வாழ்க்கை!
-டாக்டர். திரிவேணி சுப்ரமணியம்
காலத்தின் பேரழைப்பில்
கட்டுண்டு நிற்கிறேன் நான்
சுயநம்பிக்கையின்
சுவடுகள் கூட இல்லாமல்
எல்லாம் முடிந்தும்
ஏதோ ஒரு மாய ஈர்ப்பு
தொக்கி நிற்கிறது
வாழ்க்கை குறித்த
ஆர்வத்தையும் நோக்கத்தையும்
இடைவிடாமல் தந்துகொண்டிருக்கும்
இந்த வாழ்க்கை எதைத்தான்
எதிர்பார்க்கிறது என்னிடம்?