எனக்கு பிடித்த பாட்டு அவளுக்கும் பிடிக்கும்
கமர்கட் என்றால் உயிர்
சட்டையில் நான் கடித்துடைத்த சரி பாதி அவளுக்கு எப்போதும் உண்டு
ரப்பர் பதிவில் கிடைத்த படத்தை அவள் அழிக்கவேயில்லை
அவளுக்குச் சறுக்கு மரம் பயம் –
நான் பயம் வரவழைத்துக்கொண்டேன்
கருப்புப் பலகையில் வரையும் வீட்டில் ஓர் உருவம் அவள் என்று எனக்கு அப்போது தெரியாது
நான் அவள் சீருடை போட்டுக்கொண்டேன்.
அவள் அவளாகவே இருநதாள்
நான் நானாக இல்லை
ஒரு நாள் எல்லாம் உடைந்தது
கழிவறையில் ரகசியமாய் நான் விசும்பினது போல பிறகு அழவில்லை .
எதையும் இனம்காண முடியவில்லை .
இப்போதும் .
நான் சென்னை வாசி . ஆனால் வாசிப்பதில்லை . தொலை காட்சி தான் வாழ்க்கை . படித்தது பட்டம் . எல்லாம் மறந்து விட்டது .
வயது அம்பத்து நான்கு . சு ரவி வாழ்ந்த மயிலை எனக்கு மூச்சு . கிரேசி மோகன் வாழும் மந்தவெளி எனக்கு சிந்து வெளி .
சொந்தமாய் தொழில் . போட்டியான வாழ்க்கை . சிவாஜி பிடிக்கும் . மெல்லிசை மன்னர் என்றால் உயிர் . சுஜாதா எனக்கு பக்கத்து தெரு . பாலகுமாரன் கூப்பிடு தூரத்தில் . மணமானவன் . மனைவி தனியார் நிறுவனத்தில் பணி . விளக்கேற்றுவது நான் தான் ஒரு மகன் . கல்லூரியில் . கர்நாடக சங்கீதம் பயின்று கச்சேரியும் செய்து வருகிறான் .எழுத்து எனக்கு பிடிக்கும் .