சிந்தனையாளர்கள் வாழும் காலத்திலேயே பாராட்டப்பட வேண்டும் – எழுத்தாளர் என்.சண்முகம் பேச்சு –
சிந்தனையாளர்கள் வாழும் காலத்திலேயே பாராட்டப்பட வேண்டும் – எழுத்தாளர் என்.சண்முகம் பேச்சு –

இவ்விழாவிற்கு கவிஞர் மு.முருகேஷ் தலைமையேற்றார்.இசைப்பாடல் பாடி அனைவரையும் பொ.மாலதி வரவேற்றார். ‘ திருவண்ணாமலை மாவட்ட சாதனைச் செம்மல்கள் ” எனும் நூலை இராமலிங்கம் அன் கோ உரிமையாளர் இரா. சிவக்குமார் வெளியிட,முன்னாள் வந்தவாசி ஒன்றியப் பெருந்தலைவர் எம்.எஸ்.தரணிவேந்தன் பெற்றுக் கொண்டார்.
முன்னாள் நகரமன்ற உறுப்பினர் அ.மு.உசேன், நகரமன்ற உறுப்பினர் ஏ.மணிகண்டன், லயன் இரா.சரவணன் உள்ளிட்டோர் நூலாசிரியரை வாழ்த்திப் பேசினர். நிறைவாக, ஏற்புரையாற்றிய நூலாசிரியர் என்.சண்முகம் பேசும்போது, எழுத்தாளர்கள், கலைஞர்கள், சமூகச் சிந்தனையாளர்கள் ஆகியோரை அடையாளம் கண்டு பாராட்டுகிற சமூகமே முன்னேறிய சமுதாயமாகும். பல திறமையாளர்கள் இன்னும் வெளியே தெரியாமல் மறைந்து இருக்கிறார்கள். அவர்களை கண்டெடுத்து, மேடையேற்றி பாராட்ட வேண்டும். பாராட்டு என்பது ஒவ்வொரு மனிதனையும் ஊக்கப்படுத்தும் ஒரு தூண்டுகோல். சிறந்த மனிதர்களைப் பாராட்டும்போது, அந்தப் பாராட்டினால் அவர்கள் மேலும் சிறப்பாக செயல்பட முடிகிறது என்றார்.
முடிவில், அ.சிவக்குமார் நன்றி கூறினார்.