Author: ஜவஹர் பிரேமலதா

  • எம்.ஜி.சுரேஷின் இரு நாவல்களை முன் வைத்து…….

     முனைவர். ஜ.பிரேமலதா, 

    தமிழ்  இணைப் பேராசிரியர், 

    அரசு கலைக் கல்லூரி,

     சேலம் -636 007

    எம்.ஜி.சுரேஷின் இரு நாவல்களை முன் வைத்து…….

    (அலெக்சாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும், சிலந்தி)

    தமிழ் நாவலாசிரியர்களில் மேலை நாட்டு கொள்கைகளின் தாக்கத்தின் அடிப்படையில் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருபவர்களில் தமிழவன், சாருநிவேதிதா, ஜெயமோகன், எம்.ஜி.சுரேஷ் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இதில் பின்நவீனத்துவத்தை உள்வாங்கிக் கொண்டு அதை படைப்புகளில் வெளிப்படுத்துபவர் எம்.ஜி.சுரேஷ். இவர் தன்னுடைய நாவல்களே தமிழின் முதல் பின்நவீனத்துவ நாவல்கள் என்று இணையதளத்தில் பேட்டி கொடுத்துள்ளார். பின்நவீனத்துவம் பற்றியும் அவை அவருடைய நாவல்களில் பயன்படுத்தப்பட்டுள்ள முறைகள் பற்றியும் அவருடைய அலெக்சாண்டரும் தேநீரும், சிலந்தி என்ற இரு நாவல்களில் மட்டுமே இக்கட்டுரை ஆராய்கிறது.

    இலக்கியங்கள் சமூக மாற்றத்திற்கான கருவியாக விளங்குகின்றன. தற்கால தொழில்நுட்பம் மிகுந்த சூழலின் நவீனத்தன்மைக்கேற்ப படைப்பிலக்கியங்களிலும் நவீனத்துவமும், அதிலும் மேம்பட்ட பின்நவீனத்துவமும் தேவைப்படுகின்றன. நவீனத்துவம் என்பது மரபிலிருந்து விடுவித்துக் கொள்வதை முதன்மை நோக்கமாகக் கொண்டது. இது பன்முகம், நடப்பியல், மிகை நடப்பியல், இருத்தலியல் என்ற பல கொள்கைகளை வளர்த்தெடுத்தது. அதிலிருந்து பிறந்த அதனினும் மேம்பட்ட பின்நவீனத்துவம் தற்கால உலகில் பேசப்படுகிற பொருளாக வளர்ந்துவிட்ட சூழலில் அதன் கொள்கைகளாகத் தலித்தியம், பெண்ணியம் போன்ற  கொள்கைகள் உருவாயின. நாவல்களில் பின் நவீனத்துவத்தின் தேவை குறித்து “”””வாழ்க்கை முழுமைகளில் இல்லை. பின்னங்களின் தென்பட்ட வாழ்வு பிறகு அப்படியும் இல்லை என்றாகிவிடும் நிலைமை வாழ்க்கையில் எல்லாமே குழம்பிவிட்டது. வாழ்வின் பல்வேறு பரிமாணங்கள் தாறுமாறாகிக் கிடக்கின்றன. உறவுகள் எல்லாம் சிக்கலாகிவிட்டன. எதிலும் நிச்சயமில்லை. எதுவும் நேரலாம் பற்றிக் கொள்வதற்கான எதார்த்தம் என ஒன்றுமில்லை. நிரந்தரம் என்று எதுவுமில்லை. இந்தச் சூழலில்தான் பின் நவீனத்துவம் பேசப்படுகிறது (ப.81-82) என்று சிவ மங்கையர்க்கரசி இலக்கிய இயக்கங்கள் நூலில் குறிப்பிடுகிறார்.

    பின்நவீனத்துவம் இலக்கியத்திற்கு என வரையறுக்கப்பட்ட எல்லாவிதமான எல்லைகளையும் மீறுவதையும், பல வடிவச் சோதனைகளில் ஈடுபடுவதையும், உலகில் தோற்றுவிக்கப்பட்ட பல கருத்துக்களின் போதாமையையும், மையத்தை மறுத்து அனைத்தையும் பரவலாக்குவதையும் அடித்தளமாகக் கொண்டுள்ளது.

    இந்தப் பிரபஞ்சத்தில் தோன்றியுள்ள ஒவ்வொன்றிற்குமான முக்கியத்துவத்தை உணர்ந்து எதையும் பொதுமைப்படுத்த முயலாமல், அதனதன் இயல்பிலேயே இருக்க மனித மனம் விட்டுவிடவேண்டும் என்கிறது. இக்கருத்தியல் தளத்தில் எம்ஜி.சுரேஷின் இருநாவல்களும் இயங்குகின்றன. சிலந்தி நாவல் மனநலக் காப்பகத்திலுள்ள பைத்தியங்களைப் பற்றிப் பேசுகிறது. அலெக்சாண்டரும் ஒரு கோப்பைத் தேநீர் மன நலக்காப்பகத்திற்கு வெளியே தங்களை வெற்றியாளர்களாகவும், புத்திசாலிகளாகவும் கருதி வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கும் பைத்தியங்களைப் பற்றிப் பேசுகிறது.

     

    வடிவ சோதனை

    அலெக்சாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும், சிலந்தி என்ற இரு நாவல்களிலும் வடிவச் சோதனைகளைச் செய்திருக்கிறார். அலெக்சாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும் நாவலில் ஒரு கதையல்ல பல கதைகள் இடம்பெற்றுள்ளன. ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாத கதைகளைப் பல பரிமாணத்தில் காலங்களை மாற்றி, களங்களை மாற்றி, பாத்திரங்களை மாற்றிச் சொல்லிச் செல்கிறார். நேர்க்கோட்டிலும் முன்னும் பின்னும், குறுக்கும் நெடுக்குமாக கதைகள் நகர்கின்றன. இதில் அத்தியாயங்களும், பாகங்களும் இடம்பெறவில்லை. தலைமைப்பாத்திரம், துணைப்பாத்திரம் என்ற பாகுபாடுகளும் இல்லை. நாவலின் நடுப்பக்கத்தில் கதை இரண்டாக ஒரே பக்கத்தில் பிரிக்கப்படுகிறது. மேல்பகுதியில் ஒரு காலத்திற்கான கதையும், கீழ்ப்பக்கத்தில் வேறொரு காலத்திற்கான கதையும் சொல்லப்படுகின்றன. நான்கு வகையான அலெக்சாண்டர்களின் வாழ்க்கையின் வழி கதை நகர்கிறது.

    சிலந்தி நாவலில் வாசகர் ஆணாக இருப்பின், ஒரு போக்கிலும், பெண்ணாக இருப்பின் மற்றொரு போக்கிலும் கதை புரிந்துகொள்ளப்படுகிறது. பொதுவாக வாசகன் நாவல்களில் பங்கு பெறுவதில்லை. ஆனால் இந்நாவலில் வாசகன் தான் துப்பறிவாளன். நடந்த கொலைகளையும், நடக்கும் கொலைகளையும், இனி நடக்கப்போகும் கொலைகளையும் வாசகன் தான் பொறுப்பேற்று குற்றவாளி யார் எனக் கண்டறிய வேண்டும். இதில் கொலையாளிகள் என்று தன்னைக் கூறிக் கொள்பவர்கள் அனைவரும் மன நோயாளிகள் என்பதால் வாசகன் முழு விழிப்புணர்வோடு ஒவ்வொரு நிகழ்ச்சியையும் கூர்ந்து கவனிக்கும் வகையில் கதை அமைந்துள்ளது. இந்நாவலிலும் பல கதைகள் இடம்பெற்றுள்ளன. வாசகனும் நாவலில் பங்கு பெறும் வகையில் பின் நவீனத்துவப் போக்கை எம்.ஜி.சுரேஷ் கடைப்பிடித்துள்ளார். இந்நாவலிலும் 274ம் பக்கம் முதல் 307ம் பக்கம் வரை கதையை இரு கூறாகப் பிரித்து ஆண்வாசகர் எனில் ஒரு மாதிரியான கதைப்போக்கும், பெண் வாசகர் எனில் மற்றொரு வகையான கதைப்போக்கும் என்ற முறையில் இடமும் வலமுமாகக் கதை நகர்கிறது. பொதுவாக நாவல் ஒரு முடிவைத்தான் கொண்டிருக்கும் இந்நாவல் ஆண் வாசகருக்கு வேறு முடிவையும், பெண் வாசகருக்கு வேறொரு முடிவையும் தருகிறது. ஏழு நாள்கள் ஏழு நிகழ்ச்சிகள் பல குறுக்கீடுகள், கட்டட அமைப்பிற்கான வரைபடங்கள் என நாவல் பின்நவீனத்துவப்பாணிக்கேற்ப கட்டமைக்கப்பட்டுள்ளது.

    தளங்கள்

    அலக்சாண்டரும் ஒருகோப்பைத் தேநீரும் என்ற நாவலில் எதிர்கால மனிதர்களைச் சந்திக்கும் மகாஅலெக்சாண்டர் எல்லா உலகங்களுக்கும் போய் வருகிற சாத்தியம் இருப்பதை அறியும்பொழுது, ‘அந்த அந்தக் காலங்களுக்குப் போய் எல்லா உலகங்களையும் ஜெயிக்கவேண்டும்’ என்ற உந்துதல் ஏற்படுவதாகக் கூறுகிறான் (ப.378). இந்த மோசமான உந்துதல் தான் மனித குலத்துக்கு எதிராகத் திரும்பியிருப்பதாகவும், யாரோ ஒருவனின் உந்துதலினால் ஒட்டு மொத்த உலகமே பாதிக்கப்படுவது எவ்வகையிலும் நியாயம் என்று எம்.ஜி.சுரேஷ் மற்றொரு அலக்ஸின் வழியாகக் கேள்வி கேட்கிறார். இந்த மோசமான உந்துதல்தான் மனிதனைச் சாதி, மதம், சமயம், அரசியல், பொருளாதாரம் எனப் பல பிரிவாகப் பிரித்தாள்கிறது என்பதை இவ்விரு நாவல்களும் பல்வேறு கோணங்களிலிருந்து எடுத்துரைக்கின்றன. எனவேதான் இவருடைய நாவல்கள் தமிழகச் சூழலையோ, இந்தியச் சூழலையோ உள்ளடக்கமாகக் கொள்ளாமல் உலகளாவிய சூழலையே குறிவைக்கின்றன. உலகளாவிய வரலாறு, பொருளியல், ஆதிக்க அரசியல், இனவெறி உலகின் எதிர்கால நிலை, எளிய மக்களின் வாழ்க்கை, நாகரிகம் குறித்தான ஐயம் போன்ற பல்வேறு தளங்களில் இரு நாவல்களும் பயணிக்கின்றன.

    மனிதர்கள் காமம், பணம், வெற்றி, மொழி, இனம், அதிகாரம், திரைப்படம், அறிவியல் போன்றவற்றின் மீது வெறிகொள்ளும்போது, அந்த வெறி உச்சநிலைக்குச் செல்லும்போது உளவியல் சிக்கல்களுக்கு ஆளாவதை இவ்விரு நாவல்களும் பரக்கப் பேசுகின்றன. மனிதர்களின் குரூரமான ஆசையை நோக்கிய பயணம் ஒருபக்கம் தன்னழிவையும், மறுபுறம் உலக அழிவையுமே சந்திக்கும் என்பதை இருநாவல்களும் பல மாந்தர்கள் வழி எடுத்துரைக்கின்றன. மனிதனை இயல்பாக இருக்கவிடாமல், நாகரிகம் என்ற பெயரில் செயற்கையைப் புகுத்தும் சமூகம் மனப்பிறழ்வுடைய மனிதர்களையே உற்பத்தி செய்கின்றது. சமூகத்தில் வாழும் எந்த மனிதனும் சமநிலை மனநிலையோடு வாழ்வதற்குத் தடையாக இருப்பவை ஆளும் வர்க்கமும், அதிகார வர்க்கமுமே என்பதே இருநாவல்களின் அடித்தளம். மன்னர்களின் காலம் முதல் சிலந்தி நாவல் குறிப்பிடும் தற்காலம் வரையிலும் மனிதர்கள் ஆளும் வர்க்கத்தினரின் ஆசைக்கே தம் வாழ்வைத் தொலைத்து வருவதைப் பதிவு செய்கிறார்.

    தொடக்க கால மனிதனை விட தற்கால மனிதன் மிகப்பெரும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளான். அவனுடைய மனநிலைப் பிறழ்விற்கு காரணமான சமூகச் சூழலின் சீரழிவை எடுத்துக்கூறி இன்றைய நவீன மனிதன் தனக்கே எதிரியாகி இருப்பதையும் இதனால் ஏற்படப்போகும் பின் விளைவுகளையும் எச்சரிக்கும் உணர்வோடே கதையை நகர்த்திச் செல்கிறார். சிலந்தி நாவல் மொழி, அரசியல், திரைப்படம், மருத்துவம், இலக்கியம் உள்ளிட்ட அனைத்து சமூக மதிப்பீடுகளையும் சந்தேகமுற்று ஒவ்வொன்றிற்குள்ளும் ஒழுங்கீனங்களைக் கண்டறிந்துள்ளது. அலெக்சாண்டரும் ஒரு கோப்பைத் தேநீர் மகாஅலெக்சாண்டர் முதல் எதிர்கால அலெக்சாண்டர்கள் வரையுள்ள அனைத்துப் பாத்திரங்களையும் அவற்றின் பலங்களோடும் பலவீனங்களோடும் வெளிப்படுத்துகிறது.

    புதுமை, பழமை, மரபு போன்றவை கேள்விக்கும் கேலிக்கும் ஆளாக்கப்பட்டு மனிதத்தை மட்டுமே இருநாவல்களும் முன்னிறுத்துகின்றன. எல்லா சமூக மதிப்பீடுகளையும் மாற்றுக் கோணத்தில் ஆராய்ந்து அவற்றிற்கான காரணம் மனிதன் இயல்பாக இல்லாமல் இருப்பதுதான் என்ற கருத்தியலை முன் வைக்கின்றன.

     

    கடந்தகால அலெக்ஸாண்டர்

    அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும் என்ற நாவலில் தாய் ஒலிம்யாசும் தந்தை பிலிப்பும், ஆசான் சாக்ரடிஸீம், குறிக்கோள் என்ற பெயரில் மகா அலெக்சாண்டரின் மென்மைத்தன்மையே அசுரத்தன்மையாக மடைமாற்றம் செய்கிறார்கள். இதன் விளைவாக இருமை நிலையில் மனப்போராட்டத்திற்கு ஆளாகும் மகா அலெக்சாண்டர் அகச்சீரழிவையும் புறச்சீரழிவையும் சந்திக்கிறான். மனதினால் மேலும் மேலும் கோழையாகிறான். தன் நண்பர்களையும் நலம் விரும்பிகளையும் இழக்கிறான்.

    தாய் ஒலிம்பியாசும் தந்தை பிலிப்பும் கிரேக்க மாவீரன் அகிலஸின் வாரிசாக அவனைப் பார்க்கிறார்கள். ஆசான் அரிஸ்டாட்டிலும் ஓருலகக் கூட்டாட்சி அலெக்சாண்டர் போன்ற மாவீரர்களால் சாத்தியமே என்று நம்புகிறார். இதனால் அன்பும் மென்மையும் கொண்ட மகாஅலெக்சாண்டர் போர் என்ற பெயரில் பல இனமக்களைக் கொன்று குவிக்கிறான். மிகக் கொடூரமான முறையில் வெற்றி பெறுகிறான். மறுபுறம் அவனுடைய மென்மை உணர்வு அவன் நிகழ்த்திய பேரழிவுகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

    பாரசீக இளவரசி ருக்ஸானாவைச் சந்திக்கும்பொழுது அவனுடைய அடக்கி வைக்கப்பட்ட மென்மை உணர்வுகள் விழித்துக்கொள்கின்றன. போர்க்குணம் மறைந்து அன்பு மேலோங்குகிறது. அன்பு மேலோங்கிய நிலையில் இதுவரை அவன் நம்பி வந்த பிம்பங்கள் உடையத் தொடங்குகின்றன.

    கிரேக்கர்கள்தான் அறிவாளிகள், பண்பானவர்கள், நாகரிகம் மிகுந்தவர்கள், நிர்வாகிகள் என்ற பிம்பம் உடைந்து அவர்களைவிடப் பாரசீகர்கள் பல வகைகளில் உயர்ந்தவர்களாக இருப்பதை அறிகிறான். அதுவரை கிரேக்கம் பாரசீக மக்களை காட்டு மிராண்டிகள் என்று  கருதி வந்தது பொய் என உணர்கிறான். பாரசீகத்திலேயே நீண்ட நாள் தங்குகிறான். அவர்களுக்கும் தன் அரசாட்சியில் சம பங்கு தருகிறான். போர் வெறி கொண்டலைந்தபோது கிரேக்கர்களைத் தவிர மற்ற அனைத்து இனங்களையும் காட்டுமிராண்டிகள் என நினைத்து அவர்களை இனப்படுகொலை செய்ததை நினைத்து வருந்துகிறான். எந்த இனத்திற்காகப் படுகொலைகள் செய்தானோ அவன் அந்த இனத்தைச் சேர்ந்தவன் இல்லை என்ற உண்மையும் அவனை பலமுறை நிலை குலைய வைக்கிறது.

    தாய் ஒலிம்பியா கிரீஸில் பிறந்தவள். தந்தை பிலிப் மாசிடோனியன். இருநாடுகளும் கிரேக்கத்திலிருந்தாலும் கீரிஸில் பிறந்தவர்களே கிரேக்கர்கள் என தாய் ஒலிம்பியா கூறிக்கொள்கிறாள். அவளிடம் எதிர்த்துப் பேசாமல் தந்தை பிலிப் ‘தானும் ஒரு கிரேக்கனே’ எனத் தனக்குள் சமாதானப்படுத்திக் கொள்கிறான். இதே சிக்கலே மகாஅலெக்சாண்டருக்கும் எழுகிறது. ஒரு அரண்மனை விருந்தில் கிரீஸில் பிறந்தவனிடம் மாசிடோனியனைத் தாழ்ந்தவனாகக் கருதுகிறாயா எனத் தானாகவே கேட்கிறான். அவன் ஆம் என்று சொல்ல அவனைக் கொன்றுவிடுகிறான். அவனுடையே முதல்போரே கிரீஸைத் தாக்கி அம்மக்களை அழித்து அந்நாட்டைக் கைப்பற்றியதுதான். அவனுடைய தாழ்வு மனப்பான்மை எதிர்வினையாற்றி கிரீஸை அடிமைப்படுத்தி மகிழ்கிறது. மறுபுறம் கிரேக்கர்கள், மாவீரர்களைத் தேவ தூதர்களாகக் கருதியதுபோல தன்னையும் கடவுளாகக் கருதவேண்டும் என விரும்புகிறான். கிரேக்க மாவீரனான அகிலஸின் வாரிசாகவே தன்னைக் கருதிக்கொண்டு, அவன் வெல்லாத உலகை தான் வெல்ல வேண்டும் என அகிலஸின் வெற்றிகளை விஞ்ச விரும்புகிறான்.

    இதற்காக உளவியல் ரீதியாக எதிரிகளை நிலைகுலைய வைத்தும், பின்புறமிருந்து தாக்கியும், மூர்க்கமாக முன்னறிவிப்பின்றி மக்களை அழித்தும். கொடூரமான தண்டனைகளைக் கொடுத்தும், அறமற்ற வழியில் நாடுகளைக் கைப்பற்றுகிறான். மக்களை அழித்தொழித்து அவர்கள் பிணங்களின் மீது ஆட்சி செலுத்தும் தன்னை, பாதிக்கப்பட்ட மக்கள் அன்பின் திருவுருவமான கடவுளாக வணங்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறான்.

    தனிமனிதனோ, அரசனோ தம் இனவரலாறுகளின் மீதான மிகைப் புனைவுகளினால் இயல்பான வாழ்க்கையைத் தொலைத்து மனப்பிறழ்விற்கு ஆளாவதால், எம்.ஜி.சுரேஷ் நாவல் முழுக்க வரலாற்று வாதத்தை கேலிக்குள்ளாக்குகிறார்.

    வட்டாரம் சார்ந்த தனித்தன்மைகள் புறக்கணிக்கப்பட்டு, இனம் சார்ந்த மிகைப் புனைவுகளினால் உலகம் இன்று சந்தித்து வரும் உளவியல் சிக்கல்கள் ஏராளமானவை. எனவேதான் எம்.ஜி.சுரேஷ் உலகப்பொதுமை குறித்து எதிர்காலத் தேவையை நிராகரிக்கிறார். அதைப்போலவே வரலாறு குறித்தான கருத்தியலையும் நிராகரிக்கிறார். வரலாறு சொல்லப்பட்ட கண்ணோட்டத்திலேயே நாம் வரலாற்றைப் புரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை என்பதை மகாஅலெக்சாண்டரின் வாழ்க்கை வழி விளக்குகிறார். மகாஅலெக்சாண்டர் மாவீரன், அஞ்சாநெஞ்சன், கடவுளாக வழிபடப்பட்டவன் போன்ற அவனைப் பற்றிய வரலாற்றுப் பதிவுகளை உடைத்தெறிகிறார். இசைக் கலைஞனான அலெக்சாண்டர் மன்னர் மரபில் பிறந்ததினால் இறக்கும் வரை தான் விரும்பிய வாழ்வை வாழ முடியாமல் தன் மென்தையான மனநிலைக்கு மாறான போர்ச்சூழலிலேயே வாழ்கிறான். தந்தை பிலிப்பை விட, மாவீரன் அகிலஸைவிடதான் உயர்ந்த மாவீரனாகப் போற்றப்பட வேண்டுமே என்ற அச்சம் அவனை சதா அரித்துக் கொண்டே இருக்கிறது. ஒருபுறம் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத கொடூரங்களையும் கொலையும் நிகழ்த்தும் அவன் மறுபுறம் கொல்லப்பட்ட அப்பாவி மக்களை நினைத்து துடிதுடிக்கிறான்.

    பாரசீக மன்னனைக் கொன்று பாரசீகம் தன்காலில் விழக் காரணமாக இருந்த படைவீரனைப் பாராட்டுவதற்குப் பதில், பாரசீகமன்னனின் மகளை மணந்திருந்த நிலையில் அவளை மகிழ்விக்கும் நோக்கில் அவள் தந்தையைக் கொன்றவனை அவள் கண்முன்னாகவே கொடூரமாகக் கொல்கிறான். இதனால் ருக்ஸானா மகிழ்வாள் என நினைத்திருக்க, அவளோ பயந்து மனதினால் அவனைவிட்டு விலகிவிடுகிறாள். இது அலெக்சாண்டருக்கு மிகப்பெரிய மனப்போராட்டத்தை ஏற்படுத்திவிட, மனைவியையும், அவள் நாட்டு மக்களையும் மகிழ்விக்க அவர்களை போல உடையணிவதும், அவர்களின் கடவுளைப் போல தன்னை அலங்கரித்துக் கொள்வதுமான வேடிக்கைப் பொருளாக மாறி பலரின் நகைப்பிற்கு ஆளாகிறான்.

    மீண்டும் படைதிரட்டி தன்னை மாவீரன் என நிரூபிக்க, நினைத்துப் படைத்திரட்டும்போது அவனுடைய பரைவீரர்களே அவனை எதிர்க்கிறார்கள். ஒரு மன்னனாக இருந்து ஆணையிடாமல், உண்ணாவிரதமிருந்தும், அறைக்குள் நுழைந்து கதவைச்சாத்திக் கொண்டும்தான் நினைத்ததைச் சாதித்துக்கொள்கிறான்.

    ஞானி டயோஜினஸிடம் ‘தன்னால் எதையும் சாதிக்கமுடியும் என்று திமிராகப் பேசும்பொழுது’ மனதால் ஒரு செயலை நடத்திப் பார்த்த பின்பே உடம்பு ஜெயிக்கிறது என்று தன் மன வலிமையை மிகைப்படுத்திக் கூறுகிறான். அவரோ ‘உடம்பு மறுத்துவிட்டால்?.. என்று எதிர்கேள்வி எழுப்புகிறார். மரணப்படுக்கையில்தான் உண்மை உணருகிறான். குதிரை புலி பாலஸ்தான் நிழலைக் கண்டு தானே பயந்து மிரண்டது போல, தன் நிழலைக் கண்டு பிரமித்து உலகை வெல்ல முடியும் என்று நினைத்து இயல்பு வாழ்வைத் தொலைத்ததை உணர்கிறான். உண்மையில் மன்னனாக வாழாமல் வெற்றியை யாசிக்கும் பிச்சைக்காரனாக வாழ்ந்திருப்பதையும், தன் அகந்தையைச் சாதாரண காய்ச்சல் வீழ்த்திவிட்டதையும் உணர்க்கிறான் மகா அலெக்சாண்டர்.

    மாவீரன் என்ற போர்வையை நீக்கி, மனப் போராட்டமும், தாழ்வு மனப்பான்மையும், மனப்பிறழ்வும் கோமாளித்தனங்களும், மனசாட்சியும் உடைய எளிய மனிதனாக எம்.ஜி.சுரேஷ் காட்டியுள்ளார். பருவ வயதில் காதல் வயப்பட்ட அனீலியாவை நினைத்து மரணப்படுக்கையில், தன் இழந்துபோன வாழ்விற்காக ஏங்குகிறான். பல இளவரசிகளை மணந்திருந்தாலும், அவர்களுடன் வாழாமலே போரில் ஈடுபட்டது, ருக்ஸாவின் வயிற்றில் வளரும் குழந்தையைக் காண வாய்ப்பில்லாமல் மரணத்தை நெருங்குவது, அவன் பெற்ற வெற்றிகளை அவன் காதுபடவே வீரர்கள் கேலி பேசுவது, இலட்சியம் முழுமையாவதற்குள் எழமுடியாமல் வீழ்ந்து கிடப்பது போன்றவையெல்லாம் மாவீரன், பேரரசன் என்ற பிம்பத்தை உடைத்து அவன் கடவுள் அல்ல, எளிய சாதாரண மனிதனே என்பதை அவனுக்கு உணர்த்துகின்றன.

    நாவலில் இரண்டு இடங்களில் மகா அலெக்சாண்டர் அழுகிறான். அவனுடைய கோமாளித்தனங்களைக் கண்டு அவனுடைய படைவீரர்கள் கிழக்குநோக்கிப் போரிட வரமுடியாது என மறுக்கும் பொழுது ‘தான் தோற்றுவிடுவோமோ என்ற அச்சத்தினால்’ அழுகிறான். வரலாற்று ஆசிரியர்கள் தன்னை பாடாமல் போய்விடுவார்களோ என்று அச்சப்படுகிறான். மரணப்படுக்கையில் தந்தை பிலிப்பிடம் கனவுலகில் பேசும்பொழுது ‘அலெக்ஸ் நீ அம்மானின் மகனல்ல. மனிதனாகிய தன் மகன் என்பதால் நீயும் இறப்பாய் என்று பிலிப் கூறும்பொழுது ‘போரில் வென்ற மக்களைக் கட்டுப்படுத்தவே தான கடவுளாக’ நடித்ததாகவும்,  புரியாமல் தன் வீரர்கள் தன்னை பைத்தியம் என்று கேலி பேசியதாகவும்’ கூறி அழுகிறான். நண்பன் ஹெபாஸ்டின் குடிப்பழக்கத்தினால் இறந்துவிட, அவன் ஆத்மா சாந்தியடைய ஒரு பழங்குடி இனம்தையே பலியிடுகிறான். அப்பாவி மக்களை கொன்று குவித்தற்காக ஏற்பட்ட மன உறுத்தலைப் போக்க மிதமிஞ்சி குடிக்கிறான்.

     

    நிகழ்கால – இலங்கை அலெக்ஸ்

    இலங்கை அலெக்ஸ் தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் ஏற்பட்ட போரின் விளைவுகளில் அகதியாகி நாடுநாடாக அலைகிறான். கலைஞனான சர்வதேச குற்றவாளி கார்லோஸின் உதவியினால் பணம் சம்பாதிப்பதற்காக கிரேக்கம் வருகிறான். கிளியோபாட்ரா போல ஒரு பழைய மம்மியை மாற்றி விற்பனை செய்து பெரும் பணம் ஈட்டி நிம்மதியான வாழ்வை அமைத்துக் கொள்வதே அவனுடைய நோக்கம். ஓவியக் கலைஞனான அவன் சர்வதேச குற்றவாளியான கார்லோஸிடம் பழகுகிறான். இதையறியாத சிங்கள ராணுவம் அவனை வேவு பார்க்க ரனிலை அனுப்புகிறது. அகதியான அலெக்ஸ் படும் சிரமங்களுக்கு சற்றும் குறைந்ததில்லை ரனில் படும் துன்பங்கள். ஒரு நாட்டின் எதிரிகளாகக் கருதும் மக்களை மட்டுமல்லாமல் தன் சொந்த நாட்டு மக்களையும் போர் துன்புறுத்துவதை எம்.ஜி.சுரேஷ் இப்பாத்திரம் வழி பதிவு செய்கிறார். கிரேக்க நாட்டில் இலங்கை அலெக்ஸ் சந்திக்கும் ருக்ஸானா குர்திஸ்தான் தீவிரவாதி என்று தன்னை வெளிப்படையாகவே அறிவித்துக் கொள்கிறாள். இலங்கைத் தமிழர்களைப் போலவே குர்திஸ்தான் மக்களும் தம் உரிமைக்காகப் போராடி வருவதை வெளிப்படுத்தும் அவள் சர்வதேச அரசியலை அறிந்து வைத்திருக்கிறாள். வரலாற்றுப் பேராசிரியை என்ற பெயரில் சர்வதேச குற்றவாளி கார்லோஸைச் சந்தித்து உதவி கேட்கிறாள். உலகெங்கும் நிகழ்த்தப்படும் போர் வன்முறைகளினால் கலைஞர்களும் பெண்களும் அகதிகளாகவும் தீவிரவாதிகளாகவும் மாறி வாழ்க்கையைத் தொலைத்திருப்பதை சற்று அழுத்தமாகவே எம்.ஜி.சுரேஷ் கூறுகிறார்.

    2300ம்  ஆண்டில் உலகின் நிலை

    தீவிரவாதி ருக்ஸானாவுடன் இணைந்து 2300ம்  ஆண்டிற்குச் செல்லும் அலெக்சாண்டர் அங்கு கடலுக்கடியில் குப்பைகளாக ஒதுக்கப்பட்ட ஐம்பது வயதிற்கு மேற்பட்ட மனிதர்களைச் சந்திக்கிறான். தொடர்ந்த போரினால் விளைநிலங்கள் பாழாகி விவசாயம் குறைந்து, உணவு பஞ்சத்தினால் ஐம்பது வயதிற்குமேல் வாழும் மனிதர்கள் குப்பைகளைப்போல கடலுக்கடியில் வாழிடம் அமைத்து ஒதுக்கப்பட்ட நிலையை அறிகிறான். வெள்ளைக்காரர்களும், நீக்ரோக்களும் முழுமையும் அழிந்த அந்த எஞ்சிய உலகினை மக்கள் தொகை மிகுதி உடையவை என்பதினால் சீனாவும் இந்தியாவம் ஆள்கின்றன. இந்த நிலைமை ஏற்படக் காரணமான மூன்றாம் உலகப்போரை எந்த நாடும் தொடங்கவில்லை. எல்லா நாடுகளும் அணு ஆயுதங்களைக் குவித்தல், தற்செயலாக ஒரு நாட்டில் வெடித்த குண்டை, எதிரிதான் போட்டு விட்டான் எனக்கருதி அனைத்து நாடுகளும் தன் பலத்தைக் காட்ட யுத்தத்தைத் துவங்கியதே காரணம் என்கிறார். இப்படி நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பதை ஒரு எச்சரிக்கையாக முன்வைக்கிறார்.

    இன்டியானாபோலிஸ்

    இலங்கை அலெக்சாண்டர் செல்லும் எதிர்காலம் ‘இன்டியானாபோலிஸ்’ இன்னும் நாகரிகம் மிகுந்ததாக இருக்கிறது. குளோனிங் மனிதர்கள் குரங்குகளைப் பேசவைக்கும் கருவிகள், பறக்கும் கார்கள் வந்துவிட்டன. இது பல போர்களுக்குப் பின் எஞ்சிய பகுதி. இதை ஆளும் சேர்மன் அலெக்ஸாண்டர் இந்திய, பாகிஸ்தான் உள்ளிட்ட மக்கள் தொகையில் எஞ்சிய மக்களை சர்வாதிகாரியாகி ஆள்கிறான். குளோனிங் மனிதர்கள் சாதாரண மனிதர்களாகிய அதீத மனிதர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்கிறார்கள். இதற்குக்காரணம் குளோனிங் பெண்களைக் கடத்திச் செல்ல அதீத மனிதர்களுக்கு உரிமை உண்டு. ஆனால் அதீத மனிதர்களின் பெண்களைக் குளோனிங் மனிதர்கள் நினைத்துப் பார்க்க உரிமையில்லை. பேசும் மனிதக் குரங்குகள் குளோனிங் பெண்களைக் காதலிக்கின்றன. குளோனிங் பெண்களும் மனிதக் குரங்களை ஏற்றுக் கொள்கின்றனர். குளோனிங் மனிதர்கள் உதிரி பாகங்களுக்காகவே உருவாக்கப்படுவதால் அவர்கள் அதீத மனிதர்களுக்கெதிராக போரிடுகின்றனர். கிளர்ச்சி செய்யும் குளோனிங் மனிதர்களை எப்போதும் அதீத மனிதர்கள் அழிக்கக் காத்திருக்கிறார்கள். எனவே நகரமெங்கும் பதுங்கு குழிகள். மறுபுறம் சேர்மன் அலெக்சாண்டரை உபமனிதர்களாகிய மனிதக்குரங்குகளும் எதிர்க்கின்றன. இந்த எதிர்காலத்தில் உபமனிதர்களாகிய மனிதக்குரங்குகள் அதீத மனிதர்களுக்கும், குளோனிங் மனிதர்களுக்கு எதிராக யுத்தத்தைப் புரிகின்றன. பேசவும், ஆயுதங்களைக் கையாளவும் சிந்திக்கவும் தெரிந்த இந்த உபமனிதர்கள் ஓருலகக் கூட்டாட்சி நடத்தும் அலெக்ஸாண்டரை பாதுகாப்புகளை மீறி கொல்ல முயல்கின்றன. பொட்டல் வெளிகளாக எஞ்சியிருக்கும் உலகை மனிதர்கள் மட்டுமின்றி அவர்கள் தொழில்நுட்பத்தில் உருவான குளோனிங் மனிதர்களும், உபமனிதர்களும் அழிப்பார்கள் என்று எதிர்காலத்தைக் கணித்துள்ளார் எம்.ஜி.சுரேஷ்.

    ருக்ஸானா செல்லும் எதிர்காலம்

           கம்யூன் போன்ற கூட்டுச் சமுதாய வாழ்வை மேற்கொள்ளும் உலகில் எஞ்சிய மக்களின் உலகம். இங்கு ஆண்பெண் பேதமில்லை. தனிமனிதனின் வெற்றி தோல்விகள் கொண்டாடப்படுவதில்லை. எங்கும் சமத்துவம் வேண்டும் என்பதற்காக, அதீத அறிவுத்திறன் கொண்டவர்கள் குழந்தைகளாக இருக்கும்பொழுதே தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அதீத அழகு கொண்ட பெண்களின் நிலையும் இதுவே. இவர்களின் ஆற்றல் மட்டுப்படும் வகையில் பயிற்சி கொடுக்கப்படுகிறார்கள். போக்குவரத்து, தொழில் நுட்பம் போன்றவற்றில் அறிவியலின் தாக்கம் மிகுந்து வாழ்க்கை எல்லோருக்கும் எல்லாம் என வளமாகவே இருக்கிறது. ஆனால் குடும்பம் என்ற அமைப்பு தகர்க்கப்பட்டு, மனிதப் பிணைப்புகள் அற்றுப்போய், வசதிகள் மட்டுமே கிடைக்கும் சூழலை வெறுக்கும் மக்கள் பெருகிப் போகிறார்கள். எந்தவித குறிக்கோளுமற்ற, உந்துதலுமில்லாத வாழ்க்கையை வெறுக்கும் மக்கள் கூட்டங்கூட்டமாகத் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

    மாற்றுப் பார்வை

    சர்வதேசத் தீவிரவாதியான கார்லோஸை கருணைமிக்கவனாக, பாதிக்கப்படும் மக்களின் வாழ்விற்கு நலம் சேர்ப்பவனாகக் காட்டுகிறார். அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்குமான அணுபரிமாற்றத்தில் குர்திஸ்தான் போன்ற எளிய நாடுகள் பாதிக்கப்படுமென்று அணு ஆயுதங்களைக் கடத்திக் கடலுக்குள் ஒளித்து வைக்கிறான்.

