கொலு 2020 – ஐஷ்வர்யா அகத்திலிருந்து
சென்னை, மேற்கு மாம்பலத்தில் வசிக்கும், ஐந்தாம் வகுப்பு மாணவி ஐஷ்வர்யா, தங்கள் வீட்டுக் கொலுவை நமக்கு நயமுற, அழகுற எடுத்துரைக்கிறார். பொம்மைகளை நேர்த்தியாகக் காட்சிப்படுத்தியது மட்டுமின்றி, சில பொம்மைகளைத் தாமே உருவாக்கியும் இருக்கிறார். பெருமாள் ஊர்வலம், தசாவதாரம், கல்யாணம், செட்டியார், ஐயப்பன், வீடு, பூங்கா.. என அணி அணியாகப் பொம்மைகள், இந்தக் கொலுவை அலங்கரிக்கின்றன. 30 ஆண்டுகளுக்கு முந்தைய பொம்மைகளையும் பாரம்பரியமாக வைத்து வருகிறார்கள். இந்தப் பதிவின் இறுதியில் இனிய பாடலையும் பாடி மகிழ்விக்கிறார். விழிக்கும் செவிக்கும் விருந்து படைக்கும் குமாரி ஐஷ்வர்யாவும் அவர் குடும்பத்தினரும், அன்னையின் அருளால் சகல ஐஸ்வர்யங்களையும் பெறுக! பொன்மழை எந்நாளும் பொழிக!
உங்கள் வீட்டுக் கொலுவையும் இவ்வாறு பதிவு செய்து அனுப்புங்கள். நம் யூடியூப் அலைவரிசையின் வழியே அவற்றை உலகின் முன் படைப்போம்.
உங்கள் வீட்டுக் கொலுவை வீடியோ படம் எடுத்து வாட்ஸாப் வழியே +91-9841120975 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள். Google Drive அனுப்புவோர், annakannan@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். நம் யூடியூப் அலைவரிசையில் வெளியிடுவோம். எடுக்கும்போது அதை விளக்கிச் சொல்லுங்கள். உங்கள் செல்பேசியைக் கிடைமட்டமாக (horizontal) வைத்துப் படம் எடுங்கள். தொடங்கும்போது எந்த ஊரிலிருந்து யார் பேசுகிறீர்கள் என்று சொல்லுங்கள். பாடத் தெரிந்தவர்கள் எனில், பாடியும் அனுப்பலாம். ஓம்சக்தி, பராசக்தி! – அண்ணாகண்ணன்
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)