நிலவைச் சீண்டிய காற்று
குமரி எஸ். நீலகண்டன்
காற்று மரத்தின்
கிளைகளாய்
நீண்ட கம்புகளை வைத்து
சதா நிலாவை
அடித்துக் கொண்டே
இருக்கிறது.
கிளைகளின் அசைவில்
தேன் கூட்டிலிருந்து
தேன் சொட்டிற்று.
கூரிய இலைகள்
நிலாவைக்
கீறிய போது
மரத்திலிருந்து
நட்சத்திரங்களாய்
ஒளிப் பூக்கள்
சொட்டின.
நிலாவைப் பார்த்தேன்.
நிலாவின் முகத்தில்
இல்லை எந்தத்
தழும்புகளும்.