    இலங்கை அலெக்ஸின் வாழ்விற்கு உதவுவதுபோல், அவனை ஒற்றரிய வந்துள்ள ரனிலுக்கும் உதவுகிறான். தன் கூட்டாளிகள் மனம் திருந்தி வாழ விரும்பும்பொழுது, பொருளாதார ரீதியாக அவர்களுக்கு உதவ முன் வருகிறான். குர்திஸ்தான் மக்களின் நியாயமானப் போராட்டத்திற்கு மறைமுகமாக பல உதவிகள் செய்கிறான். இந்நாவல் ஆளும் அதிகாரவர்க்கத்தைச் சேர்ந்த மன்னர்களின் முகத்தைத் துகிலிரிக்கிறது. அவர்களின் போர் வெறியினால் உலகம் சீரழிந்துவிட்டதோடு, கோடிக்கணக்கான மக்கள் தங்கள் அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்து நிற்பதைப் பதிவு செய்கிறது. மக்களைக் காக்க வேண்டிய ஆட்சியாளர்களும், மன்னர்களும் புகழ்போதையினால் மக்களைக் கொன்று குவித்து அவர்களின் பிணங்களின் மீது வெற்றிக் கொடி நட்டுக் கொண்டிருக்க, அவர்களை எதிர்க்கும் மக்கள் நலனுக்காகப் பாடுபடும் ஒருவனோ தீவிரவாதி என்ற பெயரில் சர்வதேச குற்றவாளியாகி தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறான். எனவேதான் எம்.ஜி.சுரேஷ் மார்க்ஸியமும் ஜனநாயகமும் படுதோல்வி அடைந்துவிட்டதாகத் தெரிவிக்கிறார்.

    புகழ், பணம், போர், வெற்றி இவையெல்லாம் மன்னர்களை மட்டுமல்ல விஞ்ஞானிகளையும் விட்டுவைப்பதில்லை என்பதை ஐன்ஸ்டீன் மூலம் வெளிப்படுத்துகிறார். வாழ்வின் கடைசி காலத்தில் மகாஅலெக்சாண்டரைப் போலவே ஐன்ஸ்டீனும் மீண்டும் வாழநேர்ந்தால் யாரோ ஒரு முகம் தெரியாத மனிதனாக சாதாரண குடியானவனாக  யாராலும் அறியப்படாத மனிதனாகவே வாழ விரும்புவதாகத் தெரிவித்து தான் வாழ்வைத் தொலைத்து விட்டதாகப் புலம்பியதைப் பதிவு செய்கிறார்.

    இயல்பாக வாழத் தெரியாததாலேயே குர்திஸ்தான், ஈரான், பாலஸ்தீனம், இலங்கை போன்ற நாடுகள் போர் வெறிகொண்டு மக்களை துன்புறுத்தி வருவதையும் தற்காலத்தில் நாட்டில் நடக்கும் மத, இன, நிற, சாதிச் சண்டைகளுக்கு அதுவே பெரிதும் காரணமாக இருப்பதையும் சுட்டிச் செல்கிறார்.

    சின்ன நாடுகளில் போரைத் தூண்டிவிட்டு பெரிய நாடுகள் தங்களின் ஆயுத விற்பனையைச் சிறப்பாகச் செய்து வருகின்றன. ‘சிறிய நாடுகளிலுள்ள மக்கள், தீராத யுத்தத்தில் கண்ணி வெடியில் சிக்கி மாமிசம் சிதறினால்தான், பெரிய நாடுகளிலுள்ள மக்களின் மேஜைகளில் அந்த மாமிசத்தைப் பரிமாற முடியும். அதனால் தான் இந்த யுத்தங்களை யாரும் தடுத்து நிறுத்துவதில்லை’ (ப. 5) என்ற யதார்த்த குரூரத்தை வெளிப்படுத்துகிறார். போரின் காரணமாக ஏற்பட்ட நில அழிப்பும், நிலையற்ற ஆட்சியும், அணுஆயுதப் பெருக்கமும் ஒட்டுமொத்த பூமியையும் அழித்துவிடும் என்ற எச்சரிக்கை விடுக்கும் வகையில் நாவலில் போர் பற்றிய பதிவுகள் அழுத்தமாப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    கதையின் முடிவில் உண்மையிலே அழிந்துவிட்ட பூமியில், வசிக்க முடியாத எஞ்சிய பத்தாயிரம் மக்கள் மட்டும், ஒரு செயற்கை உலகை உருவாக்கி வாழ்வதையும், அங்கு மிகச்சிறிய உயிர்கள்கூட பெரிதும் காக்கப்படுவது பற்றியும் எடுத்துரைத்து தற்கால மக்களிடம் ‘இருப்பது ஒரு பூமி’ என்ற மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    பன்முகத்தன்மை

    எந்த ஒரு அமைப்பும் பன்முகத்தன்மை கொண்டதாக இருக்கின்றது. அதன் பொருண்மைத்தளங்கள் பலவாக விரிந்து செல்கின்றன. எதையும் மையப்படுத்துவதென்பது முழுமையானதாகாது. எல்லாவற்றையும் அதனதன் கோணத்திலிருந்து அவற்றின் சிக்கல்களையும், உண்மைத்தன்மையையும் ஆராயும் பார்வை தேவையானது என்ற அடித்தளத்தில் பின்நவீனத்துவம் இயங்குகிறது. இந்த அடிப்படையில் எம்.ஜி.சுரேஷ் இரண்டு நாவல்களிலும் பன்முகத்தன்மை கொண்ட பல நிகழ்ச்சிகளையும், பல பாத்திரங்களையும் படைத்துள்ளார்.

    பின்நவீனத்துவம் என்ற சொல்லிற்கு ஏற்ப அறிவு சார்ந்த பல்வேறு சிந்தனைப் போக்குகளின் தொகுப்பாக இரு நாவல்களும் விளங்குகின்றன. அலெக்சாண்டரின் வரலாறு, பாலஸ்தீன, குர்திஸ்தான், ஈரான் வரலாறு, சர்வதேச தீவிரவாதிகள், தீவிரவாதம், எதிர்கால நிலை, ஐன்ஸ்டீனின் பிற்கால வாழ்க்கை, எகிப்து பிரமிடுகளைப் பற்றிய நுணுக்கமான பிற்கால வாழ்க்கை, எகிப்து பிரமிடுகளைப் பற்றிய நுணுக்கமான செய்திகள், குஃபு பிரமிடின் அதிசயம் முதலான செய்திகளை அலெக்சாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும் நாவல் வழி விவரிக்கின்றார். போர்ச்சூழலினால் எளிய மக்களும், பூமியின் வளங்களும் பாதிக்கப்படுவது, அரிஸ்டாட்டில், டயோனிஜனஸ் முதலிய ஞானிகளின் எதிர்பார்ப்பு, உண்மையில் நடந்து கொண்டிருப்பவை என நாவலில் பல செய்திகள் பன்முகக் கோணத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

    சிலந்தி நாவலிலும் இதே பன்முகத்தன்மை உள்ளது. ஏழு நாளில் ஏழு கொலைகள் நடப்பதற்குக் காரணமாகக் கருதப்படும் ஆறு மனநிலை பிறழ்ந்தவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங்கள், அச்சம்பவங்கள் நடப்பதற்குக் காரணமான சமூக சூழல், நடப்பியலில் கல்வி, அரசியல், திரைப்படம், மொழி, உளவியல் போன்றவை செலுத்தும் ஆதிக்கங்கள் இந்நாவலின் இயங்கு தளங்களாக உள்ளன.

    படைப்பாக்கத்திற்கான சுதந்திரமானப் போக்கை இவ்விரு நாவல்களிலும் காணமுடிகிறது. முறைப்படுத்தப்பட்ட அமைப்பில் கதை நகராமல் பாத்திரங்களின் மனநிலைக்கேற்ப பல யதார்த்தமான திருப்பங்களுடன் கதை இயல்பாக நகர்கின்றது. பல இடங்களில் வாசகனைத் திறந்த விவாதத்திற்கு அழைக்கும் வகையில் உலக நடப்புகளையும், எதிர்கால உலகத்தையும் எடுத்துக்கூறி முடிவை வாசகனிடமே விட்டுவிடுகிறார்.

    கட்டுடைத்தல்

    பிரமிடுகளைக் காவல் காக்கும் ஸ்பிங்ஸ் மூலமாக பல உண்மைகளைக் கட்டுடைக்கிறார். உண்மையில் காலம் என்ற ஒன்று இல்லை. எல்லாம் பாவனைதான். எல்லாக் காலங்களிலும் எல்லா மனிதனும் ஒரே மனிதனாகவே இருக்கிறான். இயல்பான வாழ்வை வாழாமல் அசாதாரண வெற்றிக்காக அலையும் மனிதர்கள் இறுதியில் தோற்றுப் போகிறார்கள். சமநிலை இழந்து உளவியல் சிக்கலுக்கு ஆளாகிறார்கள். சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். எப்போதும் பாதிக்கப்படும் பாண்டவர்களும் அவர்களை ஏமாற்றும் கௌரவர்களும் நிறைந்ததாகவே உலகம் காணப்படுவதற்குக் காரணம் இயல்பாகவே இயற்கையாக வாழ விரும்பாத மனிதனின் மனநிலையே காரணம். அசாதாரண வெற்றிக்காக எல்லோருமே உந்தப்படுகிறோம். ஆனால் இயல்பான வாழ்வின் ஆனந்தத்தை அறியாமலே மடிகிறோம். இந்த அசாதாரண வெற்றியை நோக்கிய பயணத்தில் குடூரமான கடந்த காலத்தையம், அபத்தமான நிகழ்காலத்தையும், வைத்துக் கொண்டு வாழ்ந்துவரும் மனித இனத்தின் எதிர்காலம் மேலும் மோசமானதாகவே இருக்கும் என்கிறார்.

    நிகழ்கால இலங்கை அலெக்சாண்டர் வழி 3 வகை கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் மூன்று வகையான எதிர்காலத்திற்கும் அழைத்துச் சென்று,இன்றைய மனிதன் இனி எப்படி வாழ்வது என்பது குறித்து விழிப்புணர்வு பெற வேண்டுமென்று கூறுகிறார். இந்நிலை இப்படியே நீடித்தால் எதிர்காலங்கள் எப்படி இனி இருக்கும் என்பதையும் பதிவுசெய்கிறார்.

    போரும் மனித வாழ்வும்

    இன்றைய நவீன உலகத்தில் எங்கேனும் ஓரிடத்திலாவது அணுகுண்டு வெடிப்பு நிகழ்வதை பல ஊடகங்கள் வெளிப்படுத்தி வருகின்றன. ஆளும் வர்க்கத்தின் போர் என்ற பெயரில் மனிதர்களைக் கூட்டம் கூட்டமாக அழித்து வருகின்றனர். மக்களின் வாழிடங்களையும் வளமான நிலங்களையும் பாழ்படுத்தி வருகின்றனர்.

    போரினால் குந்திஸ்தான், பாலஸ்தீன, இலங்கை இனமக்கள் அகதிகளாக மாறி தம் விடுதலைக்காகப் போராடி வருகின்றனர். துருக்கி, ஈரான், ஈராக் மூன்று நாடுகளும் போரடித்தால் குண்டுபோடும் இடமாக எங்கள் நிலம் பயன்படுத்தப்படுகிறது என்கிறார் ருக்ஸானா. இன சுத்திகரிப்பு என்ற பெயரில் குர்திஸ்தான் இனமக்கள், பாலஸ்தீன மக்கள், இலங்கைத் தமிழர்கள் கொன்றொழிக்கப்படுவது சர்வ சாதாரணமாக நிகழ்ந்து வருகிறது. பெரிய நாடுகள் ஆயுதங்களை விற்க சிறிய நாடுகளைத் தூண்டிவிட்டுப் போரை ஏற்படுத்துவதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் அழிந்ததோடு, எஞ்சியுள்ளவர்கள் சொந்தநாடு இல்லாமல் அகதிகளாக மாறிவருகின்றனர். உலகைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டுமென்று நினைப்பவர்கள் நிகழ்த்தும் போர் வன்முறைகளினால் எதிர்காலத்தில் மனித இனமும், பூமியும் அழிந்துவிடும் அபாயம் இருப்பதை அலெக்சாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும் நாவலில் சுட்டுகின்றார். போரின் விளைவுகளை ஆறுவகையான காலங்களுக்கு கதையை நகர்த்திச் சென்று காட்டும் புதிய உத்தியை கையாண்டுள்ளார். ‘இன்றைய மனிதகுலம் தடைகளை உடைத்துக் கொண்டு இகாரஸ் போல பறக்கக் கற்றுகொண்டுவிட்டது. அதே சமயம் மிகத் தொலைவிற்குப் போய் தனக்கெதிராகவே தன் அழிவிற்கு வழி வகுத்துவிட்டது என்ற ஸ்பிங்ஸின் கூற்று ஆறு காலங்களுக்கும் பொருந்துமாறு கதையை அமைத்துள்ள விதம் பாராட்டுக்குரியது.

    ஒரு இனத்தை மிகுதிப்படுத்தும் போக்கு உலக பேரழிவிற்கே வழிவகுக்கும் என்பதால் அது தேவையற்றது என்கிறார். இயல்பாக இருப்பதே ஆனந்த வாழ்வின் அடித்தளமென்பதை ஞானி டயோனிஜஸ் வழி உணர்த்துகிறார்.

    தீராதயுத்தமும் ஏராளமான பெயர்தலும் ஒரு இனத்தின் நாகரிகத்தை அழித்துவிடும் எனப்தை எதிர்கால அலெக்ஸாண்டர்களின் வாழ்க்கைகள் மூலம் வெளிப்படுத்துகிறார். இலங்கை அலெக்ஸாண்டர் மகாஅலெக்சாண்டரை சந்திக்கும்போது, ‘இப்படி எல்லாக் காலங்களுக்கும் போய் வருகிற வாய்ப்பு இருபப்தை அறியும்போது அனைத்து உலகங்களையும் ஜெயிக்க வேண்டுமென்று உந்துதல் ஏற்படுவதாக’ கூறுகிறான். இந்த, மோசமான உந்துதல்தான் மனித குலத்துக்கு எதிராக திரும்பியிருப்பதாக, யாரோ ஒருவனின் உந்துதலுக்காக ஒட்டு மொத்த உலகமே பாதிக்கப்படுவது எவ்வகையில் நியாயம் (ப. 378) என்று வினவுகிறார்.

    ஓருலகக் கூட்டாட்சி, உலகமயமாக்கல் போன்றவை உலகை அழிவின் பாதைக்கே இட்டுச் செல்லும் என்பதால் அது தேவையற்றது. அந்தந்த வட்டாரத்திற்குரிய தனித்தன்மைகளே அழகானவை அர்த்தமுள்ளவை என்பதே எம்.ஜி.சுரேஷின் கருத்தாகும்.

    எதிர்காலவியல்

    எதிர்காலத்தில் நிலங்கள் கந்தகப் பூமியாகி, உணவு உற்பத்தி குறைந்து கடும்பஞ்சம் ஏற்படும் என்கிறார். எனவே ஐம்பது வயதானவர்களை அரசே கொன்றுவிடும் என எச்சரிக்கிறார். எல்லா நாடுகளுமே அணு ஆயுதங்களை மணல் பரப்புகளில் குவித்து வைத்துள்ளன. இவற்றில் ஏதாவதொன்று தற்செயலாக வெடித்தால் கூட உலகப்போர் மூண்டுவிடும் வாய்ப்புள்ளதைத் தெரிவிக்கிறார். தொடரும் போர்களினால் உலகில் மக்கள் தெகை பெருக்கத்தினால் இந்தியாவும், சீனாவிம் மட்டுமே உலகில் வாழ நேரிடும். தேசம், இனம், மொழி, சாதி, சமயம் முதலான தனித்த அடையாளங்கள் அழிந்துவிடும். இனக்கலப்பு ஏராளமாக ஏற்படும். உலகப்பரப்பில் உள்ள அனைத்து மொழிகளும் கலந்த ஒரு பொதுமொழி இருக்கும். இவ்வேறுபாடுகள் அழிந்து போவதால் மனிதனுக்கு எந்த அடையாளத்தையும் குறிக்கும் பெயர்களும் இருக்கப் போவதில்லை. அதிர்ஷ்டம், நம்பிக்கை, வாய்ப்பு என்றோ எண்களோ மட்டும்தான் மக்களுக்குப் பெயர்களாக இருக்கலாம். அறிவியல் வளர்ச்சியினால்புதுமையான நவீன கருவிகள், வாகனங்கள், ரேபோக்களின் பெருக்கம், தானியங்களி வாகனங்கள், குளோனிங் மனிதர்கள், மருத்துவ தொழில் நுட்பத்தால் சிந்திக்கும் பேசும் குரங்குகள், பூமியின் எரிபொருள் வளங்கள் அழிந்து விட்டதால், காற்றாலும், சூரிய ஒளியாலும் இயங்கும் வாகனங்கள் என அறிவியல் தொழில்நுட்பம் பெருகிப் போகும் என்கிறார். தொழில் நுட்பம் எவ்வளவு மேம்படுகிறதோ அந்த அளவிற்கு மனிதர்கள் பிரிந்து வாழ்வார்கள் என்பதையும் பதிவு செய்கிறார். கலை இலக்கியங்கள் போன்சாய்போல் சுருங்கி, இருத்தலியல் சிக்கல் மிகுதியாகிவிடும் என்கிறார்.

    ஓருலகக் கூட்டாட்சி

    ஓருலக அரசு வந்தாலும் அறிவியல் தொழில் நுட்ப மேம்பாட்டினால், புதிய ஆயுதங்களைக் கொண்டு புதிய கலவரங்களும் போர்களும் ஏற்பட வாய்ப்புண்டு. குளோனிங் மனிதர்கள், தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்பட்ட மனிதக் குரங்குகள் போன்றவை மனிதனுக்கு எதிராகப் போர் புரியலாம். இதனால் தொடரும் நில அழிப்புகளாலும், இன அழிப்புகளாலும் மேலும் நிலைமை மோசமடைந்திருக்கும். இறுதியில் எஞ்சிய மக்கள் ஒரே குடும்பமாக வாழநேரிடுவர். ‘எல்லோருக்கும் எல்லாமும்’ என்ற நிலை வரும். ஆனால் சமத்துவம் என்ற ஒன்றிற்காக மக்களில் புத்திசாலிகளையும், அழகிகளையும், திறமைசாலிகளையும் ஒடுக்கி வைப்பார்கள். இதனால் பலர் தற்கொலை செய்து கொள்வார்கள். இதனால் தொடரும் புரட்சிகளில் எஞ்சிய பூமியும் அழிந்து இறுதியில் செயற்கைக்கோளில் மனிதர்கள் தொங்கிக் கொண்டு வளமான கிரகத்தைத் தேடியலைந்து கொண்டிருப்பார்கள் என்கிறார்.

    பெண்களின் நிலை

    மகாஅலெக்சாண்டர்களின் காலத்தில் வாழ்ந்த பெண்கள் மத, இன, சமயங்களாலும், போர்களாலும் பல்வேறு கொடுமைக்கு ஆளாகின்றனர். தொடர்ந்த போர்களினால் அரசி அடிமையாகிறாள். மகாஅலெக்சாண்டரின் மனைவி ருக்ஸானா, தன்னுடைய பாரசீக நாட்டையும், தன் தந்தையையும் அ ழித்த மகா அலெக்சாண்டரை மணந்துகொள்கிறாள். அவனுடைய வாரிசையே சுமக்கிறாள். அவனை மறுக்கும் நிலையில் அவள் இல்லை. அவனுடைய கொடூரங்களைக் கண்டு மிரண்டாலும், அவனை எதிர்க்கும் வலிமையின்றித் தன் நாட்டு மக்களுக்காக அவனுடன் மகிழ்ச்சியுடன் வாழ்வதுபோல நடிக்கிறாள்.

    அரசியின் நிலையே இவ்வாறெனில் மற்ற பெண்களின் நிலை எப்படியிருக்கும் என்பதை நம் ஊகத்திற்கு விட்டுவிடுகிறார். போர்களின்போது பல இனப் பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள், கொன்று புதைக்கப்படுகிறார்கள். மகா அலெக்சாண்டர் பல பெண்களை மணந்தாலும் எவருடன் வாழ்வதே இல்லை. இறக்கும் தருவாயில் அவர்களுக்குத்தான் இழைத்த கொடுமையை நினைத்து வருந்துகிறான்.

    இலங்கை அலெக்சுடன் வாழும் ருக்ஸானா படித்த வரலாற்றுப் பேராசிரியை. தன் குர்திஸ்தான் இன மக்களுக்காகப் போராடுகிறாள். சர்வதேச அரசியலை தெரிந்து வைத்திருக்கிறாள். தன்னைத் தீவிரவாதி என வெளிப்படையாகவே கூறிக் கொள்கிறாள். ஈரான், குர்திஸ்தான் போன்ற நாடுகளில் பெண்கள் உடைமைகளாகக் கருதப்படுவதையும், பர்தா பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட ஆணாதிக்க அரசியல் என்றும் சிந்திக்கிறாள். ஆனால் தன் இனமக்களின் வாழ்வாதாரத்துக்கே வழிதேடி அலையும் நிலையில் இருக்கிறாள்.

    எதிர்காலப் பெண்கள் ஆண்களுக்குச் சமமாக உரிமை பெற்றவர்களாக இருக்கிறார்கள். உடையிலும் உடைமையிலும் சேதமில்லை. அலெக்சாண்டர் செல்லும் எதிர்காலத்தில் அவன் மனைவி அவன் வீட்டிற்கு வரத் தாமதித்தால் திருமண ஒப்பந்தத்தை முறித்துவிடுவதாகக் கூறுகிறாள். எதிர்கால கூட்டுக்குடும்ப முறையில் ஆணும் பெண்ணும் பெரும்பாலும் தனித்தே வாழ்கிறார்கள். ஆண், பெண், குழந்தைகள் எல்லோருக்கும் சமத்துவமும் சுதந்திரமும் சாத்தியமாகியிருக்கின்றன. கட்டுப்பாடுகள் எதுவுமே கிடையாது. பெண்கள் சமைப்பதே கிடையாது. எல்லோருக்கும் பொதுவாக உணவு விடுதிகள் இருக்கின்றன. அங்கே சமையல் செய்ய விருப்பமுள்ளவர்கள் அந்த வேலைகளைச் செய்யலாம். வீடுகள் என்பவை ஓய்வெடுக்கவும் தூங்குவதற்கும் மட்டுமே தேவைப்படுகின்றன. திருமணங்கள் கட்டாயமில்லை. அதுபோலவே திருமணம் முடிந்தபின் சேர்ந்து வாழ வேண்டுமென்ற கட்டாயமுமில்லை. அதைப்போல சுய இன்பத்திற்கான கருவிகள் வந்துவிட்டதால் ஆணுக்குப் பெண்ணோ, பெண்ணுக்கு ஆணோ தேவையில்லை.மாதவிடாய் காலங்கள் கூட கவனத்தில் கொள்வதில்லை. அதன்மீதான கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்ந்து திருமண நாள் கூட அந்நாளில் நடத்தப்படும் என்பதால் படிப்படியாக எதிர்காலத்தில் பெண் முழு சமத்துவத்தைப் பெற்றுவிடுவாள் என்கிறார்..

    சிலந்தி

    சிலந்தி நாவலில் உளவியல் சிக்கலுக்கு ஆளாகும் நபர்களைப் பற்றியும், அவர்கள் இன்னின்ன காரணங்களினால் உளவியல் சிக்கலுக்கு ஆளாகிறார்கள் என்பதையும் எம்.ஜி.சுரேஷ் வெளிப்படுத்துகிறார்.

    காதல்

    சாதி, மதம், சமயம், பொருளாதாரம் எனப் பல பிரிவுகளை உடைய இச்சமூகத்தில் பல காரணங்களினால் காதல் பலபேருக்கு நிறைவேறுவதில்லை. இளவயதில் ஏற்படும் காதல் மனமுறிவு பலவித உளவியல் சிக்கலை உருவாக்குகிறது. அகத்தியலிங்கம் கலை இலக்கியங்களில் ஈடுபாடு இல்லாதவன். பெலீக்ஸ் என்ற பெண்ணின் மீது ஏற்படும் ஈர்ப்பால் அவளுக்காகக் கலை இலக்கியங்களைப் படிக்கிறான். எனினும் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்து விடுகிறார்கள். பெலீஸ் வேறொருவனை மணந்து கொண்டு தனக்கு துரோகம் செய்துவிட்டதாக நினைத்து மனப்பிறழ்வடைகிறான். மனநலக்காப்பகத்தின் காப்பாளனாகிய சலீம் இந்துவாக இருந்து ஜஹனராவிற்காக இசுலாமியனாக மாறியவன். ஆனால் ஜஹனரா அவனை விரும்புவதில்லை. எனினும் அவள் தந்தையிடம் தனக்கு மணமுடித்துத்தரும்படி கேட்கிறான். அவரோ அவனைத் தனியறையில் சங்கிலி போட்டு கட்டி வைத்து துன்புறுத்துகிறார். இதனால் மனப்பிறழ்வடைந்து ஜஹனராவையும் அவள் தந்தையையும் கொல்வதோடு பல கொலைகளுக்கும் காரணமாகிறான். நிறைவேறாத காதலால் அகத்தியலிங்கமும், சலீமும் மனப்பிறழ்வடைகிறார்கள். மகாஅலெக்ஸாண்டரும் அனிலீயா மீது கொண்ட காதல் நிறைவேறாததை மரணப் படுக்கையிலும் நினைத்து வேதனை அடைகிறான்.

    பொருளாதாரச் சூழல்

    பணம் சார்ந்த வாழ்க்கையில் இன்று காதல், வீரம், அன்பு, மனிதநேயம் போன்றவை புறந்தள்ளப்பட்டுவிட்டன. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் வறுமையும் மனிதனை பெரிதும் பாதிக்கின்றன. உலகநாதன் பொறுப்பற்ற தநதையால் குடும்பபாரத்தைச் சுமக்கவேண்டி கல்வியைப் பாதியில் கைவிடுகிறான். இவனை விட மோசமாகப் படிப்பவர்கள் பிற்காலத்தில் மேலதிகாரியாகி இவனை விரட்டி வேலை வாங்கும் பொழுது தாழ்வு மனப்பான்மை சிக்கலுக்கு ஆளாகிறான். அது ஒரு கட்டத்தில் உயர்வு மனப்பான்மையாகி கண்ணில் பார்ப்பதெல்லாம் தனக்குரியதெனக் கருதத் தொடங்குகிறான். எல்.ஐ.சி. கட்டிடம், தலைமைச் செயலகம் போன்றவை தன்னுடையது என அவற்றைக் கைப்பற்ற முயலும்போது மனப்பிறழ்வடைந்தவன் என மனநலக் காப்பகத்தில் சேர்க்கப்படுகிறான். மகா அலெக்சாண்டரும், சேர்மன் அலெக்சாண்டரும் கூட ஒரு வகையில் இவனைப் போல உடைமைப் பைத்தியங்களே.

    திரைப்படம்

    வெள்ளியங்கிரி திரைப்படப் பைத்தியம். அதன் விளைவாகத் திரைப்படத் துறையில் ஈடுபட்டு பல படங்களை எடுக்கிறான். பல உலகத்திரைப்படங்களைத் திருடி படம் எடுத்ததால் தன் படம் எது என்று கண்டுபிடிக்க முடியாத மனநிலைக்கு ஆளாகிறான். மேலும் இவன் ஆதரித்தவர்களும், இவன் மனைவியும் இவனுக்கு எதிராகத் திரும்ப அவர்களை கொல்ல முயலும்போது மனம்பிறழ்வடைந்தவன் என அறியப்படுகிறான்.

    மதம் – சோதிடம்

    சிலந்தி நாவலில் வரும் சத்திதாசன் ஆன்மீகவாதி .தாய் தந்தை இருவரையும் சிறுவயதில் பிரிந்து தாத்தா, பாட்டியிடம் வளர்கிறான். தாத்தாவின் ஆன்மீகக் கருத்துக்களினால் ஈர்க்கப்பட்டு, ஆன்மீகத் தேடலில் ஈடுபடுகிறான். பூமியின் மீதுள்ள சக்திகோடுகளை இணைப்பதால் இந்தியா வல்லரசாகும். அந்த வல்லரசை ஆளப்போவது தான் தான் என்று நம்புகிறான். சிறுவயதில் தாய் தந்தையின் அன்பு முழுமையாகக் கிடைக்காததால் பெண்களை வெறுக்கிறான். இந்து மதத்தின் மீது ஏற்பட்ட வெறியால் கிறித்துவ, இசுலாமியர்களைத் தாக்குகிறான். மதம் – சோதிடத்தின் மீதுள்ள வெறியால் மனப்பிறழ்வடைகிறான்.

    தமிழ்ப்பற்று – இனப்பற்று

    சிலந்தி நாவலில் வரும் இராஜாமணி தமிழ்ப் படித்தவன். ஆனால் தமிழ்ப் படித்தவர்களைத் தமிழ்ச் சமூகம் தாழ்வாகப் பார்ப்பதினால் ஏற்பட்ட மன உளைச்சலினால் அரசியல் மேடைகளில் தமிழ் முழக்கம் செய்கிறான். அரசியல் ஒதுக்கப்பட்ட பெருமாள், இராஜாமணியின் தமிழினால் கவரப்பட்டு நண்பர்களாகிறார்கள். பொருளாதார நிலையில் மேம்பட ‘மின்சார நாற்காலி’ திட்டத்தைத் தமிழர்களுக்கென்று ஆரம்பித்து அதனால் பலபேர் இறந்துவிட அதனால் இருவரும் மனப்பிறழ்வடைகிறார்கள்.

    முடிவுரை

    எம்.ஜி.சுரேஷின் நாவல்கள் வரலாற்றை அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை. மாறாக வரலாற்றைத் தர்க்கப்பூர்வமாக ஆராய்கிறது. பல கருத்துக்களை நிராகரிக்கிறது. அரசனோ, ஆண்டியோ மையப்படுத்தலை நிராகரித்து ஆண்டான் – அடிமை, அரசன் – அகதி, முதலாளி  தொழிலாளி என்ற இருமைகளையும் மறுக்கிறது. தொன்மங்களையும் விமர்சனத்திற்குள்ளாக்குகிறது. அனைத்திற்கும் இடமுள்ள ஒரு சமூகக்கட்டுமானம் மிக இயல்பான முறையில் தேவை என்கின்றது.

    மன்னர்கள் மையமாக போற்றப்படும்போது படைவீரர்கள் ஒடுக்கப்படுகிறார்கள். இதைத் தகர்த்து படைவீரர்கள் இல்லையேல் மன்னன் இல்லை என்ற உண்மையைப் புரியவைக்க முயல்கிறது. அனைத்து தரப்பினருக்கும் மையத்தைத் தருகிறது. எல்லாப் பாத்திரங்களுக்குமே சமமான பங்களிப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. தன்னேரில்லாத் தலைவன் அல்லது ஒரு பாத்திரத்தை மையமாகக் கொண்ட கதையாக இல்லாமல் அனைத்தும் பரவலாக்கப்பட்டுள்ளது.

    மனநல காப்பகத்தில் அடைக்கப்பட்டவர்கள் மட்டுமே மனநோயாளிகள் அல்ல. பணம், புகழ், அறிவியல், போர், திரைப்படம், ஆன்மீகம் முதலானவற்றின் மீது வெறிகொண்டு அலையும் மனிதர்களும் மனநோயாளிகள்தான் என்பதையே எம்.ஜி.சுரேஷின் இரு நாவல்களும் முன்னிறுத்துகின்றன. வரையறை என்பதையே மறுக்கும் பின்நவீனத்துவப் பாணியில் பல வடிவச் சோதனைகளை மேற்கொண்டு கடந்த கால வரலாறுகளின் வழியான நிகழ்காலத்தையும், நிகழ்காலத்தின் வழி எதிர்காலத்தையும் பதிவு செய்து தற்போதைய மனிதன் மேற்கொள்ள வேண்டியவை எவை என்பது குறித்து சிந்திக்க வைக்கிறார். இவ்விரு நாவல்களும் தற்கால மக்கள் எதிர்காலத்தைக் குறித்து சிந்திக்க வேண்டிய கட்டாயத்திலிருப்பதை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளன.

    போர், வெற்றி, காதல், பொருளாதாரம், திரைப்படம், ஆசை, மதம், சோதிடம், தமிழ், இனப்பற்று போன்றவற்றில் வெறிகொள்ளும் மனிதர்கள் மனப்பிறழ்வடைகிறார்கள். தான் எங்கே தோற்றுவிடுவோமோ என்று மனிதர்கள் மனதில் ஏற்படும் அச்சமும் அதனால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மையுமே உயர்வு மனப்பான்மையாக வெளிப்படுகிறது. மகாஅலெக்சாண்டர் முதல் சிலந்தி நாவலில் வரும் பெருமாள் வரை அனைவரும் எதையோ அடைய நினைத்து வாழ்க்கையைத் தொலைத்தவர்கள். ஐன்ஸ்டீன் முதலான மேதைகள்கூட வாழ்க்கையைத் தொலைத்துவிட்டதாகக் கூறுவதிலிருந்து, வாழ்ந்து கொண்டிருக்கும் நிமிடங்கள் மட்டுமே உண்மையானது என உணர்ந்து வாழவேண்டும் என்பதே இருநாவல்களும் முன் வைக்கும் கருத்தியலாகும்.

    துணை நின்ற நூல்கள்

    சுரேஷ் எம்.ஜி. இஸங்கள் ஆயிரம்,மருதாவெளியீடு, சென்னை முதற்பதிப்பு 2005

    சுரேஷ் எம்.ஜி. அலெக்சாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும், அடையாளம்வெளியீடு, திருச்சி  முதற்பதிப்பு 2011

    சுரேஷ் எம்.ஜி சிலந்தி அடையாளம்வெளியீடு, திருச்சி.  முதற்பதிப்பு 2011

    பூமிச் செல்வம்.ஆ, பின்னை நவீனத்துவம்,அகரம், தஞ்சாவூர். முதற்பதிப்பு 2009 மங்கையர்க்கரசி.சிவ. இலக்கிய இயக்கங்கள் தமிழிலக்கியத்தின் சமூக வரலாறு, என்.சி.பி.எச்.சென்னை முதற்பதிப்பு 2004.

    Share
  • திருவாசகத்தில் வினைஉருபன்கள்

     முனைவர் ஜ.பிரேமலதா,

    தமிழ் இணைப் பேராசிரியர், 

    அரசு கலைக் கல்லூரி,

    சேலம் -636 007 

    திருவாசகத்தில் வினைஉருபன்கள்

           தமிழ் மொழிக்கண் தனிச்சிறப்பு வாய்ந்த நூல்களுள் ஒன்று திருவாசம்.ஒரு நூலின் சிறப்பிற்கு அதன் மொழிநடையும் காரணமாகும். ஒரு மொழியில் மக்களின் வாழ்வியல் முறை, செயல்பாடு,அனுபவ அறிவிற்கு ஏற்ப புதுப்  புதுச் சொற்கள் மொழியில் காலப்போக்கில் உருவாகி அல்லது கலக்கப்பெற்று வழக்கில் பயன்படுத்தப்படுகின்றன. இவை இலக்கியத்தில் இடம்பெறுவதற்கு நீண்ட காலம் ஆகின்றன.. சொற்கள் மட்டுமின்றி உருபுகளும் புதியதாக வழக்கில் அவ்வகையி்ல் பயன்படுத்தப்படுகின்றன.

    மொழியியலில் சொற்களின் அடிப்படையாகக் கூறப்படும் உருபன்கள் காலப்போக்கில் தமிழில் பெற்ற மாற்றங்களை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்

    இக்கட்டுரையில்,தொல்காப்பியத்தில் கூறப்படும் வினைஉருபன்களும் திருவாகத்தில் உள்ள வினைஉருபன்களும் ஆராயப்படுகின்றன.

    உருபன் 

    எல்லாச்சொல்லும் பொருள் குறித்தனவே‘ ..என்கிறார் தொல்காப்பியா். உருபன் என்பது ஒரு மொழியில் உள்ள பொருள் தரும் மிகச் சிறிய கூறாகும். இதனை ‘சொல்‘என்றும் குறிக்கலாம். பெயர் உருபன், வினை உருபன் என உருபன் இருவகைப்படும்.  வினை உருபன்கள் மட்டும் இங்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. வினை என்பது செயல் அல்லது தொழில் எனப்படும். வினை காலத்தைக் காட்டும். ஆனால் வேற்றுமை உருபுகளை ஏற்காது.(தொல்.683) வினை பால் காட்டும் விகுதிளைப் பெற்று வரும்.(படித்தான்) படி– வினை உருபன். ஆன் — ஆண்பால் விகுதி.

    பால் காட்டும் வினைவிகுதிகள்

    பால் காட்டும் வினைவிகுதிகள் எனப்படுபவை ஆண்பால்,

    பெண்பால்,பலர்பால், ஒன்றன்பால்,பலவின்பால்(அ,ஆ,வ)என்ற ஐம்பால்களிலும், தன்மை,முன்னிலை,படர்க்கை என்ற மூவிடங்களிலும் வரும்.

