நலவாழ்வுக்கு யோக முத்திரைகள்
Zoom சந்திப்பு: அண்ணாகண்ணன்
நம் மரபுவழி யோக முத்திரைகள், பல நோய்களை, வலிகளை, சிக்கல்களைத் தீர்க்க வல்லவை. இடர்கள் வராமலும் காக்க வல்லவை. உடலின் ஒவ்வோர் உறுப்புக்கும் வலிமை சேர்க்கும் முத்திரைகள் உண்டு. தலைவலி தீர, மாதவிடாய்க் காலத்து வலி நீங்க, மூட்டுவலி அகல, இடுப்பு வலி விலக, இன்னும் கண் நலத்துக்கு, காதுக்கு, பல்லுக்கு, புருவத்துக்கு, தோலுக்கு, தொண்டைக்கு, சக்திக்கு, நினைவாற்றலுக்கு, நுரையீரலுக்கு நலம் புரியும் முத்திரைகள் உண்டு. மேலும் ஒவ்வாமை, மூச்சிரைப்பு, நெஞ்சுக்கட்டு ஆகியவை சரியாகவும் முத்திரைகள் உண்டு.
பணம் வர வேண்டுமா? அதற்கும் ஒரு முத்திரை உண்டு. தலைமுடி உதிராமல் இருக்கவும் மேற்கொண்டு நன்றாக வளரவும் முத்திரை உண்டு. இவை அனைத்தையும் நமக்குச் செய்து காட்டுகிறார், நிர்மலா ராகவன்.
மலேசியாவில் வாழும் எழுத்தாளரும் பரத நாட்டியக் கலைஞருமான இவர், இந்த முத்திரைகளைப் பல்லாண்டுகளாகப் பயின்று பலன் பெற்று வருகிறார். இவரிடமிருந்து கற்றுக்கொண்ட பலருக்கும் நல்ல பலன்கள் கிடைத்துள்ளன. இந்த அரிய முத்திரைகளை நம் நேயர்களுக்காக நிர்மலா ராகவன் செய்து காட்டுகிறார். இவற்றைப் பார்த்து நீங்களும் பயன் பெறுங்கள். உங்களுக்கு எத்தகைய பயன்கள் கிடைத்தன என்று உங்கள் அனுபவத்தை, பின்னூட்டத்தில் எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
வாட்ஸாப் வழியே வந்த பின்னூட்டங்கள்:
Saras Mani:
அட டா…. எழுத்தாளர், இரு மொழி மேதை என்று மட்டுமே அறிந்திருந்தேன்… முத்திரை வழி முத்திரை பதித்துவிட்டீர்கள் சகோதரி. பாராட்டு உரியதாகட்டும். நல்ல பயிற்சி.
Viji Iyer:
நீங்கள் ஒரு பன்முக வித்தகர்; சிறந்த நடன கலைஞர் ; பாடகர், சிறுகதை, நாவல் எழுத்தாளர். உங்களது முத்திரைகளை- மிகவும் பயனான- அழகான நடன அசைவுகள் வழியே கண்கள் பேச வாய் முறுவலிக்கக் காட்டியுள்ளீர்கள்!???????
மிக அழகு! மிக்க பயன் !! நன்றி நிர்மலா!!
Mangala Gowri:
மிகவும் பயனான முத்திரைகள் அம்மா. குறிப்பாக, கண்களுக்கானவை. மிக்க நன்றியும் அன்பும்
Nirmala Perumal:
??பயன் மிகுந்தவை