Tag: காயத்ரி பாலசுப்ரமணியன்

காயத்ரி பாலசுப்ரமணியன்

ஜோதிடத்தை தன் பாரம்பரியமாகக் கொண்டவர் ஜோதிடர் திருமதி காயத்ரி பாலசுப்ரமணியன் . அவரின் தகப்பனாரும் குருவும் ஆகிய அமரர் ஜோதிடக் கடல் திரு எஸ். வைத்யநாதன் அவர்களின் வழி காட்டுதலே அவரை ஜோதிடத் துறைக்கு கொண்டு வந்தது என்கிறார் பூரிப்புடன். இவரது தகப்பனார் , ஜோதிடத்திலும், சமஸ்கிருதத்திலும் வல்லமை பெற்று, காஞ்சி மகாமுனிவரின் சமஸ்கிருத குருவாகத்திகழ்ந்த தண்டாங்கோரை திரு. சுப்பையா தீக்ஷதர் அவர்களின் வம்சாவழி வந்தவர் . ஜோதிடத்தின் புகழ் பரப்ப பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்த திரு எஸ். வைத்யநாதன் அவர்கள், திருச்சிராப்பள்ளியில். பத்தாண்டு காலம் ஜோதிடக் கடல் என்ற ஜோதிட பத்திரிக்கையும், ஜோதிட புத்தகங்களை வெளியிடுவதற்காக ஸ்ரீ பாதுகா பப்ளிகேஷன்ஸ்-யையும் நடத்தி வந்தவர் .

திருமதி காயத்ரி பாலசுப்ரமணியன்,B.Sc. P.G.Dip. in journalism, சித்தாந்த ரத்னம்,சித்தாந்த நன்மணி
ஜோதிடர்,எண் 43, தரைதளம், தேவராஜ் நகர், இரண்டாவது பிரதான சாலை, சோளிங்க நல்லூர், சென்னை-600119. செல்: 99432-22022. 98946-66048. மின்னஞ்சல்: astrogayathri@gmail.com gayabala_astro@yahoo.co.in astrogayathri@rediffmail.com

  • இந்தவார ராசி பலன் (04.02.2013 -10.02.2013)

    காயத்ரி பாலசுப்பிரமணியன்

    மேஷம்: பொது சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள் , உங்களைத் தேடி வருபவர்களுக்கு உதவும் குணம் இருந்தாலும், மற்றவர்கள் உங்களை ஏமாற்ற இடம் கொடாதீர்கள். இந்த வாரம் மாணவர்கள் தங்கள் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்புகள் கிட்டும். வியாபாரிகள் தேவையான இடங்களில் கனிவையும், பணிவையும் பயன்படுத்தினால், அதிக லாபம் பெறலாம். பெண்கள் இழுபறியான காரியங்களை கையில் எடுக்கும் முன் தேவையான செய்திகளையும், பலத்தையும் திரட்டிக் கொண்டு செயல்படுவது நல்லது. வியாபாரிகள் ஏற்ற இறக்கமுள்ள பங்குச் சந்தையில் அகலக் கால் வைக்க வேண்டாம்.

    ரிஷபம்: வியாபாரிகளுக்கு கிடப்பில் கிடந்த நல்லத் திட்டங்களை மீண்டும் செயலாற்றும் வாய்ப்பு கிட்டும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பணிச்சுமையால், மன இறுக்கம் தோன்றி மறையும்.கலைஞர்கள் தேவையற்ற விமர்சனங்களைப் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டாம். மாணவர்கள் காரியங்கள் முடியும் வரை கவனச்சிதறலுக்கு இடம் தராமலிருப்பது நல்லது. பெண்கள் உறவுகளை அனுசரித்து நடந்து கொண்டால், அதிக ஆதாயம் இருக்கும். அடிக்கடி வெளியூர் செல்பவர்கள் பயணங்களில் கவனமாக இருப்பது அவசியம். பெற்றோர்கள்பிள்ளைகள் தொடர்பான நல்ல விஷயங்களை உடன் முடித்து விடுவது நல்லது.

    மிதுனம்: சுய தொழில் புரிபவர்கள் சிறந்த திட்டங்களைத் தீட்டி அதன் படி நடந்தால், அதிக லாபம் பெறலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்கள் லட்சியங்களை நிறைவேற்ற அயராமல் பாடுபடுவர். குடும்ப அமைதிக்குப் பங்கம் வராமலிருக்க, பெண்கள் முக்கிய விஷயங்களை குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையுடன் செயல்படுத்துவது அவசியம். இந்த வாரம் கை வேலைகளில் ஈடுபடுபவர்களின் பொருளுக்கு நல்ல லாபம் கிட்டும். பெற்றோர்கள் பிள்ளைகளின் கையில் அதிக பணம் தருவதைத் தவிர்த்தல் நலம். மாணவர்கள் தீய பழக்கங்களின் பக்கம் திரும்பாமலிருந்தால், நல்லோரின் ஆதரவு நிலையாக இருக்கும்.

    கடகம்: கலைஞர்கள் உங்கள் திறமையால் விசேஷ சலுகைகளை பெறுவீர்கள். மாணவர்கள் உங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தால், தடைகளை எளிதில் தாண்டி விடலாம். பெண்கள் சிறு பூசல்களை பெரிதாக்காமல் இருப்பது புத்திசாலித்தனம். பெற்றோர்கள் பிள்ளைகளின் பற்களின் பராமரிப்பில் கவனமாய் இருந்தால், மருத்துவச் செலவுகளை குறைத்து விடலாம். பொது வாழ்வில் உள்ளவர்கள் சில நிர்ப்பந்தங்களுக்கு அடிபணியாமலிருந்தால், உங்கள் நற்பெயரைத் தக்க வைத்துக் கொள்வது கடினமாய் இராது. இந்த வாரம் வீடு மனை வாங்க எடுக்கும் முயற்சிகளில் மும்முரமாக ஈடுபடுவீர்கள்.

    சிம்மம்: கலைஞர்கள் புதிய முயற்சிகளில் வெற்றி பெற ஆக்கத்துடனும், ஊக்கத்துடனும் உழைப்பீர்கள். இந்த வாரம் வியாபாரிகள் சரக்கு விநியோகத்தில் குளறுபடி இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.வியாபாரத்தில் தொய்விராது. மாணவர்கள் நேர்வழியில் போட்டிகளை எதிர்கொண்டால், எதிலும் வெற்றி பெறலாம். பெண்கள் பொது விழாக்கள், விருந்து ஆகியவற்றில் பக்குவமாக நடந்து கொண்டால், நட்பும், உறவும் கசக்காமல் இருக்கும். பணியில் இருப்பவர்கள் பிரச்னைக்குரிய விஷயங்கள், பிரச்னைக்குரிய நபர்கள் ஆகிய இரண்டிலிருந்தும் விலகி இருந்தால், அமைதியாய் செயல்பட முடியும்.

    கன்னி: அதிகாரிகளின் ஒத்துழைப்பு உங்களுக்கு அனுகூலமாக அமைவதால், உங்கள் பணியில் தீவிரமாக ஈடுபட்டு, நினைத்த காரியத்தை முடிப்பதில் குறியாய் இருப்பீர்கள் இந்த வாரம் சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். பெண்கள் பொது இடங்களில் பிறரின் நிறை குறைகளை அலசாமல் இருப்பது நல்லது. மாணவர்கள் வீண் செலவுகளுக்கு வழி வகுக்கும் இடங்களுக்கு செல்லாமலிருப்பதே புத்திசாலித் தனமாகும். கலைஞர்கள் மன வருத்தங்களை வெளிப்படுத்த முடியாத சூழல் இருக்கும்.. நெருங்கிப் பழகிய பங்குதாரர்கள் சிறு பிணக்குகள் காரணமாகப் பிரிந்து போக நேரலாம்.

    துலாம்: .மாணவர்கள் தங்கள் ஒப்பனை, உடை அலங்காரம் ஆகியவை கண்ணியமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுதல் நலம். சக கலைஞர்களின் ஆலோசனையால் கலைஞர்கள் தங்கள் திறமைகளை மெருகேற்றிக் கொள்ளும் வாய்ப்பு கிட்டும். கடன் தொல்லைகளினால் பெண்களுக்கு சிறிது மன சஞ்சலம் ஏற்பட்டாலும், செலவுகளைச் சமாளிக்க சேமிப்பு கைகொடுக்கும். மாணவர்கள் பாடங்களை கவனமாக பயில்வதன் மூலம் கடைசி நேர பதற்றத்தைக் குறைத்துக் கொள்ளலாம். நிர்வாகத்தில் உள்ளவர்கள் சோம்பலையும், பணிகளை தள்ளிப் போடுதலையும் தவிர்த்தால், நல்ல வாய்ப்புகளைப் பெறலாம்.

    விருச்சிகம்: இதமான அணுகுமுறை மூலம் வியாபாரிகள் பாக்கிகளை எளிதில் வசூலிக்கலாம். இந்த வாரம் உறவுகள் பாராமுகமாய் இருந்த போதிலும், அவர்களின் சுப நிகழ்ச்சிகளுக்கென்று பணமும், நேரமும் செலவு செய்யும் நிர்ப்பந்தமிருக்கும். முதியவர்கள் கண் சம்பந்தமான நோய்களை உடனுக்குடன் கவனிப்பது நல்லது. வீட்டை விரிவுபடுத்துவதில் அதிக பணம் முடங்கும். பெண்கள் இதமாகப் பேசினால் உறவுகள் தொடர்கதையாகும் என்பதை அவ்வப்போது நினவில் கொள்வது நல்லது. விலை உயர்ந்த ஆடைவகைகள், நவீன பொருட்கள் ஆகியவை மாணவர்கள் வசமாகும்.

    தனுசு: வேலை செய்யும் இடங்களில் மன உறுதியுடன் செயல்பட்டு வாருங்கள். குறை சொல்பவர்களின் எண்ணிக்கை தானே குறைந்து விடும்.இந்த வாரம் சரளமான பண வரவு இருந்தாலும், வீண் செலவுக்கு ஆசைப்பட வேண்டாம். வியாபாரிகள் ,யோசனை செய்த பின் பிறர்க்கு வாக்குறுதிகளை அளியுங்கள்.பணியில் உள்ளவர்கள் அதிகார எல்லையைக் குறைத்துக் கொண்டால், அன்பு வட்டம் தானே விரியும். செய்தொழிலில் சில பிரச்னைகள் இருந்தாலும், உங்கள் வளர்ச்சி சீராக இருக்கும். நன்மைகள் பல கலைஞர்களை நாடி வர, வீண் கௌரவத்திற்கும், ஆணவத்திற்கும் இடம் தராமலிருப்பது நல்லது.

    மகரம்: மாணவர்கள் தங்கள் தகுதியை உயர்த்திக் கொள்ள எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலனிருக்கும். இந்த வாரம் சொந்த பந்தங்கள் கேளாமலேயே உதவி செய்து உங்களை மகிழ்விப்பார்கள். பெண்கள் குடும்ப விவகாரத்தில் அடுத்தவர் தலையீட்டிற்கு இடம்கொடாமலிருந்தாலே கருத்து வேற்றுமைகள் தானாய் விலகிவிடும். மேலும் அறிமுகமில்லாத இடங்களில் உரையாடல்கள் அளவாக இருப்பது அவசியம். உயர் படிப்பிற்காக வெளியிடம் செல்பவர்கள் எதிலும் கட்டுப்பாட்டுடன் இருப்பது நன்மை தரும். கலைஞர்கள் சேமிப்பைக் கரைக்கும் செலவுகளைக் குறைத்துக் கொள்ளுதல் மூலம், மன உளைச்சலைத் தவிர்க்கலாம்.

    கும்பம்: வியாபாரிகள் பணியாளர்கள் கொடுத்த பொறுப்புகளை சரிவரச் செய்கிறார்களா என்று கவனித்துக் கொண்டால், பணமும், பொருளும் வீணாவதைத் தவிர்த்து விடலாம். கலைஞர்கள் தங்கள் பேச்சாற்றலை நல்ல முறையில் பயன்படுத்தினால், பல ஒப்பந்தங்கள் உங்கள் பக்கமே! பணியில் உள்ளவர்கள் நிதி நிலவரத்தை அனுமானித்தபின் காசோலைகளை பிறர்க்கு வழங்குவது நல்லது. பெண்கள் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால், வேண்டிய காரியங்களை எளிதில் நிறைவேற்றிக் கொள்ளலாம். உயர் பதவியில் இருப்பவர்கள் பணியாளர்களின் ஒத்துழைப்பு குறையாமல் பார்த்துக் கொண்டால் வேலைகள் சீராக நடக்கும்.

    மீனம்: பெற்றோர்கள் பிள்ளைகளின் மனோபாவத்தை உணர்ந்து அதற்கேற்றவாறு உங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டால், அவர்களிடமிருந்து நல்ல பெயரை பெற்றுவிடலாம். சுய தொழில் புரிபவர்கள் சந்தர்ப்பங்களை முறையாகப் பயன்படுத்திக் கொண்டால், உங்கள் அந்தஸ்து உயர்ந்து விடும். பெண்கள் வாக்குவாதங்களை வளர விடாமலிருந்தால், வீண் தொல்லைகளும் வளராது. பொது வாழ்வில் உள்ளவர்கள் எதிரிகள் வகையில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நலம். கலைஞர்கள் தங்கள் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுபவர்களிடமிருந்து விலகி இருந்தால், உங்களுக்குரிய அங்கீகாரம் கிட்டும்.

    Share
  • வார ராசிபலன் (14-01-2013-20.01.2013)

    காயத்ரி பாலசுப்ரமணியன்

    மேஷம்: நீங்கள் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்கள், உங்களின் எதிர்கால
    முன்னேற்றத்திற்கு அடித்தளமாகும் . இளம் வயதினர் புதிய சூழலில் கவனமாகப்
    பழகுவதோடு யோசித்து செயல்படுவது அவசியம். தொழிலதிபர்கள் தங்கள்
    நாவன்மையால் தங்கள் கருத்துக்களை எடுத்துச் சொல்ல ஏற்ற வாரம். வீடு,மனை
    விற்பனை அவ்வளவு லாபகரமாய் இராது. எனவே பணத்தை அதில் முடக்க வேண்டாம்.
    இல்லச்சூழலோடு பணிச்சுமை மோதாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். கலைஞர்கள்
    புதிய ஒப்பந்தம், பயணம் என்று மகிழ்ச்சியாய் இருப்பார்கள். பணியில்
    இருப்போர் தன் திறமைக்குரிய வாய்ப்பு வரும் வரை பொறுமை காப்பது அவசியம்.

    ரிஷபம்: பெண்கள் இரவலாக உங்கள் பொருள்களைத் தருவதை நாசுக்காகத்
    தவிர்த்துவிடுங்கள். பாதிப் பிரச்னைகள் குறைந்து விடும். தொழிற்சாலைகளில்
    பணி புரிவோர் இரும்பு உபகர ணங்களை எச்சரிக்கையுடன் கையாள்வது அவசியம் .
    மாணவர்கள் எட்டாக் கனியான விஷயங்களில் உங்கள் கவனத்தையும்,
    திறமையையும் வீணடிக்காததிருப்பது நல்லது. கலைஞர்கள் போட்டா போட்டியில்
    வெற்றி பெற,உங்களின் அனுபவ அறிவு கை கொடுக்கும். முக்கியமான
    பொறுப்புக்களை கையாள்பவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்களை உங்கள் அருகில்
    வைத்துக் கொள்வது சிறந்தது. வியாபாரிகள் பழைய பாக்கிகளை வசூலிக்க அலைய
    நேரிடும்.

    மிதுனம்: சரக்குகள் தேங்காதவாறு வியாபாரத்தை முடுக்கிவிடும்
    வியாபாரிகளுக்கு லாபத்தோடு புதிய ஒப்பந்தங்களும் உடன் வந்து சேரும்.
    பிறர் செய்யும் தவறுக்கு, நீங்கள் பதில் சொல்லும் சூழல் உருவாகும் நிலை
    இருப்பதால், மாணவர்கள் கவனத்துடன் செயல்படவும். தந்தை-மகள் உறவு
    நெருக்கமாகும். இதுவரை இருந்த மனத் தாங்கல் நீங்கி, ஒருவரையொருவர்
    பாராட்டிக் கொள்வீர்கள். பெண்கள் அவ்வப்போது தோன்றும் சிறிய பிரச்னைகளை,
    தெளிவுடனும், திறமையுடனும் கையாண்டால் உறவுகளின் ஆதரவு உங்கள் பலமாய்
    மாறும். ஆன்மீகப் பயணங்களுக்கான அழைப்பு உங்களைத் தேடி வரும்!

    கடகம்: இதுநாள் வரை மந்த கதியில் சென்று கொண்டிருந்த வேலை, புதிய
    வேகத்துடன் நடைபெறுவதால், சுய தொழில் புரிபவர்கள் உற்சாகத்துடன்
    திகழ்வார்கள். கல்விப் பணியில் இருப்பவர்க்கு இது ஏற்ற வாரமாகும்.
    அனுசரித்து நடந்து கொள்ளும் கொள்கை உடையவரின் கூட்டு முயற்சி வெற்றியாய்
    முடியும். வியாபாரிகள் எதிரிகளின் செயல்களை கண்காணிப்பது அவசியம். இது
    வரை தன் முயற்சிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று வருந்தியவர்க்கு
    பாராட்டு வந்து சேரும். முக்கியமான முடிவு எடுக்கும் தருணங்களில்
    அவசரப்பட வேண்டாம். சிலர் பழைய நண்பர்களை சந்தித்து பேசி மகிழலாம்.

    சிம்மம்:உயரதிகாரிகள் காட்டும் ஆதரவு புதிய உற்சாகத்தை அளிப்பதோடு,
    உங்களின் ஆர்வத்திற்கு உரிய வாய்ப்பும் உங்களைத் தேடி வரும். மாணவர்கள்
    படிப்புக்கு முக்கியத்துவம் தந்தால், பாடங்கள் கரும்பாய் இனிக்கும். பொது
    வாழ்வில் இருப்போர் ஆவேசமான பேச்சு, மற்றும் செயல் பாடு இரண்டும் எல்லா
    நேரங்களிலும் விரும்பிய பலனைத் தராது என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.
    பெண்கள் இரவலாக உங்கள் பொருள்களைத் தருவதை நாசுக்காகத்
    தவிர்த்துவிடுங்கள். பாதிப் பிரச்னைகள் குறைந்து விடும். தொழிற்சாலைகளில்
    பணி புரிவோர் இரும்பு உபகர ணங்களை எச்சரிக்கையுடன் கையாள்வது அவசியம் .

    கன்னி: பெண்கள் பேச்சில், படபடப்பைக் குறைத்து இனிமையைக் கூட்டுங்கள்.
    இல்லறம் நல்லறமாய் திகழும். பெற்றோர்கள் பிள்ளைகள் கேட்டவுடன் பணம்
    கொடுப்பதை விட, அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைப்பது நல்லது.
    பணியில் இருப்பவர்கள் இடம், பொருள், ஏவல் தெரிந்து உங்கள் கோரிக்கைகளை
    முன் வைப்பது அவசியம். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமிருக்கும். எனவே
    செலவுப் பட்டியலை குறைவாக்குங்கள். சுய தொழிலில் இருப்பவர்கள் ,
    சிரமங்களுக்கிடையே வெற்றி காண்பர். சில நேரங்களில் நண்பர்கள் உங்களை
    முழுமையாய் புரிந்து கொள்ளாமல் செயல்படலாம்.

    துலாம்: மாணவர்கள் புது நட்புடன் வளைய வருவார்கள். கணவன் வழி
    உறவுகளுக்காக பெண்கள் தங்கள் சேமிப்பை கரைப்பர். கலைஞர்களுக்கு
    வெளிவட்டாரம் மூலம் மகிழ்ச்சி வரும். கூடவே சுற்றியிருப்பவர்களால் வீண்
    செலவுகளும் வந்து வந்து போகும். சில குழப்பங்கள் உருவாகும் சூழல்
    இருப்பதால்,வியாபாரிகள் தகுந்த ஆலோசனையுடன் செயல்பட்டு வாருங்கள்.நிலைமை
    மீண்டும் சகஜமாகிவிடும். வேலை நிமித்தம் அங்கும் இங்கும் அலைபவர்கள் உடல்
    ஆரோக்கியத்தில் தகுந்த கவனம் செலுத்தி வந்தால், உங்களின் அன்றாட
    அலுவல்கள் சீராக நடைபெறும். பொருளாதார வரவால்,நீங்கள் மன உற்சாகத்துடன்
    செயல்படலாம்.

    விருச்சிகம்: பெண்கள் தங்கள் துணைவரின் உடல்நலத்தில் விசேஷ கவனம்
    செலுத்தி வந்தால், இல்லப் பணிகள் தடையின்றி தொடரும். மாணவர்கள் சோர்வை
    விரட்டியடி க்கும் சத்தான பானங்களை குடித்து வந்தால், சிந்தனை வளம்
    மேலும் பெருகும். வியாபார விஷயங்களில் வெளுத்ததெல்லாம் பால் என்றிருப்பதை
    தவிர்த்தல் நலம். பணியில் இருப்போர்கள் புதிய விஷயங்களை அறிந்து கொள்ளும்
    துடிப்புடன் செயலாற்றுவார்கள். பிள்ளைகளிடம் உங்கள் கருத்துக்களை இதமான
    முறையில் எடுத்துச் சொன்னால்,அவர்களின் ஒத்துழைப்பையும் பெறலாம். பழைய
    கடன்கள் அடைவதால், பொருளாதார இறுக்கம் குறையும்.

    தனுசு: குடும்ப விஷயத்தில் மூன்றாம் நபர் தலையீட்டை அனுமதிக்காதீர்கள்.
    பிரச்னைகள் சுமுகமாக முடியும். வெளி இடங்களில் தங்கி படிக்கும் மாணவ
    ர்கள் அவசியமற்ற இரவு நேரப் பயணங்களை தவிர்த்து விடுதல் நலம். கலைஞர்கள்
    கவனமாக இல்லை என்றால், சிலரின் சூழ்ச்சியால், வரும் வாய்ப்புகள் திசை
    மாறலாம். குழந்தைகள் பெறக் கூடிய பெருமையால், உங்களின் பெருமையும்
    உயரும். அலுவலக கொடுக்கல் வாங்கலில் கவனமாய் இருந்தால், மன இறுக்கமின்றி
    வேலையில் ஈடுபட முடியும். மற்றவருக்கு ஜாமீன் போடுவதை தவிர்த்துவிடவும்.

