இலக்கியம்கவிதைகள்

இந்த நெருப்பு

செண்பக ஜெகதீசன்

நெருப்பு இது

சுடுவதில்லை..

அடுப்பெரிக்கவும்

ஆவதில்லை..

ஆனாலும்

அழகு சேர்த்திடும்

இரவுக்கு..

இருக்குமிடத்தைக் காட்டி

இரையாகிப்போகும்

எதிரிக்கு..,

இது-

இரவுக்கு விழியான

மின்மினி…!

படத்திற்கு நன்றி

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க