    தன்மை ஒருமை வினைமுற்று

    பேசுபவன் தன்னைப்பற்றிக் குறிப்பிடுவதே தன்மை எனப்படும். தொல்காப்பியா் கு,டு,து,று,என்,ஏன்,அல்(685)போன்றவை தன்மை ஒருமை விகுதிகள் என்று கூறுகிறார்.பழந்தமிழிலக்கியங்களான சங்க இலக்கியங்களில் கு, ,என், ஏன், அல், அன், ச(இசின்) தன்மை ஒருமை வினைமுற்றுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்கிறார் அகத்தியலிங்கம். (1983.36)

    திருவாகத்தில் வினைஉருபன்களாக,

    விரைகின்றேன்(5-11)    

    புரிந்திலன்(5-5)    

    வேண்டேன்(5-12)

    அகங்குழையேன்(5-14)

    புனைந்தேத்தேன்(5-14)

    அழைக்கின்றிலேன்(5-45)

    புரிந்திலன்(5-5)

    பரவுவனே(5-16)

    உரைப்பன்(1-20)

    வருத்துவன்(5-13)

    கண்டது(6-32)

    என்னை ஆண்டாய்க்கு(5-21)

    வினையினேற்கு(5-21)

    மறுத்தனன்(6-5)

    செய்து(6-32)

    அஞ்சல்(6-16) போன்றவை வருகின்றன.

    இவற்றில் ‘ஏன்‘ விகுதியே பெரிதும் பயின்று வருகிறது.இது மூன்று காலங்களிலும் பயின்று வருகிறது. ‘அன்‘விகுதி அடுத்த நிலையில் வருகிறது. நன்னூலார்  தொல்காப்பியர் குறிப்பிடாத ‘அன்‘ விகுதியோடு சேர்த்து மேலும் எட்டு விகுதிகளைக் குறிப்பிடுகிறார்.(………..) தொல்காப்பியர் தன்மை ஒருமையாகக் குறிப்பிடும் சின் விகுதியைப் பலர்பால் படர்க்கையில் மாணிக்கவாசகர் பயன்படுத்துகிறார்.

    தன்மை பன்மை வினைமுற்று

    பேசுபவன் பிறரை உள்ளடக்கிப் பேசுவதே தன்மை பன்மை என்கிறோம்.அம்,ஆம்,எம்,ஏம்,கும்,டும்,தும்,றும் (நூ.687)போன்றவை தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

    பாடினோம்(7-8)

    புத்தடியோம்(7-3)

    சாற்றிச்சொன்னோம்(36-1)

    சொல்லுவோம்(7-4)

    பாடும்(7-10)

    பாடுதும்(8-1)

    வழியடியோம்(20-9)

    போக்குகின்றோம்(20-9)

     மாணிக்கவாசகர் ஓம் டும் தும் போன்ற விகுதிகளைப் பயன்படுத்தியுள்ளார். தும் விகுதியை முன்னிலையிலும் படர்க்கையிலும் பயன்படுத்தியுள்ளார்.தொல்காப்பியர் குறிப்பிடாத ஓம் விகுதியை மாணிக்கவாசகர்பயன்படுத்தியிருப்பது பிற்கால வழக்கு ஆகும். நன்னூலார் ஓம் விகுதி (332)பற்றி குறிப்பிடுகிறார்.

    முன்னிலை ஒருமை வினைமுற்று

     

        முன்னிலை ஒருமை வினைமுற்றுகளாக தொல்காப்பியத்தில் இ,ஐ,ஆய்உருபுகள் குறிப்பிடப்படுகிறது(708).திருவாசகத்தில் ஆய் உருபே பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    விட்டிடுதி கண்டாய்(6-9)

    திறப்பாய்(7-7)ஆட்கொண்டாய்(5-25)

    உணராய்(4-209)

    இசைந்தனை(4-210)

    மேற்கூறப்பட்ட உதாரணங்களில் ஐ உருபு அருகியே வந்துள்ளது. சங்க இலக்கியத்திலோ ஐ உருபு தான் அதிகம்.(1983.98). தொல்காப்பியர் காலத்தில் மிகுதியாக பயன்படுத்தப்பட்ட ஐ உருபு பிற்காலத்தில் அருகி போய் உள்ளது.

    முன்னிலைப் பன்மை வினைமுற்று

     

       முன்னிலைப் பன்மை வினைமுற்றுகளாக இர்,ஈர்,மின் விகுதிகளை தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.

    பாடுமின்(9-11) ஆடுமின்(9-11)நேரிழையீர்(7-2)  கண்டீர்(36-1)நெஞ்சங்கொண்டீர்(36-2)

    திருவாசகத்தில் மின், ஈர் மிகுதியாகப் பணன்படுத்தப்பட்டுயள்ளது.பழந்தமிழில் இர் ஈர் விகுதியே மிகுதியாகப் பய்படுத்தப்படடிருப்பதாக அகத்தியலிங்கம் (1983-220)கூறுகிறார்.மின் ஏவல் பன்மை வினைமுற்றாகவே திருவாசகத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

    படர்க்கை ஆண்பால் வினைமுற்று

     

         தொல்காப்பியர் அன்,ஆன் விகுதிகளைக் குறிப்பிட திருவாசகத்தில் இவற்றோடு ஓன் விகுதியும் குறிப்பிடப்படுகிறது.

    ஏற்றினன் (3-175) நாட்டான்(1-90) தாழ்சடையோன்(10-14)

    செய்தோன் (3-120)நன்னூலார் ஓன் விகுதி பற்றி குறிப்பிடுவதில்லை.  .

    படர்க்கை பெண்பால் வினைமுற்று

     

    தொல்காப்பியர் அள்,ஆள் விகுதிகளைக் குறிப்பிட திருவாசகமும் இவற்றையே குறிப்பிடுகிறது.இடந்தாள்(7-1) மடவாள்(5-17)மங்கையாள்

    (42-1)வந்தனையாள்(7-15)

     

    படர்க்கை பலர்பால் வினைமுற்று

     

    தொல்காப்பியர்அர்,ஆர், ப, மார் (691,692)எனக் குறிப்பிடப்படும் விகுதிகளோடு திருவாசகத்தில் ஓர் வகுதியும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    கற்றிலாதவர்(35-1) விரவார்(7-4) ஒழிந்தார்(20-3) வந்தோர்(5-85) கூடுவார்(5-55) சார்ந்தவர்(36-1) எதி்ர்ந்தவர்(35-3) மியா, இக, மோ,மதி,ஈகும்,சின் இம்மூன்றம் முன்னிலை அசைச்சொல் ஆகும் சின் படர்க்கையிடத்தும் வரும் என்பது தொல்காப்பியர் கூற்று.(759)

     

       படர்க்கை ஒன்றன் பால் வினைமுற்று

     

            கு,டு,று என்று தொல்காப்பியம் குறிப்பிடும் விகுதிகளில் து திருவாசகத்தில் உள்ளது.

    அத்தி உரித்தது(13-18)

    தாயுற்று(10-9)

     

    படர்க்கை பலவின்பால் வினைமுற்று

     

    அஆவ(492)என்ற தொல்காப்பியர் குறிப்பிடும் விகுதிகளே திருவாசகத்திலும் காணமுடிகிறது.

     ஆர்ப்ப(7-12) 

    இயம்பின(20-3)

    இசைத்தன(3-82)

    செப்புவ(19-1)

    செல்லா(1-29)

    கழலிணைகள் (5-17)

    கள் விகுதிபெற்று திருவாகத்தில் படர்க்கை வினைமுற்றுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அகர உருபு பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளது.‘ வ‘உருபு வருவதில்லை. நன்னூலிலும் ‘வ‘ உருபு பற்றி குறிப்பு இல்லை.

    காலம் காட்டும் உருபன்கள்

    வினைச்சொற்கள் காலம் காட்டும் தன்மையுடையன. காலங்களை மூன்றாக வகைப்படுத்தி விகுதிகளையும் இலக்கணிகள் வரையறுத்துள்ளனர்.

    கிடந்தாள்(7-1)

    உரித்தது(13-19)

    விக்கினேன்(24-9)

    ஆசைப்பட்டேன்(25-3)

    எண்ணிலேன்(26-5)

    பெரும்பாலும் -ந்த்-,த்த்,ன்ற் இடைநிலைகள் பயின்ற வருகின்றன. நிகழ்காலத்தில் பெரம்பாலும் கின்று உருபு வருகிறது.கிற்,க் உருபையும் கையாள்கிறார்.

    விரைகின்றேன்(5-14)

    ஆசைப்படுகின்றேன்(26-5)

    வாழ்கின்றாய்(5-20)

    கொள்ளுகில்லேன்(5-46) போன்றவற்றில் கிற் உருபு உள்ளது.

    தூகேன்,மெழுகேன்(5-14)  -க்-உருபு    

    எதிர்கால்த்தில் ப்,வ் உருபன்களைக் கையாள்கிறார்.

    சாவேன்(5-18)

    திறப்பாய் (7-7)

    பெறுவான் (25-1)

    பாடும் (7-10)

    புகுவிப்பாய் (1-43)

    பரவுவார் (26-4)

    கரப்பாய் (27-10)

    காண்பான் (24-4)

    ஏவல் வினை உருபன்கள்

    பாடுமின்      – மின் (9-11)

    பாடும்        – உம் (7-10)

    வளருதியோ  – ஓ  (7-1)

    நல்குதியே    – இயே (7-9)

    கேளீர்        – ஈர் (7-20)

    போக்காதே   – ஏ (7-4)

    மின.,ஈர்,உம்,ஊ,ஏ,இயே முதலான ஏவல் வினை உருபன்களைக் கையாள்கிறார்.

    வியங்கோள் வினைமுற்று

    சேரற்க (7-19)

    காணற்க(7-19)

    அருளுக(7-20)

    வாழ்க(1-1)

    வெல்க(1-6)

    காண்க(3-30)

    உன உடன்பாடு எதிர்மறை,ஏவல்,வேண்டல்,வாழ்த்தல் பொருள்களில்

    வியங்கோள் வினைஉருபுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    வினையெச்ச உருபன்கள்

    வினையெச்சங்களாக திருவாசகத்தில் என்புருக,இறைஞ்சு, பருக, வந்து,நின்று,கருத,செய்ய, உய்ய, மாய, கிடந்து,சலியா முதலானவை பயின்று வருகின்றன.

    முடிவுரை

    சங்க காலத்தில் மிகுதியாக வழங்கிவந்த ஐ இர் ஈர் விகுதிகளின் பயன்பாடு திருவாசகத்தில் அருகி ஓம் ஓன் ஓர் விகுதிகள் தோன்றி பயன்படுத்தப்பட்டுள்ளன. சின் என்னும் முன்னிலை அசைச்சொல்லை மாணிக்கவாசகர் படர்க்கையில் பயன்படுத்துகிறார்.காலத்திற்கேற்ப வினை உருபளன்களில் சி அருகியும் சில தோன்றியும் வந்துள்ளமையை திருவாசகப்பாடல்கள் உணர்த்தி நிற்கின்றன.

    துண நின்ற நூல்கள்

    1.அகத்தியலிங்கம்,சங்கத்தமிழ், அனைத்திந்தியத் தமிழ் மொழியியற் கழகம்,அண்யாமலை நகர்,1983.

    2.வரதராஜன்.ஜி,.திருவாசகம்-விரிவுரை,பழனியப்பா பிரதர்ஸ்,சென்னை-14. 1971.

     

    Share
  • புத்தரும் பெரியாரும்

     முனைவர். ஜ.பிரேமலதா,

    தமிழ்  இணைப் பேராசிரியர்,

    அரசு கலைக் கல்லூரி,

     சேலம் -636 007

    முன்னுரை

    இன்றிலிருந்து 2500 ஆண்டுகளுக்கு முன்னர்வாழ்ந்திருந்த சித்தார்த்தர்என்கிற கௌதம புத்தருடைய கருத்துக்களும் 20ம் நூற்றாண்டில் பிறந்த ஈ.வெ.இராமசாமி என்கிற பெரியாருடைய கருத்துக்களும் பெரிதும் ஒத்துப் போகின்றன.

    புத்தரும் பெரியாரும் மனிதநேயம், அன்பு, சுய சிந்தனை, நேர்மை,  பற்றின்மை, சமூக அக்கறை, பெண்ணுரிமை, சமயம், மதக்கருத்து போன்ற பல கருத்துக்களில் ஒன்றுபடுகிறார்கள். இருவரும் சிறந்த அரசியல் முற்போக்காளர்களாகக் கருதத்தக்கவர்கள். மனிதனை மனிதனாகப் பார்க்கக் கற்றுக் கொடுத்தவர்கள். போலித்தனமற்றவர்களாக வாழ்ந்தவர்கள்;. எடுத்த முடிவில் இறுதிவரை உறுதியாக நின்றவர்கள். சுய சிந்தனையாளர்கள். அவ்வகையில் இக்கட்டுரை இருவருடைய கொள்கைகளிலுள்ள ஒற்றுமைகளை ஆராய்கிறது.

    வாழ்க்கை ஒற்றுமையடிப்படையில் பார்க்கும் பொழுது, தனக்குரிய அரச பதவியையும் போகத்தையும் துறந்து  பத்தொன்பதாவது வயதில் சித்தார்த்தர்புத்தராகிறார். பெரியாரும் தன்னுடைய செல்வச் செழிப்பான குடும்பத்திலிருந்து விலகி 25ம் வயதில் துறவறம் மேற்கொள்கின்றார்.

     திருமணத்திற்குப் பிறகு இருவரும் துறவறத்தைத் தேர்ந்தெடுப்பதில் ஒன்றுபடுகின்றனர். எனினும் அவர்களின் மனைவிமார்கள் இதற்குக் காரணமில்லை. சுஜாதையும் நாகம்மையும் உயர்வானவர்களே. இருவரும் கணவனுடைய கருத்திற்கு ஒத்துப் போகிறார்கள். பிற்காலத்தில் கணவருடைய பாதையைப் பின்பற்றுகிறார்கள்.  புத்தரும் பெரியாரும்  துணிவுடன் செயல்படுதலில் தாங்களே வழிகாட்டியாக உள்ளனர். செல்வத்தில் பற்றின்மை என்பதில் இருவரும் ஒத்துப் போகின்றனர். தம்மைச் சுற்றியுள்ளவற்றை நேரடியாகக் கண்டு அவற்றின் தன்மைகளைப் புரிந்துகொண்டு வினையாற்றுவதே இருவரின்; அணுகுமுறையாக இருந்துள்ளது. சிக்கல்கள் யதார்த்தமானவை, நம் கண்முன் நிகழ்பவை. அவற்றுக்கு அசாதாரணமான வழிகளில் தீர்வு கண்டுவிடமுடியாது என்று  நினைத்தனர்.  இருவரும் வாழ்நாள் முழுவதும் தம் கருத்துக்களை மக்களுக்குப் போதித்து வந்துள்ளனர். கிட்டத்தட்ட 80 ஆண்டுகள் வரையிலும் வாழ்ந்துள்ளனர். இருவரும் மனித வாழ்க்கை மற்றும் உலக நடப்புகள் பற்றி பல ஐயங்கள் கொண்டனர். உலக துன்பங்களிலிருந்து மனிதகுலம் விடுபட வேண்டும் என்பதில் உண்;மையான அக்கறை கொண்டிருந்தனர். இருவருடைய உள்ளத்திலும் உயிர்களிடத்தில் அளவற்ற பரிவிருந்தது. மனிதரின் இயல்பு உன்னதம் பெற வேண்டும். மனித வாழ்க்கை சுதந்திரம் பெறவேண்டும் என்று விரும்பினர். ஆழ்ந்த சிந்தனையாளர்களாக விளங்கியுள்ளனர்.

    ஞானம் பெற்ற பின்னர் சமுதாயச் சீர்திருத்தமே முதலில் செய்யவேண்டியது என  புத்தர்நினைத்திருக்கிறார். எனவேதான், தான் ஞானம் பெற்ற நிலையில் தனக்கான சீடர்களை உருவாக்கி அவர்களிடம் போதனைகளைப் பரப்பினார். அதன் பின்னரே சங்கம் அமைத்தார். அதை ஒரு இயக்கமாக மாற்றினார்.  புத்தர் எந்தவொரு மதத்தையும் நிறுவவவில்லை. என்னிடம் வாருங்கள், நான் உங்களை மீட்கிறேன் என்று சொல்லவில்லை. ஒரு புத்தரால்கூட வழியை மட்டுமே காட்டமுடியும், நீங்கள்தான் உங்கள் பாதையைத் தேர்ந்தெடுத்துக ;கொள்ளவேண்டும் என்கிறார்(பி.எஸ்.ஆச்சார்யா. ப.96). ”பௌத்த சமயம் கொள்கைப் பிடிவாதம் கொண்டதில்லை. அதைப் பின்பற்றுவோர்களிடம் அது அதன் போதனைகளை விமர்சன நோக்குடன் பார்க்காமல் அப்படியே ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றும் அவர்கள் அதை எப்போதும் தங்கள் சொந்த அனுபவத்தின் துணையுடன் சோதித்துப் பார்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது. அதைப் பின்பற்றுவோரிடம் தொடக்கக் காலக் கட்டங்களில் சில அடிப்படையான போதனைகளை நம்பிக்கையின் பேரில் ஏற்றுக் கொள்ளுமாறும், ஆக்கபூர்வமான, திறந்த மன மனோபாவத்தைக் கைக்கொள்ளுமாறும் அது கேட்டுக்கொள்கிறது; என்றாலும்கூட அதன் அக்கறை கோட்பாடுகளை வழக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில் இருப்பதை விடப் புரிந்து கொள்வதை வளர்ப்பதில் இருப்பது அதிகமானது. பௌத்த சமயம் அதைப் பின்பற்றுவோர் மீது பாவ மன்னிப்பு சார்ந்த நிபந்தனைகளைச் சுமத்துவதில்லை.

    சிறுபான்மைக் குழுக்கள் தங்கள் தனிப்பட்ட பண்பாட்டு மரபுகளைப் பராமரிக்கும் சமூகச் சூழ்நிலையில் ஒரு பௌத்தனாக வாழ்வது எளிதாகிறது.”என்கிறார் தாமியென் கோவ்ன்.(பௌத்தம் ப.172-173 )

     புத்தரின் போதனைகளில் இரகசியம் என்று எதுவும் இல்லை. பூகட்டு என்று எதுவும் இல்லை.; சடங்குகள், சம்பிரதாயங்கள்  இல்லை. சமூகத்திலிருந்த மூட பழக்கவழக்கங்களை உற்று நோக்கிய பின்னரே அவற்றை அறிவு பூர்வமாக விமர்சிக்கிறார்.

    ஜென், யோகா, தவம் போன்றவற்றுக்கும் புத்தருக்கும் தொடர்பில்லை. பௌத்தம் என்பது ஒரு வறட்டுத் தத்துவப் பிரிவு மட்டுமே அல்ல. புத்தருக்கும் அதிசயங்களுக்கும் அற்புதங்களுக்கும் தொடர்பில்லை. மந்திர உச்சாடனங்களுக்கு பௌத்தத்தில் இடமில்லை.) இதே கருத்துடையராகவே பெரியார் சமூகத் தொண்டில் சமுதாயச் சீர்திருத்தமே முதலில் செய்யவேண்டுமெனத் திட்டமிட்டார். முதலில் சமூக விடுதலை அதாவது சமுதாயத்தைப் பிடித்துக் கிடக்கும் பிற்போக்குக் கொள்கைகள் குருட்டு நம்பிக்கைகள் கடவுளின் பெயராலும் மக்களிடையே நிலவி நிற்கும் குருட்டுத்தனமான எண்ணங்கள் ஆகியவற்றிலிருந்து மக்களை விடுவிக்க வேண்டும் என்று நினைத்துள்ளார்.

    தலைவிதி.முற்பிறப்பில் மோட்சம் நரகம் என்கிற பொய்மைகளை மக்கள் எண்ணத்திலிருந்து அவர்கள் முற்றிலுமாக விடுபட வேண்டும். .அத்தகைய விடுதலைகளுக்குப் பிறகே மக்களை எதையும் சிந்தித்துப் பார்த்து முடிவெடுக்கும் ஆற்றல் மிக்கா;களாக அறிவு நிரம்பியவர்களாக மாற்றிய பிறகே அரசியல் விடுதலை பொருளாதார விடுதலை என்றார்.

    முன்னது பெறா முன்னர் பின்னவை இரண்டும் அவ்வளவு எளிதில் கைகூடா. கைகூடினாலும்  அவற்றின் உண்மையான பயனை மக்கள் துய்க்க முடியாது என்ற முடிவுடன் காங்கிரசு இயக்கத்திலிருந்து விலகிச் சமுதாயத் தொண்டு செய்வதே தம் பணி எனப் பெரியார் தம்மை மாற்றியமைத்துக் கொண்டார் என்கிறார்பண்ணன்(ப.45);.

    பெரியாரும் புத்தரைப் போலவே முதலில் தம் கருத்துக்களை மக்களிடம் பரப்பினார். அவருடைய எழுத்தும் பேச்சும் மக்கள் இலக்கியங்கள் ஆயின. குறிப்பாகப் பேச்சு நடை மக்கள் மொழியிலேயே அமைந்தது. மக்களிடம் அரசியலையும் சமயத்தையும் வாழ்;க்கையையும் விளக்கிப் பேசியவர் . தம்முடைய கருத்துக்களின் உள்ளடக்கத்திற்கு சுயமரியாதை இயக்கம்பகுத்தறிவு வாதம் என்றெல்லாம் பெயர் தந்தார். தம் சிந்தனைகளை இயக்கமாக நடத்தினார். பெரியார் எந்தவொரு மதத்தையும் நிறுவவவில்லை. தான் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமெனக் கூறவில்லை.

    பகுத்தறிந்து எதையும் கேள்விகள் கேட்டு தெளிவான பின்னரே கடைப்பிடிக்கும்படி கூறினார். தொடக்கக் காலத்தில்; ஈ.வே.ராமசாமி பெரியார் தமிழ்ச் சமூகத்தைக் கூர்ந்து நோக்கும் ஆராய்ச்சியாளராகவம் இழிநிலையில் இருக்கும் மக்களுக்காகப் போராடும் தலைவராகவும் போராளியாகவும் விளங்குகின்றார். குறிப்பாக, அவர் செய்த சமூகத் தொண்டில் சாதி மத ஏற்றத் தாழ்வுகளை அகற்றுவது முக்கியப் பணியாக இருந்தது. கடவுள் மறுப்பு மத எதிர்ப்புப் போன்றவை கூடவே தொடாந்துள்ளன. சாதி மனப்பான்மை, சாதிக் கொடுமைகள் ஆகியவற்றிற்கு மூலம் யார் அல்லது எது? என்று உணர்ந்து பெரியார்அந்த அடிப்படைகளை எதிர்த்து அதில் ஏற்பட்டுள்ள குற்றங்களை எடுத்துக்கூறியும் பேசியள்ளார்.

    இந்தியாவிலும் தமிழகத்திலும் சாதி வேறுபாடுகள் உருவானதற்குக் காரணமாய் இருக்கும் சமூக அமைப்பகளையும் பெரியார்கண்டித்துப் பேசுகிறார் சாதி, சமயம், கொள்கை போன்றவற்றாலும் சுயநலத்தாலும் பிரிந்து கிடக்கிற தமிழர்களிடையே தோன்றுகிற அறிஞாகளாலும், சமய, சாதி இலக்கியங்களாலும்; சமயவாதிகளாலும் பயன் ஏற்பட முடியாது என்பது பொpயாhpன் கருத்தாக இருந்தது. எனவே உருவாகிற அறிவியல் சமூக நன்மைகள் மக்களுக்குப் பயன்பட வேண்டுமெனில் சாதி, சமய மனப்பான்மை போன்ற பண்புகள் நீங்கிட வேண்டும் என்பதை வலியறுத்தும் வகையில் பெரியார்பேசியுள்ளார். மனிதர்களைப் பொதுவில் வைத்து எண்ணுகின்ற இப்போக்கை புத்தத்திலும் பார்க்கமுடிகிறது.

    மனிதர்களைப் பற்றி ஆராய்கின்ற நிலையையே புத்தத்தில் பார்க்க முடியும். மனிதத்தைத் தாண்டி அது சிந்திக்கவில்லை.புத்த மதம் நடப்பு இயல்புகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. கருத்து முதல்வாதத் தன்மை அதில் இல்லை. அனைவருக்கும் சுதந்தரம், சமத்துவம்,வாய்மை மற்றும் நீதியை உயர்த்திப் பிடிக்கிறது. மனித நேயம், அன்பு, சமாதானம் ஆகியவற்றை வலியுறுத்துகிறது.

    பவுத்தத்தில் சாமி இல்லை; சடங்கு இல்லை; சாதி இல்லை; மாயம் இல்லை; மந்திரம் இல்லை; பூஜை இல்லை; பிரார்த்தனை இல்லை; எல்லாவற்றுக்கும் மேலாய் தனி உடைமைச் சுரண்டல் இல்லை; இவைகளில் எதுவொன்று இருப்பதும் பவுத்தம் இல்லை. மாறாக, பவுத்தத்தில் அன்பு உண்டு, அறிவு உண்டு, சமத்துவம் உண்டு, சமதர்மம் உண்டு, ஒழுக்கம் உண்டு, இரக்கம் உண்டு, வீரம் உண்டு, விவேகம் உண்டு, இவைகளில்  எதுவொன்று இல்லாததும் பவுத்தம் இல்லை. இக்கருத்துக்கள் அனைத்தும் பெரியாரியத்திற்கும் பொருந்தும். பவுத்தம் என்பது ஆராய்ந்து புத்திக்குச் சரி என்றுபட்டால் மாத்திரம் ஏற்பது. உதாரணம், புத்தர் கூறியது: எனக்கும் கடவுள் என்பதற்கும் எவ்வித சம்மந்தமுமில்லை.

    நான் சாதாரண மனிதன். நான் சொல்பவை என் அறிவுக்கு, ஆராய்ச்சிக்கு எட்டியவைகளேயாகும். அவற்றை நீங்கள் ஆராய்ந்து பார்த்து உங்களுக்குச் சரியென்று பட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்; சரியில்லை என்று தோன்றினால் அதை விட்டு விடுங்கள் என்பதாகும். இன்னமும் விளக்கமாக, நான் கூறுகிறேன் என்பதற்காக நம்பி விடாதே. எதையும் உன் புத்தியைக் கொண்டு ஆராய வேண்டும். இல்லையேல், நீ பகுத்தறிவு கொண்ட மானிடன் அல்லன் என்றும் கூறி இருக்கிறார். (பி;.எஸ்.ஆச்சார்யா. 56) எனவே, எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்பது பவுத்தம் எனலாம். பேளத்தத்தைப் பற்றிக் கூறுமிடத்து, ”எதுவானாலும் அறிவைக் கொண்டு ஆராய்ந்து பயமில்லாமல் தர்க்க ரீதியாக விவாதிக்க வேண்டும். அவன்தான் பௌத்தன். அதுதான் பவுத்தம்.” என்கிறார் பெரியாரும். (பௌத்தநெறி ப.13)

    அதுபோலவே, பெரியாரும்   சமயம் மதம் தொடர்பான கருத்துக்களில் இவ்வாறே கூறுகிறார். மதம் பற்றிக் கூறும்போழுது தம் கருத்தைக் கட்டாயமாக்காமல் மக்களுடைய சிந்தனைக்கே விடுகிறார். தம்முடைய கருத்தில் உண்மை இருப்பதை ஒத்துக்கொண்டால் பின்பற்றும்படியம் அன்றேல் விலகி விடும்படியம் கூறுகிறார். அவருடைய கடுமையான விமாpசனங்களினூடே இத்தகைய ஆழ்ந்த பக்குவமும் காணப்படுகிறது. நான் சொல்வது, உங்கள் அறிவு ஆராய்ச்சி பக்;தி, அனுபவம் இவைகளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளிவிடுங்கள்; ஒத்துவந்தால் காhpயத்தில் கொஞ்சமாவது செய்ய முற்படுங்கள். உங்கள் சகோதரா;களுக்கும் இதைச் சொல்லி அவா;களையும் ஈடேற்றுங்கள். என்றுதான் நான் சொல்லுகிறேன். இப்படிச் சொல்வதனால் எனக்கு இதில் ஒரு சுயநலப் பலனும் இல்லை என்பதையும் அறியுங்கள்(தொ.3 ப.1352) என்கிறார்.;  கடவுளின் பெயரால் அமைக்;கபட்டுள்ள அனைத்து மதங்களையும் இருவரும் மறுக்கின்றனா;. மனித சமூகத்திற்கு அவை தீங்கிழைப்பதாகக் கூறுகின்றனா;. மக்கள் வேதனைப்படுகிறார்கள்; என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது; அந்தக் காரணத்தைக் கண்டறியமுடியும்; அகற்றமுடியும் என்று உணர்தல். வேதனையைக் கண்டு ஒதுங்காமல், ஓடாமல், ஒளியாமல் இருத்தல். வேதனை குறித்த வியாக்கியானங்களோடு நின்றுவிடாமல் துணிவுடன் போராடுதல். இவையே ஒரு பகுத்தறிவுவாதியின் செயலகளாகும்;. புத்தர் இதைத்தான் செய்தார்.

    எண்ணற்ற யுகங்களுக்குப் பிறகு இதுவே எனது கடைசிப்பிறவி. தேவர்களிலும், மனிதர்களிலும் நான் ரொம்பவும் அருமையானவன். முதிக்கத்தக்கவன். இந்த தேவர்களையும், மனிதர்களையும் பயனடையச் செய்வேன். புலனுணர்வு கொண்ட அனைத்து உயிர்களையும் அழிவில் இருந்து காப்பாற்றுவேன் என்று புத்தர்கூறுகிறார். (பி.எஸ். ஆச்சார்யா, ப.11) இவை புத்தருடைய வாழ்க்கை காட்டும் பாதை. பெரியாரும் இந்த உலகம் சீர் கெட்டிருக்கிறது. இதைச் சீர் செய்ய யாரும் முன் வரவில்லை. நான் முன் வந்தேன் என்கிறார். இருவருடைய தத்துவமும் இயங்கியல் தன்மை கொண்டது. அறிவியல்பூர்வமானது. அனைத்தையும் தழுவிச் செல்வது. அறிவுக்கும் தர்க்கவியலுக்கும் பொருந்தக்கூடியது. அறவொழுக்கம் சார்ந்தது. மனித நேயம் மிக்கது.

    பிறவி குறித்த கருத்தாக்கத்தில் பார்க்கும் பொழுது, புத்த மதம் பிறவிக் கோட்பாட்டை ஏற்பதில்லை.மாறாக, இங்கு இந்தப் பிறவியிலேயே அடையக்கூடிய வாழ்க்கை அனுபவத்தைப் பற்றி கூறுகிறது. பெரியாரும் பிறவிக் கோட்பாட்டை எதிர்க்கிறார். அது மக்களை சிந்திக்கவிடாமல் செய்யும் ஒரு கோட்பாடு என்பது அவருடைய எண்ணம். உங்கள் இலட்சியங்களை அடைய முயலுங்கள்; மற்றொரு பிறவிக்கு என்று அயோக்கியர்களின் வார்த்தைகளை நம்பி எதிர்பார்த்துக்கொண்டு வீணாய் ஏமாந்து போகாதீர்கள்.

    முன்பிறவி சங்கதி ஏதாவது ஒன்று, உங்கள் சாPரத்திலிருந்து உதிர்ந்த ஒரு மயிர்த்துண்டாவது உஙகளுக்கு இந்தப் பிறப்பில் ஞாபகமிருந்தால் அல்லவா இந்தப் பிறவியின் காரியஙகளை அடுத்த பிறவியில் அனுபவிக்க முடியப்போகின்றது? அன்றியும் கடவள் உங்களை இப்படிச் செய்துவிட்டார் என்று முட்டாள்தனமாய்க் கருதி உங்கள் துன்பத்தைநிலை நிறுத்தாதீ ர் கள். உணர்ச்சியும் அறிவம் அற்ற சோம்பேறிகளுக்குத்தான் கடவள்செயல் பொருத்தமாக இருக்கும்(தொ.3.ப.1402) என்பது பெரியாரின் சிந்தனையாக அமைகிறது

    பெண்கள் நிலை –  பெண்கள் நிலையிலிருந்து பார்க்கும் பொழுது,பெண்களுக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்டதற்குக் காரணம், அவர்கள் அறிவற்றவர்கள் என்ற மதக் கருத்துதான். பெண்ணிற்குக் கல்வியில்லை என ஒதுக்கி வைத்து, அறிவு இல்லாத காரணத்தால் அசுத்தமானவள் என்று பரப்புரை செய்யப்பட்டு, பிரம்மத்தை அடைவதற்கான ஒரு பாதையான துறவறத்தை ஏற்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தாள்.

    துறவற வாழ்க்கையில் பெண்களை அனுமதித்ததன் மூலம் புத்தர், அறிவு பெறுவதற்கான வாய்ப்பைப் பெண்களுக்கு நல்குகிறார். பெரியார்காலத்திலும் பெண்கல்வி மறுப்பு தொடர்ந்திருக்கிறது. எனவே பெரியார்பெண்களின் கல்வி உhpமை குறித்தும் மகளிர்க்குச் சொத்துரிமை குறித்தும் பேசியுள்ளார். கல்வி அறிவில் விருப்பம் கொள்ளுங்கள். வீரத் தாய்மார்களாக ஆகவிருப்பப்படுங்கள்! நீங்கள் மாறினால் உங்கள் கணவன்மார்களும் மற்ற ஆண்களும் மாற்றம் அடைவது வெகு சுலபம். ஆண்கள் உங்களைத்தான் பிற்போக்காளிகள் என்று உங்கள் மீது பழி சுமத்தி வருகிறார்கள். அப்படிச் சொல்லுக்கு ஆளாகாதீர்கள். எதிர்காலத்தில் -இவள் இன்னாருடைய மனைவி என்று அழைக்கப்படமாட்டாது இவா; இன்னாருடைய புருஷா; என்ற அழைக்கப்படவேண்டும். அந்த நிலைக்கு உங்களைக் கொண்டுவர அனுதினமும் பாடுபட்டுவரும் திராவிடர் கழகத்தை நீங்கள் அனைவரும் ஆதரித்து வரவேண்டும் (தொ.1 ப.177) என்கிறார் பெரியார்.

    துறவற நிலை – துறவற நிலையிலும் ஒன்றுபடுகின்றனர். ;.புத்தர்துறவு பூண்டாலும், துறவறம் பூண்டு உடலை வருத்திக்கொள்வது வேதனையைத் தரும், தேவையற்றது, பலனளிக்காதது என்கிறார் உபநிஷத்தையும் மோட்ச நம்பிக்கைகளையும் புத்தர் புறம் தள்ளினார். அந்த வகையில், புத்தர் ஒரு யதார்த்தவாதியாகவும் பகுத்தறிவுவாதியாகவும் திகழ்ந்தார்.

    தன்னால் நேரடியாகக் கண்டு, கேட்டு, உணர முடிந்த விஷயங்களுக்கு மட்டுமே அவர் எதிர்வினை புரிந்தார். பிரபஞ்சப் பொருள்களின் தோற்றம் குறித்த தத்துவார்த்த ஆய்வுகளையும் இறப்புக்குப் பிறகான காலகட்டம் குறித்தும் கவலைப்படுவது தேவையற்றது என்றார் புத்தர். தந்தையிடம் கோபித்துச் சில காலம் துறவியாக வாழ்ந்தமையால ;செல்வத்தில் திளைத்துச் சிறிதும் பசிப் பிணி அறிந்திராத பெரியார் காசியில் எச்சிலைக்கு ஏங்கி நின்ற நிலையில் துறவறத்தை துறந்தார். உலக துயரங்களைத் தீர்க்காத இது போன்ற துறவறத்தால்; பயனற்றது என உணர்ந்து இல்லறத்திற்குத் திரும்பினார். தன்னுடைய மனைவி நாகம்மையையும் பகுத்தறிவுப் பாதையில் நடத்தி சமுதாய விடுதலைப் பேராட்டத்தில் ஈடுபடுத்தினார்.  மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும், கடவுளின் பெயராலும் மக்கள் அனுபவித்து வரும் பல்லாயிரக்கணக்கான துயரத்தை இருவரும் கண்டு அதற்கான தீர்வுகளைக் கூறிச் சென்றுள்ளனர். மனிதர்கள் தங்களின் துன்பத்திற்கான காரணத்தை ஆராய்ந்து அதைத் தீர்க்க தாங்களே முன் வரவேண்டும் என்று இருவரும் கூறுகின்றனர். தனது உடலில் பாய்ந்திருக்கும் அம்பு எங்கிருந்து வந்தது என்றோ அதை யார் செய்தது என்றோ ஆராய்ந்து கொண்டிருப்பது மடத்தனம். உடனே அதனைப் பிடுங்கி எறிய வேண்டியதுதான் புத்திசாலித்தனம் என்றார் புத்தர்.

