செய்திகள்

எழுத்தாளர் யாழூர் துரை காலமானார்

 

மறவன்புலவு க.சச்சிதானந்தன்

வணக்கம்

1946இல் பிறந்து, இலக்கிய உலகில் தடம் பதித்த எழுத்தாளர் யாழூர் துரை,  21.3.2012 மாலை 1600 மணிக்குச் சென்னை மந்தை வெளியில் காலமானார்.

அவரைப் பற்றிய விளக்கமான செய்தியை, எழுத்தாளர் கொடிவழி அருணகிரி அவர்கள் தந்துள்ளார்கள், இணைப்பில் பார்க்க.

நேரில் சென்றேன், இல்லத்தவரிடம் ஆறுதல் கூறினேன். என்னாலான உதவிகளை நல்கினேன். திரு. அருணகிரி அவர்களும் என்னுடன் வந்தார்கள், தன்னாலான உதவிகளை வழங்கினார்கள். இல்லத்தவருக்கு உதவ விழைவோர் திரு. அருணகிரி அவர்களுடன் பேசுக. புரட்சிப்புயல் வைகோ அவர்களின் செயலரே திரு. அருணகிரி அவர்கள்.

படங்களும் விவரங்களும் இணைப்பில் பார்க்க. அனைவருடனும் பகிர்க.

நன்றி

 

 

 

 

 

 yazhoor thurai01

 

Share

Comment here