கமலாதேவி அரவிந்தன் உடன் குரல் நேர்முகம்
செவ்வி: அண்ணாகண்ணன்
சிங்கப்பூரில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர், திருமதி கமலாதேவி அரவிந்தன். மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர். எனினும் தமிழ் பால் தணியாத காதல் கொண்டவர். தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் இலக்கியம் படைக்கும் வித்தகர். சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரை, கவிதை, ஆய்வு… என இவர் கைத்திறம் காட்டிய துறைகள் பல. மிக இளம் வயதிலேயே எழுதத் தொடங்கி, பல பத்தாண்டுகளாகத் தொடர்ச்சியான படைப்பியக்கம் கொண்டவர். தமிழுக்குக் கிட்டிய தவச்செல்வி எனத் தமிழவேள் கோ. சாரங்கபாணி, இவரைப் பாராட்டியுள்ளார்.
தன் தாய்மொழியான மலையாளத்திலும் தமிழிலும் ஏறக்குறைய 120 சிறுகதைகள் 18 தொடர்கதைகள் 142 வானொலி நாடகங்கள் 100க்கும் மேற்பட்ட இலக்கியக் கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழிலும் மலையாளத்திலும் 22 மேடை நாடகங்களை எழுதி இயக்கியுள்ளார் சிங்கையில் மலையாளத்தில் முழு நீள ஆய்வு நாடகம் எழுதி, இயக்கிய முதல் பெண் எழுத்தாளர். மலையாள நாடகத் துறையில் விருதுகளையும் சவால் கிண்ணங்களையும் இவர் பெற்றிருக்கிறார். தமிழ்நேசன் இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் 3 முறைகள் முதல் பரிசு பெற்றிருக்கிறார். தமிழ் மலரில் 7 முறைகள் இவரின் சிறுகதைகள் சிறப்புச் சிறுகதையாக வெளிவந்துள்ளன. மலேசிய வானொலி நடத்திய நாடகப் போட்டிகளில் பல முறைகள் முதல் பரிசு பெற்றுள்ளார். தமிழ் நாடு, கேரளப் பல்கலைக்கழகங்களில் ஆய்வுக் கட்டுரைகள் படைத்துள்ளார். தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் நல்ல இலக்கியங்களை மொழி பெயர்த்துள்ளார் .
கமலாதேவி அரவிந்தன், ‘நுவல்’ என்ற தலைப்பிலான சிறுகதைத் தொகுப்பினைப் படைத்துள்ளார். இதன் வெளியீட்டு விழாவுக்காகச் சென்னைக்கு வந்த சேச்சியை வல்லமை ஆசிரியர் அண்ணாகண்ணன் நேர்கண்டார். அதன் ஒலி வடிவினைக் கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு தளத்தில் கேட்கலாம்.
நேர அளவு: 53 நிமிடங்கள்
மெல்லிசை: வசந்தி சுப்பிரமணியன்