பெருஞ்சித்திரனாரும் வள்ளலாரும் – பேராசிரியர் அரசேந்திரன் நேர்காணல்
சந்திப்பு: அண்ணாகண்ணன்
தமிழறிஞரும் வேர்ச்சொல் ஆய்வு வல்லுனருமான கு.அரசேந்திரன் அவர்களை அவரது இல்லத்தில் (08.09.2020) சந்தித்தேன். அரசேந்திரன், சென்னை, தாம்பரம், கிறித்தவக் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராகத் திகழ்ந்து, ஓய்வு பெற்றவர். இவர் ஆக்கிய கால் அடி தாள் சொல் வரலாறு, உலகம் பரவிய தமிழின் வேர்-கல் ஆகிய ஆய்வு நூல்கள், பெரும் புகழ் பெற்றவை. கம்பராமாயணத்தில் அணிகள் என்னும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். பாவலர் பெருஞ்சித்திரனாரின் மாணவர். தமிழ்த் தேசிய உணர்வு கொண்டவர். வள்ளலார் வழி நடப்பவர்.
இந்த நேர்காணலில் பெருஞ்சித்திரனாரையும் வள்ளலாரையும் தம் வழிகாட்டிகளாக ஏற்றுக்கொண்டது ஏன் என்று விளக்குகிறார்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
வணக்கம்! பன்னிரண்டு மணித்துளி நேர்காணலை எவ்வளவு சிறப்புடன் கையாளமுடியுமோ அப்படிக் கையாண்டு வெற்றி பெற்ற நேர் காணல் இது. ‘அஞ்சாத சிங்க மரபு’ என்று ஒரு மரபிருப்பதை அறிந்து கொளள உதவிய சிறப்பு வாய்ந்தது. “மொழி ஆய்வு என்றால் பாவாணர், அருள் நெறி என்றால் அவர் வள்ளலார், மொழி நாடு இனம் என்றால் அதற்குரியார் பாவலரேறு பெருஞ்சித்திரனார்” என்னும் இரத்தினச் சுருக்கமாக வெளிவந்த முடிவுரை நேர்காணலுக்கு மகுடம். இமயமலையை நேர்காணல் செய்ய முற்படுகிற போது சிறறுளி போதாது. இன்னும் ஒரு சில வலிமையான வினாக்களை நெறியாளர் கொண்டு சென்றிருக்கலாம். அவரும் “இன்னும் பேச வேண்டியதிருக்கிறது” என்னுந் தொடரால் விடையிறுத்துள்ளார். நல்லார் சொல் கேட்பதும் நன்று! வாழ்த்துக்கள்! தொடர்க!