கொலு 2020 – சுதா மாதவன் வீட்டிலிருந்து

சென்னையில் வசிக்கும் சுதா மாதவன் தம் வீட்டில் வைத்துள்ள கொலுவை நமக்காகப் பதிவு செய்து அனுப்பியுள்ளார். ஒவ்வொரு பொம்மையின் பின்புலத்தையும் வயதையும் பெருமைகளையும் அவர் எடுத்துரைக்கும் விதம் அழகு. அதிலும் 32 ஆண்டுகள் வயதுடைய பொம்மைகளைப் பார்க்கையில், அந்தக் காலத்தையே கண்முன் காண்கின்றோம். மேலும், மாற்றுத் திறனாளிகளாக உள்ள குழந்தைகள் உருவாக்கிய கலைப் படைப்பும் நம்மை ஈர்க்கின்றது. இந்த அழகிய, எளிய, சீரிய கொலுவைக் கண்டு மகிழுங்கள்.
சகஸ்ரா அஜய் பாடல்
2020 நவராத்திரியை முன்னிட்டு, சுதா மாதவன் அவர்களின் பெயர்த்தி சகஸ்ரா அஜய் குரலில் இந்த இனிய பாடலைக் கேட்டு மகிழுங்கள். இவரது ஆற்றல் மேலும் வளர்ந்து, மேன்மைகள் சிறக்க, தேவி பராசக்தி அருள் புரிக.
உங்கள் வீட்டுக் கொலுவையும் இவ்வாறு பதிவு செய்து அனுப்புங்கள். நம் யூடியூப் அலைவரிசையின் வழியே அவற்றை உலகின் முன் படைப்போம்.
உங்கள் வீட்டுக் கொலுவை வீடியோ படம் எடுத்து வாட்ஸாப் வழியே +91-9841120975 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள். Google Drive அனுப்புவோர், annakannan@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். நம் யூடியூப் அலைவரிசையில் வெளியிடுவோம். எடுக்கும்போது அதை விளக்கிச் சொல்லுங்கள். உங்கள் செல்பேசியைக் கிடைமட்டமாக (horizontal) வைத்துப் படம் எடுங்கள். தொடங்கும்போது எந்த ஊரிலிருந்து யார் பேசுகிறீர்கள் என்று சொல்லுங்கள். பாடத் தெரிந்தவர்கள் எனில், பாடியும் அனுப்பலாம். ஓம்சக்தி, பராசக்தி! – அண்ணாகண்ணன்
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)