     தீண்டத்தகாதாரைத் தங்கள் இழிவிற்கு எதிராகப் போராட வேண்டும் என்கிறார். பெரியாரும், உண்மையான விடுதலைஉங்களுக்கு வேண்டுமானால் உங்கள் இழிவிற்கும் அடிமைத்தனத்துக்கும் அஸ்திவாரமான ஆதாரத்தை அழிக்க நீங்கள் தைரியம் கொள்ள வேண்டும் என்கிறார் (தொ.1ஃ ப.71). பிறருக்காக உழைப்பது, இருக்க வீடும், உண்ண உணவும், உடுத்த உடையும், கல்வியறிவும் இல்லாமல் வாழ்கிறவர்களை அவர்களின உழைப்பைச் சுரண்டி பயன்படுத்திவிட்டுக் கீழ்ச்சாதியென்று சமூகம் கூறுவதாக பெரியார்கூறுகிறார். (தொ.1ப.72).

    முடிவுரை –  புத்தம் என்ற நோக்கில் ஆராயும் பொழுதும் ,அறிவுபூர்வச் சிந்தனைக்கு முழுப்பெயர் பவுத்தம். நேர்மையான வாழ்வுக்கு வழிகாட்டும் நெறிக்குப் பெயர் பவுத்தம். சமத்துவத்திற்கு வழிநடத்தும் தத்துவத்திற்குப் பெயர் பவுத்தம் என்று கூறலாம்.; மேற்கூறிய கூற்று மூன்றும் பெரியாரியத்திற்கும் பொருந்துகிறது என்பதை இக்கட்டுரை தெளிவுபடு;த்தியுள்ளது.

    பார்வை நூல்கள்

    1. ஆச்சார்யா. .பி.எஸ்.,கௌதமபுத்தரின் வாழ்வும்வாக்கும்,நர்மதா வெளியீடு,பாண்டிபசார்சென்னை-17. மு.ப.2015
    2. ஆனைமுத்து வே.,பெரியார்ஈ.வெ.ரா.சிந்தனைகள்(3ம்தொகுதி),சிந்தனையாளர்கழகம்,திருச்சி. மு.ப.1974
    3. தாமியென் கோவ்ன், தமிழில் சி.மணி. பௌத்தம்,அடையாளம் வெளியீடு,பௌத்தநாதம். ஆண்டு 2005
    4. பெரியார் தந்தை, பௌத்த நெறி, திராவிடர் கழக வெளியீடு, சென்னை- 7 ஆண்டு 1957(15.5.57ஆம் தேதி மாலை சென்னை, எழும்பூர் மகாபோதி சங்கத்தில் நடந்த 2501ஆம் ஆண்டுப் புத்தர் விழாவின்போது தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய தலைமைப் பேருரை)

    5.பண்ணன், சிந்தனையாளர்; பெரியார். திருமலைப்பதிப்பகம், சென்னை, ப.55மு.பதிப்பு 1988

    1. மயிலை சீனி. வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும், கழக வெளியீடு,சென்னை. ஆண்டு 1964
    Share
  • தாய்மொழிக்கல்வி

     முனைவர். ஜ.பிரேமலதா,

    தமிழ் இணைப்பேராசிரியர்,

    அரசுகலைக்கல்லூரி,

    சேலம் -636 007 .

    சமூக மரபுரிமை எனப்படுவது நம்முடைய முன்னோர்கள் உருவாக்கித் தந்துள்ள பண்பாட்டில் காணப்படும் பல்வேறு கூறுகளாகும். இலக்கியம், நுண்கலைகள், தொழில்நுட்பஅறிவு, சமயக் கோட்பாடுகள், பழக்கவழக்கங்கள், வாழ்க்கைக் குறிக்கோள்கள் போன்ற யாவும் சமூக மரபுரிமைப்புக்குள் அடங்குவனவாகும். எனவேதான், ‘தமிழை இகழ்ந்தவனைத் தாயே தடுப்பினும் விடேன்’ என்று முழங்கினார் பாரதிதாசன்.

    இச்சமூக மரபுரிமையே குழந்தைகளுக்குள் உள்ளடங்கிய பல்வேறு ஆற்றல்கள் வெளிப்பட வாய்ப்பளிக்கிறது. எனவே, சமூகச் சூழலுக்கு ஏற்றவாறு தமிழ்மொழிப்பாடம் கற்பிக்கப்படவேண்டும். தாய் மொழி வழிக்கல்வியில் பல புதுமைகள் கொண்டுவந்து, தற்காலத் தொழில் நுட்பத்திற்கேற்ப கற்கவும், கற்பிக்கவும் செய்ய வேண்டும். கணினி வழி கற்பித்தலை தமிழ் மொழிக்கும் பாலர் பருவத்திலிருந்தே செயல்படுத்தினால் கற்றலிலும் உயர்வு தோன்றும்.

    உலகின் தொன்மை மொழிகள் பலவும் தாய்மொழிவழிக் கல்வியையே கொடுத்து வந்துள்ளன. பின்னர் அவை வழக்கொழிந்து பிறமொழித் தாக்கத்தால் கலப்பால் பாதிக்கப்பட்டு வழக்கொழிந்து வந்து கொண்டுள்ளன. எனினும் அவை மீண்டும் தாய்மொழிக்கல்விக்கே திரும்பியுள்ளன. ஆங்கில மொழியே அதற்குச் சிறந்த உதாரணம்.

    பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரை ஆங்கிலம் கேட்பாரற்று ‘ஒரு வட்டாரமொழி’ என்ற அளவில்தான் அறியப்பட்டு வந்தது. இலத்தீன்தான் சிறந்த மொழி; அறிவு மொழி என்று போற்றப்பட்டது. ஒரு வட்டார மொழியாகக் குறுகிக் கிடந்த ‘ஆங்கிலத்தைத்’ தாய்மொழியாகக் கொண்ட ‘ஜெஃப்ரி சாசர்’ தான் பள்ளி முதல் கல்லூரி வரை திணிக்கப்பட்ட இலத்தீன் மொழிக்கெதிராகப் போர்க்கொடி தூக்கினார். ஆங்கிலம் வட்டார மொழியாக இருந்தாலும், அது ஒரு பகுதி மக்களின் தாய்மொழியானால், தாய்மொழி வழிக் கல்வியே சிறந்தது என்பதால், ஆங்கிலத்தின் வழியே கல்வி போதிக்கப்பட வேண்டும் என்று போராடினார். இத்தனைக்கும் ஆங்கிலம் ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு இடத்தில் தோன்றிய தனித்த மொழி அல்ல.

    சில ஜெர்மானிய மொழிகள், கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்ச், செல்டிக் மொழி உள்ளிட்ட பல மொழிகளின் கலவையினால் உருவான கலப்பட மொழிதான் ஆங்கிலம். இக்கலப்பட மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஜான் வைக்லிப், ஜான் ஹஸ், தாமஸ் லினேகர், வில்லியம் டிண்டேல் போன்ற பலரும் போர்க்கொடி உயர்த்தி போராட்டத்தில் குதித்தனர். இதில் ஜான் ஹஸ், ஜான் ரோஜர்ஸ், தாமஸ் கிரான்மெர் பலரும் இலத்தீனைத் தாய்மொழியாகக் கொண்டவர்களால் உயிரோடு கொளுத்தப்பட்டனர். எனினும், இப்போராட்டம் தொடர்ந்து நடந்ததால் அன்றைய முதலாம் எலிசபெத் ஆங்கில தாய்மொழியாளர்கள், ‘தம் தாய்மொழியாலேயே கல்வி பயிலலாம்’ என 1563ல் அனுமதியளித்தார். 1320ல் தொடங்கிய ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களின் தாய்மொழிவழிக்கல்வியின் போராட்டம் 1563ல் முடிவுக்கு வந்தது.

    இலத்தீன் ஆதிக்கத்தில் கட்டுண்டு கிடந்த ஆங்கிலம், விடுதலைக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கியதும், மைக்கேல் பாரடே (மின்னியல்), ஜார்ஜ் ஸ்டீஃபன்சன் (புகைவண்டி), ஜான் டால்டன் (அணு) ஜோசப் வில்சன் ஸ்வான் (கார்பனிழை மின்விளக்கு) போன்ற அறிவியலாளர்களை உலகிற்குத் தந்தது. அறிவியலுக்குத் தகுதியில்லாத மொழி எனக் கருதப்பட்ட ஆங்கிலம் “தாய்மொழிப் பற்றாளர்களால்” இன்று ‘உலகின் அறிவியல் மொழி’ யாக உயர்ந்துள்ளது. இவர்கள் எல்லாம் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட ஏழைகளின் பிள்ளைகள்.

    தாய்மொழியான ஆங்கிலத்தில் படித்து சிந்தித்ததன் விளைவே இவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு மூல காரணம். ஆங்கிலேயரின் தாய்மொழிப் பற்று தமிழரிடம் இருந்தால், தமிழன் பல கண்டுபிடிப்புகளில் உலகிற்கே முன்னோடியாகத் திகழ்வான். ஏனெனில் பண்டைத் தமிழில் உள்ள அறிவியல் நுட்பங்கள் தமிழரின் அரும்பெரும் சொத்துக்கள். ஏற்கனவே அறிவியல் துறைகளில் கால்பதித்துவிட்ட தமிழன், தாய்மொழிப் பற்றில்லாமையினால் ஆங்கில மறதி நோய் பற்றி அனைத்தையும் மறந்து அறிவியல் கண்டுபிடிப்பை வியப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கிறான். ஆங்கிலத்தைப் பின்பற்றுபவர்கள், ஆங்கிலேயரின் தாய்மொழிப் பற்றையும் பின்பற்றினால் தமிழ் வாழும். தமிழரும் வாழ்வர். தமிழ் தமிழரை நம்புகிறது. தமிழர்தான் தமிழை நம்பவில்லை.

    தாய்மொழிவழிக்கல்விக்கு முன்னுரிமையும் சிறப்பும் தரப்பட்டால், தமிழிளைஞர்கள் பலரும் பல கலைகளில் சிந்திக்கும் நிலை பெற்றுச் சிறப்புடன் திகழ்வர். இதில் ஒரு தலைமுறை இடர்ப்பட்டு முன்னேறவேண்டியதிருக்கும். கற்பிக்கும் ஆசிரியர் ஆங்கில நூல்களைக் கொண்டே தமிழில் மொழிபெயர்த்து பாடம் நடத்தலாம். மாணவர்களும் புரியாமல் கேட்பதைவிட புரிந்த மொழியில் பாடங்களைக் கேட்டு பலவிதமான சிந்தனைகளைப் பெறலாம். ஒரு சிந்தனையுமின்றி ஆங்கில வழிப்பாடத்தை நெட்டுருப்போட்டு படிப்பதைவிட இது மேலானது. ஒரு சில பொருத்தமான சொற்கள் தமிழில் இல்லாமல் இருக்கலாம். ஒன்றும் புரியாமல் படிப்பதை விட ஒரு சில சொற்கள் புரியாமல் படிப்பது மேலானதல்லவா?

    இந்தியா போன்ற பல மொழிகள் உள்ள நாடுகளில் தாய்மொழிவழிக் கல்வி என்பது கானல் நீராகவே உள்ளது. ஒரு மனிதன் சுயமாகச் சிந்திப்பதற்கும், அறிவினை மேம்படுத்திக் கொள்வதற்கும், தொடர்ந்து படிப்பதற்கும் , புதிய கண்டுபிடிப்புகளுக்கும் தாய்மொழியே பெரிதும் துணைபுரிகிறது என்ற கல்வியாளர்களின் கூற்று காற்றில் பறக்கவிடப்பட்டுவிட்டது.

    தாய்மொழிப் பற்றற்ற தமிழர்கள் தான் இதற்குக் காரணம். இந்தியைத் தேசிய மொழியாக்க முனையும் மத்திய அரசோ, ஆங்கிலமோ தமிழர்க்கு எதிரியல்ல. தமிழர்தான் தமிழுக்குப் பகைவர்களாக உள்ளனர். ‘இவனா தமிழன் இருக்காது. யானைக்குப் பூனை பிறக்காது’ என மலேசியக் கவிஞர் சீனி நைனா முகம்மது இன்றைய தாய்மொழிப் பற்றற்ற தமிழனைப் பார்த்து சீறுகிறார்.

    இலக்கியக் கல்விக்கு தாய்மொழிக் கல்வி என்பது பொருத்தமாக இருக்கும். ஆனால், அறிவியல் கல்விக்கு இது பொருந்தாது என்பவர்கள் அறியாமை நிறைந்தவர்கள். அறிவியல் கல்வி அவரவர் தாய்மொழியில் அமையும்போதே பெறத்தக்க நன்மைகள் பலவாகும் என்பதை உணராமல் அவ்வாறு கூறுகிறார்கள். தாய்மொழிவழிக்கல்வி கற்றல் என்பது சாதாரண உடையணிந்து மிடுக்காக நடப்பது போன்றது. பிறமொழிக்கல்வி என்பது மிடுக்கான பொருத்தமில்லாத உடையணிந்து நடக்க இயலா நிலைக்குப் போவதற்குச் சமமானதாகும்.

    மனிதனின் வாழ்நிலை, மனநிலை என்பது இயற்கையாக இருத்தல்வேண்டும். அது தாய்மொழிவழிக்கல்வியால் மட்டுமே சாத்தியம். தமிழகத்தில் 2006 -2007 ஆண்டிற்கு முன்னர் தமிழ்மொழிவழிக் கல்வியை ஒருவர் கற்காமலேயே பட்டம் பெறலாம் என்ற நிலையிருந்தது. 2006 -2007க்குப் பின்னர் பிறமொழி பேசுபவராக இருப்பினும் தமிழ்நாட்டில் கல்வி கற்பின் தமிழில் ஒருபாடமாவது கட்டாயம் படிக்கவேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட்டுள்ளது. தற்போது 2015 -2016 ல் 10ம் வகுப்புத் தேர்வை அம்மாணவர்கள் எழுதும் நிலை உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி விழுக்காடு குறைந்துவிடக் கூடாதென்று அரசு, பிறமொழி பேசும் மாணவர்களுக்கு தமிழ் மொழிப்பாடத்திற்கு மட்டும் சிறப்பு கையேட்டைத் தயாரித்துக் கொடுத்துள்ளது. பிரெஞ்சு, இந்தி, சமஸ்கிருதம் என மதிப்பெண்ணுக்காகத் தமிழைப் புறக்கணித்தவர்கள் இனித் தமிழைப் படிப்பார்கள் என நம்பலாம்.

    இது ஆங்கிலவழிக்கல்வியின் மோகம் மக்களிடம் குறைந்துவிடவில்லை என்பதையே காட்டுகிறது. ஆங்கிலவழிக்கல்வி முறையே போதும் என்று மக்கள் சிந்திக்கத் தலைப்பட்டு விட்டனர். அதன் மூலமே உலக அறிவினைப் பெற முடியும் என்று நம்புகின்றனர். 2010ல் சமச்சீர் பள்ளிக்கல்வி முறை கொண்டுவரப்பட்டது. முனைவர் எஸ்.முத்துக்குமரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு பல்வேறு பரிந்துரைகள் அரசுக்கு வழங்கப்பட்டன. ஒருசில மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட பரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டன. அதில் பெரும்பான்மையோரால் புறக்கணிக்கபட்டது தாய்மொழிவழிக்கல்வியும், மெட்ரிக்குலேசன் வாரியக் கலைப்பும்.

    பிள்ளைகள் தங்கள் தாய்மொழிவழிக்கல்வி வழியாகவே அனைத்துப் பாடங்களையும் கற்பதே சிறந்தது என்பது சமச்சீர்க் கல்விக் கொள்கைகளில் ஒன்று. எனினும் இம்முறை இன்னும் நடைமுறைக்கு வராமலுள்ளது. அரசின் கல்விக் கொள்கைக்கு தனியார் கல்வி நிறுவனங்கள் வருதல் வேண்டும் என்ற நிலைமாறி தனியார் கல்விக் கொள்கைக்கு அரசு வருதல் வேண்டும் என்ற நிலை தோன்றி தற்போது அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி முறை தொடங்கபட்டு வருகிறது. ஆங்கிலக் கல்வியின் மோகத்தால் ஆங்கில வழி கல்வி உள்ள தனியார் கல்விக்கூடத்தில் மாணவர்கள் எண்ணிக்கை மிகுதியாகி 3500 அரசு பள்ளிகளின் எண்ணிக்கை தற்போது 1500 பள்ளிகளாக சுருங்கி உள்ளது.

    இன்றைய காலகட்டத்தில் ஒருமொழி அறிவு ஒருவர்க்குப் பயன்தராது. பிறமொழி அறிவும் தேவைதான். உலகின் தலைசிறந்த கவிஞராகப் பாரதி திகழ்ந்ததற்கு அவருடைய பலமொழி அறிவே காரணமாகும். எனினும் தாய்மொழிக்கல்வியை அவர் என்றும் விட்டுக்கொடுத்ததில்லை.

    வேறுவேறு பாஷைகள் – கற்பாய் நீ
    வீட்டு வார்த்தை கற்கிலாய் –போ போ

    என்று தாய்மொழிக்கல்வியைப் புறக்கணிப்பவனைப் பார்த்து கூறுகிறார்.

    ‘குழந்தைகளின் மன வளர்ச்சிக்குத் தாய்மொழியே சிறந்தது’ என காந்தியடிகள் உள்ளிட்ட பலரும் எடுத்துரைத்தாலும் தமிழர்களை ஆங்கில மோகம் கெட்டியாகப் பிடித்துக்கொண்டுவிட்டது. ‘ஆங்கிலம் உலகப் பொதுமொழி’ என்ற வலுவான எண்ணம்தான் அதற்குக் காரணம். சீனத்திற்கும், ஸ்பானிசிற்கும் அடுத்த நிலையில்தான் ஆங்கிலம் உள்ளது. இங்கிலாந்து அருகிலுள்ள பிரான்சில் ஆங்கிலம் ஒரு மொழியாகவே கருதப்படவில்லை.

    .

    மக்கள் தாய்மொழியைத் தமிழைப், புறக்கணிப்பதற்கு ஊடகங்கள் பேருதவி (?) புரிகின்றன. தமிழைக் கொச்சையாகப் பிறமொழி கலந்து பேசுவது மிகச்சிறந்த நாகரிகமாகப் பரவுவதற்கு தொலைக்காட்சியின் பங்கு மிகப் பெரியது. பட்டி தொட்டிகளிலெல்லாம் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஊடுருவி, சிற்றூர் மக்களின் தமிழையும் கலப்படமாக்கி வருகின்றன. இதில் வரும் விளம்பரங்களில் மிகத் தாராளமாக ஆங்கிலக் கலப்பு.

    தமிழர் வாழ்விலும் தமிழ் இல்லை. பேசும் தமிழிலும் வளமில்லை. பேருந்து நிலையம் என்றால் புரியாது தமிழனுக்கு. பஸ் ஸ்டேண்ட் என்றால் தான் புரியும். இன்றைக்கு காலைவேளை ‘டூத்பேஸ்டில்’ தொடங்கி இரவில் படுக்கும் ‘பெட்’ வரை தமிழன் வாழ்வில் எல்லாம் ஆங்கிலமயம்தான். பேச்சுத் தமிழோ ‘தமிங்கிலீசாக’ வலம் வருகிறது. ஒரு மொழி அழிவதற்கு முதன்மைக் காரணம் மொழிக்கலப்பு தான். இன்றைக்கு அன்றாட சிற்றூர் மக்கள் பேசும் மொழியில் கூடப் பிரிக்க முடியாத அளவிற்குப் பிறமொழி கலப்பு நிறைந்திருக்கிறது. தமிழிலுள்ள எண்ணற்ற சொற்கள் அவை தமிழ்ச்சொற்கள் தானா என்று குழப்பம் தரும் வகையில் விரவியுள்ளன.

    உலகிலுள்ள கல்வியாளர்களும் சமூக ஆய்வாளர்களும், உளவியல் நிபுணர்களும் தாய்மொழி வழிக் கல்வியே சிறந்தது என்கின்றனர் என்றாலும் பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழில் போதுமானஅளவில் இல்லாமலிருப்பதே மக்கள் தமிழ்மொழியைப் புறக்கணிப்பதற்குக் காரணம். பல துறை சார்ந்த தமிழர்களை ஒன்றிணைத்து மொழிபெயர்த்துத் தர ஒரு குழு அமைக்கலாம். மொழிபெயர்ப்புகளை வெளியிடலாம். தொழில்நுட்ப தகவல்களைத் தாய்மொழியில் தரலாம்; விவாதிக்கலாம்; நுட்பப் பொருளை உணர்ந்து பல கருத்துக்களுக்குப் பின், அனைவரும் ஏற்கும் மொழிபெயர்ப்பு சொல்லை ஒத்த கருத்துடன் ஏற்கலாம்; உலக முழுவதும் உள்ள தமிழர்கள் ஒரு குறிப்பிட்ட சொல்லையே ஒருமனதாகப் பயன்படுத்த பரிந்துரைக்கலாம்; மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல் சார்ந்த மொழிபெயர்ப்பு குழுக்கள் உருவாக்கப்படலாம்.

    “தாய்மொழி என்பது தாயின் மொழி-அது
    தாயும் நீயும் பேசும் மொழி
    ஆயிரம் மொழிகள் நீயறிந்தாலும்
    ஆன்மா உணர்மொழி அந்த மொழி”
    . . . . . .
    தேனாய் இனித்திடக் கேட்ட மொழி உன்
    சிந்தையில் விதைகள் போட்ட மொழி
    . . . . . .
    உன்னுடன் இணைந்தே பிறந்தமொழி-உன்
    உள்ளமும் உணர்வும் புரிந்த மொழி
    எண்ணியல் என்ன மின்னியல் என்ன
    எதையும் பயின்றிடச் சிறந்த மொழி-அது
    இறைவன் உனக்கென வரைந்த மொழி”

    என்று தாய்மொழிவழிக்கல்வியின் சிறப்பினை மறைந்த மலேசியக் கவிஞர் சி.செ. சீனிநைனா முகம்மது பாடிச் சென்றுள்ளார்.

    சிந்தையில் விதைகளை விதைக்கும் மொழி, எண்ணியல் மின்னியல் எதையும் பயின்றிடச் சிறந்த மொழி தாய்மொழியன்றி வேறொன்றில்லை என மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். ‘அணுவைத் துளைத்து எழு கடலைப் புகட்டும்’ ஔவையாரின் அறிவு தாய்வழிக்கல்வியினால் விளைந்தது அன்றோ? சித்த மருத்துவமே சிறந்த மருத்துவம் என்று உலகம் போற்ற தமிழரை தமிழ்வழிக்கல்வியைப் புறக்கணிப்பதுபோல் அதையும் புறக்கணித்து சர்க்கரை நோயினால் மடிந்து வருகின்றார்கள்.

    தமிழ் படித்தால் முன்னேற முடியாது என்று நினைப்பவர்களையும்,. தமிழ்ச்சோறு போடுமா என்று கேட்பவர்களையும் நோக்கி பதிலடி கொடுக்கிறார் மலேசிய கவிஞர் பொன்முடி அவர்கள். தமிழ்மொழியால் தான் தமிழன் தாழ்ந்து போனதாகவும், தமிழனைத் தலையெடுக்க விடாமல் தமிழ்தான் செய்து விட்டதாகவும் கருதுவதால் தான் தாய்மொழி வழிக் கல்வியைப் புறக்கணிக்கின்றனர் எனக் கருதுகின்ற கவிஞர்,

    ”எந்த நாட்டினில் எந்த மொழிதான்
    எவர்க்கும் சோற்றை ஏந்தி வந்து
    துவையல் கறியுடன் ஊட்டுகின்றது?
    உழைப்பும் உறுதியும் உள்ளவன் எவனும்
    மொழியில் பழியை ஏற்றுவதில்லை””
    எனச் சாடுகிறார்.

    கல்லூரிகளில் மொழிபெயர்ப்பு பாடத்தினை வைக்கலாம். மொழிபெயர்ப்பு ஆற்றலையும், அறிவினையும் கல்விநிலையங்களில் முதன்மைப்படுத்தலாம்.

    தமிழில் அறிவியல் கருத்துக்களை வெளியிட முடியாதென்பவர்கள் உண்மையறியாதவர்கள். தமிழ் மொழி அறிவியல் மொழி என்பதை பண்டைய இலக்கியங்களை வைத்தே உறுதியாகக் கூறிடமுடியும்.சில சான்றுகள் இதோ……………..

    மழைப் பொழிவு பற்றிய அறிவியல் உண்மைகளைப் பண்டைத் தமிழர் மிக முன்பே அறிந்து கொண்டுள்ளனர். கடலில் இருந்து நீரை முகந்து மேகமானது மழையைக் கொண்டு வந்து நிலத்திற்குத் தருகின்றது என்ற அறிவியல் கோட்பாடு அன்றே நிலைப்பட்டுவிட்டது. பட்டினப்பாலையில் ‘வான்முகந்த நீர் மலைப் பொழியவும் மலைப் பொழிந்த நீர் கடற்பரப்பவும் மாரி பெய்யும் பருவம்போல’ (பட்டின:126) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது வானம் நீரை மேகமாக முகந்துமலையின் மீது பொழிகின்றது, மலையில் பொழிந்த நீர் கடலில் சென்று சேர்கிறது. இந்த நீர்ச் சுழற்சியை (hydrological cycle) இன்றைய அறிவியல் உலகம் விளக்குகிறது. இதேபோல, ‘மறந்து கடல் முகந்த கமஞ்சூழ் மாமழை பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல்’ (நற்றிணை-99) என்ற பாடல் வரிகள் கடல் நீர் ஆவியாகி மேகமாகி பின்னர் மழையாகப் பொழிகிறது.

    இப்படியாக மழை பொழியும் அறிவியலைக் கூறுகிறது. அகநானூறு, ‘மாக்கடல் முகந்து மாதிரத்து இருளி …………….. பெயல் பெய்து கழிந்த பூநாறு வைகறை’ என்று கூறுகிறது. இதுவும் கடலில் இருந்த நீர் மேகமாகி மழை பொழியும் அறிவியலைக் கூறுகிறது. ஆனால் மேலைநாட்டு அறிஞர்கள் குறிப்பாகக் கிரேக்க நாட்டு ஞானிகளான ‘தேல்ஸ்’ மற்றும் இன்றைய அறிவியல் உலகம் கொண்டாடும் ‘அரிஸ்டாட்டில்’ போன்றோர் கடலுக்கு அடியில் உள்ள நீரூற்றுதான் எல்லாத் தண்ணீருக்கும் ஆதாரம் என்றும் நிலம் அதை உறிஞ்சி மேலே கொண்டு வந்து ஆறாக ஓட விடுகிறது என்றும் கூறியுள்ளனர். இதுதான் கி.பி 1500 வரை அவர்களுக்கு இருந்த கருத்து.ஆனால் பழந்தமிழர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முக்பிருந்தே இதைக் கண்டு பிடித்துள்ளனர். மேகம் கடல் நீரை பெற்று மழையாகப் பொழிகிறது என்பது அறிவியல் கண்டுபிடிப்பு. இஃது ஒரு நாள் ஆய்வின் முடிவல்ல. பல்லாண்டுகளின் பலன். ஆய்வின் வெளிப்பாடுகள் அல்ல அன்றைய தமிழரின் அறிவின் வெளிப்பாடுகள்.

    ”ஒன்று அறிவதுவே உற்ற அறிவதுவே
    இரண்டு அறிவதுவே அதனோடு நாவே
    மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
    நான்கு அறிதுவே அவற்றொடு கண்ணே
    ஐந்து அறிதுவே அவற்றொடு செவியே
    ஆறு அறிதுவே அவற்றொடு மனனே
    நேரிதில் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே …’ (..தொல் பொருள் மரபியில்:29. )

    தொல்காப்பியரின் கொள்கை டார்வின் விஞ்ஞானியின் பரிணாமக் கொள்கையோடு ஒத்துப் போகிறது.

    மாற்றுருப்புப் பொருத்துதல்-பழுதுபட்ட ஓருறுப்பை எடுத்துவிட்டு அதற்கு மாற்றாக வேறொரு உறுப்பைப் பொருத்துதல் என்பது இன்றைய மருத்துவ உலகின் சாதனை. ஆனால் பண்டைத்தமிழர் இது போன்ற அறுவை சிகிச்சைகளைப் பல ஆண்டுகளுக்கு முன்னரே மேற்கொண்டிருந்தனர். இதனைப் பற்றிய குறிப்பொன்று சிலப்பில் காணப்படுகின்றது.

    நாடுவிளங் கொண்புகழ் நடுகதல் வேண்டித்தன்
    ஆடு மழைத் தடக்கை யறுத்து முறைசெய்த
    பொற்கை நறுந்தார் புனைதேர்ப் பாண்டியன் (சிலம்பு)

    இரவு நேரத்தில் மாற்றுடையில் ஊர் நிலவரம் அறிய சென்ற பாண்டியன்,கீரந்தையின் இலக்கக் கதவைத் தான் தட்டியதற்குத் தண்டனையாக, தன் கையைத் தானே துண்டித்துக் கொள்கிறான். அதன்பின் பொன்னாலாகிய கையைச் செய்து வைத்துக் கொண்டான். அன்றிலிருந்து பொற்கைப் பாண்டியன் என அழைக்கப்பட்டான் என்கிறது அச்செய்தி, உறுப்பினை இழந்த ஒருவன் செயற்கை உறுப்பினைப் பொருத்திக்கொண்டு பயன்படுத்தியதை இப்பாடலில் உணரலாம். அறுவைச்சிகிச்சையில் நோயாளி தன் நோயை உணராமலிருக்கச் சுஸ்ருதர் என்ற மருத்துவர் திராட்சை ரசம் பருகச் செய்ததாகச் சரகச் சம்கிதை என்ற நூல் கூறுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்தியா முழுவதுமே இது போன்ற மருத்துவ முறைகள் பின்பற்றப்பட்டுள்ளன.

    இரும்பு உலோகங்களான வேல், வாள்’ ஈட்டி போன்ற ஆயுதங்களால் எற்படுகின்ற புண்களில்’ இரும்பின் உலோக நஞ்சு கலப்பதற்கு வாய்ப்புகள் உள. அவ்வாறு கலக்க நேர்ந்தால், உலோக நஞ்சால் (Tetanus Toxoid) உடலுக்குத் தீங்கு நேரிடலாம். அவ்வாறு நேராதிருக்க இக்கால மருத்துவர்கள் தடுப்பூசியைப் பயன்படுத்துவர். பண்டைக்கால மருத்துவர்கள் உலோக நஞ்சை முறிக்கும் மருந்தாகவும், புண் ஆறிய பின் வடு தோன்றாமல் தோலின் நிறம் பழைய நிலைக்கே மாறவும் அத்திப் பால் பயன் படுத்தினர் என்று புறநானூறு குறிப்பிடுகிறது. ‘வடுவின்றி வடிந்த யாக்கையான்,(180) என இதைக்குறிப்பிடுகிறது. மேலும், அறிவியல் உலகின் அறிய சாதனையான அறுவைச் சிகிச்சையினைப் பதிற்றுப்பத்தில்,

    “மீன்றேர்கொட்பிற் பனிக்கய மூழ்கிச்
    சிரல் பெயர்ந் தன்ன நெடுவெள் ளுசி
    நெடுவசி பரந்த உடுவாழ் மார்பின்
    அம்புசே ருடம்பினர் சேர்ந்தோ ரல்லது
    தும்பை சூடாது மலைந்த மாட்சி” (பதிற்றுப்பத்து 42: 2 – 6)

    நீரிலுள்ள மீனைக் கொத்துவதற்காக நீரில் பாய்ந்து, அடுத்த நொடியில் நீரைவிட்டு மேலே பறந்து செல்லும் சிரல் பறவையைப் போல, நெடிய வெள்ளூசி புண்ணுக்குள் நுழைந்து வெளியே வருகிறது என்கிறது. வெள்ளூசி என்பது வெள்ளியால் செய்யப்பட்ட தையல் ஊசியாக இருக்கலாம்.என்று ஐந்தாம் பத்தின் இரண்டாம் பாடலடியில் போரில் வெட்டுண்ட உடலை வெள்ளுசி கொண்டு தைத்த மருத்துவன் செயலை விளக்குகின்றன.

    இக்கால மருத்துவத்தில் புண்ணுக்கு மருந்து வைத்துக் கட்டும் போது புண்ணின் மேல் பஞ்சு வைத்துக் கட்டும் முறை, பண்டைய தமிழ் மருத்துவர்கள் மேற்கொண்ட முறையைப் பின்பற்றி அமைந்ததாக இருக்கலாம். அக்காலத்தில் தோன்றிய முறையே தொன்றுதொட்டு தொடர்ந்ததாகவும் இருக்கலாம். அதனை உறுதி செய்யும் விதத்தில்’

    “ கதுவாய் போகிய துதிவாய் எஃகமொடு
    பஞ்சியும் களையாப் புண்ணர்”

    என்னும் புறநானூற்று வரிகள் உறுதி செய்கின்றன.

    தமிழகத்தில் கட்டிடக்கலைத் திறம் வாய்ந்த வல்லுநர்கள் பலர் வாழ்ந்தனர். “ஒரு திறம் சாரா அரைநாள் அமயத்து நூலறிபுலவர் நுண்ணிதின் கயிறிட்டுத் தேஎங்கொண்டு தெய்வம் நோக்கிப் பெரும்பெயர் மன்னர்க்கு ஒப்பமனை வகுத்து” ( நெடுநல்வாடை, 75- 78வது வரிகள்) என நக்கீரர் விளக்குகிறார். கடலின் போக்கையும், காற்றின் போக்கையும் கொண்டு மிகச் சிறப்பாக கடல் வாணிகத்தை மேற்கொண்ட தமிழனின் மொழியிலா அறிவியல் இல்லை? தமிழனின் கப்பல் கட்டும் தொழிலைக் கண்டு பொறாமைப்பட்டே தமிழரின் கப்பல் வாணிகத்தை கெடுத்த அந்நியர்களின் கதை நாம் அறியாததா? தமிழால் முடியும் என்று ஒவ்வொரு தமிழனும் நினைக்கவேண்டும்.

    ஒரு மொழியின் வாழ்வும், வளமும், வளர்ச்சியும் அம்மொழி பேசும் மக்களின் வாழ்வும் வளமும் வளர்ச்சியுமாகும். தன்மான உணர்வு அடிப்படையில் மக்கள் தாய்மொழியாம் தமிழினை வளர்க்க முன்வரவேண்டும். அரசும், கல்வி நிலையங்களும், ஊடகங்களும், பொதுமக்களும் இணைந்து செயல்பட வேண்டும். தமிழால் சாதிக்க முடியும் என்ற மக்கள் நம்பினால், தமிழனும் சாதிக்க முடியும். தமிழர் தமிழைப் புறக்கணித்தால் எதிர்காலத்தில் தமிழர்க்கு இருப்பதற்குக் கூட ஒரு நாடு இருக்காது என்பதை புரிந்து செயல்பட வேண்டும்.

    ஒருசில தலைமுறைகள் செய்கின்ற தவறுகள் ஒட்டுமொத்த இனத்தின் உரிமைக்கே சாவுமணியடித்து விடுகின்றன. தமிழினத்தின் எதிர்காலமே தாய்மொழிவழிக்கல்வியால் தான் சிறந்து உள்ளது. தமிழ் என்றைக்கும் தமிழரின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்ததில்லை. தாய்மொழி எனப்படுவது ஐம்புலன்களினாலும் உணரக்கூடிய, உணர்வுகளோடு ஊறிய சிந்திக்கத் தூண்டும் மொழியாகும். தாய்மொழியை சிந்தனை மொழி என்றே கூறலாம். சிந்திக்கின்ற மொழியால் பயிற்றுவிக்கப்படும் கல்வி, எண்ணங்களை மேம்படுத்தி, நுணுக்கங்களைப் புரிய வைத்து அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு வித்திடுகிறது. தமிழ் உலகாள வேண்டும். அது தமிழர் கல்வியில்தான் உள்ளது.

    Share
  • தொல்காப்பியர் கூறும் நூல் பூணூலா?

    முனைவர் ஜ.பிரேமலதா,

    தமிழ்இணைப்பேராசிரியர்,

    அரசு கலைக்கல்லூரி,சேலம்-7

    தொல்காப்பியர் கூறும் நூல் பூணூலா?

    முன்னுரை

    தொல்காப்பியர், பொருளதிகார மரபியலில்  நான்கு வருணத்தாருக்குரியப் பொருட்களைப் பற்றிக் கூறுமிடத்து, நூல் என்ற சொல்லையும் குறிப்பிட்டிருக்கிறார். இச்சொல் தொடர்பாக உரையாசிரியர்கள் பலரும் பலவித கருத்துக்களைக் கூறியுள்ளனர். இக்கருத்துக்களிலுள்ள சாதியச் சார்புத் தனைமையைக் கண்டறிந்து உண்மையை வெளிப்படுத்தும் நோக்கில் இக்கட்டுரை அமைகிறது.

    நூற்பா நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய ( 3: 615)

    இந்நூற்பாவிற்குரிய பொருள் அந்தணர்களுக்குரிவை நூல்,கரகம்,முக்கோல்,மணை என்ற நான்கு பொருட்கள் என்பதாகும்.

    1.நூல் – நூல் என்பதற்குப் பூணூல் என உரையாசிரியர்கள் பலரும் பொருள் கொண்டுள்ளனர்.(இதைப் பற்றியே இக்கட்டுரை ஆராய்கிறது.)

    2.கரகம் – சிறிய பானை

    3.முக்கோல் -உயிர் மூலப்பொருளின் விகாரமாகிய உடம்பைக் கொண்டிருத்தல் போல் இறைவன் உடம்பு, உயிர் இவையிரண்டையும் தனது உடம்பாகக் கொண்டுள்ளான். இறைவன்,உடல்,உடம்பு என்ற  இம்மூன்று தத்துவங்களும் ஒன்றை விட்டொன்று பிரியாமல் எக்காலத்தும், தத்தம் இயல்பை விடாமல் ஒன்று சேர்ந்துள்ளன என்பதை விளக்கவே இறைவனை வழிபடுபவர்கள், துறவிகள் மூன்று கோல்களை ஒன்றாகப் பிணைத்து கையில் வைத்திருப்பர். இதை “முக்கோல்” என்பர். துறவிகள் இவ்வாறு முக்கோல் ஏந்தும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வந்திருப்பதை தொல்காப்பிய செய்யுள் வரிகளால் அறியலாம்.

    4.மனை – அமருவதற்குரிய சிறிய பலகை.

    உரையாசிரியர்கள் கருத்து

     இதில் முதலாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள நூல் என்னும் சொல்லுக்குத்தான் உரையாசிரியர்கள் பலரும் பலவாறாகப் பொருள் கொண்டுள்ளனர்.

    இங்கு குறிப்பிடப்படும் நூல் என்பது எது?

    உரையாசிரியர்களின் கருத்துகளை முதலில் பார்ப்போம்.

    1.தொல்காப்பிய முழுமைக்கும் உரை வகுத்த இளம்பூரணர், ‘நூலும் கரகமும் முக்கோலும் மணையும் ஆராயுங் காலத்து அந்தணர்க்கு உரிய‘ என்கிறார்.

    2.உரையாசிரியர் பேராசிரியர் அவர்கள், (இ.சுந்தரமூர்த்தி பதிப்பு)”நூலினை முற்கூறினான் பிறப்பு முறையானுமென்பது .இனிக் குடுமியுங் குசையம் (தருப்பை) போல்வன…குண்டிகை-நீர் முகந்து வைத்திருக்கும் கலம். யாமை மனை-யாமை வடிவால் செய்த இருக்கைப்பலகை….பிறப்புமுறை-அருபிறப்பாளன் என்னும் பிறப்பு முறை. சிறப்பு முறை – நூல் தாங்கிய பின்னரே கரகம் முதலிய தாங்குதல் பற்றிய சிறப்பு முறை”(ப.636-637) என்கிறார். இங்கு, பேராசிரியர் பிறப்பு முறையால் பெறப்படுவது நூல் என்பதினால் அது பூணூலையேக் குறிக்கிறது எனலாம்.

    3.உரையாசிரியர் வ.த.இராமசுப்பிரமணியம் அவர்கள்,”முப்புரிநூல் அணிவது ஏழு வயதுப்பருவத்தில் அந்தணச்சிறுவர்களுக்குச் செய்யும் சடங்குமுறை. இருபிறப்பாளர் எனலும்ஆம்.” (ப.482)என்கிறார்.இங்கு வெளிப்படையாகவே பூணூல் எனக் குறிப்பிடப்படுகிறது.

    4.தமிழண்ணல் அவர்கள், அந்தணர்க்குரியவை முப்புரிநூல், கமண்டலம்(கரகம்), முக்கோல் தண்டு, மனை இருக்கை ஆகியன. நூல்-முப்புரிநூல் கரகம்-கமண்டலம்.”என்கிறார்.

    5.ஞா.மாணிக்கவாசகன் என்பார்,“நூல்-சுவடி (முப்புரிநூல் என்பாரும் உண்டு.)”என்று நூல் என்பதற்கு சுவடியாக இருக்கலாம் என ஊகித்துள்ளார். அந்தணர், துறவிகளாய் இடம் விட்டு இடம் செல்லும் துறவோராவர். இங்கு நூலெனக் கூறப்பட்டது பொத்தகக் கட்டை இது:

    ” பூதியு மண்ணும் பொத்தகக் கட்டும்

    மானுரி மடியு மந்திரக் கலப்பையும்

    கானெடு மணையுங் கட்டுறுத் தியாத்த

    கூறை வெள்ளுறிக் குண்டிகைக் காவினர்” (பெருங்கதை – 7  ம் நூ  )

    6.பாவலரேறு ச.பாலசுந்தரம் அவர்கள்,“முந்நூலும்(முப்புரிநூல்) கமண்டலமும்,முக்கோலும்,இருக்கை மனையும் அந்தணர்க்குரிய உடைமையாகும்” என்பதோடு முப்புரிநூல் அந்தணர்,அரசர் தவிர்ந்த ஏனையோர் நூல் பூணுதல் ஆரியர் வழக்கமாகும்….முந்நூலும் மனையும் பொது. கரகமும் முக்கோலும் துறவு பூண்டோர்க்குரியவாகும் என்கிறார்.(ப.211-212).இங்கு பாலசுந்தரம் அவர்கள், ஆரிய மரபில் அந்தணர்,அரசர் தவிர்த்தவர்களுக்கும் பூணூல் அணியும் வழக்கம் இருந்தது என்கிறார்.

    நால்வகை வருணத்தாருக்கும் உரியது பூணூல்

    தொல்காப்பியர் குறிப்பிடும் நூல் பூணூல் என்றால், தமிழகத்தில் அந்தணர் எனப்படும் (ஆரியர்கள்) பார்ப்பனர்கள் மட்டும் பூணூல் அணிபவர்கள் அல்லர். தொல்காப்பியம் சொல்லுகின்ற அனைத்து வர்ணத்தவருமே பூணூல் அணிபவர்கள்தான்.

    1.இன்றைக்குத் தாழ்த்தப்பட்டவர்களாகச் சொல்லப்படும் பறையர் சமூகத்தவர், தாங்கள் பூணூல் அணிவது குறித்து இன்றுவரையிலும் பாடிவரும் பாடல்களை வரலாறு தெரிந்தவர்கள் அறிவார்கள்.

    “முந்திப் பிறந்தவன் நான்

    முதல் பூணூல் தரித்தவன் நான்

    சங்குப் பறையன் நான்

    சாதியில் மூத்தவன் நான்”- என்கிறது அப்பாடல்.

    ஞானவெட்டியார் பாடல்கள்,

    “… … பூணூலந்

    தரணிமுத லென்பறையில் தழைத்த தாண்டே”

    “பூணூல் தரித்துக் கொள்ளுவோம் – சிவ சிவ

    பொறியுமைம் புலனையுந் தொழுது கொள்ளுவோம்

    வேண விருதுகளும் விகிதமாய்

    வெண்குடை, வெண்சாமரமும் பிடித்துக் கொள்வோம்”

    “பூணூல் பிறந்ததெங்கே -சிவசிவ” http://saanron.webs.com/katuraikal.htm  என்று சான்று காட்டுகிறார்.

    2.விஸ்வபிராமணர்கள் எனப்படும் கம்மாளர்கள் தாங்களே உண்மையான பார்ப்பனர்கள் என்று நீதிமன்றம் சென்று வாதாடிய வரலாறுதான் ‘சித்தூர் ஜில்லா அதாலத்’ என்று புகழ் பெற்றது. அந்தக் கம்மாளர்கள் கிருஷ்ண யஜூர் வேதத்தின் தைத்ரிய சம்ஹிதையைப் பின்பற்றி வேத கர்மாக்களுடன், உபநயனம் எனப்படும் பூணூல் அணியும் சடங்கைச் செய்து கொள்பவர்கள் என்பதற்கு ஆதாரமாக ஆந்திர மாநிலத்தில் பல கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.

    3.நாட்டுக் கோட்டை நகரத்தார் என்று சொல்லப்படும் செட்டியார்கள் பூணூல் அணிபவர்கள். வன்னியர்களில் ஒரு பிரிவினர் முத்திரை போட்டுக் கொள்வது என்கிற பெயரில் பூணூல் அணிகின்ற சடங்கைச் செய்து கொள்கின்றனர்.

    1. ஆப்பிரிக்காவின் எகிப்பது நாட்டிற்கு ஆரியர்கள் செல்வதற்கும் முற்பட்ட காலத்தைச் சேர்ந்த பாறை ஓவியங்கள் கிடைத்துள்ளன. அதில் உள்ள உருவங்கள் சிலவற்றில் பூணூல் போன்று மார்புக்குக் குறுக்கே வரையப்பட்டுள்ளது. அது பூசாரிகளின் ஓவியங்களாக இருக்கலாம் என அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், பூணூல் அணிதல் என்பது சூரிய வழிபாடு தொடர்புடைய ஒரு மதச் சின்னம். இஸ்லாமியர்கள் தலையில் குல்லாய் அணிவது போல இது ஒரு மதச் சின்னம் அவ்வளவே.

    புலையன் என்ற சொல்லுக்கு தமிழ் லெக்சிகனில் (Tamil Lexicon) “கீழ்மகன்” (கீழ்ச்சாதியான்) என்று பொருள் தரப்பட்டுள்ளது. அதே சொல்லுக்குப் “புரோகிதன்” என்று வேறொரு பொருளும் தரப்பட்டுள்ளது.

    புரோகிதர் என்றால் மதகுரு (Priest); சமயத் துறையின் தலைமகன். சமயச் சடங்குகளை நிகழ்த்துவது இவரது சிறப்புரிமை. இந்தத் தலைமகன் எப்படிக் கீழ்மகனாகவும் கருதப்படமுடியும்? இது ஆழ்ந்து ஆய்வு செய்வதற்குரியதாகிறது.

    சமயச் சடங்குகளில் கடவுள்வழிபாட்டுச் சடங்குதான் முதலிடம் வகிப்பது. இதற்கு அடுத்து புராதன சமுதாயத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது ஈமச்சடங்காகும். திருமணச் சடங்கு முதலியவெல்லாம் காலத்தால் மிகவும் பிற்பட்டவை. எனவே கடவுள் வழிபாட்டைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் இறுதிச்சடங்குதான் முதல்இடத்தில் இருப்பது.

    பழந்தமிழகத்தில் இத்தகைய பெருமைவாய்ந்த இறுதிச் சடங்கை நடத்திவைக்கும் மரியாதைக்குரிய மதகுருவாகப் “புலையர்” இருந்தனர். குடிமக்களுக்கு மட்டுமல்லாது மன்னர்களின் இறுதிச் சடங்குகளையும் இவர்களே செய்துள்ளனர்.

    சுடுகாட்டில், இறந்தமன்னனின் உடல் கிடத்தப்பட்ட பிறகு, புலையன் சோறும்,கள்ளும் படைக்க, இறந்தவன் அதை வாங்கி உண்பான் என்று நம்பப் பட்டது. அதன்பின் உடலுக்கு எரியூட்டப்படும்.

    இதைக் குறிப்பிடும் பாடல்கள் புறநானூற்றில் உள்ளன.

    “புல்லகத்திட்ட சில்அவிழ் வல்சி

    புலையன் ஏவப் புல்மேல் அமர்ந்து உண்டு

    அழல்வாய்ப் புக்க…

    இப்பாடலை (எண்: 360) மேற்கோள் காட்டிப் புலையர் புரோகிதராயிருந்தனர் என்று பொருள் தந்துள்ளது லெக்சிகன்.

    ஆனால் இதே புறநானூற்றில் இன்னொரு பாடலும் உள்ளது. இதில் இறுதிக்கடன் தீர்க்கும் தகுதி புதல்வனுக்கு மட்டுமே உண்டு என்று வலியுறுத்தப் படுகிறது.

    இப்பாடலில் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி இவ்வாறு கூறுகிறான்:

    “இதோ அம்பு செலுத்த ஆயத்தமாகிவிட்டேன். அதற்குமுன் பசுக்களும், பார்ப்பனரும், பெண்களும், இறந்தோர் கடன்முடிக்கப் பிள்ளை பெறாதவர்களும் விலகியோடிப் பாதுகாப்பு தேடிக்கொள்ளுங்கள்!” (புறம்: 9).

    “ஆவும், ஆனியல் பார்ப்பன மாக்களும்

    …………………………………………….

    தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

    பொன்போல் புதல்வரைப் பெறாதீரும்

    ……… நும் அரண் சேர்மின்”.

    பல யாகசாலைகள் நிறுவி வேள்விகள் நடத்த உதவிய அந்த மன்னனைப் புகழும் புலவர் வைதிகச் சார்பினர் என்று கொள்ளலாம். இவர் இறுதிச் சடங்கில் புலையனின் முக்கிய இடத்தை மறுத்துவிடுகிறார்.

    செத்தவனுக்குக் கொடுக்கப் படும் உணவுதான் அவனது எதிர்கால வாழ்வைப் பாதுகாக்கும். இந்த மிக முக்கியமான சடங்குதான் இப்புறப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது என்கிறார் உ.வே.சா. ஆனால் புறநானூற்றில் இரண்டு பாடல்களில் (360, 363) பிண்டம் கொடுக்கும் சடங்கைப் புலையன் செய்ததாக வந்துள்ளது. அன்று தமிழகத்தில் வந்து குடியேறியிருந்த வைதிகர் பார்வையில் இது படுபயங்கரமான பாவமாகும். இருந்தாலும் எதிர்ப்புக்குரல் மிக பலவீனமாகவும், மறைமுகமாகவும்தான்

    ஒலிக்கிறது. புலையன் பிண்டம் தரலாகாது என்று நேரடியாகத் தடை செய்வதற்குப் பதில் புதல்வனைப் பெறாதோர்க்குக் கதிமோட்சமில்லை என்று நுட்பமாக உரைக்கிறது; புலையனின் இடத்தில் புதல்வனை வைக்கிறது.

    புலையர்குடியினர் இறந்தோரை வைத்துப் புதைக்கும் முதுமக்கள்தாழியையும் செய்பவர்களாக இருந்தனர். எனவே சுடுகாட்டில் புரோகிதம் செய்வது மட்டுமன்றி இடுகாட்டிலும் இவர்கள் பணி இன்றியமையாததாக இருந்தது. இறுதியடக்கம் செய்ய உதவுவதை இழிவானது என்று நாகரிகம் படைத்தவர்கள் நினைக்கமாட்டார்கள்.

    சுடுகாடு மற்றும் இடுகாடு குறித்துப் பார்ப்பனியத்தில் உள்ளதுபோல் அருவருப்பு அடைவது அர்த்தமற்றதாகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இத்தகைய நல்ல நாகரிகம் இருந்தது. பார்ப்பனியப் பண்பாட்டால் இந்நாகரிகத்தை நாம் இழந்தோம்.

    “கலம்செய் கோவே, கலம்செய் கோவே! வண்டிச் சக்கரத்தில் ஒட்டிக்கொண்டு வந்த பல்லி போல, என் கணவனோடு பல ஆபத்தான பாதைகளைக் கடந்து வந்தேன். ஆனால் அவனோ இன்று இறந்துபோனான். அவனைப் புதைக்க ஒரு ஈமத்தாழி செய்து எனக்குத் தந்தருள். அதையும் சற்றுப் பெரியதாகச் செய்துவிடு– எனக்கும் அதில் இடம் இருக்குமாறு.” இப்படி ஒரு புலையரை இறைஞ்சுகிறாள் ஒரு புறநானூற்றுப் பெண்.

    இது ஓர் அற்புதமான புறப்பாடல் செய்தி (எண்: 256). இதைவிட அற்புதம் ஒரு கைவினைஞன் போற்றப்பட்டு “கோ” என அழைக்கப் பட்டிருப்பது. “அருள்கூர்ந்து தாழியைச் செய்துதா,” என்று புலையனான அவன் தயவு கோரப்படுகிறது.

    இவையனைத்தையும் தொகுத்துப் பார்க்கும்பொழுது பழந்தமிழகத்தில் புலையர் போற்றப்பட்டிருந்தமை புலனாகும் .இவர்கள் பொதுவாகப் பறையர் ,பாணர் முதலிய குடிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.குடிமக்களும் ,மன்னர்களும் தமக்குள்ள எத்தனையோ மாறுபாடுகள் இருந்தாலும் இப்புரோகிதரைப் பெரிதும் மதித்தார்கள்.

    மெகஸ்தின் என்னும் கிரேக்கர் சந்திரகுத்த மயூரனின் அரண்மணையில் கி. மு. 302-முதல் சிலகாலம் தங்கியிருந்தார். இவர் இந்தியாவைப்பற்றிய ஒரு நூல் எழுதியிருந்தார். அதிற் காணப்படும் சில பகுதிகள் அக்கால இந்திய மக்களின் வாழ்க்கை முறைகளை நன்கு விளக்குவன. அவர் கூறுவன :

      இந்தியர் ஏழுவகையாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். தத்துவசாத்திரத்தில் தேர்ந்த ஒரு கூட்டத்தினர் முதற் குலத்தினராகக் கொள்ளப்பட்டனர். மற்றைக் கூட்டத்தினரைவிட இவர்களின் தொகை குறைவாயிருந்தது. இவர்கள் எசமானராகவோ வேலைக்காரராகவோ இருக்கவில்லை. மறு உலகத்திற்குரிய பொருள்களை எல்லாம் இவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள் என மக்கள் நம்பினார்கள். ஆகவே, அவர்கள் இவர்களைப் பிணச்சடங்குகள் புரிவதற்கும் உரிய காலங்களிற் கடவுட்பலியைச் செலுத்துவதற்கும் அழைத்தார்கள். இவ்வகைக் கிரியைகள் புரிவதற்குக் கைம்மாறாக இவர்கள் மிகுந்த பொருளைப் பெற்றனர்.(தமிழ் இந்தியா – யாழ்ப்பாணத்து நவாலியூர்திரு.ந.சி.கந்தையா பிள்ளை, ப -89)

    அப்படியெனில் தொல்காப்பியர் குறிப்பிடும் நூல் என்பது எப்படி பூணூல் எனக் கருதப்பட்டது?

    தொல்காப்பியர் குறிப்பிடும் அந்தணர் என்பவர் யார்?

    அப்படியெனில் தொல்காப்பியத்தில் பிற்காலத்தில் வருணம் தொடர்பான பாடல்கள் இடைச்செருகல்கள் செய்யப்பட்டனவா?

    எனில் தொல்காப்பியத்தில் இடைச்செருகல் – எவை

     தொல்காப்பியத்தின் ஒவ்வொரு இயலிலும் நூற்பாக்கள் ஒழுங்காக அடுக்கப்பட்டுள்ளன.

     இந்த ஒழுங்கடுக்கில் தொடர்பில்லாத சில நூற்பாக்கள் இடையில் வருகின்றன.

     அவற்றை அறிஞர்கள் இடைச்செருகல் எனக் குறிப்பிடுகின்றனர்.

    அகத்திணையியலில்,

    ‘மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே’ என்றும்,

    புறத்திணையியலில்,

    ‘அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்

    ஐவகை மரபின் அரசர் பக்கமும்

    இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்’  என்றும்

    கற்பியலில்,

    ‘மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்

    கீழோர்க்காகிய காலமும் உண்டே’ என்றும்

    பொருளியலில்,

    ‘பரத்தை வாயில் நால்வர்க்கு முரித்தே’ என்றும்,

    எழுத்ததிகாரத்தில் எழுத்தை உச்சரிக்கும் ஒலியளவுக்கு இலக்கணமாக,

    ‘அளபின் கோடல் அந்தணர் மறைத்தே’ என்றும் சொல்லப்பட்டுள்ளது.

    இவ்வாறாக, மரபியல் தவிர வேறுபல இயல்களிலும் நால் வர்ணம் தொடர்பான, பிராம்மணரின் மறை தொடர்பான சுட்டுகள் உள்ளன..இவற்றை குறித்த தமிழாய்வாளர்களின் கருத்துக்கள்

    1.முனைவர் சி இலக்குவனார் தம் ஆங்கில மொழிபெயர்ப்புத் தொல்காப்பிய நூலில், மரபியல் பகுதியில் 24 நூற்பாக்களை உடுக்குறி(*)யால் இடைச்செருகல் எனப் பாகுபடுத்தியுள்ளார்.

    மக்களில் பிறப்பால் வரும் நான்கு வருண உடைமைகளைக் கூறும் நூற்பாக்கள் 15 (71-85)

    செய்யுளியலில் கூறாமல் மரபியலின் இறுதியில் தொடர்பில்லாமல் சேர்க்கப்பட்டிருக்கும் 9 நூற்பாக்கள்ஆக  24 நூற்பாக்கள் இடைச்செருகல் என்கிறார். மேலும், அகத்திணையியலில் பிரிவைப் பற்றிச் சொல்லும்போது, 13 நூற்பாக்களில் (24 முதல் 36) குலப் பிரிவு சேர்க்கப்பட்டுக் குழப்பம் செய்யப்பட்டுள்ளது. இவையும் இடைச்செருகல்கள் என்பது தெளிவு என்றும்இவை இடைச்செருகல்களேஎன்பதை உரையாசிரியர்களின் மேற்கோள்களால் அறியலாம்.சங்கநூல் பாடல்களில் இவற்றிற்கான மேற்கோள் பாடல்கள் இல்லாமல் பண்டைய உரையாசிரியர்களே புறப்பொருள் வெண்பாமாலை, யாப்பருங்கல விருத்திமுதலான பிற்கால நூல் தரும் பாடல்களைத் தருகின்றனர்என்றும் விளக்கம் தருகிறார்.

    2.அகத்திணையியலில் மக்களை ஆயர், வேட்டுவர் எனப் பகுத்துக் காட்டும் பகுதி தொல்காப்பியருடையது. சங்கப்பாடல்களில் இத்தகைய பாகுபாடுகளே உள்ளன. நால்வர், உயர்ந்தோர், பின்னோர் எனக் கூறும் 6 நூற்பாக்கள் இடைச்செருகல்.

    மரபியலில் ஆண், பெண் விலங்கினங்களின் பெயரைக் கூறிய பின்னர், புல் மர வகைகளின் இலை, பூ, காய் வகைகளை விளக்குவதற்கு முன்னர் இடையில் அந்தணர், அரசர், வைசியர், வேளாண்-மாந்தர் ஆகியோரைப் பற்றிப் பேசும் 15 நூற்பாக்கள் இடைச்செருகல்கள்.

    மேலும் ஆங்காங்கே சங்க காலத்துக்குப் பிற்பட்டபழக்க வழக்கங்களைக் கூறும் சிறுசிறு மாற்றங்கள் தெளிவாகத் தெரிக்ன்றன.வைசிகன் என்னும் சொல் சங்கநூல்களில் இல்லை. வணிகன் என்னும் சொல்கூடப் பிற்காலத்தில் சங்கநூல்களைத் தொகுத்தவர் சூட்டிய புலவர் பெயர்களில் மட்டும் வருகின்றன.வேளாண்-தர் ன்னும்    ர““தந்மா ல்லாட்சியும்சொ

      .சங்கநூல்களில் இல்லை.. வேளாண்-சிறுபதம் வேளாண்-வாயில்  போன்ற ஒருசில சொற்களும் வேளாண்மைத் தொழிலைக் குறிப்பன அல்ல.வேளாண்மை  என வரும் சொல்கூட உதவி செய்தல் என்னும் பொருளில் மட்டுமே வருகிறது.இந்த நான்கு-சாதிப் பாகுபாட்டைக் காட்டும் குறிப்புகள்கூடச் சங்கநூல்களில் இல்லை. •  INDEX DES MOTS DE LA LITERATURE TAMOULE ANCIENNE (1970) (சங்கநூல் சொல்லடைவு) முயற்சி இல்லாமல் பெற்ற சிற்றுணவு-நீர் -புறம் 74,கொடை வழங்கும் வாயில் பொருநராற்றுப்படை அடி 75 , கலித்தொகை (101-44) (திருக்குறள் 212) எனவே இந்த சான்கு-சாதிப் பாகுபாட்டு முறைகளைக் காட்டும் நூற்பாக்கள் தொல்காப்பியத்தில் செருகப்பட்டவை.செருகப்பட்டுள்ள இடமும் மேலும் கீழும் உள்ள நூற்பாக்களைப் பார்க்கும்போது மரபியல் சொற்களுக்குத் தொடர்பில்லாதவை என்பது விளங்கும். நன்றி.விக்கிப்பீடியா.

    3.மின்தமிழ் என்னும் இணையக்குழு விவாதத்தில் சேசாத்திரி ஸ்ரீதரன் என்பவர், “மரபியலில் நால்வகை வருணம் இடம் பெற்றிருப்பது இடைச்செருகல் ஆகும். தொல்காப்பியர் எழுதியதில்லை அது. அச் செய்திகளில் கூறப்படும் இடம், சூழல் ஆகியவற்றை காணும் போது அது இடைச் செருகல் எனத் தெற்றெனத் தெரியும்.தொல்காப்பியம் பொருளதிகார மரபியலில் உயிரினங்களை, அவற்றின் பெயர்களை விளக்கிக் கொண்டு வரும் போது 71 ஆவது நூற்பாவாக  வருணம்  பற்றிய செய்தி வருகிறது. அதிலிருந்து 85 ஆவது நூற்பா வரையிலும் அது தொடர்பான செய்திகளே கூறப்படுகின்றன. 86 ஆவது  நூற்பா, விடுபட்டுப் போன மரபியலின் தொடர்ச்சியாக ‘புறக் காழனவே புல்லெனப்படுமே’  என விளங்குகிறது. அறிவியல் செய்திகளுக்கு ஊடாக சமூகவியல் கொள்கை இடம் பெற்றிருப்பது முற்றிலும் பொருத்தமாக இல்லை. எனவே, வருணம் பற்றிய தொல்காப்பியர் காலத்தில் ஆரியப் பார்ப்பனர்கள் சமூகச் செல்வாக்கு பெற்ற ஒரு பிரிவாக இல்லவே இல்லை. எனவே தொல்காப்பியர் நால் வருணம் பற்றி பேச வாய்ப்பில்லை. இடைச்காலத்தைச் சேர்ந்த பாறை ஓவியங்கள் கிடைத்துள்ளன. அதில் உள்ள உருவங்கள் சிலவற்றில் பூணூல் போன்று மார்புக்குக் குறுக்கே வரையப்பட்டுள்ளது. அது பூசாரிகளின் ஓவியங்களாக இருக்கலாம் என அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், பூணூல் அணிதல் என்பது சூரிய வழிபாடு தொடர்புடைய ஒரு மதச் சின்னம். இஸ்லாமியர்கள் தலையில் குல்லாய் அணிவது போல இது ஒரு மதச் சின்னம் அவ்வளவே.

    பிரவாஹன் என்பவர்,தொல்காப்பியம் புறத்திணை-இயல்  பார்ப்பன பக்கம், அரசர் பக்கம், ஏனோர் பக்கம் – என்னும் பாகுபாடுகள் தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்திலேயே பார்ப்பனரின் முதுகில் பூணூல் மாட்டப்பட்டு விடுகிறது.” என்கிறார். http://www.sooddram.com/Articles/otherbooks/Mar2013/Mar252013_Tamilenthi.htm.

    உண்மையில் தொல்காப்பியர் குறிப்பிடும் நூல் பூணூல்தானா? என்றால் இல்லவே இல்லை என்பதே ஆய்ந்தபின் கிடைத்த பதில்.

    தொல்காப்பியர் குறிப்பிடும் நூல் பூணூலே அல்ல

    தொல்காப்பியர் குறிப்பிடும் நூல் என்பதை பூணூலாகக் கருதியதன் விளைவே இச்சர்ச்சைகளுக்குக் காரணம்.பெரும்பாலும் உரையாசிரியர்கள் அனைவரும் நூல் என்பதற்குத் தோளில் அணியும் பூணூலையேக் குறிப்பதாகக் கருதி உரை வகுத்துள்ளனர். அதை அடிப்படையாகக் கொண்டே விவாதங்களும் நிகழ்த்தப்பட்டுள்ளன. ஆனால், பூணூலைத்தான் நூல் என்ற சொல் குறிக்கிறதா எனபதை சங்கப் பாடல்களைக் கொண்டு ஆராய்ந்தால், நூல் என்னும் சொல் பூணுலைக் குறிக்கவேயில்லை என்பது தெளிவாகப் புலப்படும்.

    நூற்பாவினை ஊன்றிக் கவனமாகப் படித்துப் பார்த்தால் ஒரு செய்தி புலப்படும். தொல்காப்பியர் கையில் எடுத்துச்செல்லும் பொருட்களைத்தான் பட்டியலிடுகிறார்.

    நூலே கரகம் முக்கோல் மணையே

    ஆயுங் காலை அந்தணர்க் குரிய (தொல்.3: 615)

    அந்தணராக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி பூணூலைக் கையில் எடுத்துச் செல்ல மாட்டார்கள். தோளில்தான் அணிவார்கள்.ஆனால்,தொல்காப்பியர்,அந்தணர் கையில் எடுத்துச் செல்லும் பொருட்களாக நூல், கரகம், முக்கோல், மணை முதலானவற்றைக் குறிப்பிடுகிறார்.

    கையில் நூலை எதற்காக எடுத்துச் செல்ல வேண்டும்?

    நூலை அடுத்து கரகம் இடம் பெற்றிருப்பதால், அது கரகத்தை எடுத்துச் செல்வதற்குரிய நூலையேக் குறிக்கிறது.சங்க இலக்கியப் பாடல்களில் இதற்கு சிறப்பான உதாரணம் உள்ளது. பல மெல்லிய நூல்களைக் கொண்டு முறுக்கப்பட்ட கயிறு ‘புரிநூல்’ என்று அழைக்கப்பட்டுள்ளது. இப்புரிநூல் சிறிய பொருட்களைக் கட்டி எடுத்துச் செல்வதற்கு உறியாகப் பயன்பட்டுள்ளது

    முனிவர்கள் ‘கரண்டை’ எனப்படும் சிறிய பானையை நீர் எடுத்துச் செல்லப் பயன்படுத்தியுள்ளனர். இக்கரண்டையானது கல்லில் பொத்தல் ஏற்படுத்தினாற் போன்ற சிறிய வாயினை உடையது. கரண்டை கீழே சாய்ந்தாலும் சிறிய அளவு நீரே வீணாகும். இக்கரண்டை எனப்படும் சிறிய பானையைப் பல வடங்களுடையப் புரி நூலால் செய்யப்பட்ட உறியில் வைத்துக் கையில் எடுத்துச் சென்றுள்ளனர். பல வடமுடையப் புரிநூலால் ஆன உறியானது ‘சிமிலி’ என அழைக்கப்பட்டுள்ளது.

    “”””கல்பொறிந்தன்ன இட்டு வாய்க் கரண்டைப்

    பல்புரிச் சிமிலி நாற்ற நல்கி வர”” (மதுரைக் காஞ்சி. 483-484)

    கல்லினால் பொத்தல் ஏற்படுத்தினாற் போன்ற சிறிய வாயினையுடைய கரண்டை எனப்படும் சிறிய பானையைப், பல புரிகளுடைய நூலைக்கொண்டு கட்டி, அந்நூலை கையால் பற்றிய படி எடுத்துச்சென்றனர் என்பது இதன் பொருளாகும். இந்நூல் சிமிலி என்றழைக்கப்பட்டுள்ளது. (கையில் எடுத்துச் செல்லும் விளக்கையும் சிமிலி என அழைத்திருக்கலாம். அதுவே, ஆங்கிலத்தில் சிம்னி என வழங்கியிருக்கலாம்.)

    மணிமேகலை ‘சிமிலியில்’ கரண்டை எனப்படும் பானையை வைத்து எடுத்துச் செல்லும் முனிவர்களைச் ‘சிமிலிக் கரண்டையான்’ (மணி. 3: 86) எனக் கூறுகிறது.

    கலித்தொகை ‘உறித் தாழ்ந்த கரகம்’(கலி.9) என இதைப் பதிவு செய்துள்ளது. கரகம் என்பது கரண்டையாகும் (சிறிய பானை).

    “எறித்தரு கதிர்தாங்கி   ஏந்திய குடைநீழல்

     உறித்தாழ்ந்த கரகமும்   உரைசான்ற முக்கோலும்

     நெறிப்படச் சுவல்அசைஇ  வேறோரா நெஞ்சத்துக்

     குறிப்பேவல் செயல்மாலைக்    கொளைநடை அந்தணீர்” (பாலைக்கலி.9)

    என்ற வரிகளால் இதைஅறியலாம்.

    தொல்காப்பியர் எங்குமே தோளில் அணியக்கூடிய நூலைப் பற்றிக் குறிப்பிடவில்லை. கையில் எடுத்துச்செல்லும் நூலையே குறிப்பிடுகிறார் என்பதை இதிலிருந்து அறியலாம்.

    தொல்காப்பியரின் ” வினையின் நீங்கி விளங்கிய அறிவின்

    முனைவன் (640.641.தொ.பொருள்) என்ற நூற்பாவின் மூலம் பிறப்பாலல்லாமல் தகுதியாலும், புலமையாலும், துறவுத் தன்மையாலும், கற்றறிந்தஅறிஞரையே அந்தணர் என்று கருதியுள்ளார் எனலாம். எவ்வருணத்தாராக இருந்தாலும்,துறவு மேற்கொண்டுள்ளவர்கள் அந்தணர்கள் என அழைக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் கையில் எடுத்துச்செல்லும் பொருட்களாக உறிநூல், சிறிய பானை, முக்கோல்,மனை போன்ற பொருட்கள் இருந்துள்ளன.பிற்காலத்தில் மண்பானையை விடுத்து, பித்தளை மற்றும் செம்பு போன்ற பொருட்கள் புழக்கத்தில் வந்த காலத்து அவ்வுலோகங்களினால் ஆன கைப்பிடிகள் தூக்கிச்செல்வதற்கேற்ற வகையில் கரகத்தில் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

    முடிவுரை

    தொல்காப்பிய மரபியல் நூற்பாவில் காணலாகும் ஒரு சொல்லிற்கு உரையாசிரியர்கள், சாதி மற்றும் வருணச்சாயம் பூசி,அதில் தங்கள் கருத்தை ஏற்றிப் பலவாறாகப் பொருள் கொண்டுள்ளனர். இது தொடர்பாக இன்னும் விவாதங்கள் நடந்தபடியே இருப்பதுதான் பெரு வியப்பு. நடுநிலைமையோடு அணுகியிருந்தால் தொல்காப்பியர் குறிப்பிடும் நூல் என்பது கரகம் எடுத்துச்செல்ல உதவும் உறிநூலே என்பது தெற்றன விளங்கும்.

    காந்தியார் தன் சுயசரிதையில் “சூத்திரர்கள் பூணூல் அணிந்து கொள்ளக்கூடாது என்றால், மற்ற வருணத் தாருக்கு மட்டும் அதை அணிந்து கொள்வதற்கு என்ன உரிமை இருக்கிறது என்று அவர்களுடன் வாதாடினேன். பூணூல் அணிந்து கொள்வது தேவையற்ற பழக்கம் என்பது என் கருத்து. சமயங்கள் பல இருந்து வரும் வரையில், ஒவ்வொரு சமயத்திற்கும் வெளிப்படையான சின்னம் ஏதாவது அவசியமாக இருக்கலாம். ஆனால், அந்தச் சின்னமே பிரமாதமாக்கப்பட்டு, இன்னொரு மதத்தை விட தன் மதமே உயர்வானது என்று காட்டுவதற்கு அது பயன் படுத்தப்படுமாயின் அப்பொழுது அச்சின்னம் புறக்கணிக்கப்படுவதற்கே ஏற்றதாகும்.ஹிந்து சமயத்தை மேன்மைப் படுத்துவதற்கான சாதனமாக பூணூல் உள்ளது என்று எனக்குத் தோன்றவில்லை. ஆகையால், அதில் எனக்குக் கவலையும் இல்லை”என்கிறார். தொல்காப்பியர் “வினையின் நீங்கி விளங்கிய அறிவு”(தொல். மரபு. 95)  எனக் குறிப்பாக உணர்த்துவதில் இருந்து யாரும் முனைவனாக வரலாம் என்பது தெரிகிறது. இது பிறப்பில் அல்லாமல் அறிவாற்றலில் உள்ளது என்கிறார். எனவே, தொல்காப்பியர் குறிப்பிடும் நூல் என்பது பூணூல் அல்ல என்பது தெளிவு. நூல் என்று மரபியலில் குறிப்பிடும் சொல் கையில் எடுத்துச் செல்லும் நூலையேக் குறிப்பதால் அது கரண்டையைத் தாங்கும் நூலாக இருக்கலாம் அல்லது ஓலைச் சுவடியாக இருக்கலாம்.

    Share
  • என்கவிதைகள் – அரவாணிகள்

    முனைவர் ஜ.பிரேமலதா,

    தமிழ் இணைப் பேராசிரியர்,

    அரசுகலைக் கல்லூரி,

    சேலம்-7

     

    Evening-Tamil-News-Paper_19744074345

    தெய்வத்திற்கும் மனிதர்க்கும் 
    தொடர்பு ஏற்படுத்த கடவுளால்
    போடப்பட்ட உறவுப்பாலங்கள்!

    சக்தியின் வடிவானவர்களுக்கு
     உறவுகள் அனைத்தும்
    சக்தியின் வடிவங்களே!

    பெறுவதால் பேறு பெற்ற தாயர்க்குமுன்
    இழப்பதால் வீடு பெறு பெற்ற
    தாயம்மாக்கள்!

    வாழ்வாதாரங்கள் தொடர்ந்து
    மறுக்கப்பட்டபோதும்
    இருப்பியலுக்குப் போராடும்
    ஆதிப்போராளிகள்!

    வர்த்தக நோக்கம் கொண்டோர்க்கு
    புரிந்தாலும் புரியாது
    இறைவனே விரும்பி மேற்கொண்ட
    இவர்களின் வித்தகக் கோலம்!

    ஆண்பாலாய்ப் பிறந்து
    பெண்பாலாய் உணர்ந்து
    பலர்பாலாய் மாறிய
    உயர்பிறப்புகள்!

    தாயின் கருவறையில்
    அனைத்து மனிதர்களும்
    முதல் ஆறுவாரம்
    பெண்ணினமே!

    ஒவ்வொரு
    ஆணுக்குள் பெண்மையும்
    பெண்ணுக்குள் ஆண்மையும்
    இயற்கை அளித்த பெருவரம்!

    y குரோமோசோமும்
    டெஸ்டோஸ்ட்ரோனும்
    ரிசெப்டரும் முறைதவறுவதால்
     உருவாவதே மூன்றாம் பாலினம்!.

    தாயின் கருவறை மரபணுவை
    வீரியமிழக்கச்செய்யும்
    அண்ணன்களின் மரபணுவும்
    தம்பி அரவாணியாக ஒரு காரணம்!. 
    எங்கும் உள்ளது  அரவாணியம்
     எழுத்து வகையில் ஆய்தம்!
    சொல்நிலையில் இடையினம்!
    திணையிலோ முறைமையில் திரிந்த பாலைகள்!

    இவர்கள் பாக்களிலோ மருட்பா!
    பூக்களிலோ வாடாமல்லி!
    தெய்வத்திலோ அர்த்தநாரி!
    மனிதரிலோ பால் கடந்த ஞானிகள்!

    மல்லாக்கப்படுத்து எச்சில் துப்பும்
    ஒன்பது வாயில் கொண்ட
    மனிதர்க்கு மட்டுமே இவர்கள்
    எண்களில் ஒன்பது!

    சாதி,மதம்
    பால், இனம் கடந்த
    இவர்கள் தான் உண்மையிலேயே
    மகத்தான மானுடர்கள்!

     

    —————————————————————————————————————————————————-

    நான்  யார்?
    மழலை பேசிய நாட்களில்
    எடுத்த புகைப்படங்களில்
    அதிகம் கவர்ந்தவை
    தலைசீவி மட்டை வைத்து
    பூ அலங்காரம் செய்த
    பாவடை சட்டைக் கோலம்!

    கண் நிறைய அப்பப்பட்ட
    மையையும் மீறி வெளிப்பட்டன
    பிஞசு முகத்தில்
    அம்மா திணித்த
    அலங்கார ஆசைகள்!

     

    தன் கல்யாணக் கனவுகளை
     வெளிப்படுத்த இவனுக்கும்
    பள்ளி நாட்களில்
    அழகான கைகளென்று இழுத்து
    அக்கா வைத்த மருதாணிப்பூச்சு
    சிவக்க வைத்தது இருவரையும்!

    அக்காவிற்கு கிடைத்த
    பெண்பிள்ளைகளுக்கான
    ஓசிச் சைக்கிளில்
     பழக்கிவிட்ட
    அப்பாவிற்கும் தெரியாமல்
    படர்ந்து விட்டன ஆசைக்கிளைகள்!

    அனைவரின் விருப்பத்திற்கும்
    இணங்கிப் போய்…
    பருவவயதில் தனக்காக வாழ
    மஞ்சள் தேய்த்து
    பாவாடை தாவணி உடுத்திய
    போது கிடைத்ததோ

     

    வசவும் சாட்டையடியும்!
    உடன் பயின்ற தோழர்களோ
    வேற்றுமை கண்டும்
    தோழியரோ ஒற்றுமை கண்டும்
    ஒJங்கிய நிலையில்
    அவனுள் நொறுங்கிப்போனது
    உலகமென்ற ஏதோவொன்று!

    நான் யார்….?
    திரிகால ஞானிகளும்
    கண்டுணர முடியாத தொடர்ந்த
    கேள்விகளினால்
    பாழாகிப்போனது பாழாய்ப்போன
    பள்ளிப்படிப்பு!

    நான்  உடலா…? உள்ளமா?
    சித்தர்களும் விடைதேட  காட்டிற்குள்
    ஓடிய நிலையில்
    ஓடாமலிருக்க
    ஒளித்து ஒளித்து
    வாழ்ந்த வாழ்க்கை
    சந்ததிகளினால் 
    பிழையாகிப்போனது!

    குடிகார அப்பாவுக்கும்
    முதிர்கன்னி அக்காவுக்கும்
    தாயாயிருந்தும் தாய்மையில்லாத
    அவனை வெறுக்கும் தாய்க்கும்
    இடமுண்டு அவனுக்கு
    இடமில்லாத வீட்டில்!

    ஆண் உடல் – பெண்தன்மை
    பாலறியாமல்  ஐயுற்று குழம்பி
    அறிவு பேதலித்து உடல் நலிவுற்று
    உறவினர் வரும்போது
    கழிவறைக்கு விரட்டபட்ட நிலையில்
    உணர்ந்தான் அவ்வீட்டில்
    தன்னை ஒரு மலமாய்!

    கண்டும் காணாத உறவுகளினால்
    காணாமலே போய் விட்டான்.
    உடலாலும் மனதாலும்
    வெந்து நொந்து….  மகளாய்
     பாசம் காட்ட ஆளிருந்தும்
     பெற்ற பாசம் துரத்த
    ஓடினாள் வீடு தேடி…!
    வாசலில் அவன்….. அவளாக
    அதிகாலை இருட்டில் .
     பாம்பைக் கண்டதுபோல்
    உள்ஓடி கதவடைத்த ஓசை
    அவள் பாடிய தாலாட்டையும் மீறி
    ஒப்பாரியாய் வந்து விழுந்தது 1

    அவ்வோசை அவனின்
     உயிர்நரம்புகளை மட்டுமா அறுத்தது
    கோடானுகோடி ஆண்டுகளாய்
    தாயின் மீது கட்டமைக்கபட்ட
    அத்தனை
    புனைவுகளையும்தான்!

    தவமிருந்து பெற்ற ஒற்றை ஆண்பிள்ளை
    தாயுமில்லை தந்தையில்லை
    நான் தனியன் என்று
    கடைகடையாய்
    கைதட்டி பிச்சை கேட்குமென்று
    யார்தான் நினைத்திருப்பார்?

    சாபமுமில்லை….
    ஊனமுமில்லை….
    இருத்தலியல் சிக்கல்
    பிறந்த அனைவருக்குமிருக்க
    சாதித்துவிட வேண்டுமென
    தினவெடுத்தன அவள் தோள்கள்!

    பிச்சை, பாலியல் தொழில் மறுத்து
     முப்பெரும் கடவுளின்
    முதற்தொழிலை…..
    அன்னம் படைத்தலை
    முனைப்போடு மேற்கொள்ள
    ஆரம்பமாயிற்று போராட்டம்!

    அன்புச்செழியன்
    அன்னலட்சுமியானாள்
    அரவாணியர் சுயஉதவிக்குழு
    அரவாணியர் கலைக்குழு
    அரவாணியர் குழந்தைகள் காப்பகம்
    அரவாணியர்  முதியோர் காப்பகம்
    அரவாணியர் பணிமகளிர்சங்கம்
    அரவாணியர் காப்பகப்பள்ளி….

    இருபதாண்டுகள்
    இணையற்ற விருதுகள்,உறவுகள்
    இணையில்லா பெருமைகள்
    எனினும் நெஞ்சில் ஏக்கங்கள்
    வந்தவழி நினைத்து
    பயணிக்க ஏங்கும் பாதங்கள்!

    கூத்தாண்டவரின் பாதங்களில்
    கண்ணீரால் கரைக்க முயன்றும்
    கரையாத பாறைகள்.
    கண்மூடி திறந்தாலோ இரத்தவழி உறவுகள்..
    தத்தெடுத்த பிள்ளைகள் தாங்கி நின்றாலும்
    ஒரு மகனாய் ஏங்கிய பாச நினைவுகள்!

    முப்பதாண்டு …
    முனைப்புகள் கூர்மையாகி
    வாசலிலே நின்றுவிட்டாள்
    புறத்தில் மாறாத பழைய வீடு
    பயத்தோடு கதவுதட்டி காத்திருக்க
    காப்பவளே இப்போது யாசகனாய்…!

    யார் வேணும்?இடுங்கிய கண்களோடு
    உள்ளிருந்து வந்த தேய்நத குரலுக்கு…
    “அன்னலட்சுமி…அன்புச்செழியன்….”
    வா என்ற சொல்லுமில்லை
    வாஞ்சையோ சிறிதுமில்லை
    வேதனை மென்றிட
    மரணத்தைப் பார்த்துவிட்டாள்!

    கால்களோ மறத்துவிட
    மறந்துவிட்டாள் காலெடுத்து வைப்பதற்கு.
    ஆனாலும் உள்ளிருந்து கிழிந்தசேலையும்
    இடுங்கிய கண்களும்
    தேகமென்று ஒரு  குச்சி  நடந்துவர
    இருள் ஒளியானது .

    சொல்லாமல் சொல்லின
    இவர்களின் இருப்பை….
    அவனை விரட்டிய கௌரவம்
    அவர்களையும் விரட்டி விட்டதென்று.
    இறுக்கம் உடைந்து இரங்கிய பேச்சில்
    பசி அவர்களை தத்துதெடுத்து
    ஆண்டுகள் பல ஆயிற்றென்று.

    கைநீட்ட வைத்த
    அப்பாவின் குடிப்பழக்கம்
    கம்பி எண்ண வைத்ததோடு
    வேலையையும் பறித்துவிட
    நின்றபோன அக்காவின்
    காலம் கடந்த திருமணம்,

    மகளோடு சுமந்த தாயின்
    பொருளாதார சுமை உணராது
    காசநோய் அப்பாவைப்
    படுக்கையில் தள்ளிவிட
    நடைப்பிணமாய் மாறிப்
    போனது அவர்களின்  வாழ்க்கை.

    கேட்ட கதைகள் அத்ததனைக்கும்
    தன் சோகத்தையும் மறந்து கண்ணீர் விட்டாள்.
    அவள்பட்ட வேதனையும்
    அவளைச்சோதித்த சோதனையும்
    நினைத்துப் பார்க்கத் தெரியாத
    பெரியமனசுக்காரி!

    தான் சாபம் விடாதபோதும்
    தெய்வம் தணடித்துவிட்டதென
    நினைக்கக் கூடத்தெரியாத
    அரவாணி  அன்னலட்சுமி
    பெற்றவர்களைத்
    தத்தெடுத்துக் கொண்டாள்!

     

     

     

     

    Share
  • பிள்ளைத்தமிழ் இலக்கியங்களில் ஆடை அணிகலன்கள்

    முனைவர் ஜ.பிரேமலதா,
    தமிழ் இணைப் பேராசிரியர்,
    அரசு கலைக் கல்லூரி(தன்னாட்சி),
    சேலம் -7

    முன்னுரை

    மனிதன் நிலைத்த ஒரு வாழ்க்கையைத் தேடிக் கொண்ட நிலையில், ஆடை அணிகலன்களையணிந்து தன்னை அலங்கரித்துக் கொள்வதில் ஆர்வம் காட்டினான். இருபாலருக்கும் தன்னை அலங்கரித்துக் கொள்வது பொதுவான இயல்பாகும்.

    வேட்டைச் சமூகத்தில் குழுவாக வாழ்ந்த காலத்தில் காலத்தில் மனிதன் இலை, தழைகளை ஆடையாக உடுத்திக் கொண்டான். பூக்களை அணிகலன்களாக அணிந்து கொண்டான். இயற்கையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு கழுத்திலும், தலையிலும், கைகளிலும், கால்களிலும் சூடி விதவிதமாக அலங்கரித்து மகிழ்ந்தான். பின்னர் விலங்கின் தோலையும், பஞ்சு கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் பருத்தி ஆடையும் அணிந்தான். சங்கிலான அணிகலன்களை அணிந்தான். உலோகங்களின் கண்டுபிடிப்பு அணிகலன்களிலும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. இரும்பு, வெள்ளி, பொன் உலோக அணிகலன்கள் பொருளாதார ஏற்றத்திற்கு ஏற்ப அணியப்பட்டன. ஆடைகளிலும் இலை, தழையாடை, பருத்தி, பட்டு ஆடை என பொருளாதார ஏற்றத்தாழ்விற்கு ஏற்ப உடுத்தப்பட்டன.

    புறநானூறு மன்னர்கள் அணிந்திருந்த ஆடை அணிகலன்கள் பற்றியும், ஏழையர் அணிந்திருந்த ஆடை அணிகலன்கள் பற்றியும் இவ்வாறு கூறுகிறது.

    வரையுறழ் மார்பின் வையகம் விளக்கும்
    விரவுமணி யொளிர் வரும் அரவு றாழாரமொடு
    புரையோன் மேனிப் பூந்துகிற் கலிங்கம் (புறம்.398)

    மலை போன்ற தோள்களில், விலை மதிப்புடைய பல மணி கோர்க்கப்பட்ட பாம்பு போன்று வளைந்திருக்கும் ஆரத்தை பூ வேலைப்பாடுடைய கலிங்கம் என்ற ஆடையை மன்னன் அணிந்திருந்ததாக இப்பாடல் கூறுகிறது.

    செல்வ மகளிர் பல வகை மணிக்கள் கோத்த பொன் வடங்கள், பொன்னால் செய்யப்பட்ட சிலம்பு, மேகலை பொன் வளையல் போன்றவற்றை அணிந்திருந்ததாக காரிக் கண்ணனார் (புறம்.253) குறிப்பிடுகிறார். செல்வ மகளிர் ‘மாணிழை மகளிர்’, ‘வாலிழை மகளிர்’ என அணிந்திருக்கும் அணிகலன்களை முன்னிறுத்திக் கூறப்பட்டுள்ளனர். பெரும்பாணாற்றுப்படையும் (327-335) பல்வகை மகளிர் அணிகலன்களைப் பற்றிக் கூறுகிறது.

    ஆனால் ஏழைப் பெண்களோ, பொன், வெள்ளி, இரும்பு அணிகலன்கள் அணியும் வாய்ப்பற்ற வறுமை நிலையில் வாடினர். எனவே வயலில் களையாகப் பறித்துப் போடப்பட்டிருந்த குவளை, ஆம்பல் ஆகியவற்றின் தண்டகளைக் கொண்டு வளையல் செய்து அணிந்து கொண்டனர். இதை, ‘கழனி ஆம்பல் வள்ளி தொடிக்கை மகளிர்’ எனப் புறநானூறு (352) கூறுகிறது. பவள வளையல் கிடைக்காத இவர்கள் களையாக தூக்கி எறியப்பட்ட தண்டுகளை அணிந்த காட்சியை
    ‘பவள வளை செறிந்தாட் கண்டு அணிந்தாள் பச்சைக் குவளை பசுந்தண்டு கொண்டு’ பரிபாடல் பரிவோடு பதிவு செய்துள்ளது. ஏழை ஆண்கள் இலை, தழைகளாலும் பூக்களாலும் மடலை, கண்ணி செய்து அணிந்து கொண்டதை

    ‘உவலைக் கண்ணி வன்சொல் இளைஞன்’
    ‘பாசிலை தொடுத்த உவைலக் கண்ணியன்’ (புறம்.54)
    ‘கோட்டவும் கொடியவும் விரை இக்காட்ட
    பல்பூமி டைந்த படலைக் கண்ணியன்’ (பெரும்.173) போன்ற சங்கப் பாடல்கள் காட்டுகின்றன.

    பிற்காலத்தில் தாம் அனுபவிக்கும் சுகவாழ்வு கடவுள் தங்களுக்குக் கொடுத்த வரம் என்ற எண்ணத்தில் கடவுளுக்கும் ஆடை அணிகலன்களை அவரவர் பொருளாதார சூழலுக்கேற்ப அணிவித்து மகிழ்ந்தனர். இதை பிற்கால பக்தி இலக்கியங்களிலும், சிற்றிலக்கியங்களிலும் காணலாம். குறிப்பாக பிள்ளைத்தமிழ் நூல்களில் கடவுளைக் குழந்தையாகப் பாவிக்கும் நிலையில் பல்வேறு ஆடை அணிகலன்கள் அணிவித்து புலவர்கள் மகிழ்ந்து கொண்டாடுவதைக் காண முடிகிறது.

    320970_469624646406535_1624382656_n
    தெய்வம், வள்ளல், அரசனைப் பாடுவதற்கான வரையறைகளில் பிள்ளைத்தமிழ் நூல்களில் பிற்காலத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இறைவன், இறைவி இறையடியவர்கள், வள்ளல்கள், தலைவர்கள், ஆசிரியர்கள் எனப் பாடுபொருள்( பாடப்படுவோர் )எண்ணிக்கை கூடிக்கொண்டே போகும் நிலையைக் காண முடிகிறது. பிள்ளைத்தமிழ் பாடும் முறையில் பருவங்களிலும், பாடல் எண்ணிக்கையிலும் கூட பல மாற்றங்கள் ஏற்பட்டன. பிள்ளைத்தமிழுக்கு மாற்றாக ‘முதுமைத் தமிழ்’ என்ற ஒரு சிற்றிலக்கியமும் உருவாகியுள்ளது.சிற்றிலக்கிய பெருக்கத்திற்கு இதுவும் ஒரு சான்று.

    பாடலமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் போல, பிள்ளைத்தமிழ் நூல்களில் ஆடை, அணிகலன்களிலும் கூட மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இங்கு இறைவன், இறைவி, இறையடியவர், தலைவர்கள் என்ற அடிப்படையில் பத்து பிள்ளைத்தமிழ் நூல்கள் ஆராயப்பட்டுள்ளன.

    1.பகழிக் கூத்தர் – திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்
    2.குமரகுருபர அடிகள் – முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்
    3. கவி வீரராகவர் – கீழ்வேளுர்முருகன் பிள்ளைத்தமிழ்
    4. சிவசூரிய நாராயணன் – சிங்கபுரக் கண்ணன் பிள்ளைத்தமிழ்
    5. குமரகுருபர அடிகள் -மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
    6. காழி ஞானதேசிகர் – அழகிய மாமுலையம்மை பிள்ளைத்தமிழ்
    7.சிவஞான முனிவர் – அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்
    8.த. கோவேந்தன் – திருவில்லபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்
    9. இரா. தேவா – அன்னை தெரசா பிள்ளைத்தமிழ்
    10. புலவர் இராமமூர்த்தி -மணிவேலனார் பிள்ளைத்தமிழ்

    வருணனை

    சங்க கால மாந்தர் குறித்த ஆடை,அணிகலன்கள் பற்றிய வருணனை பிற்கால இலக்கியங்களிலும் தொடர்ந்து வளர்ச்சி பெற்றன. பாட்டியல் நூல்கள் கேசாதி பாதம், பாதாதி கேசம் ஆகிய இரு சிற்றிலக்கிய வகைகளைப் பற்றிக் கூறுகின்றன. இவை மனிதர்களை வருணிக்கும் முறை, கடவுளரை வருணிக்கும் முறை குறித்து இலக்கணம் கூறுகின்றன. இவ்வாறு வருணிக்கும்பொழுது, பெரிதும் ஆடை அணிகலன்கள் பற்றிய வருணனைகளே இடம் பிடிக்கின்றன. தனித்த இலக்கியங்களாக இவை மாற்றம் பெற்றாலும் இன்று வரை அனைத்து வகை இலக்கியங்களிலும் ஒரு மனிதரையோ, கடவுளையோ அறிமுகப்படுத்தும் பொழுது அவர்கள் அணிந்திருக்கிற ஆடை அணிவகைகளைப் பற்றிய வருணனை இடம் பெறுவது தவிர்க்க இயலாததாகியுள்ளது.

    ‘‘பாதாதிகேசம், கேசாதிபாதம், அங்கமாலை 
    கடிதல் இல்லாக் கலிவெண்பா பகரும் அவயவங்கள் 
    முடிவது கேசம் அக்கேசம் முதலடி ஈறும் வந்தால் 
    படி திகழ் பாதாதி கேசமும் கேசாதி பாதமும் ஆம் 
    மடிதல் இல் வெண்பா விருத்தம் பல அங்கமாலை என்னே’’

    என்று நவநீதப்பாட்டியல் இரு சிற்றிலக்கியங்களுக்கும் இலக்கணத்தை வகுக்கின்றது.

    பொதுவாக மனிதர்களை கேசாதி பாத முறையிலும், தெய்வங்களை பாதாதிகேச முறையிலும் வர்ணிக்கிற மரபு தமிழிலக்கியத்தில் உண்டு. ஆனால் பிள்ளைத்தமிழ் தெய்வங்களை, குழந்தையாகப் பாவித்துப் பாடும் மரபுடையது ஆதலால், கவிஞர்கள் கடவுளாகிய குழந்தைகளை வர்ணிக்கும் முறையில் தலையிலிருந்தே வர்ணிக்கின்றனர். குமரகுருபரரின் ஆண்பாற் பிள்ளைத்தமிழில் மட்டும் முருகன் பாதாதிகேச முறையில் வருணிக்கப்படுகிறான். அவரே மதுரை மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழில் அம்மையை கேசாதிபாதமாகவே வருணிக்கிறார்.

    ஆண்பாற் பிள்ளைத்தமிழ்

    கீழ்வேளுர்முருகன் பிள்ளைத்தமிழ் நூலில் செங்கீரைப் பருவத்தில்,
    மணிகிளர் குஞ்சி முடித்திடு முச்சியின் வச்சிர வொளியாட
    மாசறு தேசுறு முத்தியல் சுட்டிறன் மதியுடு வென வாடக்
    கணிதம் லொளிதரு குண்டல மாறிரு கதிரவன் போலாடக்
    கண்ட சரத்தொடு மண்டிய வெழில்வளர் கண்டிகை சூளுமாடப்
    பணிதரு மரதனம் விரவிய கரவளை பலபல விதமாடப்
    பயில்மர கதமிடை யுறுமரை வடமிசை பகர்கிண் கிணியாட
    அணிகிளர் பரிபுர மாட வசைந்தினி தாடுக செங்கீரை (செங்.7)

    என்ற இந்தப் பகுதி முருகனின் கேசாதி பாத அழகைப் பாடுகின்றது. திருமுடிகள், ஆறு முகங்கள், கண்களின் திருவருள், மகரக்குண்டலம், தோள், திருக்கரம், உறைவாள், சிலம்பு, பாதங்கள் என்று கேசாதி பாத வருணனையில் முருகன் அணிந்துள்ள அணிகலன்களும் சுட்டப்படுகின்றன.

    ujiladevi.blogpost.com (3)

    தலை உச்சி – நெத்திச்சுட்டி (முத்தியல் சுட்டி)
    காது – ஒளிதரு குண்டலம்
    கண்டம் – கண்ட சரம் + கண்டிகை
    கை – வளையல்
    இடை – கிண்கிணி
    கேசாதிபாத வருணனை இடம்பெற்றுள்ளது.

    இதுபோல மற்றொரு பாடலில் சப்பாணிப்பருவத்தில் குழந்தை முருகனுக்கு தாய் அலங்காரம் செய்கின்றாள்.

    காதிலிடு வச்சிரக் குண்டலமு நெற்றியிற் கவினொழுகு பொற்சுட்டியுங்
    கரியகவூ சியின்வாய்ந்த முச்சியிற் சுற்றிவிடு கதிர் முத்த மிளிர்தொங்கலுஞ்
    சோதிமய மானதிரு மார்பிற் கிசைந்திலகு தூமணிப் பொன்னரமும்
    தோளிலண் பன்மணிக் கேயூர முஞ்சிறிய தொந்திசரி யரை நாணுடன்
    சீதுமுறு நாதமுரல் கிண்கித் தொகுதியுஞ் செந்தளி ரினுஞ்சிவந்த
    சீறடித் துணையிலணி செம்பொற் சதங்கையும் செய்யநூ புரமு மசையத்
    தாதுகமழ் பதரிவன நீதசிற் பரகுமர சப்பாணி கொட்டியருளே (சப்.5)

    காது – வச்சிரக் குண்டலம்
    நெற்றி – பொற்சுட்டி
    மார்பு – தூமணிப் பொன்னாரம்
    தோள் – பன்மணிக் கேடழரம்
    இடை – அரைஞாண்
    கால் – பொன் சதங்கை

    இதுவும் கேசாதி பாத வருணனையில் அணிகலன்களாக சொல்லப்பட்டுள்ளன.
    முருகன் அணிந்திருப்பதாகச் சொல்லப்படும் அணிவகைகளில் மற்றவை. ‘கடம்பிணி புயத்தன்’ (காப்பு-10) என முருகன் அணிகலனையொட்டிப் புகழப்படுகிறான்.

    ‘மலர்த்தொடை மைக்குழலிற் சூடி’ (சப்பாணி-9, ப.21)

    என குழந்தையின் உச்சியில் இடப்பட்ட கொண்டையிற் பூக்கசாக் கட்டி சூடியுள்ள அழகு சுட்டப்படுகிறது. சிற்றில் சிதைக்கும் பருவத்தில் கால்களில் அணிந்திருக்கும் ‘புனைசெய் சதங்கை’ (சிற்றில்-7) சுட்டப்படுகிறது. கழுத்தணி மாலைகளாக ‘தொடலை’ (சிற்றில்-4), ‘சங்குமணி’ (வருகை- 7),

    ‘நறுந்தெறியல்’ (சிறுதேர் – 6), ‘கண்டசரம்’ (செங்கீரை-18) போன்றவை குறிப்பிடப்படுகின்றன.

    தலையில் சூடுபவையாக ‘கொக்கின் இறகு’ (வருகை-3)
    ‘மலர்த்தொடை மைக்குழலிற்சூடி’ (சப்பாணி-9) போன்றவை குறிப்பிடப்படுகின்றன.
    பகழிக் கூத்தரின் திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழில்

    “தேட அரிய மணியரைஞாண்
    சேர்க்க வருக விரற்காழி
    செறிக்க வருக திலகநுதல்
    தீட்ட வருக மறுகில் விளை
    யாட வருக. . . “(வாராணை-3)

    பொன் அரைஞாணும், விரலுக்கு மோதிரமும் பூட்டிக்கொள்ள வருமாறு குழந்தை முருகன் அழைக்கப்படுகிறான்.

    “குடுமி திருத்தி மலர்சொருகிக்
    கோலம் புனைந்து கொண்டாடி” (சிற்றில் – 9)
    “பூட்டுங் கலன்கள் வகை வகையே” (சிற்றில்-10)

    பாதாதிகேச வருணனையில் முருகன் அழகினை குமரகுருபர அடிகள் முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் வாராணைப் பருவத்தில் படம் பிடிக்கிறார். முருகன் அழகு நடை பயில நின்ற காலத்தை அவன் அணிந்திருக்கும் அணிகலன்கள் அசைந்து அசைந்து ஒலி எழுப்புவதை இப்பாடல் அழகுற எடுத்துரைக்கிறது.

    செம்பொற் கருங்கழல் அரிக்குரற் கிண்கிணி
    சிலம்பொடு கலின்கலினெனத்
    திருவரையில் அரைமணி கிணின்கிணின் எனப் பொலந்
    திண்தோளின் வளை கவிப்ப
    அம்பொற் பகட்டு பார் பிற்சன்ன வீரமும்
    ஆரமும் திருவில் வீச (வென்றிமாலை)
    அணி மகர குண்டலம் பரிதி மண் மரமென்ன
    அலர்கதிர்க் கற்றை சுற்றப்
    பைம்பொற் சுடர்ச்சுட்டி கட்டுசூ ழியமுடன்
    பட்டமொளி விட்டெறியப்பப் (வருகை – 1)

    இங்கு
    காலில் – சிலம்பு
    இடையில் – அரைமணி (உடைமணி)
    கைகளில் – வளையல்
    மார்பில் – சன்னவீரமும், ஆரமும்
    காதில் – மகர மீன் வடிவிற் செய்யப்பட்ட குண்டலம்

    போன்றவற்றை முருகன் அணிந்திருந்த செய்திகள் பதிவாகியுள்ளன. மேற்கூறப்பட்ட பாடல்களினால் முருகன் சிலம்பு, அரைமணி, வளையல், சின்ன வீரம், ஆரம், மகர குண்டலம், பண்மணிக் கேயூரம், பொன் சதங்கை, நெற்றிச் சுட்டி, பொன்னாகரம், கண்ட சரம் போன்ற ஆபரணங்களை அண¨ந்திருந்ததாகக் கவிஞர்கள் பாடியுள்ளனர்.

    சிங்கப்பூரில் உள்ள கண்ணபிரான் மீது பிள்ளைத்தமிழ் சிங்கபுரக் கண்ணன் பிள்ளை இயற்றியர் சிவசூரிய நாராயணன். இயற்றியுள்ளார்.

    “பொன்னுலாவும் பட்டுலாவும் பூவுலாவும் மேனியா” (முத்தம்-9) பொன்னும் பட்டும் பூவும் திருமாலின் மேனியில் உலவுகின்ற அளவிற்கு நிறைந்திருந்தைதையே கவிஞர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

    “தண்டுலாவும் கடலுலாவும் சங்குலாவும் கரத்திலே
    தனுவுலாவும் சுழலுலாவும் பொருளுலாவும்
    மெழிலினம்” (முத்.8) என்று கண்ணன் உடலில் பொன் அணி, பூ மாலை இவற்றோடு பட்டாடை அணிந்திருப்பதாக வருணிக்கிறார்.

    சங்க கால இலக்கியங்களில் விறலியரை வருணிக்கப்படும் பாடல்கள் கேசாதிபாதமாக வருணித்தன. பின்னர் இறைவனைப் பாடும் முறையில் இறைவனை அவன் உருவத்தை வருணிப்பது என்ற நிலையில் இச்சிற்றிலக்கியம் கண்டு பாதாதிகேசமாக ஆகியது. பெண்களைப் பாடும் முறையான கேசாதிபாதம் பக்தி இலக்கிய சிற்றிலக்கியங்களில் கடவுளரைப் பாடும் நிலையில், காலிலிருந்துப் பாடும் முறையாக மாற்றம் பெற்றது.

    சிற்றிலக்கிய வளரச்சிக் காலத்தில் ஆண், பெண் தெய்வங்களைப் பாடும் இலக்கியமாக இது நிறை நிலைபெற்றது. என்றாலும் உருவ நலன் என்பது தெய்வீக அழகாக மாற்றம் பெற்ற நிலை என்பது கருதத்தக்கது.

    ஆடை வகைகள்

    கீழ்வேளுர்முருகன் பிள்ளைத்தமிழ் நூலில் முத்தப்பருவத்தில் குழந்தை முருகனை நீராட்டி அழகு படுத்தும் அலங்கார நிலை சுட்டப்படுகிறது.

    தொடுகை மனக்கு . . .பூசித்
    தூதுவரிட் டிள வெந் நீராட்டித்
    துகிலால் ஈரம் புலர்த்தி மஞ்சள்
    தோய்வேப் பிலநீர் சுற்றியபின்
    குடுமி திருத்தி நீறணிந்து
    குலவு நிலக்கப் பணிந்து முத்தங்
    கொள்ளக் கனிவாய் முத்தமரன்
    கொள்வான் குனியு மமையத்தின்(முத்தம்-4)

    இந்தப் பாடல் குழந்தையை, மணப் பொருட்களை இட்ட வாசனை வெந்நீரில் நீராட்டித் துகிலால் ஈரம் நீங்க உலர்த்தியதைக் குறிப்பிடுகிறது. பின் மஞ்சள் நீரில் வேப்பிலை இட்டு திருஷ்டி கழிக்கின்றனராம். பின் குடுமியைத் திருத்தி, நெற்றியில் திருநீறு அணிவித்து அலங்காரம் செய்ததைக் குறிப்பிடுகிறது. நிலத்திலுள்ள மண்ணை எடுத்து நெற்றியில் பூசியதை (முத்தம்-4) மற்றொரு பாடல் குறிப்பிடுகிறது.

    முத்து அனைவரையும் கவரும் ஒரு அணிகலனாகும். அந்த முத்துக்கள் பிறக்குமிடம் பற்றி ஒவ்வொரு பிள்ளைத்தமிழ் நூலும் குறிப்பிடுகின்றன.

    “உழுவை கருமா மருப்பு முத்தும்
    வனைக்கார் கமுகு கழை முத்தும்
    வன சங்கரும்பு மதிமுத்து
    மாதர் மிடற்றின் வருமுத்தும்”(முத்தம்-3)
    என பத்து வகையான முத்துக்களைப் பற்றிய செய்திகள் சொல்லப்பட்டுள்ளன.

    பெண்பாற் பிள்ளைத் தமிழ் நூல்கள்

    பெண்பாற் பிள்ளைத் தமிழ் நூல்களை எடுத்து ஆராய்ந்தபோது குமரகுரபரரின் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழின் முத்தப்பருவத்தில் தேவர்கள் அணியும் அணிகலன்களைப் பற்றிய குறிப்பு உள்ளது.

    இந்திரன், குபேரன், திருமால் முதலியோர் பெருஞ்செல்வர்கள் இவர்களில் சிந்தாமணி என்னும் அரியமணி இந்திரப் பதவிக்குரியது. அது இந்திரனிடம் உள்ளது. குபேர பதவிக்கு உரியது வான்மணி. அதை உடையவன் குபேரன். திருமால் பதவிக்கு உரியது கௌந்துப மணி. அது திருமாலுக்குரியது.

    வானத் தரசு கோயில் வலர்

    சிந்தாமணி, அலகையோர் கோன் நகரில் வளரும் வான்மணி, பதுமநாடன் மார்பில் வளர் பருதி மணி (முத்தம்-2)
    முதலான பதிவுகள் ஒவ்வொரு பதவிக்கும் உரியதாக ஒரு மணி இருந்ததைச் சுட்டுகிறது. குமரகுருபரரின் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில்அம்மையை பெற்றெடுத்த தாயாக பாண்டிமாதேவி சுட்டப்படுகிறாள்.

    அப்பாண்டிமாதேவி மயிர்ச்சாந்து பூசப்பட்டுக் குழைந்திருக்கும் கூந்தல் உடையவராகவும், (சிவபெருமான் காப்பு-3)

    நெற்றியில் திருநீறு மூன்று கோடுகளாக அமைந்திருக்க, முத்துச்சுட்டி, தலையில் உச்சிக் கொண்டை,
    தலையணி, காதில் குதம்பை அணி, பொன் கொப்பும் அணிந்தவளாக விளங்குகின்ற பாண்டிமா
    தேவியின் தோற்றம் கேசாதிபதமாக வருணிக்கப்படுகிறது.

    ‘நீராட்டி ஆட்டு பொற் சுண்ணந் திமிர்ந்தள்ளி’ (ம.மீ.அ.பி. செங்கீரை-1)

    மதுரை மீனாட்சியின் தோற்றமும் கேசாதி பாகமாகவே வருணிக்கப்படுகிறது. தலைமுடியில் அணிந்திருக்கும் உச்சிக் கொண்டை, நெற்றியில் அணிந்திருக்கும் நெற்றிச் சுட்டி, காதில் அணிந்திருக்கும் மகரக் குழைகள், திருவடிகளில் அணிந்திருக்கும் சிலம்புகள், மற்றும் கிண்கிணி இவற்றை அணிந்து செங்கீரை ஆட வருக என கவிஞர் அழைக்கிறார். (மு.மீ.அ.பி. செங்கீரை-6) பிற பாடல்களில் அம்மை, குதம்பை என்னும் காதணி (செங்-8) இடையில் மணிமேகலை என்னும் இடைஅணி (வருகை -1) கையில் வெண்மை நிறமான சங்கு வளையல்கள் (நீராடல்-2) அணிந்தவளாகக் காட்டப்படுகிறாள்.