    மகரம்: குடும்ப உறுப்பினர் உங்களின் திட்டங்களுக்கு, வலிமை சேர்க்க முன்
    வருவார்கள். பங்குச்சந்தை விஷயங்களில் ஏற்றம், ஏமாற்றம் இரண்டும்
    கலந்திருக்கும். எனவே பணத்தை முதலீடு செய்யும் முன் யோசனை செய்வது
    நல்லது. பெண்கள் பேச்சில் கடுமை கலவாதவாறு பார்த்துக் கொண்டால், குடும்ப
    உறவுகள் சுமூகமாக இருக்கும்.வியாபாரிகள் கணக்கு வழக்குகளில் உள்ள
    குளறுபடிகளை கவனமாக சரிசெய்தால், அபராதம் செலுத்தவதை தவிர்த்துவிடலாம்.
    வெளியூர் பிரயாணங்களில், உணவு விஷயத்தில் மிதமாக இருப்பது நல்லது.
    பொறுப்புக்களில் உள்ளவர்கள் கோப்பு களை நன்கு படித்தபின்,
    கையெழுத்திடுவது அவசியம்.

    கும்பம்: சில நேரங்களில் கண் மற்றும் பல்சம்பந்தமான உபாதைகள் உங்கள்
    இயல்பு வாழ்வை பாதிக்கக் கூடும். எனவே சிறு தொந்தரவுகளை உடன் கவனித்து
    விடுங்கள். கலைஞர்கள் விழா விருந்து போன்றவற்றில், உங்கள் எல்லையை
    அறிந்து, நடந்து கொள்வது அவசியம். வியாபாரிகள் எழுத்துப் பூர்வமாகவே
    ஒப்பந்தங்களை முடிப்பது நல்லது. பொருள் விநியோகத்தில்
    ஈடுபட்டிருப்பவர்கள் வேலையாட்களை நம்பி முழு பொறுப்பை அளிக்காமல், உங்கள்
    கவனமும் அதில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.பணியில் இருப்போர்
    வரும் இடமாற்றத்தை விரும்பி ஏற்றுக் கொள்வதால், வாழ்க்கையில் உயரும்
    வாய்ப்பு உங்களை நாடி வரும்.

    மீனம்: நண்பர்களிடையே பணம் கைமாற்றாக கொடுப்பதை தவிர்த்தால், நட்பு
    கெடாமல் இருக்கும். மாணவர்கள் தெளிவான சிந்தனையுடன் செயலாற்றினால் தடுமாற
    வேண்டி யிருக்காது. பெண்கள் விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் முன்
    அவற்றைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம். சிலருக்கு புதிய மனை மற்றும்
    இடம் வாங்கும் வாய்ப்பு கனிந்து வரும். அலுவலக விழா விருந்து
    ஆகியவற்றிற்கு கணிசமான பணம் செலவழியும். நீங்கள் மேற்கொள்ளும் பயணங்களை
    நண்பர்கள் இனிமையாய் மாற்றிடு வார்கள். உறவுகளிடையே கருத்து வேறுபாடு
    தோன்றி மறையும். அவசர கதியில் உணவு உண்ணும் பழக்கத்தை மாற்றிக் கொண்டால்,
    தேக நலன் சீராக இருக்கும்.

    Share
  • வார ராசிபலன் (07-01-2013-13-01-2013)

    காயத்ரி பாலசுப்பிரமணியன்

    மேஷம்: பெண்கள் நினைக்கின்ற விஷயங்களில் வெற்றி பெற உங்கள் வாக்குச் சாதுர்யம் கை கொடுக்கும். மாணவர்கள் சஞ்சலங்கள் வளர இடம் கொடாதாவாறு மன திடத்துடன் இருந்தால், மகிழ்வுக்கு குறைவிராது. முதியவர்கள் நோய்களுக்கு நீங்களே மருந்துகளை தேடாமல், தகுந்த மருத்துவரை அணுகுதல் நல்லது. கொடுத்த வாக்கை காப்பாற்றக் கூடிய அளவிற்கு வியாபாரிகளுக்கு மன வலிமையும், உடல் வலிமையும் கூடும். பணியில் இருப்பவர்கள் புதிய ஊழியர்களிடம் உங்கள் வாதத் திறமையை காட்டாமல் எளிய முறையில் பழகிவந்தால், நல்ல நட்பு உருவாகும். சரளமான பணப்புழக்கம் தனித் தெம்பைத் தரும்.

    ரிஷபம்: இந்த வாரம் கலைஞர்களுக்கு ஏமாற்றமாய் இருந்த விஷயங்கள் சாதகமாய் மாறும் சூழல் உருவாகும். வியாபாரிகள் பண விவகாரங்களில், பங்குதாரர்களுடன் கலந்து பேசி செயல்படுதல் நல்லது. மாணவர்கள் உங்கள் அமைதி, கடும் வார்த்தைகளாலும், அவசர செயல்களாலும் பாதிப்படையாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். பெண்கள் அலுவலக அளவில் நட்புகளை ஓர் எல்லையோடு நிறுத்திக் கொண்டால்,மன சஞ்சலம் குறைவதோடு அதிக இழப்புகளும் இராது. சுய தொழில் புரிபவர்கள் ஆரம்ப முயற்சிகளில் சுணக்கம் காட்டாமலும் இருந்தால், வெற்றி வரும் வழி, லாபம் இரண்டும் உறுதியாகும்.

    மிதுனம்: மாணவர்கள் செய்ய வேண்டிய காரியங்களை பட்டியலாக்கி வைத்துக் கொண்டால், மறதியால் வரும் சிக்கல்கள் அகலும். கலைஞர்கள் வருமானத்தை அதிகப்படுத்த எடுக்கும் முயற்சிகளுக்கு உறவும், நட்பும் கை கொடுப்பதால், மகிழ்ச்சிக்கு குறைவிராது. இந்த வாரம் கரைந்த சேமிப்பை ஈடுகட்ட எடுக்கும் முயற்சியில் பெண்கள் ஓரளவு வெற்றி காண்பார்கள். சுய தொழில் புரிபவர்கள் உங்களுக்கு உதவக் காத்திருக்கும் நண்பர்களையும், வாய்ப்புக்களையும் நழுவ விடாமல் தக்க சமயத்தில் பயன்படுத்திக் கொண்டால், எதிர்காலம் வளமாய் அமையும்.கடினமான பணிகளில், மூத்த அதிகாரிகளின் ஆலோசனையை பின்பற்றுதல் நலம் .

    கடகம்: பெண்கள் தங்களின் உயர்வான எண்ணங்கள் ஈடேறுவதற்கு ஆரோக்கியம் தடையாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மாணவர்கள் ஈடுபாடோடு எந்தச் செயலைச் செய்தாலும் அதில் வெற்றி காண முடியும். பிள்ளைகள் பெற்றோர்களின் மனதிற்கேற்ப நடந்து கொள்ள முன்வருவார்கள். நண்பர்கள் பிணக்கை மறந்து இணக்கமாக நடந்து கொள்வர் . பணியில் உள்ள ஒரு சிலருக்கு தேவையில்லாத இடமாற்றம் உண்டாகும். கலைஞர்கள் உங்கள் புகழைக் கண்டு பொறாமைப் படுபவர்களிடம் பக்குவமாக நடந்து கொள்வது அவசியம். மறைமுக எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விடுபட மன உறுதி தேவைப்படும்.

    சிம்மம்:கல்லூரி மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கின்ற சலுகையை முறையாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. சரக்கு வினியோகம் செய்பவர்கள் வெறும் வாய் வார்த்தையை நம்பி பொருள் கொடுப்பதைக் குறைத்துக் கொண்டால் நஷ்டம் இராது. பெண்கள் இல்லத்திலும், அலுவலகத்திலும் வீண் பேச்சுக்களைக் குறைத்தால், அமைதிக்கு பங்கம் வராமலிருக்கும். சுய தொழில் புரிபவர்கள் காலத்தின் மதிப்பும் அருமையும் உணர்ந்து செயல்பட்டால், எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலனிருக்கும். வியாபாரிகள் சுகமான வாழ்க்கைக்கு ஆசைபட்டாலும்,இந்த வாரம் அங்கும், இங்கும் சுற்றித் திரியும் நிலைதான்.

    கன்னி: முக்கியமான பொறுப்புக்களை வகிப்பவர்கள், சிந்தனையை பணியில் செலுத்தி எச்சரிக்கையுடன் செயல்பட்டால், வரவிருக்கும் பிரச்சனைகளைத் தவிர்த்து விடலாம். வெளியூர்ப் பயணங்களால் செலவுகள் கூடினாலும், வியாபாரிகள் நினைத்த காரியத்தை முடித்து விடுவீர்கள். கவனக் குறைவாகச் செயல்படும் பிள்ளைகளை இதமாகக் கண்டிப்பதே நல்லது. புதிய இடங்களுக்குச் செல்பவர்கள் உடைமைகளை பாதுகாப்பாக வைத்தால், பயணங்கள் இனிமையாக அமையும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருப்பதால் பெண்கள் இல்லத்தை அழகு படுத்தும் பணிகளை விருப்பத்துடன் செய்வார்கள்.

    துலாம்: நாணயத்தின் அடிப்படையில் செயல்பட்டால் எந்த ஒப்பந்தமும் எளிதில் கலைஞர்கள் வசமாகும். பணியில் இருப்பவர்கள் அதிகமாகப் புகழ்பவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பொது வாழ்வில் இருப்பவர்கள் சமயோசிதமாகச் செயல்பட்டால், எதிரிகளின் கரம் மேலோங்காதிருக்கும். குற்றம் சொல்லும் உறவினரின் தேவைகளை பெண்கள் முதலில் பூர்த்தி செய்தால், இல்லம் அமைதியாக இருப்பவும், உறவுகள் வலுவாகவும் திகழும். மாணவர்கள் சாதாரணமாய் சொல்லும் வார்த்தைகளை சண்டைக்குக் காரணமாக்குபவர்களிடமிருந்து விலகி இருங்கள். பாதி பிரச்சனைகள் தானே குறைந்து விடும்.

    விருச்சிகம்: வாடிக்கையாளர்களின் வரவால், வியாபாரிகள் மகிழ்வர். இந்த வாரம் தந்தை வழி உறவுகளுடன் மோதல், அதிருப்தி அன்று அங்கலாய்த்துக் கொள்ளும் நிலை இருந்தாலும்,பக்குவமாக நடந்து கொள்வது புத்திசாலித்தனமாகும். கலைஞர்கள் செய்யும் வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தால், நல்ல பெயரைப் பெற இயலும். பணிச் சுமை கூடுவதால்,பெண்களுக்கு எரிச்சலும், அசதியும் அவ்வப்போது வந்து போகலாம். பணியில் இருப்பவர்கள், தெரிந்தவர்களுக்கு மட்டும் சில சலுகைகளை அளிப்பது, விதிமுறைகளைத் தளர்த்துவது போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள். உங்கள் கௌரவம் குலையாமலிருக்கும்.

    தனுசு: வீடு,மனை விஷயங்கள் உங்களுக்கு சாதகமாய் முடிய, சமாதானமாய்ப் போவது புத்திசாலித்தனமாகும். .மாணவர்கள் எந்தவொரு விஷயத்தையும் விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல் கவனத்துடன் இருப்பது அவசியம். வரவுக்கும் செலவுக்கும் சரியாய் இருப்பதால், வியாபாரிகள் கட்டட விரிவாக்கம் ஆகியவற்றை சற்று ஆறப் போடுவது நல்லது. பெண்கள் உங்களை புகழ்பவர்களை நல்லவர்கள் என்று நம்பி உங்கள் ரகசியங்களை பரிமாறிக் கொள்ள வேண்டாம். உயர்பதவி வகிப்பவர்கள் நிர்வாக விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவதுடன் அதனைத் தீர்க்கும் நபரிடம் பொறுப்புக்களை அளிப்பது அவசியம்.

    மகரம்: பங்குதாரர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் வீண் சண்டைகளைத் தவிர்த்தால், வெற்றிக்கான வாய்ப்பு கை நழுவாமல் உங்கள் வசம் இருக்கும். எடுத்த காரியம் யாவும் நன்கு முடிவதால், பொது வாழ்வில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவார்கள். கலைஞர்கள் கடன் தொல்லைகளிலிருந்து பெருமளவு விடுபடுவர். எனினும் எந்த சூழலிலும் சுயதம்பட்டம் அடித்துக் கொள்ளாமலிருப்பது அவசியமாகும். பிள்ளைகள் வெளியில் செலவிடும் நேரம் அதிகமாக இருக்கும் என்பதால், பெற்றோர்கள் அவர்களின் நடவடிக்கையை கவனித்து வருவதோடு இதமாக புத்தி சொல்லித் திருத்தினால், அவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுவர்.

    கும்பம்: வண்டி வாகனங்களை வாங்கி விற்பவர்கள் முறையான வழியைக் கடைப்பிடித்தால், எந்த சிக்கலும் தோன்றாமலிருக்கும். உயர் பதவியில் இருப்பவர்கள் தங்களுடைய கொள்கைகளைக் கட்டிக்காக்க போராட வேண்டியிருக்கும். கூட்டுத் தொழிலில், பங்குதாரர் விலகினாலும், புதியவர் சேர்க்கையால் தொழில் வளம் சீராக இருப்பதால், வியாபாரிகள் தெம்புடன் திக்ழ்வார்கள். பொது வாழ்வில் இருப்போர்கள் வந்து சேரும் பொறுப்புகளை சுமப்பதற்கு அதிக உழைப்பை போட வேண்டியிருக்கும். மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் சொற்படி நடந்தால், மனக் கவலையின்றி சிறகடித்துப் பறக்கலாம்.

    மீனம்: மாணவர்கள் உங்கள் கருத்துக்களை கோர்வையாகச் சொன்னால், எவரிடமும் நல்ல பெயரை பெற்றுவிடலாம். பெண்கள் பேச்சில் இனிமை இருந்தால், உறவுகளும் இனிமையாகும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும். கலைஞர்கள் கடுமையாக உழைத்தால், தடை என்ற சொல்லுக்கு இடமின்றி வெற்றிகள் வந்து குவியும். பொது வாழ்வில் இருப்போர்கள் பிறருக்காக கடன்பட நேரிடும் . எனவே எதிலும் அளவாக இருப்பது நல்லது. பெண்கள் பணியிடத்தில் கோபதாபங்களுக்கு இடம் கொடாமல் இருந்தால், உங்கள் கௌரவம் சிறப்பாகவே இருக்கும். முதியவர்கள் மனதில் சிலசமயம் எதிர்மறையான எண்ணங்கள் ஓடும். அதனை மற்ற தியானம்,மூச்சுப் பயிற்சி மற்றும் நல்ல பொழுது போக்கு அம்சம் ஆகியவற்றில் தங்கள் கவனத்தை திசை திருப்புவதே புத்திசாலித் தனம்.

    Share
  • இந்த வார ராசிபலன் (31- 12 – 2012 முதல் 06 – 01- 2013 வரை)

    காயத்ரி பாலசுப்பிரமணியன்

    மேஷம்: பொது வாழ்வில் இருப்போர்கள், வீண் வதந்திகளை நம்பி செயலில் இறங்காமலிருந்தால், உங்களின் உயர்வு சீராக இருக்கும். கலைஞர்களுக்கு: உங்கள் திறமைகளை மிளிரச் செய்யும் வாய்ப்புக்கள் பல தேடி வரும். அதனை நல்ல முறையில் பயன்படுத்துவது உங்கள் கையில்தான் உள்ளது!
    மாணவர்கள் புதிய இடங்களில் பழக்கமில்லாதவர்களிடம் அதிகம் ஒட்டி உறவாட வேண்டாம். பெண்கள் குடும்ப விஷயங்களில் கோப தாபத்தை கட்டுக்குள் வைத்தால், எல்லோர் மனதிலும் இடம் பிடித்து விடலாம்! சிறிய சச்சரவுகளை பெரிதாக்காதவாறு சமாதானமாக நடந்துகொள்ளுங்கள். அலுவலகச்சூழலில் இருக்கும் இறுக்கமும் தானே விலகி விடும். வியாபாரிகள் எதிலும் நேர்மைக்கு இடம் கொடுக்க, வெற்றியோடு நல்மதிப்பும் உங்களுக்கே!

    ரிஷபம்: வியாபார வாய்ப்புக்களில், சில சந்தர்ப்பங்களில், கைக்கெட்டிய பொருள் வாய்க்கெட்டவில்லை என்ற நிலை நேரிடும். எனினும் விடாமுயற்சியால் விரும்பியதை அடைந்து விடுவீர்கள். பெண்கள் உழைப்பிற்கு நேரம் ஒதுக்குவதைப் போல, ஆரோக்கியத்திற்கும் நேரம் ஒதுக்கினால், மருத்துவச்செலவுகள் கணிசமாகக் குறையும். வரவும் செலவும் சமமாக இருப்பதால், சேமிப்பு என்பது பெயரளவில்தான் இருக்கும். தம்பதிகள் மன வேற்றுமைகள் நீங்க மனம் விட்டுப் பேசுங்கள். குடும்பத்தில் மீண்டும் மகிழ்ச்சி மலர்ந்து விடும். பங்குச் சந்தையில் நல்ல முன்னேற்றம் இருந்தாலும், அதிக ஆசை யினால் அதிக பணம் முடங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஞாபக மறதியால் வரும் சிக்கல்களைத் தவிர்க்க, எதையும் உடனுக்குடன் குறித்து வைப்பது நல்லது.

    மிதுனம்: பொருட்களை வாங்கி விற்பவர்கள் தேடி வரும் வாய்ப்புகளை வியாபாரமாக, உங்கள் வாய்ச் சொல்லால் மாற்றி விடுவீர்கள். உங்கள் தொழில் தொடர்பான பிரச்சனைகளை வளர விடாமல் உடனுக்குடன் சுமூகமான முறையில் முடித்துக் கொண்டால், தேக்க நிலை உருவாகாமலிருக்கும். மாணவர்கள் எந்தச் சூழலிலும், தவறான திசைப் பக்கம் திரும்பாமலிருங்கள்! வாழ்க்கை வசந்தமாகும். பண விவகாரங்களில் பிறர்க்கு சிபாரிசு செய்யும் முன் அவர்களின் பின்புலம் பற்றி அறிந்து செயல்பட்டால், சட்டச்சிக்கல்களுக்கு இடமிராது. நெருங்கிய நண்பர்களுடன் வாக்குவாதத்தில் இறங்குவதைத் தவிர்த்துவிட்டால், நட்பின் இழை விலகாமலிருக்கும்.

     கடகம்: பிள்ளைகளின் கல்வி, திருமணம் போன்றவைகள் உங்களின் விருப்பப்படியே நடைபெறும் . வீண் செலவுகளைக் குறைப்பதில் சற்று கவனமாக இருங்கள். சேமிப்பதற்கான வழி வகைகள் மேலும் அதிகரிக்கும். வியாபாரிகளும், தொழிலதிபர்களும், பொருளாதாரத்தில் அகலக் கால வைக்காமல், கட்டுக் கோப்பாய் செயல்பட்டால், லாபத்தின் வரவில் குறைவிராது. பணிபுரியும் இடங்களில் முரண்பட்ட கருத்துள்ளவர்களுடன் மோதுதலைத் தவிர்க்கவும். பெண்கள் கணவன் வழி உறவினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு முதலிடம் கொடுத்து விடுங்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்!

    சிம்மம்: பெண்கள் எந்த நல்ல விஷயத்தையும் தள்ளிப் போடாமல் உடனடியாக செயலில் இறங்குங்கள். கிடைக்கும் பலனும், மகிழ்ச்சியும் இரட்டிப்பாகும். நண்பர்களின் சந்தோஷத்திற்காக அதிக பணம் செலவழித்து சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள்! வியாபார விரிவாக்க விவகாரங்களில், பங்குதாரர்களுடன் கலந்து பேசி செயல்படுதல் நல்லது. நீண்ட நாட்களாக பிரிந்த உறவுகள் மீண்டும் குடும்பத்தில் இணைவதால், மகிழ்ச்சிப்பூ மீண்டும் மலர்ந்து விடும். மாணவர்கள் தேவையில்லாமல் அதிக நேரம் கண் விழித்தலைக் குறைத்துக் கொண்டால், ஆரோக்கியம் சீராகத் திகழும்.

    கன்னி: பிறரிடம் உள்ள குறைகளை விடுத்து, நிறைகளை மட்டும் கணக்கில் கொள்ளுங்கள். நேசம் பாராட்டி உதவுபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாகும். மாணவர்கள் வாகனம் ஓட்டும் போது சிந்தனையை சிதற விடாமலிருப்பது நல்லது. வரும் வாய்ப்புகளை தட்டிப் பறிப்பவரிடம் கலைஞர்கள் உஷாராக இருந்தால், உங்கள் திறமைகளை பிறர் எளிதில் கண்டு கொள்ள முடியும். அலுவலக அளவில் பொதுப் பிரச்னைகளுக்காக, நண்பர்கள் சிலரின் நட்பை முறித்துக் கொள்ள நேரிடும். முக்கிய பொறுப்புக்களில் இருப்பவர்களுக்கு எதிரிகளின் தொல்லை சற்று அதிகரிக்கலாம். எனவே கவனமாகச் செயல்படுவது அவசியம்.

    துலாம்: நிலுவையில் உள்ள பாக்கியெல்லாம் வசூலாகி விடுவதால், புதிய முயற்சிகளில் ஆர்வத்துடன் இறங்குவீர்கள். பொதுவாழ்வில் இயங்கிக் கொண்டிருப்பவர்கள் தம்முடைய பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டால், உங்கள் பணிகளில் எவரும் பழுது சொல்ல முடியாது. மாணவர்கள் புதிய சூழலில் வீண் வம்பு தும்புக்கு வேலை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பெண்கள் அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாமல் அளவாகப் பழகிவருவது நல்லது. வியாபாரிகள் புதிய ஒப்பந்தங்களைப் பெற, சில நெருக்கடிகளை தாண்டிச் செல்ல வேண்டியிருக்கும் .எனவே நிதானமாக செயல்படுவது அவசியம்.

