துடித்துப் பிரிந்த துணைப் பறவை – 3, சி. ஜெயபாரதன், கனடா

 

கண்முன் உலவும் நிஜத்
திரைக்காட்சி
தெரியாது !
உடனுள்ள பொக்கிசம் உன்
பையினில் இருக்க,
அதன்
உன்னதம் தெரியாது !
உயிர் பிரிந்து
போன பின்
அதன் இழப்பு உன்
ஊனை உருக்கு தப்பா !

+++++++++++++

எனக்காகப் பிறந்தாள்,
எனக்காக வளர்ந்தாள்,
எனக்காகப் பூத்தாள்,
என்னையே மணந்தாள்,
என் இல்லத் தீபம்
ஏற்றினாள்
ஐம்பத் தாறு ஆண்டுகள் !
ஆனால் அன்று
நின்றதவள்
கைக் கடிகாரம்.

+++++++++++++++

பிரார்த்தனை தொடர்கிறது.

சி. ஜெயபாரதன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *