-சி. ஜெயபாரதன், கனடா

என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை !

[Miss me, But let me go]
++++++++++++++

[32] மானுடப் பிணைப்பு [Human Bondage]

“மானுடம் பூத்தது
வாழ்வதற்கு!
மன்மத ராகங்கள்
காதலுக்கு!” என்று
கனடா கவிஞர் புகாரி
கவிதை
எழுதி வைத்தார்.
முன்புறம்
ஒரு கதவு மூடினால்
பின்புறம்
மறு கதவு திறக்கிறது!
இறுதியில்
பிரிந்து செல்லும் கை
பிடித்தது
என் இடது கையை!
உடனே அடுத்து நான் வாழப்
பிணைக்கும்
இருகரங்கள் பற்றி
இழுத்துக் கொள்ளும் என்னைத்
தன்வசம்!
இன்னும் ஆயுள் நீடிக்கும்
உனக்கு!
வாழ நினைப்பாய்.
உதவ முனைவாய்,
இன்னும் முடிக்க வேண்டிய
வினைகள் பல
உள்ளன உனக்கு!
பயணம் முடிய வில்லை
உனக்கு!

+++++++++++++++++++++

[33] சிலுவை

ஒவ்வோர் மனிதனும்
தன் முதுகிலே
தனது சிலுவைச்
சுமந்து கொண்டு தான்
சுற்றி வருகிறான் உலகை
செக்கு மாடுபோல்,
தெரிந்தோ
தெரியாமலோ!
மதுபானம் சிலருக்கு!
மரிவானா சிலருக்கு!
மடிவெடி சிலருக்கு!
புற்று நோய் சிலருக்கு!
பட்டென வெடித்துக் கொல்லும்
இரத்தக் குழல் வீக்கம்
சிலருக்கு!
பயண முடிவிலே சிலுவையில்
யார் உன்னை அடிப்பது
ஆணியில்?
ஊழிக் காலன் தான்!

++++++++++++++++++

பிரார்த்தனை தொடர்கிறது.
சி. ஜெயபாரதன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *