செருமனியிலும் இன்றும் வாழும் காந்தி!
நறுக்.. துணுக்…. (21)
செருமனியின் புதிய குடியரசுத் தலைவர் ஜோசிம் கௌக் சென்ற வெள்ளிக்கிழமை நாட்டின் 11வது குடியரசுத் தலைவராக
பொறுப்பேற்றுக் கொண்டபின் தம் நாட்டு மக்களை ஊக்குவிக்கும் பொருட்டும், அவர்கள் தங்கள் அச்சத்தை விட்டொழித்து, ஜனநாயகம் மற்றும் அதன் தலைமையின் மீதும் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளும்படியும், ”தன்னம்பிக்கை இருந்தால் மட்டுமே ஒருவர் தம் வாழ்க்கையில் முன்னேற்றமும், வெற்றியும் காண முடியும் என்ற மகாத்மா காந்தியடிகளின் கொள்கை ஒரு தனி மனிதருக்கு மட்டுமல்லாமல் ஒரு நாட்டிற்கும் பொருந்தக்கூடியது. ஆகவே உங்களுக்குள் நம்பிக்கையை கட்டமைக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்” என்று உரையாற்றினார்.
72 வயதான ஜோசிம் கௌக் அவர்கள் எந்தக் கட்சியையும் சாராத, மக்களின் பேராதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட, பொதுநல சீர்த்திருத்தங்கள் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர் என்பதும், மகாத்மா காந்தியடிகளின் கொள்கைகளின் மீதும் நம்பிக்கை கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. (நன்றி – பி.டி.ஐ)
படங்களுக்கு நன்றி :
http://en.wikipedia.org/wiki/Mohandas_Karamchand_Gandhi