கமலாதேவி அரவிந்தன் உடன் குரல் நேர்முகம்

4

செவ்வி: அண்ணாகண்ணன்

Kamaladevi Aravindanசிங்கப்பூரில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர், திருமதி கமலாதேவி அரவிந்தன். மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர். எனினும் தமிழ் பால் தணியாத காதல் கொண்டவர். தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் இலக்கியம் படைக்கும் வித்தகர். சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரை, கவிதை, ஆய்வு… என இவர் கைத்திறம் காட்டிய துறைகள் பல. மிக இளம் வயதிலேயே எழுதத் தொடங்கி, பல பத்தாண்டுகளாகத் தொடர்ச்சியான படைப்பியக்கம் கொண்டவர்.  தமிழுக்குக் கிட்டிய தவச்செல்வி எனத் தமிழவேள் கோ. சாரங்கபாணி, இவரைப் பாராட்டியுள்ளார்.

தன் தாய்மொழியான மலையாளத்திலும் தமிழிலும் ஏறக்குறைய 120 சிறுகதைகள்  18 தொடர்கதைகள் 142 வானொலி நாடகங்கள் 100க்கும் மேற்பட்ட இலக்கியக் கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழிலும் மலையாளத்திலும் 22 மேடை நாடகங்களை எழுதி இயக்கியுள்ளார் சிங்கையில் மலையாளத்தில் முழு நீள ஆய்வு நாடகம் எழுதி, இயக்கிய முதல் பெண் எழுத்தாளர். மலையாள நாடகத் துறையில் விருதுகளையும் சவால் கிண்ணங்களையும் இவர் பெற்றிருக்கிறார். தமிழ்நேசன் இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் 3 முறைகள் முதல் பரிசு பெற்றிருக்கிறார். தமிழ் மலரில் 7 முறைகள் இவரின் சிறுகதைகள் சிறப்புச் சிறுகதையாக வெளிவந்துள்ளன. மலேசிய வானொலி நடத்திய நாடகப் போட்டிகளில் பல முறைகள் முதல் பரிசு பெற்றுள்ளார். தமிழ் நாடு, கேரளப் பல்கலைக்கழகங்களில் ஆய்வுக் கட்டுரைகள் படைத்துள்ளார். தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் நல்ல இலக்கியங்களை மொழி பெயர்த்துள்ளார் .

கமலாதேவி அரவிந்தன், ‘நுவல்’ என்ற தலைப்பிலான சிறுகதைத் தொகுப்பினைப் படைத்துள்ளார். இதன் வெளியீட்டு விழாவுக்காகச் சென்னைக்கு வந்த சேச்சியை வல்லமை ஆசிரியர் அண்ணாகண்ணன் நேர்கண்டார். அதன் ஒலி வடிவினைக் கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு தளத்தில்  கேட்கலாம்.

நேர அளவு: 53 நிமிடங்கள்

மெல்லிசை: வசந்தி சுப்பிரமணியன்

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “கமலாதேவி அரவிந்தன் உடன் குரல் நேர்முகம்

  1. நேர்காணலை கேட்க பல முறை முயன்றேன். குரல்கள் மிகவும் மென்மையாக இருந்ததால், கேட்க முடியவில்லை. திருமதி கமலம் அரவிந்தன் அவர்களுக்கு நல் வரவு ஆகுக.

  2. இரு தளங்களிலும் இந்த ஒலிக் கோப்பினைத் திறந்தால், என் கணினியில் சரியாக, வலுவாகக் கேட்கிறது. உங்கள் கணினியின் ஒலி அளவினை உயர்த்த முயலுங்கள்.

  3. அண்ணாகண்ணன்,
    வணக்கம்.

    ஒரு சிறு திருத்தம் இங்கு தேவைப்பட்டதால் அதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

    யுகமாயினி பதிப்பகம் அல்ல, நூல்களைக் கொண்டு வருவது. நிவேதிதா புத்தகப் பூங்கா ஸ்வாமிநாதன் நான்கு புத்தகங்களைக் கொண்டு வருகிறார். அவை எஸ்ஸார்சி யின் வேதவனம் (வேத உபநிஷதங்களிலிருந்து தேர்ந்த சில பகுதிகளின் புதுக்கவிதையாக்கம். இப்புத்தகம் குறித்து ருத்ர துளசிதாஸ் ஆய்வு செய்கிறார். இரண்டாவது அவருடைய பைந்தமிழ்க் கவிஞர்கள். (பாரதி, பாரதிதாசன், ராமலிங்கம் பிள்ளை, கண்ணதாசன் இவர்களின் படைப்புகள் மீதான் முற்றிலும் மாறுபட்ட பார்வை) ஆய்வுரை செய்பவர் இரா.எட்வின். மூன்றாவது நூல்: யுகமாயினியில் வெளிவந்த எஸ். வைதீஸ்வரனின் பத்தி எழுத்தின் தொகுப்பு. இதை ஆய்வுரை செய்யவிருப்பவர் இந்திரன். நான்காவது கமலாதேவி அரவிந்தனின் சிறுகதைத் தொகுப்பு. இதை ஆய்வுரை செய்யவிருப்பவர் குகை மா.புகழேந்தி. மாலை 5 மணிக்கு சென்னை கே. கே. நகர் முனுசாமி சாலை, டிஸ்கவரி புக் பாலஸ் கடையில் இவ்வமர்வு இடம்பெறுகிறது. இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் வருக.

    இணையத்தைப் போன்று எல்லாம் இலவசமாகக் கிடைத்திடாத நிலையில் நூலாய்வுக்குக் கூட புத்தகப் பதிப்பாளர்களின் ஆதரவை நம்பித்தான் செய்ய வேண்டியதாகிறது.

    நன்றி

  4. இந்த நேர்முகத்தை எனது யூடியூப் அலைவரிசையில் வெளியிட்டுள்ளேன். வாய்ப்புள்ளோர் கேளுங்கள் – https://www.youtube.com/watch?v=1XXSkNpI2LU&t=4s  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.