    விருச்சிகம்: இயன்ற வரை வீண் செலவுகளைக் குறைக்கப் பாருங்கள். வரவுக்குள் செலவுகள் அடங்கிவிடும். காரணமற்ற கோபம் மற்றும் எரிச்சலால் பெண்களுக்கு வேலைகள் தேங்கும் நிலை உருவாகலாம். போட்டிகள் மூலம் உங்கள் திறமை வெளிப்படும்வரை கலைஞர்கள் பொறுமையாய் இருப்பது நல்லது. வியாபாரிகள் ஆரோக்யமான போட்டி மூலம் வாடிக்கையாளர்களின் வரவைத் தக்க வைத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனமாகும். முதியவர்கள் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். சுறுசுறுப்புடன் திகழலாம். சொத்து விஷயங்களில் உங்களின் நேரடி கவனம் தேவை.

    தனுசு: புதுப்புது யுக்திகளை பயன்படுத்துவதன் மூலம், கூட்டுத் தொழிலில் இருக்கும் பிரச்சனைகள் தீரும். பொருளாதாரச் சிரமங்கள் குறைவதால், பெண்கள் உற்சாகத்துடன் திகழ்வார்கள். இல்லத்தில்,கோபத்தைக் குறையுங்கள். பிரச்சனைகளின் தாக்கமும் தானே குறைந்து விடும். சக மாணவர்களின் மனோபாவத்திற்கேற்றவாறு , உங்கள் அணுகு முறையை மாற்றிக் கொண்டால், கல்வி தொடர்பான வேலைகள் கடகடவென்று முடிந்து விடும். கடும் பணியில் உள்ளவர்கள் உழைப்பில் சலிப்பு சேராமல், பம்பரமாய்ச் சுழல, சத்தான உணவு வகைகள் சாப்பிடுவது நல்லது. இது நாள் வரை எட்டியும், தட்டியும் சென்ற வாய்ப்புகள் மீண்டும் கலைஞர்களை நாடி வரும்.

     மகரம்: வாழ்க்கைத் துணையுடன் இணக்கமாக இருக்கும் தம்பதிகளுக்கு வாழ்வு இனிக்கும். மாணவர்கள் கல்லூரி விழா, போட்டிகள் ஆகியவற்றில் உற்சாகத்துடன் கலந்து கொள்வீர்கள்.சில நேரங்களில் உடன் பணி புரிபவர் ஏட்டிக்குப் போட்டியாக செயல்படுவர். முக்கிய பொறுப்புக்களை ஏற்றுள்ளவர்கள் பதவிக்குரிய அதிகாரம் வரம்பு மீறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நினைத்ததைவிட நல்ல பலன் நிறையவே கிடைக்கும். வியாபாரிகள் நிர்ப்பந்தத்தின் பேரில் சலுகைகளை வலுக்கட்டாயமாய் பெற முயற்சிப்பவர்களோடு கூட்டு முயற்சியில் இறங்க வேண்டாம்.சிறு உடல் உபாதைகளால், பெண்கள் அவதிப்பட நேரிடும்.

    கும்பம்: பெண்கள் பணச் செலவில் கட்டுப்பாடாய் இருந்தால்,கடன்களை கட்டுக்குள் வைத்துவிடலாம். பங்குச் சந்தை வியாபாரத்தில் இருக்கும் ஏற்றமும், இறக்கத்திற்கேற்ப வியாபாரிகள் செயல்படுவது அவசியம். வேலையில் இருப்போர்கள், பல சமயம் நேரம் காலம் பாராமல் உழைக்க வேண்டியிருக்கும் .சிலர் சொந்த வீடு வாங்குவதற்காக எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலனிருக்கும். சுய தொழிலில் இருப்பவர்கள் சில இழப்புக்கள் சில லாபங்கள் இரண்டையும் பெறுவர். அன்புக் கட்டளையால், நண்பர்களுக்கு சில உதவிகளை மகிழ்வுடன் செய்து கொடுப்பீர்கள்.

    மீனம்: வியாபாரிகளுக்கு முன்பிருந்த சுணக்கமான நிலை என்பது மறைந்து இணக்கமான சூழல் நிலவும். பெண்கள் வேலைப்பளு ஆரோக்கியத்தோடு மோதாமல் பார்த்துக் கொள்ளவும். மாணவர்கள் பிறரிடம் கைமாற்றாக பணம் பெற்று செலவழித்தால், வீண் தொல்லைக்கு ஆளாக வேண்டியிருக்கும். புதிதாக வேலையில் சேர்ந்திருப்பவர்கள் பேச்சில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும், பணியில் கவனம் செலுத்தினால், பாராட்டு பல வந்து சேரும் என்பதை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. பிள்ளைகளின் நடவடிக்கைகளில் தென்படும் மாறுதல்களை இதமாகச் சுட்டிக் காட்டுங்கள். உங்களை புரிந்து கொள்வார்கள்.

    Share
  • வார ராசி பலன் (24.12.2012-31-12.2012 வரை)

    காயத்ரி பாலசுப்பிரமணியன்

    மேஷம்: பெண்களுக்கு கடினமான முயற்சிக்குப்பின் சில காரியங்கள் பலிதமாகும். எனவே வாக்குறுதிகளை கொடுக்கும் முன் யோசனை செய்யுங்கள். கலைஞர்கள் மேற்கொள்ளும் வெளி நாட்டு பயணம் அவர்களின் தகுதிக்கான பரிசாய் இருக்கும்.மாணவர்கள் வீண் புரளிகளை நம்பி செயல்பட வேண்டாம். கலைஞர்கள் அக்கறை கொண்டவர்களின் ஆதரவோடு புதிய முயற்சிகளில் இறங்கலாம். வியாபாரிகள் அரசு வகையில் முயற்சிக்கும் காரியங்கள் அனுகூலமாகும் வரை பொறுமையாய் இருப்பது நல்லது. சில நேரம் பங்குதாரர்கள் ஏறுமாறாக நடந்து கொள்ள முயற்சி செய்வார்கள். கொடுக்கல் வாங்கலில் அவசரப் போக்கிற்கு இடம் தராமல் இருந்தால், புதிய சிக்கல்கள் உருவாகாது.

    ரிஷபம்: இந்த வாரம் பெண்களுக்கு பழைய நட்புகளை மீண்டும் சந்தித்து மகிழும் வாய்ப்பு உருவாகும். பெற்றோர்கள் அவ்வப்பொழுது பிள்ளைகளின் போக்கை கவனித்து வருவது நல்லது. மாணவர்கள் புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுங்கள் சுய தொழில் புரிபவர்களின் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கக் கூடிய வாரம் இது. பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு எதிர்ப்புகள் வலுக்கும் வாய்ப்பு உள்ளதால், எதிலும் எச்சரிக்கையாய் இருப்பது நல்லது. பணியில் இருப்பவர்கள் தெளிவான முடிவு எடுத்து உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெற்று மகிழ்வீர்கள். .

    மிதுனம்: அவ்வப்போது சிறிது ஆரோக்கிய நலிவு ஏற்பட்டாலும், பெண்கள் நினைத்த காரியத்தை முடித்து மகிழ்வார்கள். சிறந்த பணியாளர்கள் உங்கள் வசம் இருக்க, வியாபாரிகள் அவர்களுக்கு வேண்டிய சலுகைகளை வழங்குதல் அவசியம். பணியில் இருப்பவர்கள் திறமையோடு பொறுமையையும் சேர்த்துக் கொண்டால் வேலைகள் எளிதில் முடியும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு உதவிகள் கிடைத்தாலும் பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலை நிலவும். எதிர்பாராமல் கிடைக்கும் நல்ல அறிமுகங்கள் கலைஞர்களின் மன சந்தோஷத்தை அதிகரிக்கும். . மாணவர்கள் தீய நட்பைப் புறக்கணித்தால், வாழ்க்கை செம்மையாகத் திகழும்.

    கடகம்: . கலைஞர்கள் எதிலும் அளவாக இருந்தால், வெளி வட்டார தொடர்பு லாபகரமாக இருக்கும். வியாபாரிகள் மேற்கொள்ளும் பிரயாணங்களில் சற்று கவனமாய் இருத்தல் நலம். வீண் செலவைக் குறைத்தால், கலைஞர்கள் வேண்டிய காரியங்களுக்கு பணம் ஒதுக்கலாம். ஆர்வத்துடன் பாடம் பயிலும் மனோபாவம் மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் பெற உதவியாய் திகழும். மேலும் வாகனப் பயணத்தில் வேகம் வேண்டாம். பெற்றோர்கள் பிள்ளைகளின் குறைகளை இதமாகச் சுட்டிக்காட்டினால், தவறுகளை அவர்களே திருத்திக் கொள்வார்கள். பெண்கள் உறவுகளால், சில அசௌகரியங்களை சகித்துக் கொள்ளும் நிலைக்கு உள்ளாகலாம்

    சிம்மம்: பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அதிக பணம் தருவதைக் குறைத்துக் கொண்டால், அவர்கள் வழி தவறாமல் இருப்பார்கள். மாணவர்கள் உங்கள் சக்தியை அதிகரிக்க சத்தான உணவு வகைகளை உண்டு வாருங்கள். சோர்வின்றி கல்வி பயில முடியும். பணியில் இருக்கும்  பெண்கள் குடும்ப விஷயங்களை வெளிப்படையாக பேசாமலிருந்தால், பிரச்சனைகள் மேலும் பெரிதாகாமலிருக்கும் கலைஞர்கள் பூர்வீகச் சொத்தையும், குடியிருக்கும் வீட்டையும் மாற்றியமைப்பதற்காக அதிக தொகை செலவு செய்ய வேண்டியிருக்கும். வியாபாரிகள் குடும்பத்தினரின் ஆலோசனைக்குப் பின் புதிய முயற்சிகளில் இறங்குவது நல்லது.

    கன்னி:. பெண்கள் உங்கள் பிரச்சனைகளை நம்பிக்கையானவர்களுடன் ஆலோசனை செய்து தீர்வு காண்பது நல்லது. வேலை பார்க்கும் இடத்தில் மற்றவருடன் வாக்கு வாதங்களில் ஈடுபடாமலிருந்தால், கருத்து வேற்றுமைகள் தானே மறைந்துவிடும். கலைஞர்கள் ஆடம்பரச் செலவுகளை சுருக்கிக் கொண்டால், பணப்பற்றாக் குறையை சமாளித்துவிட முடியும். வியாபாரத்தில் போட்டியாளர்களின் கை ஓங்கும் நிலை இருப்பதால், வியாபாரிகள் எதிலும் கவனமாக இருப்பது அவசியமாகும்.மாணவர்கள் பல் மற்றும் கண் சம்பந்தமான நோய்களை உடனுக்குடன் கவனித்து வந்தால், ஆரோக்கியம் சீராக இருக்கும் .

    துலாம்: . பொது வாழ்வில் இருப்பவர்கள் உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடித்தால், உடல்நலம் நன்றாகத் திகழும். அலுவலகத்தில் நிலவும் போட்டியை சமாளிக்க அதிக உழைப்பும், நேரமும் தேவைப்படும்.வியாபாரிகள் சலுகைகளையும், வாய்ப்புகளையும் எளிதில் தக்க வைத்துக் கொள்ள, பொறுமையைக் கடைபிடியுங்கள்.வழக்கு விவகாரங்களில், நேரடி கவனம் செலுத்தினால், அவை சாதகமாய் மாறும் வாய்ப்புக்கள் கூடுதலாகும். மாணவர்கள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகளில், விதிமுறைகளின்படி நடத்தல் அவசியம். இல்லற இனிமை குலையாமல் இருக்க, பெண்கள் குடும்ப உறுப்பினரிடம் அனுசரித்து நடப்பது நல்லது

    விருச்சிகம்: இயந்திரங்களை இயக்குபவர்கள், தகுந்த பாதுகாப்புடன் பணியில் ஈடுபடுவது நலம். பொதுவாழ்வில் இருப்பவர்கள் , குடும்ப அமைதிக்கு பங்கம் நேராதவாறு திட்டமிட்டு பணிகளை முடித்துக் கொள்வதில் உறுதியாக இருங்கள்.அமைதியான சூழலில் அநேக பணிகளை முடிக்க முடியும். பெருந்தொகையைக் கையாளுபவர்கள் கவனமாக நடந்துகொண்டால், உங்களின் நற்பெயருக்கு களங்கம் ஏதும் நேராது. பங்குதாரரிடையே சிறு சலசலப்பு தோன்றி மறையும். பெண்கள் சிலருக்கு வாக்கு கொடுத்துவிட்டு, சங்கடப்படுவதைத் தவிர்க்க எதிலும் நிதானமாக செயல்படுவது அவசியம்.

    தனுசு: கலைஞர்கள் திறமையுடன் செயல்பட்டுவந்தால், திறமைக்குரிய பாராட்டு கிடைக்கும். பெண்கள் அண்டை அயலாரிடம், அளவாகப் பழகி வந்தால், அநாவசியத் தொந்தரவுகள் அருகே வராது. வியாபாரிகள் வாகனங்களுக்குரிய காப்பீடு முதலியவைகளை உரிய கெடுவுக்குள் செலுத்தி விட்டால், தண்டம் கட்ட வேண்டியதிலிருந்து தப்பிவிடலாம். பெண்கள் மின்சாதனப் பொருட்களை கவனமாகக் கையாளுங்கள். உயர் பதவியில் இருப்போர்கள் அதிக மரியாதை காண்பிப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. சுய தொழிலில் மனதுக்கு பிடித்த மாற்றங்களை செய்ய சிறிது காலம் காத்திருக்கும் நிலை நிலவும்.

    மகரம்: பூர்வீகச் சொத்தில் சில தொல்லைகள் வந்து போகும் நிலை இருப்பதால், பெண்கள் ஆவணங்களை பத்திரமாக வைப்பது அவசியம். வியாபாரிகள் வேண்டிய நன்மைகளையும், சலுகைகளையும் பெற நேர் வழியில் முயற்சி செய்வது நல்லது. மேலும் உங்களின் சரக்குகளுக்குத் தேவையான பாதுகாப்பைப் பலப்படுத்துவது அவசியம்..  மாணவர்கள் அவசரப்பட்டு அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிட வேண்டாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் பொறுப்புடனும், பொறுமையுடனும் செயல்பட்டு வந்தால், நல்ல பெயரைப் பெறுவது எளிதாகும். கலைஞர்கள் தேடி வரும் சந்தர்ப்பங்களை முறையாகப் பயன்படுத்திக் கொண்டால், உங்கள் அந்தஸ்து உயர்ந்து விடும்.

    கும்பம்: வியாபாரிகள் வேண்டிய காரியங்களுக்கு தேவையான பணத்தை ஒதுக்கிவிட்டால், கடைசி நேர அலைச்சலைத் தவிர்த்து விடலாம்.பெண்கள் சின்ன விஷயங்களுக்கு உணர்ச்சிவசப்படுவதைக் குறைத்துக் கொள்வது நல்லது.அதிகாரிகளால் ஏற்பட்ட கெடுபிடிகள் தளர்ந்து விட்டாலும், பணியில் இருப்பவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பில் கவனமாக இருந்தால், வேண்டிய சலுகைகள் பெறலாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களை ஒப்புக்கொள்ளும் முன், அதில் உள்ள நிறைகுறைகளை உணர்ந்து கொண்டால், நஷ்டப்படுவதைத் தவிர்த்து விடலாம். பங்குச் சந்தையில் அதிக பணம் முடக்க வேண்டாம்.

    மீனம்: பொதுவாழ்வில் உள்ளவர்கள் தங்கள் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட முயல்பவர்களின் சகவாசத்தைத் தவிர்த்தால், நல்ல நிலையை அடையலாம்.பொறுப்பில் இருப்பவர்கள் எந்த இடத்திலும் பணிவாகப் பேசுவது நல்லது. கலைஞர்கள் எந்த சூழலிலும், உறுதியான மனத்துடன் செயல்பட்டு வந்தால், எல்லாம் நலமாகவே முடியும். மாணவர்கள்  வீண் விரயத்திற்கு வழி கோலும் செலவுகளை சுருக்கிக் கொள்ளுங்கள். பணத் தட்டுப்பாடு என்பது இராது. கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் உடல்நலத்தைக் கவனிப்பதில் அதிக அக்கறை காட்ட வேண்டிய வாரமிது. சுய தொழில் புரிபவர்கள் எதிலும் அகலக் கால் வைக்காதிருப்பது நல்லது.

    Share
  • வார ராசி பலன் : திசம்பர் (17- 23)

    காயத்ரி பாலசுப்பிரமணியன்

    மேஷம்:  நெருங்கிப் பழகிய பங்குதாரர்கள் கருத்து வேறுபாடால் உங்களை விட்டுப் பிரியலாம். எனவே வியாபாரிகள் எதிலும் நிதானமாய் இருப்பது நல்லது. பணி புரிபவர்கள் எந்த விஷயத்திலும் விடாப்பிடியாய் இருப்பதைக் குறைத்துக் கொண்டால் வாக்குவாதங்களும், வேதனைகளும் இராமல் வேலைகளை செய்ய முடியும். மாணவர்கள் விரும்பிய உணவு வகைகளை உண்பதிலும் ஒரு வரையறை வைத்துக் கொண்டால், ஆரோக்கியம் குன்றாமலிருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்கள் செல்வாக்கை சிதறச் செய்யும் காரியங்களுக்கு ஆதரவு தருவதை அறவே தவிர்ப்பது புத்திசாலித்தனமாகும். முதலீடுகள் தொடர்பான விஷயங்களில் கலைஞர்கள் எச்சரிக்கையாய் செயல்படுவது அவசியம்.

    ரிஷபம்: வெளி நாடு செல்ல வேண்டும் என்று விரும்பியவர்களின் எண்ணம் பலிக்கும். மாணவர்கள் கவனச்சிதறலுக்கு ஆட்படாமல், படிப்பில் அக்கறை காட்ட, எதிர்காலம் நன்றாக இருக்கும். நழுவிச் சென்ற வாய்ப்புகளைக் கலைஞர்கள் தங்கள் திறமையால் தங்கள் பக்கம் இழுத்துக்கொள்வர். பொது வாழ்வில் இருப்பவர்கள் சமயோசிதமாகச் செயல்பட்டால், எதிரிகளின் கரம் மேலோங்காதிருக்கும். முதியவர்கள் எளிய உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால், உறுதியான உடலைப் பெறலாம். பணி சுமை கூடுவதால்,பெண்களுக்கு எரிச்சலும், அசதியும் அவ்வப்போது வந்து போகும் வாய்ப்பிருக்கிறது.

    மிதுனம்: வாகனங்களை புதிதாக ஓட்டுபவர்கள், அதிக வேகத்தில் செல்வதை இயன்றவரைத் தவிர்ப்பது நலம். விளையாட்டுப் போட்டிகளை மாணவர்கள் நேர் வழியில் எதிர்கொண்டால் வெற்றி உறுதி! வியாபாரிகள் பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர்கள் சக ஊழியர்களினால் உருவாகும் பிரச்சனைகளை சமாளிக்க நேரிடும் . வயதான நோயாளிகள் தேவையான பரிசோதனைகளை தள்ளிப் போட வேண்டாம். கலைஞர்கள் தவறான வழிக்கு மாறாமலிருந்தால், உங்கள் பெயர், புகழ் இரண்டும் குறையாமலிருக்கும். பங்குத்துறையில் உள்ளவர்கள் அளவான முதலீடு என்பதில் உறுதியாக இருப்பது நலம்.  .

    கடகம்: வெளியிடங்களில் வேலைக்காகவும் படிப்பிற்காகவும் தங்கியிருப்பவர்கள் அதிகமாக ஆசைப்படுதலையும், வீண் செலவுகளையும் சுருக்கிக் கொண்டால், பற்றாக் குறையை ஓரளவு சமாளித்துவிடமுடியும். யாரையும் குற்றம்சாட்டிப் பேசாமலிருந்தால், கலைஞர்களின் குடும்பத்திலும், தொழிலிலும் குழப்பம் இராது. பணியில் இருப்பவர்கள் கடனில் வண்டி வாங்குவதை சற்று ஆறப்போடவும். மாணவர்கள் திறமையோடு பொறுமையையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நினைத்த காரியத்தை சாதிக்கலாம். வீடு, மனை ஆகியவற்றை வாங்கி விற்பவர்கள் அதிக லாபத்திற்கு ஆசைப்படாமலிருந்தால், தங்கள் பெயரை நிலை நிறுத்திக் கொள்ளலாம்.

    சிம்மம்: பணியில் இருப்பவர்கள் பிறருக்கு வழங்கும் பணம், ஆலோசனை இரண்டிலும் கவனமாய் இருப்பது அவசியம். பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்களுக்கென்று ஒரு வரையறை வைத்துக் கொண்டு செயல்படுவது புத்திசாலித்தனமாகும். உறவுகளின் வருகையால் பெண்கள் இல்லத்தில் சில இடையூறுகளை எதிர்கொண்டு சமாளிக்க வேண்டியிருக்கும். தொழிலாளர்கள் தங்களின் சலுகைகளை முறையாகப் பயன்படுத்துவது நல்லது. முதியவர்கள் எலும்பு சம்பந்தமான உபாதைகளை உடனுக்குடன் கவனித்து விடுவது நலம். இந்த வாரம் வியாபாரிகள் எதிர்பார்த்த வரவுகள் சற்றே தாமதமாகலாம். பிள்ளைகளின் நட்பு வட்டத்தின் மீது பெற்றோரின் கவனம் தேவை.

    கன்னி: பெண்கள் சொல்லும் வார்த்தை, செலவழிக்கும் பணம் இரண்டிலும் நிதானமாக இருங்கள். உறவுகள் கசக்காமலிருக்கும். வியாபாரிகள் புதியவரை நம்பி பொறுப்புக்களைத் தருவதைக் காட்டிலும் நேரடியாக நீங்களே கவனம் செலுத்திவர, லாபம் தடையின்றி வரும் . வேலை செய்யும் இடங்களில் தோன்றும் சிறு பிரச்சனைகளை பொறுமையாகக் கையாண்டால், பணியில் இருப்பவர்கள் உயரதிகாரிகளின் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்வது சுலபமாகும். சுய தொழில் புரிபவர்கள் . தொழிலில் இருந்த பின்னடைவு, நெருக்கடி ஆகியவை நீங்கி, புதுத் தெம்புடன் செயல்படுவார்கள். கலைஞர்களுக்கு , எளிதில் முடியக் கூடிய வேலைகள் சில சமயம் வளர்ந்து கொண்டே போகும்.

    துலாம்: பொது சேவை ஆற்றுபவர்கள் அலட்சியப் போக்கைத் தவிர்த்தால், வெற்றிப் படியில் எளிதாக ஏறலாம். மாணவர்கள், கல்விக்கான செய்முறைப் பயிற்சிகளில் தகுந்த விதிகளைக் கடைபிடிப்பது அவசியம். இந்த வாரம் கடன் தொல்லையால் சில நிகழ்ச்சிகள் தள்ளிப் போக வாய்ப்பிருக்கிறது. பெண்கள் தாங்கள் எடுத்துக் கொண்ட வேலையில் கண்ணும் கருத்தாக இருந்தால், நல்ல பெயரைப் பெற இயலும்.. கூட்டுத்தொழில் செய்பவர்கள் எதிலும் கவனமாக இருந்தால், வருகின்ற லாபம் குறையாமல் இருக்கும். கலைஞர்கள் சின்ன விஷயங்களுக்கு சுள்ளென்று கோபப்படுவதைத் தவிர்த்தல் அவசியம்

    விருச்சிகம்: கலைஞர்கள் தன்னுடைய பணியில் மட்டும் கவனம் செலுத்தி வந்தால், புதிய கதைகளைத் திரிப்பவர்களின் வாயைக் கட்டி விடலாம். பெண்கள் உறவுகளின் போக்கறிந்து பக்குவமாக நடந்தால், இல்லத்தில் அமைதி நிலவும். சுய தொழில் புரிபவர்கள் தொழில் வகையில் எந்த ஒரு முயற்சியையும் தக்க ஆலோசனையின் பேரில் செயல்படுத்தினால், நினைத்தவாறு லாபம் பெறலாம். கவலைகள் முன்னேற்றத்தின் வேகத்தைக் குறைக்காதவாறு மாணவர்கள் எச்சரிக்கையுடன் செயல்படவும். பணியில் இருப்பவர்கள் நிர்வாகம் மற்றும் உயர் அதிகாரிகளின் செயல் பாடுகள் பற்றிய அலசல்கள். விமர்சனங்கள் ஆகியவற்றில் ஈடுபடாமலிருப்பதே நலம்.

    தனுசு:தொல்லை தந்து கொண்டிருந்த கடன்கள் படிப்படியாகக் குறைவதால், புது தெம்புடன் வலம் வருவீர்கள். வேலை தேடிக் கொண்டிருந்தவர்கள் நல்ல வேலையில் அமர்வார்கள். வியாபாரிகள் எதிலும், நிதானம் மற்றும் தீர்க்காலோசனைனயைப் பின்பற்ற, அதிக நன்மை பெறலாம். பெண்கள் இல்லத்திலும், அலுவலகத்திலும் வீண் பேச்சுக்களைக் குறைத்தால், அமைதிக்கு பங்கம் வராமலிருக்கும். புதிய துறையில் கால் பதிப்பவர்கள், சில கெடுபிடிகளைத் தாண்டி, தன் திறமைகளை நிரூபிக்க வேண்டி இருக்கும். கவனக் குறைவாகச் செயல்படும் பிள்ளைகளை பெற்றோர்கள் இதமாகக் கண்டிப்பதே நல்லது.

    மகரம்: பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொள்ளாமல் விலகிச் செல்லும் நிலை நிலவினாலும், பெண்கள் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு, பிரச்சனைகளைத் தீர்த்தால் உறவுகள் இதமாகத் திகழும். இந்த வாரம் பங்குதாரர்கள் இடையே வீண் சர்ச்சை, வேண்டாத சந்தேகம் ஆகியவை நுழைந்து மன அமைதியைக் கெடுக்கலாம். மாணவர்கள் படிப்பில் உள்ள கவனத்தை சிதறடிக்கும் விஷயங்களுக்கு தலையசைக்காமலிருப்பது அவசியம் . முயன்றால் முடியாதது இல்லை என்பதை உணர்ந்து, கலைஞர்கள் முழு மூச்சாக செயல்பட்டால் எடுத்த காரியங்களில் வெற்றி அடைவீர்கள். பணி புரிபவர்கள் வாக்கில் நிதானம், செயல்களில் பணிஆகிய இரண்டையும் கடைபிடித்தால், சங்கடம் ஏதும் வரமல் சமாளித்து விடலாம்.

    கும்பம்: வியாபாரிகள் புதியவர்களை நம்பி பணம் கொடுக்காமலிருந்தால், நஷ்டங்களும், கஷ்டங்களும் உங்கள் அருகே வராது. பொது வாழ்வில் உள்ளவர்கள் மன உளைச்சல், சந்தேகம், குழப்பம் ஆகியவை வராதவாறு, பொறுமையுடனும், திறமையுடனும் செயல்பட்டு வந்தால், உங்கள் திறமைக்குரிய பாராட்டு கிடைக்கும். வேண்டாத தொல்லைகளால் சுறுசுறுப்பாக நடந்த சில பணிகளில் தேக்க நிலை உருவாகும். பொறுப்பான பதவி வகிப்பவர்கள் பணியாளர்களிடம் நயமாக நடந்து கொள்ளுங்கள். உங்களிடம் விசுவாசமாய் இருப்பார்கள். பெண்கள் உடல்நலம் பாதிப்பு ஏற்படாதவாறு, பணியில் தகுந்த மாற்றங்களை மேற்கொள்ளுங்கள். எல்லா வேலைகளும் சீராக நடக்கும்.

    மீனம்: முதியோர்களுக்கு , உடலில் சில அசௌகரியங்கள் தோன்றி மறையலாம். தகுந்த மருந்துகளை உட்கொண்டால், ஆரோக்கியம் ஓரளவுக்கு நன்றாக இருக்கும். பெண்கள் கோபதாபங்களைக் குறைத்து பொறுமையாய் இருங்கள். குடும்பத்தில் பல பிரச்சனைகள் தீர்ந்து விடும். இந்த வாரம் கவனத் தடுமாற்றம், மறதி ஆகியவை பொது வாழ்வில் உள்ளவர்களை அலைக்கழிக்கும். மாணவர்கள் இனிய அனுபவங்களைப் பெற்று மகிழ்வதோடு நெருக்கமானவர்கள் காட்டும் பாசமும் உங்களை உற்சாகப்படுத்தும். நம்பிக்கை வைத்தவர்களில் சிலர் ஏமாற்றங்களைத் தருவார்கள். எனவே பொறுப்பில் இருப்பவர்கள் முக்கியமான ஆவணங்கள் , சாவிகள் ஆகியவற்றை பத்திரமாக வைப்பது அவசியம்.

    Share
  • வார ராசி பலன் 10.12.2012-16.12.2012 வரை

    காயத்ரி பாலசுப்பிரமணியன்

    மேஷம்: வீண் பேச்சுகள் குறைந்து ஆக்கப்பூர்வமான விஷயங்களில் கவனம் செலுத்துவது மாணவர்களின் உயர்வுக்கு வழி வகுக்கும்.  குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் விலக, பெண்களின் பொறுமை கை கொடுக்கும்.  கொடுத்த வாக்கை காப்பாற்றும் முயற்சியில் வியாபாரிகளுக்கு, சாதகமான பலன் கிடைக்கும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு, உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணியில் உள்ளவர்கள், புதிய நபர்களுக்காக ஜாமீன் போடுவதை தவிர்ப்பது நல்லது.  பண முடை தலை காட்டும் வாய்ப்பிருப்பதால், சுய தொழில் புரிபவர்கள் நிதானமாக செயல்படவும். கலைத்துறையினர் எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்தாலும் பிரகாசிப்பது கடினமாக இருக்கும்.

    ரிஷபம்: சேமிக்க வேண்டும் என்று நினைத்தாலும், பெண்கள் இந்த வாரம், பிள்ளைகளின் நலனுக்காக  செலவு செய்யவேண்டி இருக்கும். புதிதாக வேலையில் சேர்ந்தவர்கள், பணி நிமித்தமாக வெளி இடங்களில் தங்க வேண்டிய நிலை ஏற்படலாம். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு, உடன் இருப்பவர்களால், தேவையற்ற கவலை வந்து நீங்கும். பொறுப்பில்  இருப்பவர்களுக்கு கூடுதல் உழைப்பு இருக்கும். கடன் விவகாரம் கட்டுக்குள் இருக்க, வியாபாரிகள் தேவையான முயற்சிகளை அவ்வப்போது .எடுக்கவும். கலைஞர்கள் வெளியிடங்களில், தங்களின் மதிப்பு, மரியாதை கெடாமல் கவனமாக பேசுவது நல்லது. மாணவர்கள் போடும் உழைப்பிற்கு நல்ல பலன் கிட்டும்.

    மிதுனம்: இந்த வாரம், பெண்கள் பண விஷயத்தில்,  தகுந்த முடிவுகள் எடுக்கமுடியாத சூழலுக்குத் தள்ளப்படலாம். மாணவர்கள் செலவுகளில், கவனமாக இருந்தால், வாகனங்களால் உண்டாகும் வீண் செலவுகள் குறையும். தடுமாற்றத்தைத் தரும் விவகாரங்களிலிருந்து, க்லைஞர்கள் ஒதுங்கியிருப்பதே புத்திசாலித் தனம்.  பணத்தேவையால், .வியாபாரிகளுக்கு நெருக்கடி தோன்றி மறையும். பொது வாழ்வில் உள்ளவர்கள், எதிலும், நல்ல பெயர் வாங்குவார்கள். பணியில் இருப்பவர்கள், சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது மூலம், வேலைகள் தேங்காமல் பார்த்துக் கொள்ளலாம். .சுய தொழிலில் இருப்பவர்கள், புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது கவனத்துடன் செயல்படுவது அவசியம்.

    கடகம்: இல்லத்தில் எழும் பிரச்சனைகளைத் தீர்க்க, பெண்கள் நிதானத்தைக் கடைபிடித்து வந்தால்,உறவுகள் சீராக இருக்கும். பணியில் இருப்பவர்கள் தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் இருந்தால், மன அமைதி கெடாமல் வேலைகளில் ஈடுபடலாம். பொதுவாழ்வில் இருப்பவர்கள் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளும் முன் பணியின் தன்மை அறிந்து செயல்பட்டால், பொறுப்புக்களை நிறைவேற்றுவதோடு நல்ல பெயரையும் தக்க வைத்துக் கொள்ளலாம். இந்த வாரம் கடின முயற்சி மற்றும் அலைக்கழிப்புக்குப்பின் கலைஞர்களின் உண்மையான உழைப்பிற்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

    சிம்மம்: இந்த வாரம் வியாபாரிகள் கடனைத் தீர்ப்பதற்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளைக் காப்பாற்ற முழு முயற்சியில் இறங்கி வேலை செய்து கடனை அடைத்து, லாபத்தைப் பெருக்கிக் கொள்வார்கள். மாணவர்கள் மேற்கொள்ளும் பயணம் ஆதாயத்தை ஏற்படுத்துவதாக அமையும். பெண்கள் மனதில் குழப்பங்களுக்கு இடம் கொடுக்காமல் வேலை செய்வதன் மூலம் குடும்பப் பொறுப்புக்களை சரிவர செய்து நல்ல பெயரைப் பெறலாம். கலைஞர்கள் தங்கள் கடன் பற்றிய நிலவரத்தை முழுமையாக தெரிந்து கொண்டு செயல்பட்டால்,பொருளாதாரச் சரிவுகளை ஓரளவு சரிக்கட்டமுடியும்.

    கன்னி: இந்த வாரம் சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு சரக்குகளை வாங்குதல் நலம். மாணவர்கள் மற்றவர் கூறும் குறைகளையும், விமர்சனங்களையும் பொருட்படுத்தாது, கல்வியில் கவனமாக இருந்தால் வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைய இயலும். பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களிடம் சுமூகமாக நடந்து கொண்டால், குற்றங்குறை என்பது தேய்பிறையாக கரைந்துவிடும்.குடும்பத்தில் சந்தோஷம் நிலவி வந்தாலும், உறவினர் வருகையால், சிறு சலசலப்பு தோன்றி மறையும். பொது வாழ்வில் இருப்பவர்கள் நிர்வாக விவகாரங்களில், தகுந்த ஆலோசனையின் பேரில் செயல்படவும்.

    துலாம்: பெண்கள் பொறுமையாக நடந்து கொண்டால், குடும்பத்தில் சச் சரவு, கருத்து வேறுபாடு ஆகியவை நுழையாமல் இருக்கும். மாணவர்கள் பாடங்களை கவனமாக பயில்வதன் மூலம் கடைசி நேர பதற்றத்தையும், பரபரப்பையும் குறைத்துக் கொள்ளலாம். சுய தொழில் புரிபவர்கள் சோம்பலையும், பணிகளை தள்ளிப் போடுதலையும் தவிர்த்தால், வாய்ப்பும், அதிர்ஷ் டமும் உங்களை தேடிவரும். பொது வாழ்வில் இருப்பவர்கள் குற்றம் குறைகளை பெரிது படுத்தாமலிருந்தால்,கூட்டு முயற்சிகள் மூலம் அதிக லாபமும், நல்ல பெயரும் பெற முடியும்.

    விருச்சிகம்: பெண்கள் பிள்ளைகளின் போக்கை அவ்வப்போது கவனித்து வாருங்கள். அவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமையும். மாணவர்கள் நண்பர்கள் நடுவே தோன்றும் கருத்து வேறுபாடுகளை பெரிது படுத்தாமலிருப்பது புத்திசாலித்தனம். இந்த வாரம் வீட்டை விரிவுபடுத்துவதில் அதிக பணம் முடங்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் மாணவர்கள் அவசரப்பட்டு அடுத்தவர் பிரச்னைகளில் தலையிட வேண்டாம். சுய தொழில் புரிபவர்கள் வேண்டாத தொல்லைகளிலிருந்து விடுபட எல்லாவற்றிலும் கவனமாக இருப்பதோடு பணம் செலவு செய்வதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது.

    தனுசு: இந்த வாரம் பூர்வீகச் சொத்தில் சில தொல்லைகள் வந்து போகும் நிலை இருப்பதால், பெண்கள் ஆவணங்கள் அனைத்தையும் பத்திரமாக வைப்பது அவசியம். இந்த வாரம் எவ்வ ளவு பாடுபட்டாலும்,நல்ல பெயரைப்பெறுவது என்பது சற்று கடினமாக இருக்கும். நண்பர்க ளிடம் ஏற்பட்ட மனஸ்தாபம் தீருவதால் மாணவர்களின் மீண்டும் நட்பு பலம் பெறும். கலைஞ ர்கள் தங்கள் தகுதியை உயர்த்திக் கொள்ள எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலனிருக்கும். முதியவர்கள் உணவு , உரையாடல் இரண்டிலும் கட்டுப்பாடாக இருப்பது நல்லது

    மகரம்: மாணவர்கள் பிறரிடம் கைமாற்றாய் பணம் பெறுவது கொடுப்பது-இரண்டையும் தவிர்த்தால் வீண் தலைவலி வராமலிருக்கும். உயர் படிப்பிற்காக வெளியிடம் செல்பவர்கள் எதிலும் கட்டுப்பாட்டுடன் இருப்பது நன்மை தரும். பெண்கள் சேமிப்பைக் கரைக்கும் செலவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.பொறுப்பில் இருப்பவர்கள் வழக்கு விவகாரங்களை நேரடியாக கவனித்துக் கொண்டால், நஷ்டங்களைத் தவிர்த்து விடலாம். பணியில் இருப்பவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களையும், அதன் மூலம் வெற்றிகளையும் பெற்று மகிழ்வர்.

    கும்பம்: பெண்கள் ஆகாரத்தில் கட்டுப்பாடாய் இருந்தால், ஆரோக்கியமும் சீராக இருக்கும். வியாபாரிகள் பணியாளர்கள் கொடுத்த பொறுப்புக்களை சரிவர செய்கிறார்களா என்று கவனித்துக் கொள்ளவும். பொது வாழ்வில் இருபவர்கள் வேண்டாத பிரச்னைகளில் ஈடுபட வேண்டாம். பணியில் இருப்பவர்கள் உங்களைத் தேடி வரும் இடமாற்றத்தை விரும்பி ஏற்றுக் கொள்ளுங்கள்.அது நல்ல திருப்பு முனையாக இருக்கும். சுய தொழில் புரிபவர்கள் நிலவும் சூழலுக்கேற்ப, திட்டங்களை செம்மைப்படுத்துவதோடு தங்கள் அணுகு முறைகளையும் மாற்றினால், அதிக லாபம் பெறலாம்.

    மீனம்: பெண்கள் அனுசரணையான போக்கை மேற் கொண்டால், குடும்பம் அமைதியாக இருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் பணியாளர்களின் ஒத்துழைப்பு குறையாமல் பார்த்துக் கொள்வது நல்லது. பணியில் இருப்பவர்கள் பல சலுகைகள் எதிர்பார்த்திருந்தாலும், அவற்றில் சில மட்டுமே நிறைவேறும். கலைத் துறையினர் புதிய முயற்சிகளுக்கு வரும் தடைகளை தங்கள் திறமையால் வென்று சாதனை படைப்பார்கள். சரளமான பணப் புழக்கத்தால், வியாபாரிகள் மனதில் கூடாரமிட்டிருந்த சஞ்சலங்கள் குறைந்து உற்சாகம் கூடும்.

    Share
  • வார ராசி பலன்கள்:03.12.2012-09.12.2012.

     

     

    காயத்ரி பாலசுப்ரமணியன்

    மேஷம்: பணம் கொடுக்கல்-வாங்கல் எதுவாக இருந்தாலும், வியாபாரிகள் தங்கள் கணக்கு வழக்குகளை முறையாகப் பராமரித்து வந்தால் எந்தத் தொல்லையும் இராது. பெண்கள் எந்த சூழலிலும் பதற்றமின்றி நிதானத்துடன் செயல்படும் வாரம்  இது. சிறிய அளவில் பண முதலீடு செய்பவர்கள் புதிய முதலீடுகளில் கவனமாய் இருப்பது அவசியம். மாணவர்கள்  உடனிருந்து தொல்லை தருபவர்களிடமிருந்து விலகி இருப்பது புத்திசாலித் தனம்.  பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு திறமைக்கும், நேர்மைக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கும். வரை பொறுமையாய் இருப்பது நல்லது 
       
      ரிஷபம்:  தனியார் துறையில் பணி புரிபவர்களுக்கு,உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லையே  என்ற குறை இருக்கும். வியாபார விஷயமாக வெளியூர் செல்லும் வியாபாரிகள் புதிய உணவு வகைகளை விலக்குவது நலம். பெண்கள் செலவுகளில் சிக்கனமாக இருப்பது புத்திசாலித் தனமாகும். கர்ப்பிணிப் பெண்களுக்கு உடல்நலம் சுமாராக இருக்கும். இருந்தாலும் பித்தம் போன்ற  உபாதைகளை உடனுக்குடன் கவனிப்பது அவசியம்.   பொது வாழ்வில் இருப்பவர்கள் பணியில் சிரத்தை எடுத்து செய்தால், வேண்டிய வேண்டிய பலனோடு  எதிர்பார்த்த  பாராட்டும், புகழும்  தானே வந்து  சேரும்
    மிதுனம்:   இந்த வாரம்  கலைஞர்கள்   மேற்கொள்ளும் வெளியூர் பயணம் மூலம் பெறும் பலன்கள் சொற்பமாக இருப்பதால், திறமையை முழு அளவில் பயன்படுத்தி தங்கள் இடத்தைத் தக்க வைத்துக் கொள்வது அவசியம். வியாபாரிகள் இறங்கும் புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த அளவில் விஷயங்கள் அமையாமல்,  சிற்சில பின்னடைவுகளை சந்திக்க வேண்டி வரலாம். எனவே திட்டங்கள் நிறைவேறும் வரை பொறுமையாகசெயல்படுவது அவசியம்.. பொதுவாக இந்த வாரம் மாணவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும்.     பெண்கள் பண விவகாரங்களில் விழிப்புடன் இருந்தால், அமைதியாக வேலைகளில் ஈடுபட முடியும்.

    கடகம்: முக்கியமான பொறுப்பில் இருப்பவர்கள்   அவ்வப்போது  வழக்குகளின் போக்கை கவனித்து வருவது நல்லது. பொது வாழ்வில் இருப்பவர்கள்  உடன்  இருப்பவர்களோடு அனுசரித்து நடந்து கொண்டால், உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கள் ஓரளவு கிடைக்கும்.   லாபத்தைப்பெற வியாபாரிகளும் பணியாளர்களோடு  சேர்ந்து  உழைக்க வேண்டியது இருக்கும் . வேலையில் இருப்பவர்கள் புதிய இலாக்காவிற்கு மாறும் வாய்ப்பிருப்பதால் வேலைப்  பளு அதிகரிக்கும். மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள எடுக்கும் முயற்சிக்குத் தக்க பலனிருக்கும்   கலைஞர்கள்   சக கலைஞர்களிடம் தங்கள் கோப தாபத்தைக் கொட்ட வேண்டாம்.

     சிம்மம்: பணியில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் எதிர்பார்க்கும் கடன்தொகை கைக்கு வந்து சேர்வதோடு .  மேலதிகாரிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளும்  தானே  மறையும்.  பெண்களுக்கு உறவினர்கள் மூலம்  நற்பலன்கள் கிடைக்கும்    சுய  தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இது வரை இருந்த நெருக்கடிகள் விலகி நிறைவான வாழ்க்கையும், கையில் சரளமான பணப் புழக்கமும் இருக்கும்   பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு  தேவையில்லாத அலைச்சல்களும், மன சங்கடங்களும் தோன்றி மறையும். வயதானவர்கள் தங்கள்  உடல் ஆராக்கிய வகையில் கவனம் செலுத்துவது அவசியம்.

