ஐஸ்பாய்

man walking in the night
பாஸ்கர் சேஷாத்ரி
இதோ கடைசிப் பறவையும் இருட்டில் கூட்டைத் தேடி விரைகின்றது .
ரஸ்தாவின் வண்டியும் நின்று போய் இருட்டாய்த் தெரிகிறது .
சுவர்க்கோழிகள் கும்மாளம் இடுகின்றன
மின்மினிப் பூச்சிகள் ஒன்றின் வெளிச்சத்தில் ஒன்றைக் காண்கின்றன .
இங்கு மட்டும் நக்ஷத்ரங்கள் பிரகாசமாய்த் தெரிகின்றன.
ஊர் சுற்றப் போன நிலா, இன்று காணவில்லை
புற அமைதி திகில் ஊட்டுகின்றது. ஆனாலும் பயம் ரசிப்பு தான்.
ஏதோ ஆலையின் சங்கு எனக்கு மட்டும் முடியவில்லை .
பூமியின் ஒரே ஆத்மா நான் மட்டும்தான்.
எங்கு உட்கார்ந்தாலும் உலகை முற்றிலுமாய்க் காண முடியவில்லை .
எனக்குள் ஓர் உலகம் நிர்மாணித்தேன்.
அதில் என்னைத் தவிர எல்லோரும் உலா வருகிறார்கள்
கடைசி வரை என்னை நான் கண்டுபிடிக்க முடியவில்லை.