படைத்தவன்…
இறைவன் படைத்த மண்ணில்
எவனோ கோடுபோட்டு
எல்லை வகுத்து
என்நாடு என்றான்..
எல்லையைப் பெரிதாக்க
எவனுக்கோ வந்த பேராசைக்குப்
பலியாய்
எல்லையில் எவனுடனோ சண்டையிட்டு
எல்லாம் இழந்து
எல்லோரையும் தவிக்கவிட்டு
என்கடமையென்று மடிகிறானே,
இவன் ஒரு போர்வீரன்..
இந்தப் பாரைப் படைத்தவன் இறைவன்,
இந்தப் போரைப் படைத்தவன் யார்…!
படத்துக்கு நன்றி
http://mobcup.in/wallpapers/286494/indian-army-man