    கன்னி.  பணியில்  இருந்து கொண்டே புதிய உத்தியோகத்திற்கு முயற்சி செய்பவர்களுக்கு , இந்த வாரம் அனுகூலமான  தகவல் வந்து சேரும்.   பெண்கள் இல்லத்தில் அவ்வப்போது தோன்றும்  சிறிய பிரச்னைகளை, பெரிதாக வளரவிடாமல் பக்குவமாக நடந்து கொள்வது நல்லது. தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்கள் கீழ் பணி புரிபவர்களிடம் வீண் விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும்  .  தாங்கள் விரும்பிய கல்லூரியில் இடம் கிடைப்பதால், மாணவர்கள் புதுத் தெம்புடன் திகழ்வார்கள்.  கலைஞர்கள்  உழைப்புக்குத் தரும் முக்கியத்துவத்தை ஓய்வுக்கும் தந்தால், ஆரோக்கியம் பொலிவுடன் விளங்கும்.

      துலாம்; : மாணவர்கள் கவனச் சிதறலுக்கு இடம் கொடுக்காமலிருப்பது நல்லது. வெளி இடங்களில் கவனமாக நடந்து கொள்வதன்  மூலம் கலைஞர்கள் அவப்பெயர் ஏற்படுவதை தவிர்க்க முடியும். உயர்ந்த பதவியில் இருப்பவர்கள்  பிறரை நம்பி முக்கிய பொறுப்புகளைத் தருவதைத் தவிர்த்தால், சஞ்சலம், வீண் சங்கடம் ஆகியவற்றிலிருந்து ஓரளவு தப்பி விடலாம்.  . சிறு தொழில் புரிபவர்கள் ஏமாற்றங்களைக் கண்டு சலிப்படையாமல், உங்கள் முழு சக்தியையும் உழைப்பில் போட்டால், வெற்றியோடு, வேண்டிய லாபமும் வந்து சேரும் . பெண்கள் குடும்ப அமைதிக்காக முயற்சி எடுத்தாலும் அவ்வப்போது சலசலப்பு தலைகாட்டும்.

     விருச்சிகம்; பெண்கள் எப்போழுதும் பொறுமை என்னும் தாரக மந்திரத்தை கடை பிடித்தால், சிறப்பான பலன்களை பெறலாம்: புதிதாய் வேலையில் சேர்ந்தவர்கள் தவறுகள் நேராதவாறு கவனமாய் செயலாற்றுங்கள்.  இந்த வாரம் கலைஞர்களுக்கு  புதிய வாய்ப்புகள் குறைவாகவே காணப்படும் வாய்ப்பிருப்பதால், செலவுகளில் சிக்கனமாக இருப்பது அவசியம். . வியாபாரிகள் இது வரை சந்தித்த மன உளைச்சல், நெருக்கடியான சூழ்நிலை ஆகியவை மாறி இணக்கமான சூழல் உருவாக தொழிலாளர்கள்  பக்கபலமாக இருப்பார்கள். சுய தொழில் புரிபவர்கள் புதிய தொழில் நுட்பத்தைப் புகுத்தி சாதனை படைப்பார்கள்.

    தனுசு: பொருளாதார இறக்கம் என்பது படிப்படியாக குறைந்து விடுவதால், வியாபாரிகள் விரும்பியவாறு விரிவாக்கப் பணிகளை செய்து மகிழும் வாய்ப்பு கிட்டும்.  இந்த வாரம் மாணவர்கள் அரசு அளிக்கும்  சலுகைகளை  பெற்றுக் கொள்வதில் இருந்த குழப்பமும், பிரச்னைகளும் தீர்ந்து விடும்  வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக் கொள்ள கலைஞர்களுக்கு உழைப்பு கை கொடுக்கும்.   வேலையில் இருப்பவர்கள் பணிகளைத் திருத்தமாகச் செய்வதால் உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். இருந்த போதிலும் கர்வம் தலைக்கேறாமல் பார்த்துக் கொள்வது அவசியம் .  பெண்களுக்கு  மனம் மகிழும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு  மகிழும் வாய்ப்பு  வந்து சேரும்.

    மகரம்: முதியவர்களுக்கு தெய்வீக யாத்திரை செல்வதற்கான வாய்ப்பு கூடி வரும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக அமைய பிள்ளைகள் உதவி செய்வார்கள்.     தேவையற்ற இடமாற்றம் வேலையில் இருப்பவர்களின் அமைதியை கெடுக்கலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் .  மற்றவரை நம்பி ஒப்படைத்த வேலைகளை மீண்டும் ஒரு முறை சரிபார்க்கும் சூழல் நிலவும். எனவே முக்கியமான பணிகளில் உங்களின் நேரடி கவனத்தை வைப்பது நல்லது. .  மாணவர்கள்  நல்லவர்கள் போல் ந்டிப்பவர்களை நம்பி எந்த செயலிலும் இறங்க வேண்டாம் . . வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் விழிப்புணர்ச்சியோடு இருந்தால், பணம் முடங்காமலிருக்கும்.

    கும்பம் இந்த வாரம்  மாணவர்களுக்கு  புதிய நட்பு, இனிமையான நிகழ்ச்சி, என்று பொழுது போகும்.  பிள்ளைகள் பெற்றோரின் குணமறிந்து இணக்கமாக நடந்து கொள்வார்கள்.   பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு  பல நேரங்களில் உழைப்பு அதிகமாகவும், அதற்கான பலன் குறைவாகவும் இருக்கும்  .  : கலைஞர்கள் எந்த சூழலிலும் அமைதிக் குறைவு, பதற்றம் ஆகியவை ஏற்பட இடம் கொடாமல் விழிப்பாய் இருப்பது அவசியம் .  வியாபாரிகள் அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்கள் ,இயல்பு வாழ்க்கையோடு மோதாமல் பார்த்துக் கொள்வது புத்திசாலித் தனம். குடும்ப விவகாரங்களில்  பெண்கள் பிறரை நம்பி எந்த முடிவும் எடுக்க வேண்டாம். 

     மீனம்: மாணவர்கள் வாகனங்களின்  பராமரிப்பில், கவனமாக இருந்தால் வீண் செலவை குறைத்து  விடலாம். பொது வாழ்வில் இருபவர்கள்   தேவையற்ற இடங்களில் வீண் பேச்சுக்களைத் தவிர்த்தல் வேண்டும் . கலைஞர்கள் தங்கள்  பொருளாதார தேவைகளை சமாளிக்க கடன்பட நேரலாம்.  உயர் பதவியில் உள்ளவர்கள் பொறுப்புடன் கடமையற்றினால், அவப்பெயருக்கு ஆளாகாமல் தப்ப  முடியும் பண விவகாரங்களில் நல்ல முன்னேற்றம் இருப்பதால், . வியாபாரிகளின் கடன் தொல்லையும் கணிசமாகக் குறையும்.  உடல் நலத்தை நன்றாக பராமரித்தால்,பெண்களின்  உற்சாகம் குறையாமலிருக்கும் . 

    Share
  • ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்{02.12.2012-21.6.2013 வரை}

    காயத்ரி பாலசுப்ரமணியன்

    ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்{02.12.2012-21.6.2013 வரை}

    ஜோதிட உலகில் சர்ப்ப கிரகங்கள் அல்லது நிழல்  கிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகு. கேது ஆகிய இரண்டு கிரகங்களும், மனிதனை ஆட்டிப்படைப்பதில் வல்லவர்கள். ஒரு மனிதனின் திறமையையும் சக்தியையும் மறைப்பது அல்லது அவனை உச்சத்திற்கு கொண்டு செல்லும்   ராகுவும் கேதுவும், தான் எந்த கிரகத்தோடு சேர்கின்றார்களோ, அல்லது  எந்தெந்த கிரகங்களால்  பார்க்கப்படுகிறார்களோ அதற்குத் தகுந்தாற்போல் பலன்களைத் தருவார்கள்.   

    இந்த ராகு கேது பெயர்ச்சி் மூலம் ரிஷபம், சிம்மம்,விருச்சிகம், தனுசு ஆகிய ராசிகள்   சிறப்பான  பலன்கள்  பெறும் . மற்ற் ராசியைச் சேர்ந்தவர்கள், எதிலும் கவனமாக இருப்பதுடன், முறையான தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டால், துன்பங்களின் தாக்கம் குறையும்.

    நிகழும் நந்தன வருடம் கார்த்திகை மாதம் 17ம் நாள் (2.12.2012) ஞாயிற்றுக் கிழமை, புனர்பூசம் நட்சத்திரம்,  காலை மணி 10.51க்கு க்கு விசாகம் நட்சத்திரம் 3ம் பாதத்தில் துலாம் ராசியில்  ராகுபகவானும் கார்த்திகை நட்சத்திரம் முதல் பாதத்தில்  மேஷ ராசியில் கேது பகவானும் பெயர்ச்சி அடைகிறார்கள்.

    மேஷம்: ராகு உங்கள் ராசிக்கு 7-ஆம் வீட்டில் வந்து அமர்கிறார் கேது உங்கள் ராசியிலேயே வந்து அமர்வதால் மாணவர்கள், திறமைகள் வெளிப்படும்வரை சற்று பொறுமை காப்பது நல்லது. குடும்பத்தில், வீண் விவாதம், மன உளைச்சல்கள் வந்து விலகும். எனவே பெண்கள் எந்த பிரச்னையையும் அமைதியான முறையில் கையாளவும். பொறுப்பில் இருப்பவர்கள் முக்கியமான  விஷயத்தில்  சிந்தித்து  முடிவெடுத்தால், சிறப்பான பலனைப்பெறலாம். கணினித் துறையினருக்கு வேலை அதிகரித்தாலும் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. கலைத் துறையினர், போராடி வெற்றி பெறுவர். வியாபாரிகள், அரசுக்கான வரிகளை முறையாக செலுத்திவிடுவது நல்லது. பொது வாழ்வில் இருப்பவ்ர்கள், கடின உழைப்பால்  தங்கள் இலக்கை அடைவர். .
    பரிகாரம்:  தினமும்,ஆனை முகத்தானை வழிபட்டு வரவும்.   
    ரிஷபம்: ராகு உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் வந்து அமர்கிறார்.. கேது உங்கள் ராசியிலிருந்து 12-ம் இடத்தில் வந்து அமர்கிறார். மாணவர்களின் தாழ்வுமனப்பான்மை நீங்கி, அவர்களின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிட்டும். வியாபாரிகளுக்கு, . வேற்றுமொழிக்காரர்களாலும், , வெளிநாட்டிலிருப்பவர்களாலும்  ஆதாயம் உண்டு. பணியில் உள்ளவர்கள், பிள்ளைகளின் வருங்காலத்திற்காக சேமிப்பார்கள் .  பொது வாழ்வில் உள்ள்ளவர்களுக்கு,  அரைகுறையாக நின்றுபோன வேலைகளை விரைந்து முடிக்க, நல்ல ஒத்துழைப்பு கிட்டும்.  கர்ப்பிணிப்பெண்கள், எண்ணெய் மற்றும் வாயுப் பதார்த்தங்களை தவிர்த்துவிடுதல் நல்லது. பொறுப்பில் உள்ளவர்கள்,  ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தினால், வேலைகள் தேங்காமல் இருக்கும். கலைஞர்கள், தங்கள் பணியில், அலட்சியப்போக்கைக் தவிர்த்தால், எதிலும் நல்ல பெயர்தான்!
    மிதுனம்: ராகு உங்கள் ராசிக்கு 5-ஆம் வீட்டிற்கும், கேது 11-ம் வீட்டிற்கும் அடியெடுத்து வைக்கிறார்கள். .தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொது வாழ்வில் உள்ளவர்கள், சுற்றியுள்ளவர்களின் பலம்- பலவீனம் அறிந்து செயல்படுங்கள்.  கலைஞர்களுக்கு, சொந்த  ஊரில் செல்வாக்கு உயரும். பணியில் உள்ளவர்களுக்கு, உத்தியோகத்தில் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும் வரை பொறுமையாக இருப்பதே புத்தி சாலித் தனம். மாணவர்கள் உயர்கல்விக்காக அயல்நாடு செல்ல நேரிடலாம்.  பெண்கள் உறவுகளிடம்  கனிவாகப் பேசி காரியம் சாதிக்க இது ஏற்ற காலம். வியாபாரிகளுக்கு,  வழக்கு நெருக்கடிகள் நீங்கும்.  அத்துடன் சொந்த தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும் .  சுய தொழில் புரிபவர்களுக்கு அரசு கெடுபிடிகள் தளரும்.
    பரிகாரம்: பாம்பணையில் பள்ளி கொண்டிருக்கும் திருமாலை புதன் கிழமைகளில் வழிபட்டு வரவும்.
    கடகம்: ராகு, உங்கள் ராசிக்கு 4-வது வீட்டிலும், கேது 10-வது வீட்டிலும்  வந்து அமர்கிறார்கள்.   மாணவர்கள் புதிய நண்பர்களிடம் கவனமாக இருக்கவும். பணியில் உள்ள  சிலர், வேலையின் பொருட்டு, எதிர்பாராமல் வீடு மாற வேண்டியது வரும். பெண்கள் சிக்கனமாக இருந்தால்தான், குடும்ப செலவுகள் கட்டுப்படும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் போது, வியாபாரிகள், . பங்குதாரர்களிடம் எசரிக்கையாக இருந்தால், லாபத்தில்தொய்வு ஏதுமிராது. கலைத் துறையினரின் எண்ணங்கள் பூர்த்தியாகும். ஆயினும் அதற்கு உழைப்பும், சீரான திட்டமிடலும் தேவை.  எதிலும் ஒரு பதற்றம் இருக்கும் சூழலிருப்பதால், பொது வாழ்வில் உள்ளவர்கள், வீண் வேலைகளில் ஈடுபட வேண்டாம்.   சிறு தொழில் புரிபவர்களுக்கு வரவைக் காட்டிலும் செலவுகள் வந்து சேரும்.
    பரிகாரம்:கருமாரியம்மனை தொழுது வர, கவலைகள் யாவும் நீங்கும்.
     சிம்மம்: ராகுவின் பலன்கள்: ராகு பகவான்,  உங்கள் ராசிக்கு 3-ஆம் வீட்டுக்கு வந்து அமரும் ராகு,  எதிலும் வெற்றியைத் தருவார். கேது 9-ம் இடத்தில். மாணவர்கள், தேவையற்ற அவசரத்தைத் தவிர்த்தால்,  வீண் தொல்லைகள் உண்டாகாது. புதிய பொறுப்புகள் வந்தாலும், பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு,  வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும்.  கொஞ்சம் கொஞ்சமாக கடனை அடைக்கும்  சூழலிருப்ப தால், வியாபாரிகள் தேவைக்கேற்றவாறு, வேண்டிய  பொருட்களை மட்டும்  வாங்கிக் கொள்ளவும்.  கலைஞர்கள் வேண்டாத பழக்கங் களை மூட்டை கட்டிவைத்து விட்டாநிம்மதி காணலாம்.  வீண் சந்தேகத்தால் குடும்பத்தில் குழப்பம் அதிகரிக்கலாம். எனவே பெண்கள் பேச்சில் கவனமாக இருக்கவும்.சுய தொழில் புரிபவர்களுக்கு, பழைய பாக்கிகள் வசூலாகும்.
    பரிகாரம்: ஞாயிற்றுக் கிழமை துர்க்கைக்கு செவ்வரளி மலரால் அர்ச்சனை  செய்து வரவும்.
     கன்னி:  ராகு பகவான் உங்கள் ராசிக்கு 2-ஆம் வீட்டிற்கும்,  கேது பகவான் 8-ம் வீட்டிற்கும் செல்கிறார்கள். மாணவர்களுக்கு வீண்  செலவுகள் கூடும். ப்ணியில் உள்ளவர்கள், எவ்வளவுதான் பாடுபட்டாலும், வேலைகள் தடைப்பட்டு, பின் முடியும்.  பேச்சில் கவனம் தேவை என்பதை பெண்கள் நினைவில் கொள்வதே நல்லது. . கலைஞர்கள் புது நண்பர்களிடம் அளவாகப் பழகி வரவும். பொறுப்பில் இருப்பவர்கள், முன்கோபத்தைத் தவிர்த்தால், எதிலும் சுணக்கம் தலைகாட்டாமலிருக்கும். வீண் சந்தேகத்தால், வியாபாரிகளுக்கு, வியாபார வட்டத்தில், சில தொல்லைகள்,  அவ்வப்போது வந்து போகும். சுய தொழில் புரிபவர்கள், மற்றவர்களை நம்பி புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம்.  பணியில் உள்ளவர்கள், நிலம், வீடு வாங்குவதில் தகுந்த கவனம் செலுத்தவும்.
    பரிகாரம்: காரியத் தடை விலக, ந்ந்தி பகவானை ஆராதனை செய்து வரவும்.   
    துலாம்: ராகு பகவான் உங்கள் ராசிக்கும், கேது பகவான் 7-ம் இடத்திற்கும் மாறுகிறார்கள்.  வியாபாரிகள்,  அதிக வட்டிக்கு கடன் வாங் கும் சூழலுக்குத் தள்ளப்படலாம் மாணவர்களுக்கு,  வேண்டாத சலிப்பு வந்து போகும்.மணமான  பெண்களுக்கு,மருத்துவச் செலவுகளுக்குப் பின்,  குழந்தை பாக்கியம் உண்டாகும்.   சொத்துப் பிரச்னையைத் தீர்க்க வேண்டிய  வழி கிடைக்கும் வரையில், பொது வாழ்வில் உள்ளவர்கள் பக்குவமாக நடத்தலே நல்லது. பொறுப்பில் உள்ளவர்கள்,  இடம் அறிந்து பேசும் கலையைக் கையாண்டு வந்தால்,  வீண் தொல்லைகளை கட்டுக்குள் வைக்கலாம் .  உத்தியோகத்தில் உள்ளவர்கள், தங்கள் உரிமைகளும், சலுகைகளும்  கிடைக்க, சற்றே போராட வேண்டியிருக்கும். கலைஞர்கள் வேலைக்கு உரிய மரியாதயை அளித்தால் எதிலும் நன்மைதான்!
    பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில், உங்கள் ராசிநாதனான சுக்ரனை வலம் வர, துன்பங்கள் யாவும் தீரும்.
    விருச்சிகம்:ராகு உங்கள் ராசிக்கு 12-ஆம் வீட்டிற்கும், கேது 6-ம் வீட்டிற்கும் போகிறார்கள்.  மாணவர்கள் எதிர்பார்த்த பணப்புழக்கம் அதிகரிக்கும். பணியில் இருப்பவர்களுக்கு, மறைமுக எதிர்ப்புகள் விலகும் . வீடு- மனை வாங்குவது, விற்பது ஆகிய இரண்டும், பெண்கள் விரும்பியது போல், லாபமாக முடியும் . வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். என்றலும், போட்டியாளர்களை வெல்ல, வியாபாரிகள் வேண்டிய வழிமுறைகள் பின்பற்றவும். . கலைஞர்கள் சிறு பிரச்னைகளை அனுபவ அறிவால் தீர்த்து, வரவைத் தக்க வைத்துக் கொள்வார்கள். பொது வாழ்வில் உள்ளவர்களை  கௌரவ பதவிகள் தேடி வரும் . வெளிநாட்டில் இருப்பவர்கள் உடன் இருப்பவர்களால், ஆதாயம் அடைவார்கள்.
    தனுசு: ராகு, 11-க்கும், கேது 5-ம் வீட்டிற்கும் பெயர்கிறார்கள். பெண்கள்,  தன்னம்பிக்கையையும் செயல்படுவார்கள். மாணவர்கள்,  சவாலான காரியங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பார்கள். கலைஞர்கள், கெட்டவர்களிடமிருந்து விலகினால், அதிக நன்மை பெறலாம். வேலைக் காக விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு, நல்ல வேலை கிடைக்கும்.  வியாபாரிகள்,  போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு புது யுக்திகளைக் கையாண்டு, லாபம் பெறுவார்கள்.  பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு, உயர்மட்டத்தில், இருந்த மோதல்கள் விலகும். முதியவர்கள், மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். சுய தொழில் புரிபவர்கள் எதிர்பர்த்த,  வசதியும், நிம்மதியும் கிட்டும் . கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடையே நிலவிவந்த பனிப்போர் நீங்கும்.
    மகரம்:ராகு உங்கள் ராசிக்கு 10-வது வீட்டிலும், கேது 4-வது இடத்திலும் நிற்கிறார்கள். சுய தொழில் புரிபவர்களுக்கு, அலைச்சல் அதிகரித்தாலும்,  புதிய முயற்சிகள் வெற்றியடையும். குடும்பத்தில் அமைதி தொடர, பெண்கள், புத்திசாலித் தனமாக வேலை செய்யவும்.   பணியில் இருப்பவர்களுக்கு, உத்தியோகத்தில் ஏற்படும்இடமாற்றத்தால்,  வேலைச்சுமை  கூடும். . மாணவர்களுக்கு நல்ல கல்வி நிறுவனத்தில் மேற்படிப்பை தொடரும் வாய்ப்பு கிட்டும். வியாபாரிகள்,  கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களை கலந்து ஆலோசித்து முடிவெடுங்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பொறுப்பில் உள்ளவர்களுக்கு,  முக்கிய ஆவணங்களைக் கையாளும்போது கவனம் தேவை. கலைஞர்கள், தங்கள் திறமைகளை பட்டை தீட்டிக் கொண்டால்,   புது வாய்ப்புகள் தானே வந்து சேரும்.
    பரிகாரம்: நாக முத்து மாரியம்மனுக்கு நெய் விளக்கேற்றி வரவும்.
    கும்பம்: ராகு  உங்கள் ராசிக்கு 9-ஆம் வீட்டிலும்,கேது 3-ம் வீட்டிற்கும் மாறுகிறார்கள்.மாணவர்களுக்கு,  செயல்களை எளிதில் முடிக்கும் திறன் பெருகும். பெண்கள், உடம்பில் இரும்புச்சத்து குறையாதிருக்க, சத்தான உணவு வகைகளை உண்டு வரவும். தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள், இயந்திரங்களை இயக்குகையில், கவனமாக இருக்கவும். வியாபார  வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும் வாய்ப்பி ருப்பதால், வியாபாரிகள், . முக்கிய வேலையை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். சுய தொழில் புரிபவர்கள், எந்த விஷயத்தையும் போராடி முடிப்பார்கள். கலைத் துறையினரின் சம்பளப் பாக்கி கைக்கு வந்துசேர்ந்தாலும், செலவுகளில் சிக்கனமாக இருப்பதே நல்லது. பணியில் இருப்பவர்கள், அரசு கோப்புக்களை கவனமாக கையாளவும்.
    பரிகாரம்: அரசும், வேம்பும் சேர்ந்திருக்கும் மரத்தை சுற்றிவர, எதிலும் வெற்றி வந்து சேரும்.
     மீனம்: ராகு பகவான் உங்கள் ராசிக்கு,  எட்டிலும், கேது இரண்டிலும் நிற்கிறார்கள். கேளிக்கையைத் தவிர்த்து,  மாணவர்கள் உயர் கல்வியில் கவனம் செலுத்தவும். கர்ப்பிணிப் பெண்களுக்கு, உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். தூக்கமின்மை, மன உளைச்சல் ஆகியவை தலை காட்டாமலிருக்க, கலைஞர்கள் திட்டமிட்டு வேலை செய்யவும்.   பொது வாழ்வில் உள்ளவர்கள், எதிலும்  அவசர முடிவைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரிகள், நயமாகப் பேசி பாக்கியை வசூல் செய்வதுதான் புத்திசாலித் தனம். முதியவர்களுக்கு பல்வலி, கண் எரிச்சல் போன்றவை வந்து நீங்கும். அடுத்தவருக்கு உதவுவதில் கவனமக இருந்தால், பணியில் உள்ளவர் களுக்கு, வீண்  பிரச்னைகள் வராமலிருக்கும்.
    பரிகாரம்: பாம்புப்புற்றுக்குமுன் விளக்கேற்றி வர, பிரச்னைகளின் தாக்கம் குறையும்.  

    திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன்,B.Sc, PG, Dip. in journalism,  ஜோதிடர், சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம், எண் 43, தரைதளம், தேவராஜ் நகர், இரண்டாவது பிரதான சாலை, சோளிங்க நல்லூர், சென்னை-600119. செல்: 99432-22022. 98946-66048. மின்னஞ்சல்: astrogayathri@gmail.com
     

    படத்துக்கு நன்றி

    http://4.bp.blogspot.com/-KW5EEYWJBNQ/Tct3MhpIHRI/AAAAAAAAFoU/DCDu7K8FmEM/s1600/Rahu+Ketu+2.gif

    Share
  • வார ராசி பலன்: (நவம்பர் 25 முதல் டிசம்பர் 1 வரை)

     

    காயத்ரி பாலசுப்பிரமணியன்
     
    மேஷம்: குடும்பத்தில் நடக்கும் சந்தோஷமான நிகழ்ச்சிகளால் கலகலப்பும் உற்சாகமும் கூடும். மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லி வந்தால், எந்த வம்பும் அருகே வராது. ஆரோக்கியம் வியாபாரிகளின் பரபரப்புக்கு ஈடுகொடுக்கும் விதமாக அமைவதால், புதிய ஒப்பந்தங்களுக்காக அதிகம் உழைப்பார்கள். பணியில் இருப்பவர்கள் நண்பர்களிடம் உரிமை எடுத்துக் கொள்வதிலும் வரையறை இருப்பது நல்லது. கலைஞர்கள் புறம் கூறுபவர்களின் பேச்சிற்கு செவி சாய்க்காமல் இருப்பது அவசியம். பொறுப்பில் உள்ளவர்கள் விவாதங்களில், சர்ச்சைக்கு இடம் தராதவாறு பேசுவது புத்திசாலித் தனம்.  

    ரிஷபம்: இந்த வாரம் வியாபாரிகள் சரக்குகளுக்குரிய பாதுகாப்பை தக்க நேரத்தில் அளித்தால், நஷ்டத்தைத் தவிர்க்கலாம். உங்களை ஆட்கொள்ளும் காரணமற்ற சோர்வுகளை நீக்க, பெண்கள் எளிமையான உடற்பயிற்சி செய்து வாருங்கள். கலைஞர்கள் முக்கியமான காரியங்களில், தீவிர சிந்தனை மற்றும் திட்டத்தோடும் செயல்படுவது அவசியம். முதியவர்கள் அறிவுரைகளை இங்கிதமாகச் சொன்னால், குடும்ப உறவுகளின் இனிமை கெடாமல் இருக்கும். மாணவர்கள் இரவலாய்ப் பெற்ற விலை உயர்ந்த பொருளை பயன்படுத்துவதில் கவனமாக இருந்தால், வீண் செலவுகளையும், வேண்டாத மன உளைச்சலையும் தவிர்த்து விடலாம்.

    மிதுனம்: இந்த வாரம் தொழில் வகையில் ஏற்படும் மாற்றங்கள், சுய தொழில் புரிபவர்க ளின் உயர்வான நிலைக்கு அடித்தளமாக அமையும். இதனை நல்ல முறையில் பயன்ப டுத்திக் கொண்டால், அதிக லாபம் பெறலாம். முதியவர்கள் ஆரோக்கியத்திலும் சற்று கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக நேரம் செலவு செய்ய லாம். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் உள்ள ஏற்ற இறக்கங்களை உணர்ந்து செயல்படுவது அவசியம். பெண்களின் புத்திசாலித்தனத்தால், சேமிப்பும், வாழ்க்கை வசதியும் அதிகரிக்கும். கலைஞர்கள் பணிவாக நடந்துகொண்டால், மூத்தோரின் ஆசியும், ஆதரவும் தக்க சமயத்தில் கிடைக்கும்.

    கடகம்: பணியில் இருப்பவர்கள் அவ்வப்போது சில சுணக்கங்களை எதிர்கொண்டாலும் உங்கள் மன உறுதியால், அனைத்தையும் கச்சிதமாக முடித்து விடுவீர்கள். மாணவர் கள் படிப்பில் இருந்த மந்த கதி மாறுவதால், புதிய உற்சாகத்துடன் வலம் வருவார்கள். பெண்கள் இனிமையாகப் பேசி பணம் கறப்பவர்களை, இனங்கண்டு ஒதுக்கி விட்டால், செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கலைஞர்கள் சூழலுக்குத் தக்கவாறு முடிவெடுப்ப தன் மூலம் பல பிரச்னைகளை முளையிலேயே கிள்ளிவிடலாம். பொது வாழ்வில் உள்ள வர்கள் தங்கள் கருத்துக்களை கோர்வையாக சொல்லுவது மூலம் பல சலுகைகளைப் பெறுவதோடு, தங்களுக்கு வேண்டிய ஆதரவையும் தக்க வைத்துக் கொள்வது சாத்தியமாகும்.

    சிம்மம்: இந்த வாரம் மாணவர்கள் புதிய விஷயங்களை அறிந்து கொள்ளும் துடிப்புடன் செயலாற்றுவார்கள். பெண்கள் பிறர் கூறும் குறைகளை பெரிது படுத்த வேண்டாம். பெற்றோர்கள் பிள்ளைகளின் சிறிய உபாதைகளை அலட்சியப்படுத்தாமல் தகுந்த மருந்துகளை தருவதன் மூலம் அவர்களின் ஆரோக்கியம் நலிவடையாமல் பார்த்துக் கொள்ளலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் வெளியில் காட்டும் பரிவு, இல்லத்திலும் இருக்குமாறு பார்த்துக் கொண்டால், இல்லத்தில் அமைதி எப்போதும் நிலவும். வியாபாரிகள் சரக்குகளின் தட்டுப்பாடு இல்லாதவாறு, நல்ல முறையில் திட்ட மிட்டால், வாடிக்கையளர்களின் வரவு எப்போதும் போலவே இருக்கும்.
     
    கன்னி: பெண்கள் அன்றாட வரவு செலவு கணக்குகளை எழுதிவாருங்கள். வீண் செலவுகளைக் கண்டுபிடிப்பதோடு அவற்றைக் குறைக்கவும் முடியும். மாணவர்கள் பேச்சில் உள்ள கட்டுப்பாட்டை உணவிலும் கடைபிடித்தால்,எந்த தொந்தரவும் இன்றி படிப்பில் கவனம் செலுத்த முடியும். பொது வாழ்வில் உள்ளவர்கள் தங்கள் செல்வாக்கை நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனமாகும். எளிதில் முடியக்கூடிய சொத்து விவகாரங்கள், இந்த வாரம் சற்றே இழுத்தடிக்கக் கூடும். வியாபாரிகள் சரக்குகளுக்குரிய பணத்தைப் பட்டுவாடா செய்யும் முன்பு, நிறுவனத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்து கொண்டால் உங்களின் நாணயம் குறையாது.

    துலாம்: கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களை ஒத்துக் கொள்ளும் முன் அதில் உள்ள சாராம்சத்தை அறிந்து கொள்வது அவசியம். மாணவர்கள் பேச்சு வார்த்தைகளில் கவனமாய் இருந்தால் நினைத்த காரியம் கைகூடும். பண விஷயங்களில், நண்பர்களை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் . நீங்கள் போட்டிருந்த கடன் மனுக்கள் மூலம் கிடைக்கும் பணம் சற்றே தாமதத்திற்குப் பின் கிடைக்கலாம். எனவே அதற்கேற்றவாறு திட்டமிட்டுக் கொள்ளுங்கள். இந்த வாரம் பணியில் இருப்பவர்கள் உடனிருப்ப வர்க ளின் செய்கையால், சங்கடமான சூழலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உறவு கள் தரும் ஆதரவு மனதுக்கு இதமாய் இருப்பதால், மன இறுக்கம் குறையும்.

     
    விருச்சிகம்: மாணவர்கள் படாடோபத்தைத் தவிர்த்து எளிமையாய் இருந்தால், அனைவரும் உங்கள் பக்கமே! பணியில் இருப்பவர்கள் மேலதிகாரிகளுடன் கருத்துப்பரிமாற்றம் செய்கையில் இதமாகவே நடந்து கொண்டால், உங்கள் கருத்துக்கு மதிப்பிருக்கும். பொது வாழ்வில் உள்ளவர்கள் சந்தேகத்துக்கு இடமளிக்காத வகையில் உங்கள் செயல்பாட்டை செம்மையாக்கிக் கொள்வது நல்லது. வியாபாரிகள் எழுத்துப் பூர்வமாகவே ஒப்பந்தங்களை முடிப்பதில் கவனமாக இருந்தால், அதிக லாபம் பெறலாம். சில நேரம், பெண்கள் பிள்ளைகளின் விஷயத்தில் முடிவெடுக்க இயலாமல் குழப்பமான நிலை இருக்கும். எனவே பொறுமை காப்பது அவசியம்.

     
    தனுசு: பணவரவு அதிகரிப்பதால், இந்த வாரம் பல செயல்கள் கிடுகிடுவென்று நடந்தே றும்.பெண்கள் பிள்ளைகளுடன் விரும்பிய இடங்களுக்கு சென்று மகிழ்வீர் கள்.மாண வர்கள் நண்பர்களிடையே பணம் கைமாற்றாக கொடுப்பதை நாசுக்காகத் தவிர்த்து விடுங்கள்.நட்பு கெடாமல் இருக்கும். பெண்கள் தெளிவான சிந்தனையுடன் செயலாற்றி னால் தடுமாற வேண்டியிருக்காது. கலைஞர்கள் பிறரிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாமல் அளவாகப் பழகுதல் அவசியம். பணியில் உள்ளவர்கள் வேலை செய் யும் இடங்களில் மனதில் பட்டத்தை சொல்லுவதை விட,மற்றவர்க்கு தேவையான செய்திகளை மட்டும் பரிமாறிக் கொள்வது நல்லது.  

    மகரம்: மாணவர்கள் பகல் கனவு காண்பதைவிட, உங்கள் உழைப்பை நம்புவது நல்லது. பெண்கள் நிறைவு என்பது பொருளில் இல்லை, மனதில்தான் உள்ளது என்ப தை உணர்ந்தால், வாழ்க்கை அமைதியாக செல்லும்.,சில சமயம் பிள்ளைகளின் போக்கு புரிந்து கொள்ள முடியாமல் இருந்தாலும், பெற்றோர்கள் கனிவாக நடந்து கொண்டால், அவர்களின் அன்பை சம்பாதித்துக் கொள்ளலாம். கலைஞர்கள் பேச்சில் நிதானமும், சமயோசிதமும் இருந்தால், எதனையும் சாதிக்க முடியும் என்பதை உணர் ந்து செயல்படுங்கள். பொது வாழ்வில் உள்ளவர்கள் உங்களின் பிடிவாதத்தை சற்று குறைத்துக் கொண்டால், வெற்றி உங்கள் அருகில் நிற்கும்.

    கும்பம்: பெண்கள் நினைத்த காரியத்தில், விரும்பத்தகாத மாற்றங்கள் உருவானாலும், பொறுமையாய் இருந்தால், விரும்பிய காரியத்தை சாதித்துக் கொள்ளலாம். பணியில் உள்ளவர்கள் சோர்வு, சோம்பலின்றி செயல்பட்டு வந்தால், பணிகள் தேங்காது. மாணவர்கள் அவசர கதியில் உணவு உண்ணும் பழக்கத்தை மாற்றிக் கொண்டால், தேக நலன் சீராக இருக்கும். புதுமையான எண்ணங்களுக்கு தகுந்த நேரத்தில், பங்கு தாரர்கள் பச்சைக் கொடி காட்டும் சூழல் இருப்பதால், வியாபாரம் முன்னைக் காட்டிலும் சுறுசுறுப்பாக நடக்கும். இந்த வாரம், சுப காரிய விஷயங்களில் இருந்த சிக்கல்கள் விலகி நல்ல முன்னேற்றம் காணலாம்.  

    மீனம்: குடும்பத்தில் சில குழப்பங்கள் உருவாகும் சூழல் இருப்பதால், பெண்கள் தகுந்த ஆலோசனையுடன் செயல்பட்டு வருவது புத்திசாலித்தனம். விருந்து, விசேஷம் ஆகி யவற்றிற்கு மகிழ்வுடன் பணம் செலவழியும் . தொழிலதிபர்கள் வழக்கு தொடர் பான விஷயங்களில், நேரடியாக கவனம் செலுத்துவது அவசியம். எதிர் பாராமல் மேற் கொள் ம் பயணங்களால் முதியவர்களின் ஆரோக்கியத்தில் சற்றே நலிவு உண்டாகலாம். மறதி, குழப்பம், ஆகியவை எட்டிப் பார்க்கும் வாய்ப்பிருப்பதால், வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான ஆவணங்களை பத்திரமாக வைப்பது நல்லது. மேலும் அறிமுகமில்லாத நபர்களிடம் சரக்கு பரிமாற்றம் செய்வதில் எச்சரிக்கையாய் செயல்படவும்.  
     
     
     

    Share
  • வார ராசி பலன்கள்: (18- 11-02 முதல் 24-11-92 வரை)

     

    காயத்ரி பாலசுப்பிரமணியன்

    மேஷம்: இந்த வாரம் மாணவர்கள் நினைத்த இலக்கை அடைய அதிக தன்னம்பிக்கையும், உற்சாகமும் கொண்டு செயல்படுவார்கள். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்னைகளின் தாக்கம் குறைவதால்  மகிழ்ச்சிக்கு குறைவிராது.  வேலையில் இருப்பவர்கள் பண விஷயங்களில் யாருக்கும் ஜாமீன் கொடுப்பதைத் தவிர்த்து விட்டால், பிரச்சனைகள் வராமலிருக்கும். வீடு, மனை வாங்கி விற்பவர்கள் அகலக் கால் வைக்க வேண்டாம்.  கலைஞர்கள் விரும்பிய ஆடை வகைகள் , வாசனைத் திரவியம் ஆகியவற்றை வாங்கி மகிழும் வாய்ப்பு கிட்டும்.

    ரிஷபம்: அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் சக ஊழியர்களுடன் அனுசரித்துச் செல்வது நலம். . சுய தொழில் செய்பவர்கள் வீண் விரயம் ஏற்படாமல் செயல்பட, இந்த வாரம் இரட்டிப்பு லாபம் வந்து சேரும் . பொது வாழ்வில் இருப்பவர்கள், தனி நபர் விமர்சனத்தைத் தவிர்த்து  பொறுப்பாக நடந்து கொள்வது அவசியம். .வியாபாரிகள்  பங்குச் சந்தையில், நிலவரத்திற்கேற்றவாறு சமயோசிதமாகச் செயல்பட்டால், போட்ட பணத்தை எடுத்து விடலாம்.  பெற்றோர்கள் பிள்ளைகளின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதிலும், ஒரு வரைமுறை வைப்பது அவசியம்.

    மிதுனம் கர்ப்பிணிப் பெண்கள் உடல் நலனில் அக்கறை செலுத்துவது நல்லது  பெண்கள் குடும்பத்தில் ஏற்படும் சிறு உரசல்களைப் பெரிது படுத்த வேண்டாம்.  நிதானமான போக்கை மேற்கொள்ளும் வியாபாரிகளுக்கு, பண நெருக்கடிகள் தானே குறைந்து விடும்.   பணியில் இருப்பவர்கள் எதிர்பாராத இடமாற்றங்களை சமாளிக்க வேண்டியிருக்கும்.  தொடர்ந்து மேற்கொள்ளும் பயணங்களால், சிறு உடல் உபாதைகள் அவ்வப்போது தலை காட்டுவதைத் தவிர்க்க கலைஞர்கள் சத்தான உணவைச் சாப்பிடவும். ஞாபக மறதிக்கு இடமளிக்காமலிருந்தால், மாணவர்களின் கைப்பணம் கரையாது.

    கடகம் : இந்த வாரம் உறவினர்கள் வகையில் மனக்கசப்பு ஏற்படும் வாய்ப்பிருப்பதால், பெண்கள் வாக்குறுதி கொடுக்கும் முன் யோசிப்பது அவசியம். புதிதாக வேலையில் சேர்பவர்கள் அதிக  வேலைப்பளுவை சுமக்க வேண்டியதிருக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களும் பாராட்டும், புகழும் கிடைக்கப் பெறுவார்கள்.  சுய தொழில் புரிபவர்கள்  புதிய ஒப்பந்தம் பெற அதிக முயற்சி தேவைப்படும்.  .  பெற்றோர்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும்.  அரசு வகையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க வியாபாரிகள் சிறிது பாடுபட வேண்டி வரும்.

    சிம்மம் இந்த வாரம்  கலைஞர்கள் புதிய உத்வேகத்துடன் செயல்படுவதோடு, தன் திறமைகளையும் வெளிப்படுத்தும் வாய்ப்புக்களையும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வார்கள். . மாணவர்கள் சிரத்தை எடுத்து படித்தால், அதிக மதிப்பெண்கள் பெறலாம். பணப் பிரச்னை காரணமாக கணவன்-மனைவி இடையே பிணக்குகள் வரலாம். வியாபாரிகள் நல்ல வருமானம் கண்டாலும் அதற்காக ஓய்வின்றி உழைக்க வேண்டியது இருக்கும் . பொதுவாழ்வில் இருப்பவர்கள் பங்கேற்கும் விழா, விருந்து ஆகியவற்றில் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொண்டால், ஆரோக்கியம் சீராக இருக்கும்.

    கன்னி: இந்த வாரம் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு  அவ்வப்போது, குழப்பம் வந்து போகும் என்றாலும், தைரியம் குறையாமல் செயலாற்றினால், பிரச்சனைகள் பெரிதாகாமலிருக்கும். மாணவர்கள் புறம் கூறுபவர்களை அருகில் சேர்க்காமலிருப்பது புத்திசாலித்தனம் . கலை நிகழ்ச்சிகளுக்காக வெளியூர் செல்லும் கலைஞர்கள் பழக்க வழக்கங்களிலும், உணவு வகைகளிலும், கட்டுப்பாடாய் இருப்பது அவசியமாகும்.  பெண்களுக்கு பொருளாதார நிலை சற்று இறுக்கமாக இருந்தாலும், மனம் தளராமல் செயல்பட்டால், நிலைமையை ஓரளவு சமாளித்து விடலாம்.

    துலாம்: இந்த வாரம் வியாபார வட்டத்தில்  கருத்து வேறுபாடு கொண்டு விலகிய பங்குதாரர்கள் மீண்டும் இணையும் சூழல் உருவாகும். பொது வாழ்வில் இருப்பவர்கள் வீண் பேச்சுகளைத் தவிர்த்து செயலில் இறங்கினால் எடுத்த காரியங்களில் வெற்றி விளையும் . .தொழில் தொடர்பான பிரச்சனைகள் பெருமளவு தீரும் வாய்ப்பிருப்பதால்,சுய தொழில் புரிபவர்கள்  தெளிந்த மனதுடன் செயல்படலாம்.   கலைஞர்கள் ஆடம்பரச் செலவுக்கான தொகையை சேமிப்பாய் மாற்றி வைத்தால், வருங்காலம் வளமாகவும், நலமாகவும் இருக்கும்.

    விருச்சிகம் புதிய சொத்து வாங்க இருப்பவர்கள் சிறிது காலம் பொறுத்திருந்தால் மனம் விரும்பியபடி மனை அமையும்.  உத்தியோகம் பார்ப்பவர்கள் வேலையில் உயர்வான நிலையில் இருப்பார்கள். . ஆனால் வேலைப் பளு அதிகரிக்கும் . இந்த வாரம் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு  மதிப்பு, மரியாதை எதிர்பார்த்தபடி இருக்காது. எனவே பொறுமையாக இருப்பது அவசியம் . வியாபாரிகளுக்கு வெளியுலகத் தொடர்பு மூலம் புது அறிமுகங்கள் கிட்டும் பெற்றோர்கள்  பிள்ளைகள் வகையில் தொல்லைகளைச் சந்திக்கலாம்.  சுய தொழில் புரிபவர்களுக்கு ஓரளவு தடைகள் விலகும்.

