பிச்சைத் திருவிழாக்கள்

இராதாவிஜயன்
 

 

 

மக்கள் குறை தீர் மன்றங்கள் 

இங்குறங்க, 

சிற்சில இயங்கிட

பற்பல அலுவலர் சாய்ந்துறங்க

குறை எங்குறைக்க

தீர்வெங்கு கண்டிட??

காலந்தோறும் காண்பது

தேர்தல் விழாக்கள்

செப்படி வித்தைகள் 

மக்கள் மயங்கிட……

நம்குறை தீர்க்கா

நல்லதோர் அரசு

பின்னோரு நாளும்

பயனுறா திட்டங்கள்

வகுப்பதோடு ஏறிடும்

பரண்களிலே,

எமக்கென்ன ‘நீர்’ கேட்கும்

தோரணை பிரச்சாரத்திலே

நீர்சொல்லக் கேட்பது

ஓர் வழக்கமானது 

ஆட்சியில் அமர்ந்தபின்னே??

யாமிட்ட பிச்சையினை

துச்சமெனக் 

கண்டனையோ?

முட்டாள் யாசகா

இனியாவது உன்பெயரென 

மட்டும் அறிந்துகொள்!

சொல்லிச் செய்வது

உம் நாடகம்

செய்தபின் சொல்வது 

எம் நாடகம்

1 thought on “பிச்சைத் திருவிழாக்கள்

  1. உன் கவிதை அற்புதம் !! அவர்கள் அனைவரும் செவிடர்கள் !!நடத்துவது அனைத்தும் நாடகங்கள்!!பொய் பிரசாரம் செய்வதே பிழைப்பாகும் ஊடகங்ங்கள்!!!உணர்தால்தான் நாம் மனிதர்கள்!! மாக்கள் மத்தியில் வாழும் நம் மக்கள் இனியாவது அறியுங்கள் !!! திருந்துங்கள்!!! செயல் படுங்கள்!!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க