    ஆடை-பொன் சரிகையால் செய்து உடுத்தப்பட்ட
    இடை ஆடை, மற்றும் முத்து அழுத்திச் செய்யப்பட்ட மேலாடை, ஒட்டியாணமாகிய
    இடை அணியும் அணிந்தவளாக (ஊசல்.10)

    அழகிய மாமுலையம்மை, சிந்தூரப் பொட்டை நெற்றியலிட்டு பொற்பட்டமும், திகழ்சுட்டியும் சூட்டி, அழகிய கொண்டையில் சிவாளி முத்தும், சூரியப் பிறையும், சந்திரப் பிறையும் சூடி, தங்க வளையல்களும், அமுதாரியும், சன்னவீரமும், மணிமேகலையும் அணிந்து நடந்து வர வேண்டுமென்று புலவர் (வருகை-1)

    கணித நூல் புலமை வல்லோர், கணக்கினுக்கும்
    அகப்படாததாகிய ஒப்பனை செய்பவளே

    “கணித இவர் புலமை வல்லோர்
    கணக்கினு மகப்படா ததாகியே ஒப்பனை செய்” (அம்மானை-4)

    அமுதாம்பிகை பிள்ளைத்தமிழில் ஊசல் பருவத்தில் அமுதாம்பிகை ஊசலாடும் பொழுது, ‘மகரக் குழைகளும ஊசலாட’ என மகரமீன் போன்ற குண்டலங்களும் ஆடியதாக பாடுகிறார். மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் மீனாட்சியம்மை, அம்மானை ஆடுவதற்கு மரகதக் கல்லும், நீல மணிக் கல்லும், முத்து போன்றவற்றைப் பதித்த அம்மானைக் காய்களைக் கொண்டு நேர்த்தியாக அம்மானை ஆடிய சிறப்பு பாடப்பட்டுள்ளது. (அம்மானை – 10)

    “வள்ளொளி மரகதமும் முழுநீலமும்
    ஒண்தரளத் திரளும்
    ஒருகொளி பொங்க இழைத்திடும் அம்மானை”

    த. கோவேந்தன் பாடிய ஆண்டாள் பிள்ளைத்தமிழில் பலவகை அணிவகைகள் சொல்லப்பட்டுள்ளன.

    ஆண்டாள் ‘பூட்டிய சித்திரப் புரிவளையும், (சப்பாணி-57)’, மேலாடை அணிந்தவளாகவும், (சப்பாணி-64), மகிழ மலர் மாலை அணிந்தவளாகவும் (வாராணை 71) வெண்பட்டுடை, (காமநோன்பு-116) அணிந்தவளாகவும் காணப்படுகிறாள். நெற்றியில் திருமண் இட்டுக் கொள்ள முகம்பார்க்க கண்ணாடி உடையவள் (அம்புலி-83) இந்திர நீலத்தின் அருமணியை, பசுந் தகட்டில் பதித்த ஊசல் உயைவள் (ஊசல் 100) ஒளி சொரிகின்ற முத்துமணியும் முழு மணிகளில் ஆன மாலையையும் தோளில் அந்தவள் (ஊசல்-104), என்று ஆண்டாளின் ஆடை அணிகலனை ஆண்டாள் பிள்ளைத்தமிழ் எடுத்தியம்புகிறது.

    காழி ஞானதேசிகர் இயற்றிய அழகிய மாமுலையம்மை பிள்ளைத்தமிழில், மாமுலையம்மை முத்துச்சரமணிகளும், சங்கிலியும், விரலில் கணையாழியும், காதில் மகரக் குழைகளும் இருப்பில் பட்டினகப் பட்டங்களும் அணிந்து செங்கீரை ஆடியதாகக் குறிப்பிடப்படுகிறது. (அ.மா. செங்கீரை-6)

    பிள்ளைத்தமிழில் பிற தெய்வங்கள்

    சிவன் தோற்றம்

    1. வேழாடை (கி.வே.மு. சப்பாணி.2)
    2. இடையில் புலி அதள் உடையர் (ஆ.பி. தாலம்-47)
    3. கரி உரி உடுத்தவன் (ஆ.பி. சப்பாணி-48)
    4. அரவு அணி (ஆ.பி. தால்-47)
    5. முதுகெலும்பு மாலையை கோர்த்து கழுத்தில் அணிந்தவனாக (கி.வே.மு. செங்-8)
    6. சடைமுடியும் வளரும் இளம்பிறை, கங்கை நதி,
    7.வெள்ளெருகம்பூ சூடியவன் (அ.மா.பி. காப்பு-2)

    சிவன் திசை ஆடை அணிந்தவன் (ம.மீ.அ.பி. நீராடல்-4) இவ்வாறு சிவன் அணிந்திருக்கும் ஆடை அணிகலன்கள் சுட்டப்படுகிறது. இடையில் புலித்தோலையும், தோளில் யானைத் தோலையும் போர்த்துக்கொண்டு, சிவன் கழுத்தில் பாம்பு மாலையையும், முதுகெலும்பு மாலையையும் அணிந்தபடி சடைமுடியில் பிறை நிலவும் கங்கை நதியும் அணிந்திருக்கும் சிவனது தோற்றம் இவ்வாறு பிள்ளைத்தமிழ் நூல்களில் சுட்டப்படுகிறது.

    திருமாலின் தோற்றம்

    TM-7

    திருமாலின் தோற்றம் பற்றிய வருணனையில் அவதாரத்திற்கேற்ப ஆடை அணிகலன்கள் சுட்டப்படுகின்றன. இராமர் அவதாரத் தோற்றத்தில் ‘மரவுரி’ (ஆ.பி.தால-47) அணிந்தவராகவும், கண்ணன் அவதாரத் தோற்றத்தில் இடையில் சங்கு சக்கரம், வில், வாள், தண்டு இணைந்த பொன்மணி வடத்தை (ஆ.பி.வாராணை 71)யும், குண்டலங்கள் (காமநோன்பு-112) கௌத்துவ மாலை காமநோன்பு-114) பட்டாடை (ஆ.பி. வாராணை-68) அணிந்தவராகவும் சுட்டப்படுகிறார்.

    திருமால் தோற்றத்தில் துளசி மாலையும், காதில் மகர குண்டலங்களும் (அ.மா.பி. காப்புப்-1) அணிந்து பாம்பணையில் படுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

    கடவுளர் பற்றிய பிள்ளைத் தமிழ் நூல்களில் இடம்பெறும் பிற மகளிர் அணிந்த ஆடை அணிவகைகளும் குறிப்பிடப்படுகின்றன.

    மாமுலையம்மை பிள்ளைத்தமிழில், ஆய்ச்சியர் அணிந்துள்ள அணிகலன்களாக எளிய மலர்மாலைகளே சுட்டப்படுகின்றன.

    கொன்றை நறுங் குழலையும், முல்லையின் அரும்பையும், செழித்த மலர்களையும் கூந்தலில் கட்டி முடித்தவர்களாக ஆய்ச்சியர் குறிப்பிடப்படுகின்றனர். (அ.மா.செங்கீரை-5)

    ஆண்டாள் பிள்ளைத்தமிழில் கற்களை பொன்னில் பதிக்கும் முறை பற்றி ஒரு பாடல் குறிப்பிடுகிறது. ஒருமணியானது பேராற்றினுள்ளே சேறிடத்தே அணு அளவினதாகத் தோன்றி, சிவப்பு நிறமுற்றுப் பதினாறு ஊழிக்காலம் கடந்த பின்னரே முழுமை பெறும் தன்மையுடையது. ஆந்த மணி மிகப் பருத்தது. அதனைச் சாணை தீட்டுவோர் சாணை தீட்டி, தக்க அளவு செய்து, அணிகலன்ற குழி செய்து பதித்து நகை செய்வர் (வருகை 76) என மணி மண்ணில் உருவாகும் முறை குறிப்பிடப்படுகிறது.

    அடியவர் தோற்றத்தில் ஆடை அணிகலன்கள்

    அழகிய மாமுலையம்மை பிள்ளைத்தமிழில், திருநாவுக்கரசரின் எளிய தோற்றம் காட்டப்படுகிறது. காதில் குழையும், மேனி முழுதும் திருவெண்ணீரும் அணிந்தவராகச் சுட்டப்படுகிறார் (சப்பாணி-7)

    சேக்கிழார் பெரியபுராணத்தில் திருஞான சம்பந்தர் புராணத்தில் பிள்ளைத்தமிழ் சார்ந்த காப்புப் பருவத்தில் திருஞானசம்பந்தரின் பெற்றோர் அவருக்கு திருநீற்றுக் காப்போ உண்மையான அணிகலன் என அவருக்கு திருநீற்றை மட்டும் நெற்றியில் அணிவித்ததாகப் பாடுகிறார்.

    “வேறுபல காப்பும் மிகை என்றவை விரும்பார்
    திருநீறு நெற்றியில் நிறுத்தி நிறைவித்தார்”

    பொதுவாக குழந்தைக்கு மந்திரித்த காப்பு கட்டுதல், ஏடெழுதிக் கட்டுதல், ஐம்படைத்தாலி கட்டுதல் முதலான காப்புகளை அணிவிப்பார். ஆனால் சேக்கிழார் திருநீறே சிறந்த காப்பு எனக் கருதியதை இங்கு ஞான சம்பந்தர் வாழ்க்கைமூலம் காட்டுகிறார்.

    தலைவர்கள் பற்றிய பிள்ளைத்தமிழ் நூல்கள்

    கவிஞர் இராதே எனப்படுகின்ற இரா. தேவா, அன்னை தெரசா பிள்ளைத்தமிழ், இயற்றியுள்ளார். இதில் அன்னை தெரசாவை பாட்டுடைத் தலைவியாக்கி இப்பிள்ளைத் தமிழ் இயற்றப்பட்டிருந்தாலும், குழந்தை தெரசாவிற்கு ‘வெள்ளுடை’ மட்டும் அணிவித்து ‘வெள்ளுடையம்மை’ (பாடல்-14) என்று வெள்ளையாடை அணிந்த தோற்றத்தையே தருகிறார். ஆடை அணிகலன்களை வருணிப்பதற்குப் பதில்,

    “வெள்ளுடை யம்மை குமிழ் சிரிப்பின்
    விளைவில் வறியோர் வாழ்வுயரும்
    வெற்றிச் செல்வி சிரிப்பழகி”” (பாடல்-14)

    அன்னை தெரசாவின் பொன் நகை அவளுடைய புன்னகையே என்று பாடுகின்றார். தருமபுரி மாவட்டதைச் சார்ந்த கவிஞர் மணிவேலனார். இவர் மீது பாடப்பட்ட நூலே பாவலர்மணிவேலனார் பிள்ளைத்தமிழ். மணிவேலனார் காலில் அணிந்ததாகச் சிலம்பு(வருகை-4) மட்டுமே கூறப்பட்டுள்ளது.

    முடிவுரை

    சங்க நூல்களில் பாடினி, விறலி பாத்திரங்கள் ( பதிற்றுப் பத்து, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை) கேசம் முதல் பாதம் வரை வருணனை செய்யப்பட்டுள்ளன. சங்ககால செல்வந்தர்,ஏழையர் குறித்த பதிவுகளிலும் நிலைக்கேற்ப ஆடை அணிகலன்கள் இடம் பெற்றுள்ளன. இவ்வருணனை பிற்காலத்தில் சிற்றிலக்கியங்களிலும் தொடர்ந்துள்ள திறத்தை பிள்ளைத்தமிழ் இலக்கியங்களில் காணமுடிகிறது. கடவுளர் பற்றிய வருணனையில் அதிகமாக இடம் பெறும் ஆடை அணிவகைகள், காலம் செல்லச் செல்லச் செல்ல அருகி பக்தி இலக்கியக் காலத்தில் அடியவருக்கு எளிய தோற்றமும் திருநீறுமே அணிகலன் என்று கருதப்பட்டுள்ளது. தலைவர்கள் குறித்த இலக்கியங்களில் அவையும் அருகி காலத்திற்கேற்ப நகையணிதல் தவிர்க்கபட்டுள்ளதைக் காண முடிகிறது.

    துணைநின்ற நூல்கள்

    1. இராமமூர்த்தி மா. கவிஞர், பாவலர் மணிவேலனார் பிள்ளைத்தமிழ்,கோதை பதிப்பகம்,பாப்பிரெட்டிப்பட்டி,தருமபுரி மாவட்டம்,636 905. முதற்பதிப்பு 2009
    2. கவிவீரராகவர் – கீழ்வேளுர்முருகன் பிள்ளைத்தமிழ், உ.வே.சா நூல்நிலையம் -600 090 . முதற்பதிப்பு 1985
    3.காழி ஞானதேசிகர், அழகியமாமுலையம்மை பிள்ளைத்தமிழ்,தஞ்சைபெரியகோயில் வார வழிகாட்டு மன்றம்,தஞ்சாவூர் 613 009. முதற்பதிப்பு 2013
    4.குமரகுருபரர்,முத்துக்குதாரசுவாமி பிள்ளைத்தமிழ்,கழக வெளியீடு,சென்னை -1972.
    5.குமரகுருபரர்,மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், சாரதா பதிப்பகம்,சென்னை600 014 5ம்பதிப்பு 2013.
    6. கோவேந்தன். த. – திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்,ராஸ்வரி புத்தக நிலையம், சென்னை -600 017. பதிப்பு 2000
    7. சிவஞான முனிவர் – அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் பதிப்பு, கழக வெளியீடு,சென்னை – பதிப்பு 1972.
    8. சிவசூரிய நாராயணன் – சிங்கபுரக் கண்ணன் பிள்ளைத்தமிழ், இணையதளம்
    9.பகழிக் கூத்தர் – திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்,கழக வெளியீடு,சென்னை – 2ம்பதிப்பு 1972

    படங்களுக்கு நன்றி

    https://www.facebook.com/saivaneri

    Share
  • திருவாசகமும் அரவாணியரும்

    முனைவர் ஜ.பிரேமலதா,

    தமிழ் இணைப் பேராசிரியர்,

    அரசுகலைக் கல்லூரி,

    சேலம்-7

        விளிம்பு நிலை மனிதர்கள் எனப் புறந்தள்ளப்பட்ட பெண்கள், குழந்தைகள்,தலித்துகள் இவர்களோடு அரவாணியர்களையும் இருபத்தியோராம் நூற்றாண்டு மைய நிலைக்கு கொண்டு வந்து, அவர்களின் வாழ்க்கையை நடுநிலையோடு அணுகக் கற்றுக் கொடுத்துள்ளது. இவர்கள் குறித்த ஆய்வுகளும்> படைப்புகளும் வெளிவரும் சூழலில், மரபிலக்கியங்களில் இவர்களைப் பற்றிய புரிதலை ஆராய வேண்டியுள்ளது.

    தொல்காப்பியர் வகுத்த இலக்கணத்திலிருந்து தொடங்கி, அரவாணியர்களைப் பற்றிய குறிப்புகள் தமிழிலக்கியம் முழுவதும் விரவிக் கிடக்கின்றன.ஆண்மை திரிந்தமனிதர்கள் பேடி என்றும், பெண்மை திரிந்த மனிதர்கள் அலி என்றும்  அழைக்கப்பட்டுள்ளனர்.

                 தொல்காப்பியர், உயர்திணையில் இவர்களை கூறியபின் பால்வகையில் அலி, பேடி, தெய்வம் என்ற இம்மூவரையும் முதலில் மூன்றுபாலிற்குள்ளும் அடக்குகிறார்

    அலி வ்நதான் அலி வந்தாள் அலி வந்தார்.( இதுபோல் பேடிக்கும் தெய்வத்திற்கும் வரும்)

                  .மற்றொரு நூற்பாவில் உயர்திணையில் பெண்பாலிற்குள் தான் இவர்களை அடக்குவது சிறந்தது  என பெரும்பான்மை அடிப்படையில் இவர்களை பெண்பாலுக்குள் வரையறுக்கிறார். ஆணாக இருந்து பெண்ணாக மாறுவதே பெரும்பான்மை. பெண்ணாக இருந்து ஆணாக மாறுவது சிறுபான்மை ஆகும்.

    ஆண்மை திரிந்த பெயர்நிலைக்கிளவி
    ஆண்மை அறிசொற்கு ஆகிடனின்றே.

    என்ற நூற்பா, ஆணாக இருந்து பெண்ணாக மாறும் பெரும்பான்மையினரைக் கருத்தில் கொண்டு, அவ்வாறு மாறியவர்களை (பெண்பாலாகக் கருதி) பேடி என்றழைக்கவேண்டும் என்கிறது.ஆணாகப் பிறந்து, பெண்ணாக உணர்ந்து பெண்ணாகவே மாறியவர்ளை பெண் என்றே அக்காலச் சமூகம் கருதியதாக இதன் மூலம் உணரலாம்.

                  இவ்வாறு உயர்திணையில் பெண்பாலாக கருதப்பட்ட இவர்கள், வயிற்றுப்பிழைப்பிற்காக, கூத்துக்கலையினை பொதுமக்கள் கூடும் இடத்தில் நிகழ்த்தி வாழ்ந்துள்ளனர் என்று அகநானூறு தெரிவிக்கிறது.தமிழகத்தில் பெண்பாலாகக் கருதி ஓரளவு மதிக்கப்பட்ட இவர்கள்,  துறவற நெறியைப் போதித்த புற சமயங்களான சமணமும் பௌத்தமும்,  தமிழகத்தில் நுழைந்தநிலையில்  இழிவானவர்களாகக் கருதப்பட்டனர். பெண்ணாகக் காட்டிக் கொள்வதற்காக மிகுதியான ஒப்பனையும் கூடுதலான அணிகலனும் அணிந்து பொது மக்கள் கூடுமிடத்தில், பிறரை கவர்வதற்காக இவர்கள் நடத்திய கூத்தினைக் கண்டு, இவர்களைப் பாவம் செய்தவர்களாகச் சித்திரித்தன.

    ஒழுக்கத்தைப் போதித்த அறஇலக்கியங்கள் இவர்களை இழித்துரைத்தாலும், தமிழ்ச்சமூகம் தங்கள் வாழ்க்கையோடு ஒன்றிணைத்தே இவர்களையும் நடத்திய செய்தியை முதற்காப்பியங்கள் காட்டுகின்றன. சிலம்பில் பாண்டியனின் மனைவிக்கு பணிப்பெண்ணாகவும் (சிலம்பு-  )சீவகசிந்தாமணியில் காந்தர்வதத்தையின் தோழியாகவும் (சீவக  ) அரவாணிகள் அரண்மனை வாழ்வியலோடும் இணைந்துள்ளனர்.மணிமேகலையில் பொதுமக்கள் கூடுமிடத்தில் இவர்கள் கூத்து நிகழ்த்திய செய்தி பதிவாகியுள்ளது. சமண சமய காப்பியமான நீலகேசி(76) அரவாணியரின் அக்கால நிலை ,அவர்கள் படும் துன்பம்,மக்கட்பேறற்ற நிலை,பிறரால் இழிவாகப் பார்க்கப்படல் போனறவற்றை கூறுகின்றது.எனினும், முற்பிறவியில் இவர்கள் செய்த பாவமே இப்பிறவியில் அரவாணியாகப் பிறக்கக் காரணம் என்று தண்டனைப் பிறவிகளாகச் சித்திரித்துள்ளது.இவ்வாறு தமிழர் சமயமல்லாத புற சமயங்கள் இழிபிறவிகளாக் கருதி இழிவுபடுத்திய இவர்களை, தமிழர் சமூக மரபினை மீட்டுருவாக்கம் செய்ய முயன்ற வைதீக சமயங்கள் இறைநிலைக்கு உயர்த்த  முயன்றுள்ளன.

                இறைவன் ஒருவனே ஆண் என்றும், உலக உயிர்கள் அனைத்தும் பெண் எனவும் கொண்டு, இறைவனாகிய ஆணைச் சரணடைவதே உலகஉயிர்களாகிய பெண்ணின் வீடுபேற்றிற்கு ஒரே வழி என்ற அடிப்படையில் இவை செயல்பட்டன.இதனடிப்படையிலேயே நாயக-நாயகி பாடல்கள் புனையப்பட்டன. மாணிக்கவாசகர், திருவாசகத்தில் இறைவனை ஆணாகவும் பெண்ணாகவும் அலியாகவும் கண்டு மகிழ்கின்றார்.பெணகளாகப் பிறந்தவர்களுக்கு இறைவனை ஆணாகக் கணடு சரணடைவதில் சிக்கலில்லை. ஆண்களைவிட பெண்கள் இறைப் பற்றினை கூடுதலாக பெற்றிருப்பதனால்தான் ஆழ்வார்களில் மற்ற ஆழ்வார்களை விட மிக எளிதில் இறைவனைச் சரணடைந்து இறைப் பிரேமையில் மூழ்கிவிடுகிறாள் ஆண்டாள்.

     எனவே, ஆண்களைவிட பெண்களுக்கு இறைப்பற்றும் சரணடைதல் திறமும் எளிதில் கூடிவிடுகின்ற தன்மையை உணர்ந்தே பக்தர்களுக்கு வழிகாட்டும் விதமாக, இறைவனையே முதலில் ஆணாக இருந்து, பெண்தன்மை பெற்று,அதன் பின் இரண்டும் கலந்த அலி நிலைக்கு உயர்ந்து ஆகாசமாகிறான் என்கிறார் மாணிக்கவாசகர்.

    காரைக்காலம்மையாரும் இறைப்பற்றினை எளிதில் பெற்றுவிட்ட காரணத்தினால் தான், இறைவனுக்கு முன் அமரும் வாய்ப்பினைப் பெறுகின்றார். இறைவனே அவரை ‘அம்மையே’ என்றழைக்கும் பேறும் பெறுகின்றார்.

                       “ஆண் பெண் அலி ஆகாசமாகி”(திருச்சதகம்.பாடல்.29)

    ஆணின் இயல்பையும் பெண்ணின் இயல்பையும் அறிந்த ஒருவரே அனைவரையும் அரவணைத்து காக்கவும் முடியம். எனவே தான், இறைவனை ஆணாகவும் பெண்ணாகவும் இரண்டும் இணைந்த அலியாகவும் சமயங்கள் உருவகிக்கின்றன.

    சைவத்திலும் வைணவத்திலும் இறைவனை இம்மூன்று நிலைகளிலும் காணுகின்ற நிலையை நாயன்மார்களும் ஆழ்வார்களும் பதிவுசெய்துள்ளனர்.

    திருவாசகத்தில்,

    “பெண்ணாளும் பாகன்” (.திருஅம்மானை.10)
    “ஆண் எனத் தோன்றி அலி எனப் பெயர்ந்து”(திருவண்டப்பகுதி.138)

    “பெண்மையனே தொன்மை ஆண்மையனே அலிப் பெற்றவனே”(நீத்தல்விண்ணப்பம்.பாடல்.22)
    “ஆணோ அலியோ அரிவையோ”(திருப் பொன்னூசல்.பாடல்.5)
    தேவாரத்தில்,
    “ஓருடம்புக்குள்ளே உமையொரு பாகம்”(சம்பந்தர்.100-3)
    “பெண்ணுறுமுடலினர்”(சம்பந்தர்.343.2)
    “பெண்தமாம் உருவத்தான்”(சம்பந்தர்.176-5)
    “பெண்ணற நின்றவர் தம்முருவம்”(சம்பந்தர்136-3)
     “பெண்நயங்கொள் திருமேனியன்”(சம்பந்தர்211-1)
     என நாயன்மார்களும் ஆழ்வார்களும் இறைவனை மூன்று கோலத்திலும் கண்டு பாடியுள்ளனர்.

            இப்பாடல்கள் ஆணாக இருந்து பெண் உணர்வு பெற்றதால் பெண்ணாகி பின் இரண்டும் இணைந்த அலி உருவம் பெற்ற இறைவனின் தன்மைகளை சுட்டுகின்றன. ஆணாக இருந்து பெண்ணாக மாறுபவர்களைக் குறிக்கும் சொல் பேடி என்பதாகும். அது போல பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர்களைக் குறிக்கும் சொல் அலி என்பதாகும். தொல்காப்பியர் காலத்தில் வழக்கில் இருந்த இச்சொற்கள், மாணிக்கவாசகர் காலத்தில்  அருகி இருதன்மையுடையவரையும் அலி என்ற  ஒரு சொல்லாலே குறிக்கும் வகையில் குறுகிவிட்டது. மாணிக்கவாசகர் இவ்விரு தன்மையுடையவர்களையும் அலி என்ற ஒரு சொல்லாலே தான் குறிக்கின்றார்…

    “ஆண் பெண் அலி ஆகாசமாகி”(திருச்சதகம்.பாடல்.29) என்ற பாடல் வரிகள் ஆணாக இருந்து இறைவன் பெண்ணாகி அலியாகிய தன்மையையும்,

    “பெண் அலி ஆணென” (திருப்படையாச்சி.பாடல்.5) என்ற பாடல்
    பெண்ணாக இருந்து ஆணாக மாறிய இறைவியின் தன்மையையும் சுட்டி நிற்கின்றன.

    என்ற பாடல் இறைவனின் அலிகோலத்தை காட்டுகிறது. இப்பாடலில் வரும் தோல், குழை, நீறு, சூலம் முதலானவை சிவனுக்குரியவை.தோடு,சாந்து,கருவளை முதலானவை இறைவிக்குரியவை.இவை இரண்டும் இணைந்த கோலத்தைப் பாடியிருக்கும் இப்பாடல் அர்த்தநாரீசுவரர் கோலத்தை கண்முன் நிறுத்துகிறது.      சிவன் ஆணாக இருந்து பெண்தன்மை பெற்று அலியாக மாறுவதைப் போல, பார்வதியும் பெண்ணாக இருந்து ஆண்தன்மை பெற்று அலியாக மாறுகிறாள். சிவன், தன் உடலில் சக்திக்கு இடம் கொடுத்தது போல, சக்தியும் சிவனுக்கு தன் உடலில் இடம் கொடுத்ததால் உண்டானதே அலி என்னும் அர்த்தநாரீஸ்வரக் கோலம்.

    “தோலும் துகிலும் குழையும் சுருள் தோடும்
    பால்வெள்ளை நீறும் பசுஞ் சாந்தும் பைங்கிளியுஞ்
    சூலமும் தொக்க வளையு முடைத் தொன்மைக்
    கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பி”(திருக் கோத்தும்பி.18)

              ஆணாக இருந்து பெண்ணாகி அலியாக மாறியவர்களே மிகுதி. பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர்கள் குறைவு. எனினும் இவ்விரு தன்மைகளும் உலகில் உண்டு என்பதைக் காட்ட உருவானதே அலி என்னும்கோலம் எனலாம்.

     “அர்த்தநாரீஸ்வரர் ஆணுக்கு பெண்ணை ஒளிக்க முடியாமல் அம்பலப்பட்டு நிற்கம் அரவாணித் தன்மையின் பருண்மையான மறு உள்ளீடுதான் ” என்று இத்தோற்றத்தை மு.இராமசாமி குறிப்பிடுகிறார்.(மகாராசன்.2007.17)

               கிருத்துவ சமயத்தில் திருநங்கைகளான அரவாணிகளை ஆயராக நியமிக்கலாமா என்ற கேள்விக்கு,ஜோ.தமிழ்ச்செல்வன் என்பவர் இவ்வாறு கூறுகிறார்.“கடவுளை ஆணாகவும் பெண்ணாகவும், தாயாகவும் தகப்பனாகவும், அம்மை அப்பனாகவும் விசுவசிப்பவர்கள் கடவுளை ஒரு திருநங்கையாக ஏற்பதுதான் பொருத்தமானதாக இருக்கும். திருநங்கைக்கு மட்டும்தான் ஆண்பால்(அவன்), பெண்பால்(அவள்), மூன்றாம்பால்(அவர்) ஆகிய முப்பால்களை அறியவும் உணரவும் முடியும். அனைத்தையும் அறிந்தவரும் உணர்ந்தவரும்தான் கடவுளாக இருக்க முடியும். கடவுள் ஒரு திருநங்கை என்று சொன்னால் அதில் தவறொன்றும் இல்லை. திருநங்கை ஆயராக நியமிக்கப்படுவதில் பிழையொன்றும் இல்லை.”

    ஆணாக பிறந்த ஒருவன் உள்ளத்தளவில் தன்னைப் பெண்ணாக நினைக்கும் பொழுது, உடலளவிலும் உள்ளத்தளவிலும் சந்திக்கும் சிக்கல்கள் ஏராளம். பித்துப் பிடித்தாற்  போன்ற நிலைக்கு செல்லும் இவர்கள், மரபு வழிப்பட்ட வாழ்க்கை முறையோடு ஒத்துப் போக முடியாமல் தடுமாறுகின்றனர் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். வெகு சிலரே இதிலிருந்து மீண்டு குடும்பத்தினரோடும் சமூகத்தோடும் ஏன் தன் உள்ளத்தோடும் உடலோடும் போராடி மீள்கின்றனர்.

    பெரும்பாலும் பருவவயதில்தான் இவ்விரு மாறுபட்ட தன்மையை உணர்வதால், சரியான வழிகாட்டுதல் இல்லாமல் வீட்டைவிட்டே ஓடிவிடுகின்றனர். பெண்களை விட ஆண்களே இதில் பெரிதும் பாதிப்படைகின்றனர். “பெண்கள் பூப்படைகிற அல்லது ஆண்களுக்கு மீசை முளைக்கிற பருவத்தில்தான் மிகப்பெரிய சிக்கல்கள் அவர்களுக்கு எழுகின்றன.பைத்தியம் பிடிப்பது மாதிரி உணர்வதும்,வாழ்வதே சரியில்லை எனப் புலம்பிக் கொள்வதும்,என்னவோ ஆகப்போகிறது என்ற பயமும் அவர்களுக்கு அடிக்கடி ஏற்படும். பெரும்பாலான அரவாணிகள் அந்தப்பருவத்தில் பைத்தியம் ஆகியிருக்கவேண்டும் அல்லது தற்கொலை செய்திருக்க வேண்டும்.”என்று மகாராசன் குறிப்பிடுகிறார்.(2007.11)

    இருவேறுபட்ட சூழலில் காணப்படும் இந்நிலையை ஒரு பாடலில் மாணிக்கவாசகர் வெளிப்படுத்துகிறார்.

    “நான் யார் என் உள்ளம்யார் ஞானங்களார் என்னை யாரறிவார்?”
                                                           (திருக்கோத்தும்பி.1)

    இந்தப் புரிதல் ஏற்பட்ட பிறகு ஆண் பெண் பேதங்களோ அதன் மீதான ஈர்ப்போ ,உளவியல் உணர்வு நிலையில் ஏற்படும் வெறுப்போ அவர்களை விட்டு நீங்கி விடுகின்றன.இவ்வுலகம் ஆண்மையநோக்கில் கட்டமைத்துள்ள படிநிலைகள் தேவையற்றதாகி விடுகின்றன.            நான் என்பது உடலா?அல்லது உள்ளமா? நான் இதுவரை பெற்ற ஞானங்கள் என்ன? என்னை யாரறிவார்? என்று புலம்பி அறிவு தடுமாறி நிற்கும் நிலையை, பருவவயதில் அரவாணிகள் பெறுகின்றனர். நான் என்பது உடலல்ல.உள்ளம். உடலை இயக்கும் உள்ளம்தான் ஆன்மா. உடல் இவ்வுலகில் வாழ்வதற்கான ஒரு கருவியே தவிர வேறில்லை. அதனால் இந்த உடலில் உள்ள உறுப்புகளைப் பற்றி நினைத்து பெருமைப்படவோ,சிறுமைப்படவோ ஏதுமில்லை.உள்ளம் தான் இயக்கம்.அதுதான் உண்மை. அதன்வழியே நடப்பதே உயர்நிலை.முற்றும் துறந்த முனிவர்களும் உண்மையான ஆன்மீகவாதிகளும் தெளிவதைப்போல அரவாணிகளும் ஒரு கட்டத்தில் தெளிகின்றனர்.

    உடலுக்குத்தான் பால் பேதம் உள்ளத்திற்கு இல்லை.ஞானம் பெற, உடற்கூறுகள் ஒரு பொருட்டே இல்லை.இறைவன் படைப்பில் அனைவரும் சமம்.அவரவர்க்குரிய இயல்புகளுடனும் குணங்களுடனும் தனித்துவம் மிகுந்தவர்களாக இவ்வுலகில் வாழமுடியும் என்ற ஞானத்தை அரவாணிகள் பெறுகின்றனர். அதற்கேற்ப வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்கின்றனர். இவர்களின் நிலையில் நின்றுதான், நான் யார் என்ற கேள்விக்கான விடையைத் தேட முயல்கிறார் மாணிக்கவாசகர்.

    ஆணாக பிறந்து, பெண்ணாக உணர்ந்து பெண்ணாகவே மாற விரும்பும் அரவாணிகளுக்கு, தன் உடல் உறுப்புகள் ஒரு குறையாகத் தோன்றுகிறது.வெளித்தோற்றத்தில் மிகுதியான ஒப்பனைகளால் தங்களைப் பெண் போலவே மாற்றிக் கொள்கிற அரவாணிகள்,ஆண் உறுப்பை ஊனமாகக் கருதுகின்றனர்.அதை நீக்கிய பின்னரே தங்களை பெண்ணாக முழுமையாக உணரமுடியும் என்ற நிலையில் அதனை நீக்கி விடுகிறார்கள். மாணிக்கவாசகர் இதனை,

    “ஊனந்தன்னை ஒருங்குடனறுக்கும்
    ஆனந்தம்மே ஆறா அருளியும்
    மாதிற் கூறுடை மாப்பெருங் கருணையன்”(கீர்த்தி.105)

     அவ்வாறு நீக்கிய பின்தான், முழுமையான ஆனந்தத்தை அடைகிறார்கள். 6666அதற்கு வழிகாட்டியாக இருப்பவன் மாதிற்கூறுடை மாப்பெருங்கருணையன் என்கிறார்.

    “முறையுளி யொற்றி முயன்றவர்க் கொளித்தும்
    ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்
    துற்றவர் வருந்த உறைப்பவர்க் கொளித்தும்
    இந்தந்திரத் திற் காண்டும் என்றிருந்தோர்க்
    கத்தந்திரத் னவ்வயி னொளித்தும்
    முனிவற நோக்கி நனிவரக் கவ்வி
    ஆணைனத் தோன்றி அலியெனப் பெயர்ந்து
    வாணுதற் பெண்ணெண ஒளித்தும்,சேண்வயின்
    ஐம்புலன் செலவிடுத் தருவரை தொறும் போய்த்
    துற்றவை”

    என்ற இப்பாடல், திருமாலும் பிரம்மனும் அடியையும் முடியையும் காணவியலாத வகையில், தன் உருவத்தைத்  தந்திரத்தினால் மறைத்தபடி, ஆணைனத்தோன்றி பின் அலிக்கோலமாக  நெருப்புக் கோலம் கொண்ட இறைவனைப் பற்றிக் கூறுகிறது.          அரவாணிகளின் நிலையோடு இப்பாடல்ஒத்துப்போகிறது. ஆணெனப் பிறந்து, பெண்தன்மை உணர்ந்து, அதை பிறர் அறியாமல் ஒளித்து வாழ்ந்து, இருதலைக் கொள்ளி எறும்பு போல ஆணாகவும் வாழமுடியாமல் பெண்ணாகவும் வாழ முடியாமல், தந்திரத்தினால் பெண்தன்மையை முதலில்  மறைத்து வாழ்கின்ற மனப்போராட்டம் மிகுந்த சூழலில்,நடுநிலையோடு தன்நிலை குறித்து ஆராய்ந்து மிகுதியான பெண்தனமையை மறைக்க முடியாது என்று பெண்ணாகவே வாழ்ந்துவிட அரவாணிகள் முடிவெடுக்கின்றனர்.

               அவ்வாறு முடிவெடுத்த பின் இவ்வுலக வாழ்வின் நிலையாமை உணர்ந்து, உடலின் தன்மை அழியக்கூடியது, ஆன்மா ஒன்றே அழியாதது .ஆண் உடல் உண்டு. ஆனால், ஆண்தன்மை இல்லை என ஐயுற்று குழம்பி முன்பு பழகிய நிலைக்கும் தற்போதுள்ள தெளிந்த நிலைக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்த பின், அலியான இறைவனைப் போல அவன் திருவடியைத் தொடருங்கள் என்கிறார் மாணிக்கவாசகர். தன்னை உணரத் தனக்கொரு கேடில்லை என்கிள திருமூலரின் வாக்கிற்கேற்ப தன்னை உணர்ந்த பின் ஆணாக இருப்பதை விரும்பாமல் முழுவதும் பெண்ணாக மாற முயல்கின்றனர்.

                     “எப்பெருந்தன்மையும் எவ்வெவர் திறமும் 
                    அப்பரிசதனால் ஆண்டு கொண்டருளி”   (கீர்த்தி.125-226) 

           ஒருவரைப் பற்றி நன்கறிய அவர் நிலையில் நின்று அவரை அறிய முயல வேண்டும்.அவரவர் நிலையில் நின்று அவரது இன்பத்தையும் துன்பத்தையும் அறிய முயலும் போதுதான் முழுமையாக ஒருவரின் நிலை பற்றி அறிய முயலும். அப்போதுதான் உலக உயிர்களின் மீது அன்பு தோன்றும்.அன்பு தோன்றிவிட்டால் யாரையும் தூற்றவோ இழிவாகக் கருதி ஒதுக்கவோ இயலாது.அதுதான் இறைநிலை. இறைவன் காட்சிக்குரியவன் அல்லன் உணர்வதற்கு உரியவன்.இறைவன் உயர் பிறவியான மனிதப் பிறவி கொடுத்திருப்பது போல ஒருஉடலில் ஆண் பெண் அலி என்ற மூன்று தன்மைகளையும் கொடுத்திருக்கிறான். அது இறைவன் கொடுத்த பரிசாகும். அப்பரிசனை பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

               “உண்டொரு ஒண்பொருள்  என்றுணர்       வார்க்கெல்லாம்
               பெண்டிர் ஆண் அலி என்றறியொண்கிலை”(திருச்சதகம்.42)
            

                  இப்பாடலின் முதலிரண்டு அடிகள் ஒரு பெண் வினா எழுப்புவது போலவும் அடுத்த பெண் அதற்கு பதி் தருவது போலவும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் முதல் பெண், சிவன் எதற்காக ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறினான்.அவ்வாறு மாறிய அவன் பித்தனல்லாமல் வெறென்ன? என்கிறாள். அதற்கு விடைதரும் பெண்,ஆணாகப் பிறந்து பெண்தன்மை பெற்று மாவில்லையெனில் யோக நிலை பற்றி அறியாமல் உலகத்தார் வீணே அழிவர் என்கிறார்.