    தனுசு: பெண்களுக்கு எதிர்பார்த்தது போல் வேலைகள் நடக்காததால், சில ஏமாற்றங்களை எதிர்கொள்ள வேண்டி வரும்.  இந்த வாரம் கலைஞர்கள்  எதிர்பாராமல் சந்திக்கும் திருப்பங்கள் எதிர்காலத்திற்கு அஸ்திவாரமாக அமையும்.  வியாபாரிகளுக்கு  வேலையாட்கள் பிரச்சினை, கடன் போன்ற  தொந்தரவுகள் வந்து  விலகும்.  மாணவர்களின்  எதிர்காலத் திட்டங்கள் வெற்றி பெற உழைப்பு கை கொடுக்கும். வேலையில் இருப்பவர்கள்  சில நேரங்களில் ஆரோக்கியக் குறைவையும் சந்திக்க நேரும். என்றாலும், உடன் இருப்பவர்கள் தரும் ஒத்துழைப்பால்  வேலைகள் யாவும் சீராய் நடந்து விடும்

    மகரம்: வேலையில் இருப்பவர்கள் சிரமங்களுக்கிடையில், உயரதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற வேண்டியிருக்கும். மனைக் கடனுக்கான விண்ணப்பங்களைக் கொடுப்பதில் அவசரம் வேண்டாம்.  கலைஞர்கள் எதிர்பார்க்கும்  சலுகை என்பது பெயரளவிலேயே இருக்கும். கருத்துப் பரிமாற்றத்தில் இனிமை இருக்குமாறு பார்த்துக் கொண்டால், பெண்கள் எதிலும் வெற்றி பெறலாம். மாணவர்கள்  வீண் செலவுகளைக் கட்டுப்படுத்தி கவனமாய் இருந்தால், வேண்டிய பணப் புழக்கம் கையில் இருக்கும். இந்த வாரம் வேலையில் இருப்பவர்கள்  சிறிய சச்சரவுகளுக்காக மனம் வருந்தும் சூழல் உருவாகும்.

    கும்பம்:: பிள்ளைகளால் பெற்றோரின்  மகிழ்ச்சி பெருகும்.  இந்த வாரம் வியாபாரிகள் , கூட்டு முயற்சி மூலம் செய்யும் செயலில் எதிர்பார்த்த ஆதாயம் கிட்டாமல் போகலாம். வேலையில் இருக்கும் பெண்கள் அலுவலக அள்வில் தேவையற்ற விவகாரங்களில் தலையிடாமல் இருந்தால், உங்கள் நிம்மதி குலையாமலிருக்கும். கலைஞர்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது சபலங்களுக்கு இடம் கொடுக்காமலிருப்பது அவசியம். சிறு தொழில் புரிபவர்கள் வெறும் வார்த்தைகளை நம்பி பிறருக்கு  பணம் கொடுப்பதை தவிர்த்துவிடவும்.

    மீனம்; இது வரை உதவிகரமாய் இருந்தவர்கள் சற்றே விலகிச் செல்ல ஆரம்பிக்கும் சூழல்  இருப்பதால் பொது வாழ்வில் இருப்பவர்கள் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது . கலைஞர்களின் திறமைக்கு உரிய வாய்ப்புகள் வந்தாலும், அதைத் தக்க வைத்துக் கொள்ள சற்றே அதிக முயற்சி வேண்டியிருக்கும். மாணவர்கள்  நல்ல நட்புக்கு  நடுவே வீண் சந்தேகத்திற்கு இடமளிக்க வேண்டாம் வியாபாரிகள் ஒப்பந்தங்களில் உள்ள விதி முறைகளை அறிந்து கொண்டு திட்டமிடுதல் மூலம் வீண் பணக் கஷ்டத்தைத் தவிர்த்து விடலாம். பெண்கள்  பயணங்களின் போது புதியவர்களிடம் எச்சரிக்கையாய் இருப்பது  அவசியம் .

    Share
  • வார ராசி பலன்11/11/201 to 17/11/202 வரை

     

    காயத்ரி பாலசுப்பிரமணியன்

    மேஷம்: உயரதிகாரிகள் காட்டும் ஆதரவு புதிய உற்சாகத்தை அளிப்பதோடு,உங்களின் ஆர்வத்திற்கு உரிய வாய்ப்பும் உங்களைத் தேடி வரும். மாணவர்கள் படிப்புக்கு முக்கியத்துவம் தந்தால், பாடங்கள் கரும்பாய் இனிக்கும். பொது வாழ்வில் இருப்போர் ஆவேசமான பேச்சு, மற்றும் செயல்பாடு இரண்டும் எல்லா நேரங்களிலும் விரும்பிய பலனைத் தராது என்பதை உணர்ந்து செயல்படுங்கள். வேலையில் இருக்கும் பெண்கள் சில மறைமுக எதிர்ப்புகளைச் சமாளித்து, தங்களின் திறமையைத் தக்க வைத்துக் கொள்வர். பிறரின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருந்து வந்தால், மன அமைதி குறையாமல் இருக்கும்.

     

    ரிஷபம்: மாணவர்கள் எட்டாக் கனியான விஷயங்களில் உங்கள் கவனத்தையும் திறமையையும் வீணடிக்காதிருப்பது நல்லது. கலைஞர்கள் போட்டா போட்டியில் வெற்றி பெற, உங்களின் அனுபவ அறிவு கை கொடுக்கும். முக்கியமான பொறுப்புகளைக் கையாள்பவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்களை உங்கள் அருகில் வைத்துக்கொள்வது சிறந்தது. வியாபாரிகள் பழைய பாக்கிகளை வசூலிக்க அலைய நேரிடும். பெண்கள் இரவலாக உங்கள் பொருள்களைத் தருவதை நாசுக்காகத் தவிர்த்துவிடுங்கள். பாதிப் பிரச்னைகள் குறைந்து விடும். தொழிற்சாலைகளில் பணி புரிவோர் இரும்பு உபகரணங்களை எச்சரிக்கையுடன் கையாள்வது அவசியம் .

     

    மிதுனம்: சரக்குகள் தேங்காதவாறு வியாபாரத்தை முடுக்கிவிடும் வியாபாரிகளுக்கு லாபத்தோடு புதிய ஒப்பந்தங்களும் உடன் வந்து சேரும்.பிறர் செய்யும் தவறுக்கு, நீங்கள் பதில் சொல்லும் சூழல் உருவாகும் நிலை இருப்பதால், மாணவர்கள் கவனத்துடன் செயல்படவும். தந்தை-மகள் உறவு நெருக்கமாகும். இதுவரை இருந்த மனத் தாங்கல் நீங்கி, ஒருவரையொருவர் பாராட்டிக் கொள்வீர்கள். பெண்கள் அவ்வப்போது தோன்றும் சிறிய பிரச்சினைகளைத் தெளிவுடனும் திறமையுடனும் கையாண்டால் உறவுகளின் ஆதரவு உங்கள் பலமாய் மாறும். ஆன்மீகப் பயணங்களுக்கான அழைப்பு உங்களைத் தேடி வரும்!

     

    கடகம்: இதுநாள் வரை மந்த கதியில் சென்று கொண்டிருந்த வேலை, புதிய வேகத்துடன் நடைபெறுவதால், சுய தொழில் புரிபவர்கள் உற்சாகத்துடன் திகழ்வார்கள். கல்விப் பணியில் இருப்பவர்க்கு இது ஏற்ற வாரமாகும்.அனுசரித்து நடந்து கொள்ளும் கொள்கை உடையவரின் கூட்டு முயற்சி வெற்றியாய் முடியும். வியாபாரிகள் எதிரிகளின் செயல்களைக் கண்காணிப்பது அவசியம். இது வரை தன் முயற்சிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று வருந்தியவர்க்கு பாராட்டு வந்து சேரும். முக்கியமான முடிவு எடுக்கும் தருணங்களில் அவசரப்பட வேண்டாம். சிலர் பழைய நண்பர்களை சந்தித்துப் பேசி மகிழலாம்.

     

    சிம்மம்: நீங்கள் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்கள், உங்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு அடித்தளமாகும் . இளம் வயதினர் புதிய சூழலில் கவனமாகப் பழகுவதோடு யோசித்துச் செயல்படுவது அவசியம். தொழிலதிபர்கள் தங்கள் நாவன்மையால் தங்கள் கருத்துகளை எடுத்துச் சொல்ல ஏற்ற வாரம். வீடு, மனை விற்பனை அவ்வளவு லாபகரமாய் இராது. எனவே பணத்தை அதில் முடக்க வேண்டாம். இல்லச் சூழலோடு பணிச்சுமை மோதாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம், பயணம் என்று மகிழ்ச்சியாய் இருப்பார்கள். பணியில் இருப்போர் தம் திறமைக்குரிய வாய்ப்பு வரும் வரை பொறுமை காப்பது அவசியம்.

     

    கன்னி: பெண்கள் பேச்சில், படபடப்பைக் குறைத்து இனிமையைக் கூட்டுங்கள். இல்லறம் நல்லறமாய்த் திகழும். பெற்றோர்கள் பிள்ளைகள் கேட்டவுடன் பணம் கொடுப்பதை விட, அவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வைப்பது நல்லது. பணியில் இருப்பவர்கள் இடம், பொருள், ஏவல் தெரிந்து உங்கள் கோரிக்கைகளை முன் வைப்பது அவசியம். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் இருக்கும். எனவே செலவுப் பட்டியலைக் குறைவாக்குங்கள். சுய தொழிலில் இருப்பவர்கள், சிரமங்களுக்கு இடையே வெற்றி காண்பர். சில நேரங்களில் நண்பர்கள் உங்களை முழுமையாய்ப் புரிந்து கொள்ளாமல் செயல்படலாம்.

     

    துலாம்: மாணவர்கள் புது நட்புடன் வளைய வருவார்கள். கணவன் வழி உறவுகளுக்காகப் பெண்கள் தங்கள் சேமிப்பைக் கரைப்பர். கலைஞர்களுக்கு வெளிவட்டாரம் மூலம் மகிழ்ச்சி வரும். கூடவே சுற்றி இருப்பவர்களால் வீண் செலவுகளும் வந்து வந்து போகும். சில குழப்பங்கள் உருவாகும் சூழல் இருப்பதால், வியாபாரிகள் தகுந்த ஆலோசனையுடன் செயல்பட்டு வாருங்கள். நிலைமை மீண்டும் சகஜமாகிவிடும். வேலை நிமித்தம் அங்கும் இங்கும் அலைபவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தகுந்த கவனம் செலுத்தி வந்தால், உங்களின் அன்றாட அலுவல்கள் சீராக நடைபெறும். பொருளாதார வரவால், நீங்கள் மன உற்சாகத்துடன் செயல்படலாம்.

     

    விருச்சிகம்: பெண்கள் தங்கள் துணைவரின் உடல்நலத்தில் விசேஷ கவனம் செலுத்தி வந்தால், இல்லப் பணிகள் தடையின்றித் தொடரும். மாணவர்கள் சோர்வை விரட்டியடிக்கும் சத்தான பானங்களைக் குடித்து வந்தால், சிந்தனை வளம் மேலும் பெருகும். வியாபார விஷயங்களில் வெளுத்ததெல்லாம் பால் என்றிருப்பதைத் தவிர்த்தல் நலம். பணியில் இருப்போர் புதிய விஷயங்களை அறிந்து கொள்ளும் துடிப்புடன் செயலாற்றுவார்கள். பிள்ளைகளிடம் உங்கள் கருத்துகளை இதமான முறையில் எடுத்துச் சொன்னால், அவர்களின் ஒத்துழைப்பையும் பெறலாம். பழைய கடன்கள் அடைவதால், பொருளாதார இறுக்கம் குறையும்.

     

    தனுசு: குடும்ப விஷயத்தில் மூன்றாம் நபர் தலையீட்டை அனுமதிக்காதீர்கள். பிரச்சினைகள் சுமூகமாக முடியும். வெளி இடங்களில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் அவசியமற்ற இரவு நேரப் பயணங்களைத் தவிர்த்து விடுதல் நலம். கலைஞர்கள் கவனமாக இல்லை என்றால், சிலரின் சூழ்ச்சியால், வரும் வாய்ப்புகள் திசை மாறலாம். குழந்தைகள் பெறக் கூடிய பெருமையால், உங்களின் பெருமையும் உயரும். அலுவலக கொடுக்கல் வாங்கலில் கவனமாய் இருந்தால், மன இறுக்கமின்றி வேலையில் ஈடுபட முடியும். மற்றவருக்கு ஜாமீன் போடுவதைத் தவிர்த்துவிடவும்.

     

    மகரம்: குடும்ப உறுப்பினர் உங்களின் திட்டங்களுக்கு, வலிமை சேர்க்க முன் வருவார்கள். பங்குச் சந்தை விஷயங்களில் ஏற்றம், ஏமாற்றம் இரண்டும் கலந்திருக்கும். எனவே பணத்தை முதலீடு செய்யும் முன் யோசனை செய்வது நல்லது. பெண்கள் பேச்சில் கடுமை கலவாதவாறு பார்த்துக் கொண்டால், குடும்ப உறவுகள் சுமூகமாக இருக்கும். வியாபாரிகள் கணக்கு வழக்குகளில் உள்ள குழறுபடிகளைக் கவனமாகச் சரிசெய்தால், அபராதம் செலுத்தவதைத் தவிர்த்துவிடலாம். வெளியூர்ப் பிரயாணங்களில், உணவு விஷயத்தில் மிதமாக இருப்பது நல்லது. பொறுப்புகளில் உள்ளவர்கள் கோப்புகளை நன்கு படித்தபின், கையெழுத்திடுவது அவசியம்.

     

    கும்பம்: சில நேரங்களில் கண் மற்றும் பல் சம்பந்தமான உபாதைகள் உங்கள் இயல்பு வாழ்வைப் பாதிக்கக் கூடும். எனவே சிறு தொந்தரவுகளை உடன் கவனித்து விடுங்கள். கலைஞர்கள் விழா, விருந்து போன்றவற்றில், உங்கள் எல்லையை அறிந்து, நடந்து கொள்வது அவசியம். வியாபாரிகள் எழுத்துப்பூர்வமாகவே ஒப்பந்தங்களை முடிப்பது நல்லது. பொருள் விநியோகத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் வேலையாட்களை நம்பி முழுப் பொறுப்பை அளிக்காமல், உங்கள் கவனமும் அதில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். பணியில் இருப்போர் வரும் இடமாற்றத்தை விரும்பி ஏற்றுக் கொள்வதால், வாழ்க்கையில் உயரும் வாய்ப்பு உங்களை நாடி வரும்.

     

    மீனம்: நண்பர்களிடையே பணம் கைமாற்றாக கொடுப்பதைத் தவிர்த்தால், நட்பு கெடாமல் இருக்கும். மாணவர்கள் தெளிவான சிந்தனையுடன் செயலாற்றினால் தடுமாற வேண்டியிருக்காது. பெண்கள் விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் முன் அவற்றைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம். சிலருக்குப் புதிய மனை மற்றும் இடம் வாங்கும் வாய்ப்பு கனிந்து வரும். அலுவலக விழா, விருந்து ஆகியவற்றிற்குக் கணிசமான பணம் செலவழியும். நீங்கள் மேற்கொள்ளும் பயணங்களை நண்பர்கள் இனிமையாய் மாற்றிடுவார்கள். உறவுகளிடையே கருத்து வேறுபாடு தோன்றி மறையும். அவசர கதியில் உணவு உண்ணும் பழக்கத்தை மாற்றிக் கொண்டால், தேக நலன் சீராக இருக்கும்.

     

    Share
  • வார ராசி பலன் 04.11.2012-10.11.2012 வரை

     

    .
    காயத்ரி பாலசுப்பிரமணியமன்

    மேஷம்: பணியில் உள்ளவர்கள்,  சின்ன சின்னப் பிரச்னைகளுக்கு உணர்ச்சிவசப்படுவதை தவிர்த்தால், வேலையில் அதிக கவனம் செலுத்தலாம். பெண்கள் மருத்துவச் செலவுகளைக் குறைக்க, பிள்ளைகள் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருதல் நல்லது. . மாணவர்கள் வரவு, செலவு விஷயங்களில் கவனமாக இருந்தால் கடன் தொல்லை இன்றி வாழ்க்கை ஓடும் . கலைஞர்கள் தன் இலக்கை அடையும் வரை விடாமுயற்சியை மேற்கொண்டால், வெற்றியை தன் பக்கம் வைத்துக் கொள்ள முடியும். பொறுப்பில் இருப்பவர்களுக்கு வழக்கு விவாகாரங்களில் நேரடி கவனம் தேவை.

    ரிஷபம்: . நிர்வாகத் திறமை கொண்ட பணியாளர்கள் பேச்சிலும் நிதானமாக இருந்தால், உடன் இருப்பவர்களின் உதவி எப்போதும் இருக்கும். மாணவர்கள் நண்பர்களோடு வீண் வாக்குவாதத்தில் இறங்கமலிருந்தால் தங்கள் மதிப்பைக் காப்பாற்றிக் கொள்வது எளிது. வெளிநாடுகளுக்கு செல்ல விரும்பும் கலைஞர்கள்,  தகுந்த வாய்ப்பு வரும் வரை காத்திருந்தால், பண நஷ்டம் மனக் கஷ்டம் இரண்டையும் தவிர்த்து விடலாம். அதிகமாக புகழ்பவர்களிடமிருந்து,  பொது வாழ்வில் இருப்பவர்கள் விலகி இருப்பது அவசியம். இந்த வாரம் வியாபாரிகளுக்கு பயணங்களால் அலைச்சலும், ஆயாசமும் அவ்வப்போது வந்து போகும்.

    மிதுனம்: கர்ப்பிணிப்ப் பெண்கள், சரியான உணவுப்பழக்கம், முறையான தூக்கம் இரண்டையும் மேற்கொண்டால்,ஆரோக்கியம் பொலிவோடு திகழும். தன்னம்பிக்கையுடன் செயலாற் றும் மாணவர்களின் கனவுகள் நனவாகும். கலைஞர்கள் நண்பர்கள் வகையில் எதிர்பார்த்த அனுகூலம் குறைவாகவே இருக்கும். எனவே வேலைகளைத் தள்ளிப்போடாமல் உடன் செய்வது நல்லது. வியாபாரிகள் கடன் வாங்கி ஆடம்பரச் செலவுகள் செயவதைக் குறைத்துக் கொண்டால், சேமிப்பு தானே உயரும்.  பணியில் இருப்பவர்கள் முக்கியமான பொறுப்புக்களை தங்கள் வசம் வைத்துக் கொள்ளுதல் நல்லது.

    கடகம்:  இல்லத்தில் இனிமை தவழ பெண்கள் எப்போதும் கனிவாகப் பேசுவது அவசியம். மாணவர்கள் நினைவில் வைக்க வேண்டியவற்றை எழுதிப் பார்ப்பது நல்லது. பணியில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளின் சினத்திற்கு ஆளாகாதவாறு இருக்க, பணிகளை உடனுக்குடன் முடித்து விடுவதில் கவனமாக இருக்கவும். வியாபாரிகள் கொடுக்கல்- வாங்கல் ஆகியவற்றில் நம்பிக்கையோடு சிறிது புத்திசாலித் தனத்தையும் சேர்த்துக் கொள் வது முக்கியம். பொது வாழ்வில் இருப்பவர்கள் , நல்ல இதயங்களை புண்படுத்தாமல் நடப்பது நன்மையைத் தரும்.

    சிம்மம்: வியாபாரிகள் நன்கு முயற்சி செய்தால் வங்கி தரும் ஆதரவை வளத்துக்கு அஸ்திவாரமாக மாற்றிக் கொள்ளலாம். பெண்கள் விலை உயர்ந்த ஆபரணங்கையும், பொருள்களையும் தக்க விதத்தில் பராமரித்து வந்தால், வீண் செலவுகளை கட்டுக்குள் வைத்து விட முடியும். கலைஞர்கள் நண்பர்களை கண் மூடித்தனமாக நம்ப வேண்டாம். மாணவர்கள்  தேவையான இடங்களில் பணிவைப் பயன்படுத்தினால், எல்லோரிடமும்  நல்ல பெயரை பெறலாம். சுய தொழில் புரிபவர்கள், இந்த வாரம் ஏற்ற இறக்கமுள்ள பங்குச் சந்தையில் அகலக் கால் வைக்க வேண்டாம்.

    கன்னி: கலைஞர்கள் நேர்வழியில் போட்டிகளை எதிர்கொண்டால், எதிலும் வெற்றி பெறலாம். பெண்கள் பிறரின் நிறை குறைகளை அலசாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. மாணவர்கள் , தேர்வு நேரங்களில் ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டாமலிருப்பதே நல்லது. பணியில் இருப்பவர்கள் உயரதிகாரிகளின் நம்பிக்கையைப் பெற, பொறுமையாகவும், திறமையாகவும்  செயல்படுவது முக்கியம். பொது வாழ்வில் உள்ளவர்கள், எவ்வளவு நெருக்கமான நண்பரென்றாலும், பண விஷயங்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்வதை தவிர்த்தல் நலம். இந்த வாரம் வியாபாரிகள்,  கடன் தொல்லைகளினால் சிறிது மன சஞ்சலம் ஏற்படலாம்.

    துலாம்: பெண்கள் குடும்பத்தில் சச் சரவு, கருத்து வேறுபாடு ஆகியவை நுழையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மாணவர்கள் பாடங்களை கவனமாக பயில்வதன் மூலம் கடைசி நேர பதற்றத்தையும், பரபரப்பையும் குறைத்துக் கொள்ளலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் சோம்பலையும், பணிகளை தள்ளிப் போடுதலையும் தவிர்த்தால், வாய்ப்பும், அதிர்ஷ் டமும் உங்களை தேடிவரும். வியாபாரிகள் குற்றம் குறைகளை பெரிது படுத்தாமலிருந்தால்,கூட்டு முயற்சிகள் மூலம் அதிக லாபமும், நல்ல பெயரும் பெற முடியும். கலைஞர்கள் கவனமாக இருந்தால், நல்ல பெயரோடு, பணவரவும் தங்கும்.

    விருச்சிகம்: பெற்றோர்கள் பிள்ளைகளின் போக்கை அவ்வப்போது கவனித்து வாருங்கள். அவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமையும். பெண்கள் அவ்வப்போது தோன்றும் வேற்றுமைகளை பொருட்படுத்தாமல் உங்கள் கடமைகளை முடித்தால் உறவுகள் நடுவே உங்கள் அந்தஸ்து உயரும். இந்த வாரம் வீட்டை விரிவுபடுத்துவதில் அதிக பணம் முடங்கும்.  கலைஞர்கள் அவசரப்பட்டு அடுத்தவர் பிரச்னைகளில் தலையிட வேண்டாம். மாணவர்கள் வேண்டாத தொல்லைகளிலிருந்து விடுபட எல்லாவற்றிலும் கவனமாக இருப்பதோடு பணம் செலவு செய்வதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது.

    தனுசு: பெண்கள் பணிபுரியும் இடம் மற்றும் இல்லத்தை நேர்த்தியாக வைத்திருப்பார்கள். இந்த வாரம் பூர்வீகச் சொத்தில் சில தொல்லைகள் வந்து போகும் நிலை இருப்பதால், ஆவணங்கள் அனைத்தையும் பத்திரமாக வைப்பது அவசியம். பணியில் இருப்பவர்கள் பொறுப்புடனும், பொறுமையுடனும் செயல்பட்டு வந்தால், நல்ல பெய ரைப் பெறுவது எளிதாகும். நண்பர்களிடம் ஏற்பட்ட மனஸ்தாபம் தீருவதால் மீண்டும் நட்பு பலம் பெறும். கலைஞர்கள் தங்கள் திறமையால் பிறர் கவனத்தையும், வாய்ப்புக்களையும் ஈர்ப்பார்கள். மாணவர்கள் தங்கள் தகுதியை உயர்த்திக் கொள்ள எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலனிருக்கும்.

    மகரம்: பெண்கள் தங்க நகைகளை இரவலாய் வாங்குவது, இரவலாய் கொடுப்பது- இரண்டையும் தவிர்த்தால் வீண் தலைவலி வராமலிருக்கும். உயர் படிப்பிற்காக வெளியிடம் செல்பவர்கள் எதிலும் கட்டுப்பாட்டுடன் இருப்பது நன்மை தரும். பணியில் இருப்பவர்கள் சேமிப்பைக் கரைக்கும் செலவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.பொறுப்பில் இருப்பவர்கள் வழக்கு விவகாரங்களை நேரடியாக கவனித்துக் கொண்டால், நஷ்டங்களைத் தவிர்த்து விடலாம். கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களையும், அதன் மூலம் வெற்றிகளையும் பெற்று மகிழ்வர்.

    கும்பம்: முதியவர்கள் ஆகாரத்தில் கட்டுப்பாடாய் இருந்தால், ஆரோக்கியமும் சீராக இருக்கும். வியாபாரிகள் பணியாளர்கள் கொடுத்த பொறுப்புக்களை சரிவர செய்கிறா ர்களா என்று கவனித்துக் கொள்ளவும். பொது வாழ்வில் இருபவர்கள் வேண்டாத பிரச்னைகளில் ஈடுபட வேண்டாம். பணியில் இருப்பவர்கள் உங்களைத் தேடி வரும் இடமாற்றத்தை விரும்பி ஏற்றுக் கொள்ளுங்கள்.அது நல்ல திருப்பு முனையாக இருக்கும். சுய தொழிலில் இருப்பவர்கள் நிலவும் சூழலுக்கேற்ப, திட்டங்களை செம்மைப்படுத்துவதோடு தங்கள் அணுகு முறைகளையும் மாற்றினால், அதிக லாபம் பெறலாம்.

    மீனம்: பெண்கள் அனுசரணையான போக்கை மேற் கொண்டால், குடும்பம் அமைதியாக இருக்கும். உயர் பதவியில் இருப்பவர்கள் பணியாளர்களின் ஒத்துழைப்பு குறையாமல் பார்த்துக் கொள்வது நல்லது. கலைத் துறையினர் பல சலுகைகள் எதிர்பார்த்திருந்தாலும், அவற்றில் சில மட்டுமே நிறைவேறும். மாணவர்கள் புதிய முயற்சிகளுக்கு வரும் தடைகளை தங்கள் திறமையால் வென்று சாதனை படைப்பார்கள். பொது வாழ்வில் இருபவர்கள் போட்டிகளைச் சவாலாக ஏற்றுக் கொண்டால் வெற்றி வாய்ப்புகள் அதிகமாகும். வியாபாரிகள் மனதில் கூடாரமிட்டிருந்த சஞ்சலங்கள் குறைந்து உற்சாகம் கூடும்.

    Share
  • வார ராசி பலன் (அக்டோபர் 28 முதல் நவம்பர் 3 வரை)

     

    காயத்ரி பாலசுப்பிரமணியன்

    மேஷம்: சரளமான பண வரவால் பணியில் உள்ளவர்களின்  மனதில் சந்தோஷம் தங்கும். பெண்கள் நம்பிக்கையுடன் தங்கள் பணிகளில் ஈடுபட்டால் எதிலும் வெற்றி பெறலாம். மாணவர்கள்  படிப்போடு, தங்கள் ஆக்கப்பூர்வமான  எண்ணங்களுக்குத் தகுந்த செயல் வடிவம் கொடுத்தால், உயர்வு நிச்சயம்! பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு, உடன் இருப்பவர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்குமென்றாலும் அதிலும்  ஒரு எல்லைக் கோடு இருப்பது அவசியம். பொறுப்பான பதவியில் உள்ளவர்கள், , உடனிருப்பவர்களிடம், வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். வியாபாரிகள் எடுக்கும் முயற்சிகளுக்கேற்ப,  பழைய கடன்கள்வசூலாகும். . கலைஞர்களுக்கு விரும்பிய வீடு, வாகனம் ஆகிய்வற்றை வாங்கும் யோகம் உண்டாகும். .

    ரிஷபம்: இந்த வாரம், பெண்கள் சகோதர, சகோதரிகள் மூலமாக நன்மைகளைப் பெறுவார்கள். பெற்றோர்கள் காட்டும் பரிவும், அன்பும்,  மாணவர்களின் தோற்றத்தில், புதிய  பொலிவை உண்டாக்கும். கிடைக்கும் புத்திசாலிகளின் நட்பைத் தக்க வைத்துக் கொண்டால், பொது வாழ்வில் உள்ளவர்களின் வாழ்வு சிறப்பாக இருக்கும். சரளமான பணவரவால், கலைஞர்களின்  கவலைகள் மறைந்து மகிழ்ச்சி பிறக்கும். வியாபாரிகள் திட்டமிட்டு வேலை செய்தால், ஏற்றுமதி – இறக்குமதி வியாபாரங்கள் வேண்டிய லாபத்தைக் கொடுக்கும். மாணவர்கள் வீண் செலவுகளைத் தவிர்த்தால்,  சேமிப்பு என்பது எளிதாகும். பணியில் உள்ளவர்களுக்கு,  வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
    சுய தொழில் புரிபவர்கள் தங்கள் வரவுக்குள் செலவை அடக்குதலே புத்திசாலித்தனம்.
     
    மிதுனம்: மாணவர்களுக்கு நல்லவர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கப் பெறும் . பங்குச் சந்தையில் பெரிய அளவில் ஆதாயத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு கிடைக்கும் பலன் சொற்பமே. பிள்ளைகளின் போக்கில் ஏற்படும் மாறுதல்களால் உறவுகளின் நடுவில் சிறு சச்சரவு தோன்றி மறையும். வியாபார விருத்திக்காக எதிர்பார்த்திருந்த சலுகைகளை கிடைப்பதால், வியாபாரிகள் உற்சாகத்துடன் திகழ்வர்.பெண்கள் தங்கள் மனதுக்குகந்த துறையில் அதிக ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும் செயலாற்றுவர். உடன்பிறந்தவர்களுடன் இருந்த மனக்கசப்பை மற்றவர் ஊதி பெரிதாக்க இடம் கொடுக்காதீர்கள். சமாதானமாய்ப் போவது அனைவருக்கும் இதமாகத் திகழும். கலைஞர்கள் தன் பணியில் கவனமாக இருந்தால், அதிக லாபம் பெறலாம்.

    கடகம்: வியாபாரிகள் புதிய திட்டங்களை செயல்படுத்துதல், விரிவாக்கம் ஆகியவற்றை மனம் விரும்பியவாறு செய்து முடிப்பர். வெளிநாடுகளில் வேலை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டவர்களின் கனவு நிறைவேறும். வேலைப்பளு இருந்தாலும், பெண்கள் சத்தான உணவை உண்டு வந்தால், அயர்ச்சியும், ஆயாசமும் தலை காட்டாது. சக மாணவர்களோடு ஏற்படும் மனத்தாங்கலை மனம் விட்டுப் பேசித் தீர்த்துக் கொள்வதன் மூலம் நட்பில் விரிசல் விழாமல் பார்த்துக் கொள்ளலாம். வேலைக்கு செல்பவர் தெளிவான மனதுடன் பணியில் ஈடுபடுவது நல்லது. விட்டுக் கொடுத்தால் வெற்றி கிடைக்கும் என்பதை உணர்ந்த கலைஞர்களுக்கு நல்ல வாழ்க்கை அமையும்.

    சிம்மம்: குழந்தைகளுக்கு கண் சம்பந்தமான நோய்கள் தோன்றி மறையும். எனவே பெற்றோர்கள் பிள்ளையின் ஆரோக்கியத்தில் கவனமாய் இருப்பது அவசியம். பணம் மற்றும் செலவு சம்பந்தமான விஷயங்களில் சற்று சிக்கனமாய் இருந்தால், பெண்கள் கடன் தொல்லைகள் கட்டுக்குள் வைக்கலாம். மாணவர்கள் தாழ்வு மனப் பான்மையை தூர எறிந்துவிட்டு, துணிவுடன் செயல்பட்டால்,உங்கள் திறமைகளை பிறர் உணர்வார்கள். பங்குத்துறையில் உள்ளவர்கள் அளவான முதலீடு என்பதில் உறுதியாக இருப்பது நலம். இந்த வாரம் வெளியூர்ப் பயணங்களால் செலவுகள் கூடினாலும், நீங்கள் நினைத்த காரியத்தை திறம்பட முடித்து விடுவீர்கள்.

    கன்னி: பெண்களுக்கு மனதில் இருந்த கவலை நீங்குவதுடன் உறவுகளும் ஆதரவாய் இருப்பார்கள். காலத்தின் மதிப்புணர்ந்து செயல்பட்டால், மாணவர்களுக்கு நல்ல பலன் கிட்டும். மனைகள் வாங்குதல், விற்றல் ஆகியவற்றில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிட்டும்வரை அவசரப்பட வேண்டாம். முக்கியமான பொறுப்புகளை வகிப்பவர்கள், எச்சரிக்கையுடன் செயல்பட்டால், வரவிருக்கும் பிரச்சனைகளைத் தவிர்த்து விடுவதோடு நல்ல பெயரும் பெறலாம். கவனக் குறைவாகச் செயல்படும் பிள்ளைகளை இதமாகக் கண்டிப்பதே நல்லது. புதிய இடங்களுக்குச் செல்பவர்கள் உடைமைகளைப் பாதுகாப்பாக வைத்தால், பயணங்கள் இனிமையாக அமையும்.

    துலாம்: சரக்கு வினியோகம் செய்பவர்கள் வெறும் வாய் வார்த்தையை நம்பி பொருள் கொடுப்பதைக் குறைத்துக் கொண்டால் நஷ்டம் இராது. வெளி ஊர்களில் வேலை பார்ப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். பெண்கள் விலை உயர்ந்த மின்பொருள்களின் பழுதை நீக்குவதற்காக அதிக பணம், நேரம் இரண்டையும் செலவு செய்யும் சூழலுக்குத் தள்ளப்படுவார்கள். பணியில் இருப்பவர்கள் உடற்பயிற்சிக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து வர, ஆரோக்கியம் உங்களின் பணிக்கு ஆதரவாக அமையும். வியாபாரிகளுக்கு வெளியூர்ப் பயணம் மூலம் அதிக லாபம், புதிய ஒப்பந்தம் ஆகிய இரண்டையும் பெறுவர். முக்கியமான செயல்களை விரைந்து முடிக்க, நட்பும், உறவும் கை கொடுப்பார்கள்.

    விருச்சிகம்: தொல்லைத் தந்து கொண்டிருந்த கடன்கள் படிப்படியாகக் குறைவதால், பெண்கள் புது தெம்புடன் வலம் வருவார்கள். வியாபாரிகளும், வேலைக்குச் செல்பவர்களும் தங்கள் வருமான வரி கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்வது நல்லது.அலுவலகத்தில் நிலவும் உட்பூசல்களில் தலையிடாதீர்கள். கணினித் துறையில் உள்ளவர்கள் நிறுவன வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதால் புதிய சலுகைகளைப் பெறுவார்கள். உயர்பதவி வகிப்பவர்கள் நிர்வாக விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். யாரையும் குற்றம் சாட்டிப் பேசாமலிருந்தால், கலைஞர்களின் குடும்பத்திலும், தொழிலிலும் குழப்பம் இராது.

    தனுசு: மாணவர்கள் பேச்சில் கவனம் செலுத்தவதைக் காட்டிலும், தங்கள் செயலில் கவனம் செலுத்தினால், பாராட்டு பல வந்து சேரும். வியாபாரிகள் புதியவர்களிடம் பெரிய பொறுப்புகளை ஒப்படைக்கும் முன் தகுந்த ஆலோசனை செய்வது அவசியம். சுய தொழிலில் இருப்பவர்கள் நிலையான வரவிற்கான வழி வகைகளை உறுதி செய்துகொள்வார்கள். பெண்கள் வேலைப்பளு ஆரோக்கியத்தோடு மோதாமல் இருக்க, சின்ன சின்ன உடற்பயிற்சிகளை செய்வது அவசியம். விலை உயர்ந்த சாதனங்களைக் கையாளும் போது கவனமாக இருந்தால், பணியாளர்களுக்கு மன உளைச்சலும், வீண் செலவுகளும் வராமலிருக்கும்.

    மகரம்: மாணவர்கள் அறிவுப்பூர்வமான கருத்துக்களை பயன்படுத்தி நல்ல பெயரைத் தட்டிக்கொண்டு செல்வர். பெண்கள் தங்கள் குடும்ப ஒற்றுமையை பிறர் குலைக்க இடம் கொடுக்க வேண்டாம். முதியவர்கள் எலும்புகளின் பலம் குறையாமல் பார்த்துக் கொண்டால், வேலைகளை சோர்வின்றி செய்யலாம். வியாபாரிகள் புது திட்டங்களில் உள்ள நிறை குறைகளை உணர்ந்து அதற்கேற்றவாறு செயல்பட்டால், அதிக லாபம் கிட்டும். இந்த வாரம் தந்தை வழி உறவுகள் சற்றே அதிருப்தியை காட்டுவார்கள். கலைஞர்கள் அடுத்தவரின் விஷயங்களில் தலையிடாமல் இருந்தாலே , பாதி பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.

    கும்பம்: வியாபாரிகள் தேவைக்கு ஏற்றவாறு சரக்குகளை கொள்முதல் செய்தால், எதுவும் தேங்காமல் விற்றுவிடும். பெண்கள் வீடு பராமரிப்பிற்கென்று அதிக பணம் எடுத்து வைக்க வேண்டியிருக்கும்.  மாணவர்கள் சிறிய தவறுகளையும் உடனுக்குடன் சரிசெய்தால், படிப்பிற்கு எந்த பாதிப்பும் நேராது.  பொது வாழ்வில் உள்ளவர்கள் ஏட்டிக்குப் போட்டியான வாக்கு வாதங்களைத் தவிர்த்து, உறுதியான செயல்பாட்டை கடைபிடியுங்கள்.நல்ல பெயர் நிலைத்திருக்கும். மறைமுகப் போட்டிகளால், புதுமையான எண்ணங்களை நடை முறைப் படுத்துவதில் சில தடுமாற்றம் ஏற்பட்டாலும், தங்கள் திறமையால்,கலைஞர்கள் நினைத்த காரியத்தை முடித்து விடுவார்கள்.

    மீனம்: மாணவர்கள் பிறரை வெல்ல குறுக்கு வழிகளைத் தேட வேண்டாம்.பெண்கள் மனதில் பட்ட கருத்தை சொல்லும் முன் அக்கம் பக்கம் பார்த்து பக்குவமாகப் பேசுதல் அவசியம். பணியில் இருப்போர்கள் சில சில்லறைப் பிரசசனைகளை சமாளிப்பதோடு சில சமயம் உழைப்பிற்குரிய பாராட்டை கேட்டுப் பெற வேண்டியிருக்கும்.  வியாபாரிகள் வங்கிகள் தரும் அறிக்கைகளை பத்திரமாக வைத்தால், அபராதத்தைத் தவிர்க்க முடியும். கலைஞர்கள் தேவையற்ற செலவுகளைச் சுருக்கினால், பொருளாதாரம் கையைக் கடிக்காது. பொது வாழ்வில் இருப்போர்கள் பொறுப்புணர்ந்து செயல்படுபவரிடம் பணிகளைக் கொடுத்தால் வெற்றி உங்களுக்கே!  

    Share
  • நவராத்திரி நவிலும் தத்துவம்!

     

    காயத்ரி பாலசுப்ரமணியன்

    மனிதன் வாழ்வில் பாடுபடுவது நல்ல நிலைமையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே! ஆற்றிவு பெற்று உயர்வுள்ளவனாய் விளங்கும் அவன் உலகில் தனித்து வாழ முடியாது. மற்ற உயிரினங்களைப்பேணி பாதுகாப்பதோடு,  அவனுக்கு பல வளங்களை அள்ளித்தரும் இயற்கையை பாழாக்காமல், சுற்றுப்புற சூழலோடு இணைந்து வாழ வேண்டும் என்பதையும்,  ஆறறிவு உடைய  அவன்   ஆன்மீகப் படிகளில் ஏறி இறைவனை அடைய வேண்டும் என்ற  இரண்டையும் படிப் படியாய் நமக்கு விளக்குவது நவராத்திரியில் வைக்கப்படும் கொலு பொம்மைகள்.
    முதல் படியில் நாம் வைப்பது  ஓரறிவு கொண்டபுல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள். .இரண்டாவது படியில் இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கும்,  மூன்றாவது படியில் மூவறிவு உயிர்களை கொண்ட, கரையான், எறும்பு போன்ற பொம்மைகளும், நான்காவது படியில் நான்கு அறிவு கொண்ட தும்பி, வண்டு பொம்மைகளும், ஐந்தாவது படியில் ஐந்தறிவு உடைய விலங்குகள், பறவைகள், பொம்மைகளும் இடம் பெற்றிருக்கும். இந்த ஐந்து படியில் உள்ள  மிருகங்கள், பறவைகள், பூச்சிகள் யாவும் மனிதனின் உணவுச் சங்கிலியில்   பெரும் பங்கு வகிக்கின்றன. இந்த சங்கிலி அறுபடாமல் மனிதன் பார்த்துக் கொண்டால்தான் அவன் உணவு, உடை, இருப்பிடம் எதிலும் சிக்கல் ஏதுமில்லாமல் இருக்கும். ஆனால் இந்த சங்கிலி சிதைக்கப்பட்டு விட்டது என்பதை   இயற்கை நமக்கு,  அவ்வப்போது, கன மழை,  பஞ்சம், கடும் வெய்யில், பனிப்பாறை உருகுதல், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் மூலமாக நமக்கு எச்சரிக்கை மணி அடித்துக் கொண்டே இருக்கிறது!  ஆனால் மனிதன்தான் விழித்துகொள்வதில்லை. மனிதன் விழித்துக் கொண்டு , அவன் வாழ்வின் அடிப்படை ஆதாரமாக விளங்கும் இயற்கையை மனிதன் போற்றிக்காக்க வேண்டும் என்பதைத்தான் முதல் ஐந்து படிகளும் உணர்த்துகின்றன.
     ஆறாவது படியில் ஆறறிவு படைத்த  மனிதர்களின் பொம்மைகள் இருக்கும். மனிதன் படைக்கப்பட்டது இறையருளைப்பெற்று உய்ய வேண்டும் என்பதற்காகவே. இதற்கு அவனுக்கு வழிகாட்டியாய் விளங்குவது புராணங்கள் மற்றும் இதிகாசங்கள். அதனால்தான் ஏழாவது படியில் மனிதனுக்கு வழி காட்டியாக விளங்கும் மகான்கள், சித்தர்கள், முனிவர்கள் ஆகியோரின் பொம்மைகள் இடம் பெற்றிருக்கும். எட்டாவது படியில்  தேவர்கள் மற்றும் இறைவனின் பல்வேறு அவதார உருவங்களும், ஒன்பதாவது படியில்  நவராத்திரி நாயகிகளாய் விளங்கும்  துர்க்கை,  லட்சுமி,  சரஸ்வதி, ஆகியோருடன் பொம்மைகளும் இருக்கும்.
    ஆறாவது படியில் இருக்கும் மனிதன் ,  மன உறுதியுடன், ஒழுக்கமாகவும் இருந்து, ஏழு மற்றும்  எட்டாம் படிகள் காட்டும் வழியைப் பிடித்துக் கொண்டு விட்டால், ஒன்பது படியான இறைஅருளை எட்டிவிடலாம்! அதனால்தான் நவ ராத்திரி என்று ஒன்பது நாள் கொண்டாட்டம்.!  நவம் என்றால் ஒன்பது என்று நம்  எல்லோருக்கும் தெரியும்.   ஆனால் நவம் என்றால், கேண்மை, சினேகம், கார்காலம்,  புதுமை, பூமி என்று பல அர்த்தங்களை தமிழ்மொழி அகராதி நமக்குத் தருகிறது.  கேண்மை என்றால் உறவு,மனிதன் தன் உறவுகளையும், சினேகம் காட்டும் நட்பையும் அழைத்து பெருமைப்படுத்த இந்தப் பண்டிகையை  ஒரு நிலைக்களனாய்  உருவாக்கி வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.  அத்துடன் கொலு கொண்டாடும் காலம் மழைக்காலமாகிய கார்காலம்.  புதுமை. என்றால் அற்புதம். பூமியில் மானிடராய் பிறந்த நமக்கு , நல்லபடியாக செல்லும் ஒவ்வொரு நாளும் புதுமைதான், பரம்பொருள்  நமக்கு அளிக்கும் அருட்கொடைதான்! அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒன்பது நாளும் சக்தியை விதவிதமாக ஆராதிப்போம். அன்னையவள் அருளைப் பெறுவோம்! 

    படத்துக்கு நன்றி.

    http://en.wikipedia.org/wiki/File:Navratri_Golu.jpg

    Share