செண்பக ஜெகதீசன்

இறைவன் படைத்த மண்ணில்

எவனோ கோடுபோட்டு

எல்லை வகுத்து

என்நாடு என்றான்..

 

எல்லையைப் பெரிதாக்க

எவனுக்கோ வந்த பேராசைக்குப்

பலியாய்

எல்லையில் எவனுடனோ சண்டையிட்டு

எல்லாம் இழந்து

எல்லோரையும் தவிக்கவிட்டு

என்கடமையென்று மடிகிறானே,

இவன் ஒரு போர்வீரன்..

 

இந்தப் பாரைப் படைத்தவன் இறைவன்,

இந்தப் போரைப் படைத்தவன் யார்…!

படத்துக்கு நன்றி

 http://mobcup.in/wallpapers/286494/indian-army-man                      

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “படைத்தவன்…

  1. யாருக்காகவோ….. யாரோ….. எங்கோ…..மடிவது குறித்த தங்களின் ஆவேச வெளிப்பாடு பாராட்டக்கூடியது.
    ஒரு விஷயத்தை யோசித்து பாருங்கள்…அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்கிற போது இத்ற்கெல்லாம் காரண கர்த்தா யாரென்று நாமே புரிந்து கொண்டு பகுத்தறிவுப் பாதை நோக்கிப் பயணிக்க வேண்டியதுதான்.

  2. பாராட்டுரைக்கும்,
    பயனுள்ள கருத்துரைக்கும்
    நன்றி முகில்…!
           -செண்பக ஜெகதீசன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *