந்தமா மணியே  உம்மைத்
தொலைத்துவிட்டு நிற்கின்றோம் தனியே
தீராத எங்கள்துயர் தீர்க்க நீர்
வாரீரோ பிறப்பெடுத்து மீண்டும்!

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மகாத்மாவுக்கு அஞ்சலி!

 1. #ஆத்மாக்களுக்குத்தான் அழிவு..
  மகாத்மாவுக்கு இல்லை சாவு!!!
  அழித்ததது பூதவுடம்பு தான்..
  மரிக்காதுமண்ணிலவர் புகழ்தான்!!
  #உலக உருண்டைக்கு பாடம் காந்தி!
  உயிரைஎடுத்ததால் பாவம் ஏந்தி..
  உண்மையிலிழந்தது பாரதம் சாந்தி!!
  உரைத்த அகிம்சையை நிதமும்சிந்தி!!!
  (அன்புடன்..ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *