சுந்தர காண்டம் தொடரில் சிம்ரன் – தொலைக்காட்சி நிகழ்ச்சி

1

திங்கள் முதல் வெள்ளி வரை தினந்தோறும் இரவு 7:30 மணிக்கு பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நெடுந்தொடர் சுந்தர காண்டம்.

சின்னத்திரையில் அடியெடுத்து வைத்திருக்கும் சிம்ரன் இந்தத் தொடர் மூலம் தமிழக ரசிகர்களைச் சந்திக்க வருகிறார்.

வெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தில் திருமணம் செய்து கொண்டு இந்தியப் பெண்கள் படும் துயரங்களையும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும் மையமாக வைத்து பயணிக்கிறது இந்தத் தொடர்.  பெண்கள் மட்டுமல்லாது அனைத்துத் தரப்பினரையும் மையமாக வைத்து பயணிக்கிறது இந்தத் தொடர். அனைத்துத் தரப்பினரையும் வியக்க வைக்கும் குடும்பப் பின்னணியோடும் பிரம்மாண்டமான வெளிநாட்டு படப்பிடிப்புகளோடும் நேர்த்தியோடு உருவாக்கப்பட்டிருக்கிறது சுந்தரகாண்டம் எனும் இந்தப் புதிய தொடர்.  சிம்ரனுடன் ரிஷி, சுஜிதா ஆகியோரும் இணைந்து முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  இந்தத் தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை தினந்தோறும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “சுந்தர காண்டம் தொடரில் சிம்ரன் – தொலைக்காட்சி நிகழ்ச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.