    இறைவனை உணர்வால்,அனுபவத்தால்,தவத்தால் உணர நினைப்பவர்களுக்கு இறைவன், ஆண் பெண் அலி என்கிற மூன்று நிலையிலுமிருக்கிறான் என்பது புரியும் என்பதை இத்திருவாசகப்பாடல் எடுத்துரைக்கின்றது.ஆனால் இத்தத்துவத்தை அறியாதவர்கள் அலிக் கோலத்தை தூற்றுகின்றனர்.குடும்பத்தினரே வெறுக்கின்றனர்.அவமானச் சின்னமாக் கருதுகின்றனர்.தாயும் தந்தையுமே புறக்கணிப்பதால் பெரும்பாலானோர் வீட்டை விட்டே வெளியேறுகின்றனர். தாய் இருந்தும் தந்தை இருந்தும் நாடோடிப் பாடல்களாக மாறி அனாதையாகின்றனர்.ஆணாதிக்க சமூகமும் இவர்களை எள்ளி நகையாடுகின்றது. சித்தர்களையும் பித்தர்களாகக் கருதி எள்ளி நகையாடிய இறைநிலை எய்தவியலாத இச்சமூகம் இவர்களை உணர முடிவதில்லை.

    இறைவனின் படைப்புகளில் அலிகளின் படைப்பு எதற்கு என்ற கேள்விக்கு மாணிக்கவாசகர் ஒரு பாடலில் விளக்கமும் தருகிறார்.

    “தென்பால் உகந்தாடும் தில்லைச் சிற்றம்பலவன்
    பெண்பால் உகந்தாடும் பெரும்பித்தன் காணேடீ
    பெண்பால் உகந்திலனேற் பேதாய் இருநிலத்தார்
    விண்பாலியோ கெய்தி வீடுவர் காண் சாழலோ”(திருச் சதகம்.9)

    ஆண்மை எனில் வீரம் . வீரத்தின் விளைவு  அழித்தல். பெண்மை எனில் அன்பு. அன்பின் விளைவு காத்தல்.முற்றுந்துறந்த முனிவர்களும்,சித்தர்களும், உலகத்தவர்களும்  விரும்புவது    அன்புநிலைதான். அன்பின் வழிபட்டது உயிர் நிலை என்கிற திருவள்ளுவரின் கூற்று இவண்நோக்கத்தக்கது.தூய அன்புநிலைக்கு  மனதைப் பழக்குவதே  உண்மையான யோகநிலையாகும்.அந்நிலைப் பெற்றவர்களிடம் பெண்மையின் தன்மை மிகுந்திருக்கும். அவர்களே உலகில் வெற்றியாளர்களாகத் திகழமுடியும்.

      “மக்களைப் பெரிய அளவில் கவர்ந்திடும் ஆண் நடிகர்,பாடகர்,தலைவர்,சாமியார் போன்றோரின் உடல்கள் கணிசமாகப் பெண் தன்மையில் தோய்ந்திருக்கும். சமூகத்தில் பிரபலமான பெண்ணுடலில் ஆண்தன்மை மெலிதாகப் பொதிந்திருக்கும்”(காவ்யா,செப் 2012.49)என்கிற முருகேச பாண்டியனின் கூற்று கருதத்தக்கது. ஆணுக்குரிய தோற்றம், உடல் வலிமை போன்ற குணங்களிலிருந்தாலும், பெண்மைக்குரிய அன்பு, தாய்மை முதலான குணங்களும் இருப்பவரையே உலகம் விரும்புகிறது.

    மாணிக்கவாசகர் இறைவனை அடையும் வழிமுறைகளைப் பற்றி கூறுமிடத்து, மகளிர் விளையாடல்களின. வழியே நின்றுரைக்கும் தன்மை பிற ஆழ்வார்களிடமும்  நாயன்மார்களிடமும் காண முடியாத ஒன்றாகும்.ஆழ்வார்களில் ஆணடாள் கூடல் விளையாடல் பற்றி கூறியிருந்தாலும் அவர் பெண்ணாக இருப்பதால் அவ்வாறு மகளிர் விளையாடல்களைப் பற்றிக் கூறவது இயல்பானதாகும். ஆனால் ஆணாக இருக்கும் மாணிக்கவாசகர்,பெண்நிலையில் நின்று தன்னைப் பெண்ணாகவே பாவித்து மகளிர் விளையாட்டுக்களை விளையாடி மகிழ்வது சிறப்பானதாகும். திருவெம்பாவை திருத்தெள்ளேனம் திருச்சாழல் திருக்கோத்தும்பி திருப்பவல்லி திருஉந்தியார் திருத்தோணோக்கம் திருப்பொன்னூசல் போன்ற பத்து மகளிர் விளையாட்டுக்களில் மனந்தோய்ந்து பெண்ணாகவே மாறி விளையாடுகிறார்.

    சூடுவேன் பூங்கொன்றை சூடிச் சிவந்திரள்தோள்
    கூடுவேன் கூடி முயங்கி மயங்கி நின்று
    ஊடுவேன் செவ்வாய்க் குருகுவேன் உள்ளுருகித்
    தேடுவேன் தேடிச் சிவன் கழலே சிந்திப்பேன்(திருஅம்மானை.17)

     தலையில் பூச்சூடி அலங்கரித்துக்கொண்டு, இறைவனின் தோளைத் தழுவிடுவேன் . சில சமயம் அவரோடு ஊடல் கொள்வேன். ஊடிய பின் அவருடைய செவ்வாய்ச் சுவைக்காக ஏங்கி உருகுவேன். உள்ளுருகி வாடிய பின்னர் பெண்மைக்குரிய நாணத்தை கைவிட்டு அவரைத் தேடுவேன்.தேடி கிடைத்த பின,அவருடைய கழலே கதியென்று சிந்திப்பேன் என்று இறைவன் மேல் காதல் கொண்ட பெண்ணொருத்தியின் நிலையில் நின்று மாணிக்கவாசகர்  பாடுகிறார்.

    கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
    செம்பவள வாய்தான் தித்திருக்குமோ”(நாச்சியார் திருமொழி )என்ற  பாடலிலுள்ள ஆண்டாளின் ஏக்கம் மாணிக்கவாசகர் பாடலிலும் பொதிந்துள்ளது.

    முத்து நல் தாமம்பூ மாலைதூக்கி
    முளைக் குடந் தூபம் நல் தீபம் வைம்மின்(திருப் பொற்.1)

                      இப்பாடலில்,பெண்கள் மேற்கொள்ளும் இறைநோன்புகளில் தானும் ஒரு பெண்ணாக மாறி கலந்து கொண்டு, சக பெண்களுடன்   உரையாடி மகிழ்கிறார்.

         இறைத்தன்மை என்பது பாலியலைக் கட்டுக்குள் கொண்டுவரும் வழிமுறையாகும்.எனவேதான,சராசரியான  பாலுறவு,குழந்தைப்பேறு,   இரத்த உறவு கொண்ட குடும்பம், இவற்றைக் கடந்த வாழ்க்கை  வாழும் அரவாணிகள் ஆன்மீகமே தனக்கு உகந்தது என்று நம்புகிறார்கள்.வடநாட்டில் அரவாணிகளை தெய்வத்திற்கு இணையாகக் கருதி ஆசி பெறகிறார்கள்.  “நாங்கள் தெருவில் நடந்து சென்றால் வயது முதிர்ந்த பெரியவர்கூட எங்கள் கால்களைத்தொட்டு வணங்குகின்றனர் என வடநாட்டில் வாழும் ஒரு அரவாணி கூறுகிறார். ”மகாராசன்.236)

          பழங்குடி இன மக்கள் அரவாணிகளைக் கடவுளின் தூதுவர்கள் என்று கருதுகின்றனர்.எனவேதான்,“அமெரிக்காவில் சிகப்பிந்திய பழங்குடியினர் இந்த கடைபாலின குணமுள்ள குழந்தைகளை ஆணுக்கும் பெண்ணக்கும் நடுநிலையான இக்குழந்தை இறைவனுக்கும் மனிதர்களுக்கும் இடையே ஏற்பட்ட ஓர் தொடர்பு சாதனம் என நம்பியதால் இவர்களை பர்தாஷ் என சிறப்பு பெயரால் அழைத்து மருத்துவம்,மாந்திரீகம்,ஆன்மீகம் ஆகியவற்றைப் போதித்து பூசாரி ஸ்தானத்திற்கு உயாத்தினார்கள்”(மகாராசன்.197)என்கிறார் டாக்டர் ஷாலினி.இந்தியாவில் லடநாட்டிலும் அவ்வாறான ஒரு நம்பிக்கை உள்ளதால்தான் அரவாணிகள் தொடங்கி வைக்கும் எந்த ஒரு செயலும் சிறப்பாக இருக்கும் எனக் கருதி, அவர்கள் மூலம் எந்த தொழிலையும் தொடங்குகிறார்கள்.

    ஆனால் தமிழ்நாட்டில் நிலைமை தலைகீழ். இவர்களை இழிவாக் கருதி மிக மோசமான சொற்களால் எள்ளி நகையாடுகிறார்கள் இவர்களை ஒன்பது என்று கேலி செய்பவர்கள் அதிகம். ஒவ்வொரு மனிதனும் ஒன்பதுதான் என்பதை அவரகள் உணர்ந்தால் அவ்வாறு அரவாணிகளை இழிவுபடுத்த மாட்டார்கள்.

    புறந்தோல்போர்தெங்கும் புழு அழுக்கு மூடி
    மலஞ் சொரும் ஒன்பது வாயிற் குடிலை
    மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய” (சிவபுராணம்)

             இப்பாடல் மனித உடல் ஒன்பது வாயிற் கொண்ட ஒரு கூடு என்கிறது. செவி இரண்டு, கண் இரண்டு ,மூக்கு இரண்டு,வாய் ஒன்று., கருவாய் ஒன்று, எருவாய் ஒன்று என்ற ஒன்பது வாயிலை உடைய மனிதர்கள், தம் இனத்தைச் சேர்ந்த ஒருவரை அவ்வாறு கூறுவது தன்னையே தான் இழிவுபடுத்திக் கொள்வது போலத்தான் ஆகும்.

    Share
  • திருவாசகக் கருத்துப் புலப்பாட்டில் உணவுப் பொருட்கள்

    முனைவர் ஜ.பிரேமலதா,

    தமிழ் இணைப் பேராசிரியர்,

    அரசுகலைக் கல்லூரி,

    சேலம்-7

    திருவாசகம் சைவர்களின் வேதம் என்று போற்றப்படுகிறது. திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பது அனுபவப் பழமொழி. அதன் சிறப்பிற்குப் பல காரணங்கள் இருந்தாலும் மொழியமைப்பும் கருத்துப் புலப்பாட்டுத் திறனும் முக்கியப் பங்காற்றுகின்றன. உணவுப் பொருட்சொற்களைக் கருத்துப் புலப்பாட்டுத் திறனுக்குப் பயன்படுத்தி மாணிக்கவாசகர் நம் மனதை பக்குவப்படுத்தும் முயற்சியில் வெற்றிக் கண்டுள்ளார்.

    images (1)

    கருத்துப் புலப்பாடு

    கருத்துப் புலப்பாடு என்பது, ‘ஒரு செய்தியை மற்றவர் அறிய நன்றாகத் தெரிவித்தல்‘ என்பதாகும். இரெ.குமரன் அவர்கள்,காலம்,.இடம், பொருள், கேட்குநர் திறம் ஆகிய அனைத்தையும் அறிந்து மொழியினை ஆள வேண்டும் என்பதே கருத்துப்புலப்பாட்டிற்கு அடிப்படை என்கிறார்….என்பது ஒரு கருத்தைக் கூறுபவர், தான் சொல்ல வந்த கருத்தைக் கேட்பவர் எளிமையாகப் புரிந்துகொள்வதற்கு ஏற்ற முறையில்    அவரது சூழ்நிலைக்கேற்ப அவர் அறிந்துள்ள பொருட்களின் வழி எளிமையாகக் கூறும்  முறையாகும். இலக்கியத்தின் பாடுபொருளை விளக்குவதற்கு ஏற்ற வகையில் உள்ள எந்த ஒரு செய்தியையும்  கூறுபவர் பயன்படுத்தலாம்.அந்தச் செய்திக் கூறுபவரின் ஆற்றலால் பயன் நல்கிக் கருத்தாகிறது.அவரவர் மனநிலைக்கேற்பக் கருத்து வெளிப்படுத்தப்படுகிறது.
    உணவுப்பொருட்கள்

    உணவுப் பொருட்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான ஆற்றலைத் தருகிறது. உணவு உடல் வளர்ச்சிக்கும்,நம் இயக்கத்திற்கும் காரணமானது.

    உணவில்லையேல் உயிர்களில்லை. பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்.மானம் அழிந்து மதி கெட்டு மனிதன் உயரிய குணங்கள் அத்தனையையும் இழக்கும் நிலை ஏற்படுகிறது.அந்நிலையில் உணவு கொடுப்போர் உயிர் கொடுத்தோராகக் (மணிமேகலை.11.95)கருதப்படுகிறார்.உயிர் மற்றும் உடல் வளர்ச்சிக்குக் காரணமான உணவுப்பொருட்களை உயர் நிலையாம் சன்மார்க்க நெறி விளக்கத்திற்குப் பயன்படுத்துகிறார்.

    தேன் , பால்,கரும்பு  

    தாய் தன் குழந்தையைத் தேனே அமுதே கரும்பே எனப் பலப்படப் பாராட்டிக் கொஞ்சுகிறாள்.தேன் பால் கரும்பு இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையுடையவை.எனவே,தாய் ஒன்றன் சுவையை மட்டும் குழந்தையின்பத்தை ஒப்பிடப் பயன்படுத்தாமல் பலசுவையுடன் குழந்தையின்பத்தை ஒப்பிடுகிறாள்.இவ்வாறு ஒப்பிடுவது குழந்தையின்பம் ஒப்பிட முடியாத அளவு இன்பம் பயக்கக்கூடியது என்பதைக் காட்டுகிறது. தேனை விடப் பால் இனிமையானது. பாலைவிடக் கரும்பு இனிமையானது. எனவேதான், தாய் ஒன்றைவிட உயர்ந்த ஒன்றைக் குழந்தைக்கு உவமை காட்டி மகிழ்கிறாள்.

    மாணிக்கவாசகரும் இதே நிலையிலிருந்தே, சிவன் அருளை,அருமையைச் சிவனை நினைக்கும் போது ஏற்படும் இன்பத்தை இவ்வகை உயர்ந்த பொருட்களோடு ஒப்பிட்டு உவக்கிறார். முதலில் இறைவனைத் தேனமுது (5.58)என்கிறார். பின்னர்த் தேனோடு பால் கலந்து பருகுவது இனிமையானது, மேலும், சுவையுடையது என்பதால் இறைவனைத் தேனைப்பாலை (5.58), தேனோடுபால்(5.36) என்கிறார். தேனோடு பால் கலந்த இக்கலவை உடலுக்கு ஆக்கம் தருவதுபோல், சிவன் அருள் உயிருக்கு ஆக்கம்  தரக்கூடியது.இது மாணிக்கவாசகருக்கு  இன்னமுதாகத்  தோன்றுவதால் தேனைப்பாலை நிறையின்அமுதை அமுதின்சுவையை(27.4) என்றெல்லாம் இதைப் போற்றுவதோடு இறைவனின் திருவடியை இன்னமுது(8.9), ‘ஆராமுதின் அருள்தாளினைப்பாடி‘(16.1)என்று  உவக்கிறார்.

     தனித்தனிச் சுவைகளோடு ஒப்பிடுவதைவிட ஒரு பொருளின் பல சுவைகளை எடுத்துக்காட்டி  ஒப்பிடுவது, சிவனின் அருமையை உணர்த்தும் என்பதால், இறைவனைக் கரும்போடு ஒப்பிடும்பொழுது கரும்பின் பல சுவைகளோடு ஒப்பிடுகிறார்.‘கரும்பு தரு சுவையே’ (38-1) ‘கரும்பின் தெளிவே’(5-55),‘தீக்கரும்பின் கட்டியே’(8-10) எனக் கரும்பின் பல சுவைகளோடு ஒப்பிடுகிறார். இரும்பு தரு மனத்தேனை ஈர்த்தென் என்புருக்கிக்கரும்பு தரு சுவை எனக்குக் காட்டினை’(38-1) என்றும் கரும்பின் தெளிவே(9-90),கன்னலின் தெளிவே’(6-58),தெளிவந்த தேறல்(8-118),தீக்கரும்பின் கட்டியுமாய்’(8-18)எனக் கரும்பின் பல சுவைகளோடு ஒப்பிடுகிறார்.

    இறையருள் இச்சுவைகளையெல்லாம் விட உயர்ந்தது,இவை ஒவ்வொன்றும் தனித்தனி சுவையுடையவை. இறையருளோ இவ்வெல்லாச் சுவைகளையும் விட மிக உயர்ந்தது. இதை உணர்த்த,‘தேனையும் பாலையும் கன்னலையும் அமுதத்தையும் ஒத்தினிய கோன்’(8-14) என அனைத்துப் பொருட்களையும் இணைத்து இறைவனின் சிறப்பை மேலும் மேலும் ஒப்பிட்டு உவக்கிறார்.

    இதன்மூலம் இறையருள் அனைத்து சுவையுடைய பொருட்களையும் விட உயர்ந்தது மதிப்பிடமுடியாத இனிமை தருவது. என உணர்த்துகிறார். தேன்,பால்,கரும்பு என வரிசைப்படுத்தியிருக்கும் முறையைப் பண்டிதமணி  அவர்கள், “இம்மூன்று பொருட்களையும் வரிசைப்படுத்தும் பொழுது தேன்-பால்-கரும்பு என்ற வரிசையில் அமைத்துள்ளார்….தேன் புழுக்களின் எச்சில் மயமாகவும், பால் ஊனுடம்பின் சாரமாகவும் உள்ளவை….கரும்பங்கட்டி எச்சில், ஊன் கலப்பு முதலிய குற்றம் இலாதாய், உடலுக்கு நலம் பயப்பதாகும். இம்முறையில் ஆண்டவன் அன்பரை ஆட்கொள்ளுங்கால், தேனைப்போல, வயப்படுத்தும் பாலைப் போலப், பின் பயன் விளைவித்துக் இனிமை தரும் கரும்பங்கட்டியைப் போலத் தூய இன்பம் அளித்துக் காப்பான்” (1985.285-286)என்று வியக்கிறார்.மாணிக்கவாசகர் பொருட்களின் தன்மையை நுட்பமாக உணர்ந்த காரணத்தினாலே தான் தேன்,பால்,கரும்பின் வரிசையை முறைப்பட அமைத்து இறையருளோடு பொருத்தமுற ஒப்பிடுகிறார்.

    பழங்களோடு ஒப்பிடல்

    உடல்,உள நல ஆரோக்கியத்திற்கு உகந்தவை கனி வகைகளே. தூய இனிப்புச்சுவை கனி வகைககளில்தான் உள்ளது.உடலுக்கு உயிர்சக்தியைக் கொடுக்கக்கூடியது ஆதலால் தான் நோயுற்றவர்களுக்குக் கனி வகைகளைக் கொடுக்கின்றனர். உலகப் பற்றுகள் என்னும் நோய் பீடித்தவர்கள் உயிர் நலம் பெற, முக்தி நலம் பெற இறையருள்தான் கனிச்சாறாகும். ஆனால், இங்குச் சிவனோ கனிச்சாறாகவே இருக்கிறான் என்கிறார். இறைவனை,

    பழச்சுவை(20-7,9-15) 
      செங்கனி(9-14), 
      மதுரக்கனி(32-10)
      கன்னற்கனி(3-17)
    என்றெல்லாம் பலப்படப் போற்றுகிறார்.

    பலா-வாழை

    பெண்ணாசை,மண்ணாசை,பொன்னாசை இம்மூன்று ஆசைகளும் தான் உலகப்பற்றுக்குக் காரணம். இப்பற்றுக்களில் ஈடுபாடுகொண்டவர்களின் மனம் கல்லைப்போல இறுகி விடும். அத்தகையவர்களின் மனதை கனிவிக்கும் அருட்திறம் உடையவன் இறைவன் ஒருவனே. உலகப்பற்றுக்களில் ‘பலாப்பலத்து ஈ’ போலப் பற்றிக் கிடந்த தன்னை, தன் மனதை இறைவன் தன் கருணைத்திறத்தால் ஆட் கொண்டு உண்மைப்பொருளை உணரவைத்துவிட்டான். தில்லைக்கூத்தனை என்னுள் ஏற்றுக்கொண்ட பிறகு என்கூடும்,உயிரும் கனிந்து மகிழ்வால் கும்மாளமிடத் தொடங்கிவிட்டன என்கிறார். உலகப்பற்றுக்களில் மூழ்கி பலாப்பலத்து ஈ போல இறுகிக்கிடந்த தன்னை இறைவன் தன் அருட்திறத்தால் கனிவித்து ஆட்கொண்ட தன்மையை வியக்கும் நிலையில் இறைவனையே கனியாக்கி ‘கல்நார்உரித்த கனியே’(14-97)என்கிறார்.

     மனம் ஆணவம் நீங்கி கனிந்த தன்மை பெற்றதை  வாழைப்பழத்தோடு ஒப்பிடுகிறார். இறைவன் என் மனதை வாழைப்பழம் போல கனியவைத்துவிட்டான் என்கிறார். வாழைப்பழத்தின் மனம் கனிவித்து’(96-34)என்ற தொடரில் இதை உணர்த்துகிறார். தானே கனியாக இருக்கும் இறைவன், தன் அன்பர்களின் மனதைக் கனிவிக்கும் திறமுடையவனாகவும் விளங்குகிறான்.

    நெல்லிக்கனி 

    நெல்லிக்கனி மிகவும் எளிதாகக் கிடைக்கக்கூடியது .அதுபோல இறைவன் எளிதாக மாணிக்கவாசகருக்குக் கிடைத்துவிட்டான். இறைவன் மிக எளியவன். அன்பருக்கு அன்பனாய்,தொண்டருக்குத் தொண்டராய்த் தானே வந்து அருள் செய்பவன். இக்கருணை வள்ளல்,மாணிக்கவாசகருக்காகப் பிட்டு சுமந்தும், குதிரைச்சேவககனாய் வந்தும் அருள் செய்தவர். சமயக் குரவர்களில் மாணிக்கவாசகர் ஒருவரே இவ்வாறு இறைவனைத் தொண்டராய் அடையும் பேறு பெற்றவர்.தனக்கு எளியனாய் வந்து அருட்செய்ததை எளிய பழமொழி மூலம் விளக்குகிறார்.
    தடக்கையின் நெல்லிக்கனியாயினான் (3-162)
    எளியன் என்று தான் கூறிய சொல்,தன் வாழ்க்கையில்  நடந்த நிகழ்வுகளின் வழி ஊரறிந்த இரகசியமாகவும் உள்ளது என்பதை இவ்வடிகளின் மூலம் புலப்படுத்துகிறார். மக்கள் அன்றாடம் பேச்சு வழக்கில் பயனபடுத்தும் தொடர்களை இலக்கியத்தில் கையாள்வது ஒருவகை உத்தியாகும். பலாப்பலத்து ஈ, உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற பழமொழிகளை இடம் நோக்கி கருத்துப் புலப்பாட்டின் எளிமைக்காகத் திறம்படக் கையாண்டுள்ளார்.

    புளியம்பழம்

       தமிழர்கள் இனிப்புச்சுவைக்கு அடுத்து புளிப்புச் சுவையையே பெரிதும் விரும்புகின்றனர். புளிப்புச் சுவையுடைய இயற்கைப் பொருட்களில் புளியங்காய் முதலிடம் பெறும். இது முற்றும்போது இனிப்புச்சுவையுடைய புளியம்பழம் ஆகிறது. காயாக இருக்கும் போது தோலும் உள்சதையும் இணைந்து பிரிக்க முடியாத நிலையில் இருக்கும். ஆனால், பழமாகும்போது தோல் முற்றி விடும்.சதைப்பகுதிப் பழமாகி தோலிலிருந்து விடுபட்டுக் காணப்படும். எளிதாக ஓட்டுப் பகுதியை பிரித்து விடலாம்.

    மாணிக்கவாசகர் இவ்விரு நிலைகளையும் தன் வாழ்க்கை அனுபவத்தோடு ஒப்பிடுகிறார். திருப்பெருந்துறையில் இறைவனாகிய குருநாதரைச் சந்திக்கின்ற வரையில் அவர் உலக இன்பத்தில் மூழ்கியிருந்தார். பல பற்றுக்களால் பற்றப்பட்டிருந்தார். அவற்றிலிருந்து மீளவேண்டும் என்ற உணர்வுகூட அவரிடம் இல்லை.  ஆனால், குதிரை வாங்கச் சென்ற வழியில் இறைவன் அவரை ஆட்கொண்டார். மாணிக்க வாசகர் குதிரை வாங்கவே பெருந்துறை சென்றார். இறைவனைத் தரிசிக்கும் நோக்கத்துடன் செல்லவில்லை.ஆனால் இறைவனாகிய குருநாதரைக் கண்டவுடன் மிக இயல்பாக வசப்பட்டு விட்டார்.இந்நிலையில் அவரைப் பற்றியிருந்த அவர் பற்றியிருந்த பற்றுக்களெல்லாம் தீயிலிட்ட பங்சினைப் போல மறைந்து போய்விட்டன.பற்றற்ற நிலையில் பற்றுக்களாகிய புளியம் ஓட்டினை விட்டு, இறைமை உணர்வுடன் இனிப்புச் சுவையுடைய பயன்பாட்டிற்குரிய புளியம்பழம் நிலைக்கு அவரது உயிர் கனிந்து விட்டது. இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட பின்னர், தானிருந்த நிலையைப் புளியம் பழமொத்திருந்தேன் என்கிறார்.தன் பற்றுக்களுக்கும், இவ்வுலக வாழ்விற்கும் காரணமான உடலைப் புளியந்தோடு என்கிறார்.

     ”அளி புண்ணகத்துப் புறந்தோல் மூடி அடியேனுடைய
    யாக்கை புளியம் பழமொத்திருந்தேன்”(25-5) இறைவனின் திருவடியை அடையும் வேட்கையினால், இப்பரு உடலைவிட்டு நீங்கி இறைவனடியை சேர விரும்பும் உயிரின் ஆசையை, இப்பாடல் வரிகளில் புலப்படுத்துகிறார்.

    திருமந்திரப்பாலொன்றும் இதே கருத்தை வெளிப்படுத்தியுள்ளது.
    “அளியொத்த பெண்பிள்ளை ஆனந்த சுந்தரி
    புளியுறு புன்பழம் போலுள்ளே நோக்கி”(திருமந்திரப் பாடல்.2920)என்ற பாடல் பற்றறுத்து பக்குவப்பட்ட உயிர்கள் ஓட்டிலிருந்து நீக்கிய புளியம்பழம் போன்றவை. கனிந்த நிலையிலுள்ள அவ்வுயிர்களையே பராசக்தி பற்றுவாள் என்கிறது.

     இதே நிலையினைக் குலாப்பத்தில்,இறைவனாகிய குருநாதரைச் சந்திக்குமுன் அமைச்சராக இருந்தபோது பட்டாடையும் பொற்கலமுமே உறவு என நினைத்து வாழ்ந்திருந்தேன. இறைவனால் ஆட்கொள்ளப்பட்டபின் ஓடும் கவுந்தியுமே உறவாகிவிட்டது. பட்டாடையும் பொற்கலமும்  அமைச்சர் பதவியும் தராத   மகிழ்வை ஓடும் கவந்தியும் தந்து விட்டன.ஆனந்தக் கூத்தனைச் சிவனை  என்னுள் ஏற்றுக் கொண்டபிறகு என் கூடாகிய உடலும், உயிரும் மகிழ்வால் கும்மாளமிடத்தொடங்கிவிட்டன.

    குலாப்பத்திலும்,

    “தேடும்பொருளும் சிவன்கழலே எனத்தெளிந்து
     நாடும் உயிரும் குமண்டையிடக் குனிந்து அடியேன்
     ஆடும் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.(4-1)
    என்று தன் உயிரின் நிலையை உணர்த்துகிறார்.

    இறை ஒன்றே நிலையானது. மற்ற அனைத்தும் நிலையற்றவை என்பதை உணர்த்த விரும்பிய மாணிக்கவாசகர், மேற்கண்டவாறு பழங்களின் தன்மையோடு வாழ்க்கையை ஒப்பிட்டு விளக்கியுள்ளார்.பூவாகி பின் பழமாகி அதுவும் மாறி அழுகி மண்ணில் வீழும் பழங்களின் வாழ்க்கையோடு மனித வாழ்க்கையை ஒப்பிடுகிறார்.   ”அரும்பாய்க் கவிமலராய்க் காயாகி வம்பு பழுத்து உடலம் மாண்டு” (40-6)என்று அரும்பாகி, மலராகி, காயாகி, பழுத்து, பின் பழம் வீழ்ந்து அழிவது போல நம் உடலும் அழிந்துவிடும் என்கிறார்.   ‘பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்‘ எனத் தொடங்கும் குண்டலகேசிப் பாடலும் இதே உண்மையை உணர்த்துகிறது.

    தயிர்

    மாணிக்கவாசகர் உள்ளம்,முதலில்  இறைக் கருணையைப் பற்றாமல் புலன்களால் அலைப்புண்டு அவரையும் அலைக்கழிக்கிறது. தன் உள்ளம் தன்னைப் படுத்தும் பாட்டை  மத்திடு தயிராகி (5-10) என்ற உவமை மூலம் விளக்குகிறார். “மத்துறு  தண் தயிரிற் புலன் தீக்கதுவக் கலங்கி” (6-30) என்றும் ”மத்திட உடைந்து தாழியைப் பாவு தயிர் போல் தளர்ந்தேன்” என்றும்  கூறுகிறார்.ஐம்புலன்களைப் பலமுகம் கொண்ட மத்தாகவும், உள்ளத்தைத் தயிராகவும் உவமிக்கிறார். திருநாவுக்கரசரும் “மத்துறு தயிர் போல் மறுகும் உன் சிந்தை” (4-96-3) என்று புலன்களின் வழி சென்ற  தன் உள்ளம் படும் பாட்டை எடுத்துரைக்கிறார்.

    நெய்

    இறைவனை ஆவின் பால் என்றழைக்கிறார். ஆன்நெய்(5-38).பசுவின் நெய் தூயது.பக்கவிளைவுகளற்றது.ஆயுர்வேதத்தில் மருந்தாகப் பயன்படுத்தக்கூடியது. நெய் பாலில் மறைந்திருகக்கூடியது. அதுபோல இறைவனும் உயிர்களின் ஆன்மாதோறும் மறைந்துள்ளான். பாலில் மறைந்துள்ள நெய் பின் வெளிப்படுவது போல வாய்ப்பு நேரும்பொழுது, இறைவனும் வெளிப்படுவான். சிவவாக்கியர் இந்நிலையை, ‘ஊமையான காயமாய் இருப்பன் எங்கள் ஈசனே‘ என்கிறார். மாணிக்கவாசகர் இந்நிலையை, ‘பாலில் நெய் போலப் பேசாதிருந்தாய்‘(21-5) என்கிறார்.இதே கருத்தை,”சேயன் அணியன் தித்திக்கும் தீங்கரும்ப பாயமு தாகிநின் றண்ணிக் கின்றானே”(திருமந்திரப் பாடல்.2365)”காலினில் ஊறும் கரும்பினிற் கட்டியும்      பாலினுள் நாற்றமும் போலுளன்”(பாடல் எண்.2639)முதலான இத்திருமந்திரப்பாடல்களும் இறைவன் கருப்பங்கட்டியுமாய்,பாலில் மறைந்த நெருப்பாய்,பழரசமாய்,பூவினுள் விரவிய மணமாய் விளங்குகிறான் என்கின்றன.
    பாலில் மறைந்துள்ள  நெய் பின் வெளிப்படுவது போல, வாய்ப்பு நேரும்பொழுது இறைவனும் வெளிப்படுவான். சிவவாக்கியர் அந்நிலையை ‘ஊமையான காயமாய் இருப்பன் எங்கள் ஈசனே‘ என்கிறார். மாணிக்கவாசகர் இந்நிலையைப் பாலில் நெய் போலப் பேசாதிருந்தாய்(21-5) என்கிறார்

    எள்ளும் எண்ணெயும்

    ‘எள் என்றால் எண்ணெயாக இருக்கவேண்டும்‘ என்பது தமிழில்  ஒரு பழமொழி. இப்பழமொழி வேகத்தையும்,செயல்திறனையும் குறிக்கிறது. சிவனை நினைத்தளவிலேயே அவனுடைய  அருள் அவனை நினைத்தவர்களுக்குக் கிடைத்துவிடும். சட்டோ நினைக்க மனத்து அமுதாம் சங்கரனை, ‘எள்ளும் எண்ணெய் போல் நின்ற எந்தையெ (5-46) என்கிறார். அன்பர்கள் இறைவனை நினைத்தளவிலேயே வேண்டியதைக் கொடுக்கும் அருட்பேராற்றல் கொண்ட வள்ளல் என்பதை இதன் மூலம் புலப்படுத்துகிறார்.

    சிவனே ஓர்அமுதம் 

    உயிர்களுக்கெல்லாம் அமுது என விளங்கக் கூடியவன் சிவன் ஒருவனே. உயிர்களைக் காக்க வேண்டி ஆலாலவிடத்தையே அருந்தியவன். சிற்றுயிர்களுக்காக இவ்வுலகின் முதல்வனான சிவன் தாயாகிக் கருணையினால் தன் உயிரையும் பொருட்படுத்தாது விடம் அருந்திய திறத்தை, சிற்றுயிர்க்கிரங்கிக் காய்ச்சின ஆலமுண்டாய்(6-50) என்கிறார். சிற்றுயிர்களுக்காக மட்டுமின்றி,மிருமாலையும்,பிரமனையும்,தேவர்களையும் காக்கும் பொருட்டு ஆலமுண்டதை,“ஆலாலம் உண்டலனேல் அன்றயன் மால் உள்ளிட்ட மேலாயத் தேவரெல்லாம் வீடுவர் காண் சாழலோ “ என்கிறார்.

    பிறர் நலனுக்காக  ஆலாலத்தை அமுதாக உண்ட சிவனை ,

    வானோர்க்கு அமுதம்(5-69) 
    ஆலாலம் அமுது(13-12) 
     ஆலாலம் ஆரமுது(12-19)
     நஞ்சமுதாக்குங்கண்டன்(6-82) போன்ற தொடர்களால் குறிப்பிடுகிறார்.

    முடிவுரை

    சிவனின் பெருமை, அருட்தன்மை,தூய தன்மை,எளிமை, இருப்புநிலை முதலியவற்றோடு தன்நிலையையும் விளக்குவதற்கு எளிய மக்களும் புரிந்து கொள்வததற்கேற்ற வகையில் எளிய வகை உணவுப் பொருட்களின் பெயர்களைப் பயன்படுத்துகிறார்.உணர்ந்து உணர்ந்து, நினைந்து நினைந்து படித்து இன்புறத் தக்கவகையில் திருவாசகம் இருப்பதற்குக் காரணம் இதுபோன்ற எளிய உத்திகளே காரணம்.. இக்காரணம் பற்றியே திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்று போற்றப்படுகிறது. திருவாசகம் உணவுப் பொருட்களை வைத்து தன் கருத்தை எளிய மக்களும் புரிந்து கொள்ள உதவுவது அதன் சிறப்பு. அத்திருவாசகத்தையே வள்ளலார், நற்கருப்பஞ்சாற்றில் ,தேன்கலந்து ,பால்கலந்து,செழுங்கனி தீஞ்சுவை கலந்து செய்யப்பட்ட இனிப்புப் பதார்த்தமாகச்  சித்திரிக்கிறார்.ஆனால், உயிரில் கரைந்துவிடும் இத்தன்மையுடைய இந்த இனிப்பு உவட்டாமல் இனிக்கக்கூடியது என்று மேலும் இதனைச் சிறப்பிக்கிறார்.

    துணை நின்ற நூல்கள்

    1.குமரன்,இரெ., சங்க இலக்கிய அகப்பாடல்களில் கருத்துப் புலப்பாட்டு உத்திகள்,அனன்யா பதிப்பகம்,தஞ்சாவூர்-மு.ப.-2001
    2.வரதராஜன்.ஜி,(உ.ஆ.,),திருமந்திரம் மணிவாசகர் பதிப்பகம்,சென்னை
    3.வெள்ளைவாரணம்.ம.திருவாசகம், காசித்திருமடம்,12ம. பதிப்பு -2003.

    Share