யாஹூவில் அண்ணாகண்ணன்
அண்ணாகண்ணன்
புகழ் வாய்ந்த யாஹூ நிறுவனத்தில் 2011 ஜூன் 6ஆம் நாள் இணைந்துள்ளேன். அதன் தமிழ்த் தளத்திற்கு ஆசிரியராகப் பொறுப்பு ஏற்றுள்ளேன். பெங்களுருவிலிருந்து பணிபுரிவேன்.
எனவே, வல்லமை மின்னிதழுக்குப் புதிய நிர்வாகக் குழுவினை உருவாக்கியுள்ளேன். அந்தக் குழுவின் விவரங்கள் இங்கே.
மிகுந்த ஆர்வமும் ஆற்றலும் கொண்ட இந்தப் புதிய குழு, வல்லமையைப் புதிய உயரங்களுக்கு இட்டுச் செல்லும் என முழுமையாக நம்புகிறேன்.
இவ்வளவு காலமாக, தங்கள் படைப்புகளாலும் ஆலோசனைகளாலும் பல்வகைப் பங்களிப்புகளாலும் வாசிப்பினாலும் வல்லமைக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த அனைவருக்கும் நன்றி. தாங்கள் அனைவரும் இந்தப் புதிய குழுவுக்கும் தங்கள் ஆதரவை நல்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
நன்றிகளும் வணக்கங்களும்.
வாழ்த்துகள் அண்ணா கண்ணன்.
அருட்பேராற்றல் கருணையினால் தாங்களும் தங்கள் குடும்ப உறுப்பினர்களும் உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ் மற்றும் மெய்ஞானம் ஓங்கி நீடூழி வாழ்க வளமுடன்…!
வாழ்த்துகள் சார். புதிய நிர்வாகக் குழுவிற்கும் வாழ்த்துகள்
புதிய பணியில் சிறப்புற வாழ்த்துக்கள் அண்ணாகண்ணன்.
அன்புடன்
சுகுமாரன்
புதிய பதவியிலும்
அதிக உயரந்தாண்ட
இதயத்து ஆழத்தின்
உதயத்து வாழ்த்துக்கள் !
All the very best Mr.Anna Kannan for your new assignment.
வாழ்த்துக்கள்
நல்ல முயற்ச்சி். வாழ்த்துக்கள்..
Best Wishes!
வாழ்த்துக்கள் தம்பி கண்ணன்
சேச்சி
உழைப்பும் கொண்ட கொள்கையில் உறுதியும் உயரத்திற்கு எடுத்துச் செல்லும். நீங்கள் செல்ல வேண்டிய உயரம் இன்னும் இருக்கிறது. அங்கே செல்வதற்கு உயரிய கற்பனையும் கடின உழைப்பும் உங்களிடம் இருக்கின்றன. என் போன்றோரின் வாழ்த்துக்களும் இருக்கின்றன.
யாஹூ தமிழ்த்தளத்தின் ஆசிரியர் திரு. அண்ணா கண்ணனுக்கு வாழ்த்துக்கள். உங்கள் மேற்பார்வையில் யாஹூ தமிழ்த்தளம் செழிக்கட்டும்.
யாஹூவில் அண்ணாகண்ணன் தமிழ்ப் பணி
சிறக்கட்டும். தமிழின் சிறப்பை இன்னும் நிறைய
பேருக்குக் கொண்டு சேர்க்கலாம். புதிய நிர்வாகக்
குழு வல்லமையுடன் சிறப்பாகச் செயல்படட்டும்.
வாழ்த்துக்கள்!
இரா.தீத்தாரப்பன், இராஜபாளையம்.
யாஹூ தமிழ்த்தளத்தில் புதிய பொறுப்பேற்றுக்கொண்டதற்கு மனமார்ந்த வாழ்த்துகள்..
Greetings!