சி. ஜெயபாரதன், கனடா

(பால் உணர்வு)

முதிர்ச்சி யுற்ற ஆடவனின்
முதற் கடமை!
தனித்த மாதுக்கு
மனை வாழ்வு அளிப்பது!
பெண்ணைப்
பெண் ஆக்குவது
ஆண்மீகம்!
ஆணை
ஆடவன் ஆக்குவது
பெண்மீகம்!
ஆண் பெண் நேசிப்பு என்பது
அடிப்படை உணர்வு.
ஆன்மீக உணர்வு.

இணக்கமுள்ள  மாதை
வீணை யாக்கி விரல்களால்
இன்னிசை மீட்டு!
வரவேற்கும்
தேன் கூட்டில் நுழையப்
புல்லாங் குழலில்
இன்னிசை பாடு வாயால்!
தனித்துவ மாதைத்
தம்பதி ஆக்க முனைந்தேன்.

கணவனை இழந்த காரிகைக்கு
மணவாழ்வளிக்க முன்வந்தேன்!
மறுத்தாள்,  கடிந்தாள்,
வெறுத்தாள்
மங்கல இல்வாழ்வை,
விரட்டி அடித்தாள்.
சமூகப்
புறக்கணிப்பு வேதனை
பொறுத்தாள்.
இல்வாழ்வோர்
இணக்க உடன்பாடு.
நோயோ, நொடிப்போ, இழப்போ
வலியோ, வறுமையோ
சிறுமையோ,
செல்வச் செழிப்போ,
சீரழிவோ,
மரணம் வரை
ஒன்றி வாழும் ஒருங்கு
உறுதி இல்லை!

தாயோ, தாரமோ, தங்கையோ,
கணவனை இழந்து
தனித்த மாதோ,
பெண்ணை
மனிதப் பிறவியாய்க் கனிவுடன்
மதிப்பது, நடத்துவது
இயற்கை விதி!
மனை வாழ்வை நெறியுடன்
இல்லறம் ஆக்குவது:
காம யோகா.

கர்ம யோகா, காம யோகா
ஞான யோகா என்ற
மூன்றும்
குடும்ப வசிப்புக்கு இலக்கணம்!
ஆண் பெண் கூடிப் புரியும்
ஒப்பந்தம்.
காம உணர்வு ஒரு யோகா
அதனைப்
பூமி நெறியாக்கு!
தெய்வ நெறியாக்கு!

கடலுள் மூழ்கிய போது
கயிறு மிதப்பு நீட்டி
என்னைக்
காப்பாற்றிய மாது
காத்தது என்னையா?
தன்னையா?
தகன  மாளிகையில்
ஒரு கதவு மூடிய போது
அடுத்த  கதவு
ஏன் திறந்த தெனக்கு?
ஆயுள் நீள்கிறதா?
என் வேலை
இன்னும் முடியவில்லையா?
வேலிக்குள் ஒளிந்திருக்கும்
உன்னைத் தூக்கி வந்து
என் மடியில் வைத்து
தேன் மழை கீதம் பொழிய
வீணையாக்கி
விரல்களால் இசை மீட்ட
வேண்டும்!

இள வயதோ, முது வயதோ
வாலிபமோ
வற்றாமல்,
தொட்டணைத்து
ஊறிடும் காம சுரப்பிகள்
மானிடர்க்கு
உடல்நலம் அளிப்பவை!
ஆன்மாவின்
இயக்க ஊக்கிகள், இளமை
அளிப்பவை!
அழகு கொடுப்பவை!
ஆயுளை
நீட்டிக்க வைப்பவை!
உன்னதச்
சேய்களை உருவாக்கும்
அமுத சுரபிகள்.

அன்புக்கும் உளதோ  பெண்ணிடம்
அடைப்புத் தாழ்?
பெண்ணின் அடைப்புத்  தாழை
உடைப்பது ஆண்மீகம்!
பெண் பெண்ணாவது
ஆண்மீகியால்!
ஆடவன் ஆணாவது
பெண்மீகியால்!
இருபதாண்டு காலம்
தவஞ் செய்யும்
முதிய பிரமச்சாரி நான்!
இதயம்  இணங்கி நீயும், நானும்
இணைவோம்;
தனித்த மாதைக்
காதலித்து
தம்பதி ஆக்கி விடு.
புதிய வாழ்வு
இனியவள் உன் துணைவி  .
ஒட்டு மாங்கனி
மடி மீது வைத்து
இதய வீணையாய் மீட்டு
காம யோகா புரி.

படகோட்டி அவள்
பாய் மரப்படகு  அவன்!
கடல் மீது துணிவுடன்
கலம் செலுத்துவோம்!
ஊடுவோம்,
கூடுவோம், சாடுவோம்!

ஆடிப் பாடி பணி புரிந்தால்
அலுப்பில்லை!  அதனை
ஆணும் பெண்ணும்
பேணா விட்டால் அழகில்லை,
ஊடலும் கூடலும்
அப்படித்தான்!
ஒழுக்க வாழ்வில்,
இழுக்கு நேராது ஆண் பெண்
இணக்கத்தோடு
உணர்வுப் பயணம் செய்தலே
காமயோகா!

(தொடரும்)

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க