யாஹூவில் அண்ணாகண்ணன்
அண்ணாகண்ணன்
புகழ் வாய்ந்த யாஹூ நிறுவனத்தில் 2011 ஜூன் 6ஆம் நாள் இணைந்துள்ளேன். அதன் தமிழ்த் தளத்திற்கு ஆசிரியராகப் பொறுப்பு ஏற்றுள்ளேன். பெங்களுருவிலிருந்து பணிபுரிவேன்.
எனவே, வல்லமை மின்னிதழுக்குப் புதிய நிர்வாகக் குழுவினை உருவாக்கியுள்ளேன். அந்தக் குழுவின் விவரங்கள் இங்கே.
மிகுந்த ஆர்வமும் ஆற்றலும் கொண்ட இந்தப் புதிய குழு, வல்லமையைப் புதிய உயரங்களுக்கு இட்டுச் செல்லும் என முழுமையாக நம்புகிறேன்.
இவ்வளவு காலமாக, தங்கள் படைப்புகளாலும் ஆலோசனைகளாலும் பல்வகைப் பங்களிப்புகளாலும் வாசிப்பினாலும் வல்லமைக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த அனைவருக்கும் நன்றி. தாங்கள் அனைவரும் இந்தப் புதிய குழுவுக்கும் தங்கள் ஆதரவை நல்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
நன்றிகளும் வணக்கங்களும்.