வல்லமை மின்னிதழின் புதிய நிர்வாகக் குழு
வல்லமை மின்னிதழின் புதிய நிர்வாகக் குழு
நிறுவனர்:
- அண்ணாகண்ணன்
நிர்வாக ஆசிரியர்:
- பவளசங்கரி திருநாவுக்கரசு
துணை ஆசிரியர்:
அமைதிச் சாரல் (சாந்தி மாரியப்பன்)
ஆசிரியர் குழு:
- கேப்டன் கணேஷ் (பொறுப்பு: செய்திகள், கட்டுரைகள்)
- ஸ்ரீஜா வெங்கடேஷ் (பொறுப்பு: சிறுகதைகள்)
- மதுமிதா (பொறுப்பு: கவிதைகள், ஒலிவெளி, நேர்காணல்கள்)
- தி. சின்னராஜ் (பொறுப்பு: ஓவியங்கள், செல்லம்)
- விழியன் என்கிற உமாநாத் (பொறுப்பு: வண்ணப் படங்கள்)
- சூர்யா சுரேஷ் (பொறுப்பு: திரை)
- அ.தமிழ்ச்செல்வி (பொறுப்பு: சமூக ஊடகங்கள்)
ஆலோசகர் குழு:
- இன்னம்பூரான்
- மறவன்புலவு க. சச்சிதானந்தன்
- விஜய திருவேங்கடம்
- ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
- விசாகப்பட்டினம் வெ. திவாகர்
சட்ட ஆலோசகர்
- முனைவர் நாகபூஷணம்
தொழில்நுட்ப ஆலோசகர்:
- செல்வ முரளி
தள மேலாளர்:
- காமேஷ்
=========================
இதழின் நோக்கமும் செல்நெறிகளும்
உலகளாவிய தமிழர்களின் தேவைகளை முழுமையாக நிறைவுசெய்து, அவர்களின் சிந்தனைகளைக் கூர்மைப்படுத்துவது, தமிழ்த் தரவுகள் அனைத்தையும் கூடிய வரை திரட்டிச் சேமிப்பது ஆகியவை, வல்லமையின் முதன்மை நோக்கங்கள். நடுநிலை ஆய்வு, கருத்துச் சுதந்திரத்தைக் காத்தல், அறிவியல்பூர்வமான அணுகுமுறை, நுட்பியல் பயன்பாடு, இயன்ற வரை கலப்பில்லாத் தமிழ், புதிய முயற்சிகளுக்கு ஊக்கம், பரிசோதனை முயற்சிகளுக்குத் தூண்டுதல், அனுபவங்களை ஆவணப்படுத்துவதில் அக்கறை… உள்ளிட்டவை இவ்விதழின் செல்நெறிகள்.
படைப்பாளர்கள் கவனத்திற்கு
படைப்புகள், செய்திகள், கடிதங்கள், கேள்விகள், ஓவியங்கள், நிழற்படங்கள்…. உள்ளிட்ட அனைத்து வகை பங்களிப்புகளையும் வரவேற்கிறோம். ஆக்கங்களை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வேறு எங்கும் வெளிவராத, புதிய படைப்பாக இருத்தல் வேண்டும். ஒருங்குறியில் (யுனிகோடு) அமைந்திருத்தல் வேண்டும். காப்புரிமையை மீறாத வகையில், படைப்புக்கு ஏற்ற படங்களை இணைத்து அனுப்பலாம்.
அன்பு நண்பர்களே,
’வல்லமை’ மின்னிதழின் நிர்வாக ஆசிரியர் பொறுப்பேற்றுக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். திரு அண்ணாகண்ணனுக்கு நல்லாதரவு அளித்தது போல் எனக்கும் ஆதரவு அளிப்பீர்கள் என நம்புகிறேன். நாம் அனைவரும் இணைந்து வல்ல்மை இதழை மென்மேலும் உயர்த்துவோம் என்ற நம்பிக்கையுடன் என் பணியைத் துவங்குகிறேன்.நன்றி.
உங்கள் நம்பிக்கை தான் எங்கள் நம்பிக்கை. எல்லாம் செவ்வனே நடக்கும். படைப்பாளர்களும், வாசகர்களும் நல்லாதரவை தொடர்வார்கள்.
புதிய ஆசிரியர் குழுவுக்கும் எடிட்டர் பவளசுந்தரிக்கும் என்(71 வயது) ஆசிகள்..கடந்த காலங்களில் என் நெருங்கிய நண்பர் அண்ணாகண்ணனின் இலக்கிய சேவை மிகப்பெரிது.யாஹூ தமிழ் மின் தளத்திலும் அவர் பணி அழகாய்த் தொடரும். ஐயமில்லை. அதுபோல் புதிய குழுத்தலைமையிலும் இச் சேவை தொடர என் வாழ்த்தும் நல்லாசியும்.
யோகியார்
வல்லமை இதழின் புதிய நிர்வாகக் குழுவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
அன்புடன்
தமிழ்த்தேனீ
வளமான படைப்புக்களுடனும் செய்திகளுடனும் நாளும் வளரட்டும் வல்லமை.. வாழ்த்துக்கள்
அன்பினிய அண்ணாகண்ணன்,
உங்கள் புதிய பணியில் ஈடில்லாப் புகழ் பெற்று பல சிறப்புக்களையும் வாழ்வில் அடைய எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
புதிய நிர்வாகக் குழுவினருக்கு எமது அன்பான வாழ்த்துக்கள்.
வல்லுனர்கள் பலரின் திறனின் பயனாய்
வல்லமை பல புதிய வல்லவர்களைப் படைத்து
வலிமை மிகதோர் ஊடகமாய்த் திகழும் என
வலுவான நம்பிக்கை எனக்குண்டு.
வாழ்க ! வளர்க !
அன்புடன்
சக்தி சக்திதாசன்
முனைவர் பழ.கோமதிநாயகம் நினைவு விருது போட்டி கடைசி நாள். 7-12-2011. பாசனம், எழுத்து, இலக்கியம், தொல்லியல், சமூகச் செயல்பாடு-ஏதேனுமொன்றில் சிறப்புற்ற ஒருவருக்கு அல்லது ஒரு அமைப்புக்கு ஒரு லட்சம் பரிசு என்ற தகவலை அனுப்பினேன். வலைப்பூவில் பிரசுரமானதால் மறுக்கப்பட்டது. இது தகவல். படைப்பல்ல. . திறமையுடைய வல்லமை வாசகர்களுக்காகத்தான் இந்தப் பதிவு.
நல்ல சேவை. வாழ்த்துகள்.
முதல் முறையாக வல்லமை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
சற்றும் எதிர்பாராத இனிய ஆச்சரியம். சிறப்பான வடிவமைப்பு கொண்ட இணைய இதழ்.
வாழ்த்துக்கள்.
வல்லமை கண்டேன் வல்லமை பெருகி வளரட்டும் நாளும்
என் அன்பு தம்பி பெருவை சாரதியின் அழைப்பால் வல்லமை கொண்ட மின்வலையில் சிக்குண்டு மகிழ்ந்தேன்.
தமிழ் வானில் அண்ணாகண்ணன் கார்மேகமென திரண்டுவந்து அமைதி சாரல் தென்றலென குளிர்விக்க பவள வாய் திறந்து திருநாவுக்குஅரசர் ( பவள சங்கரி) மின்னலாய் வல்லமையில் மின்னக் கண்டேன்.
வல்ல மை கொண்டு எழுதுவதால் ” வல்லமை” வல்லமையுடன் மின்ன கண்டேன். என் கருத்தை தெரிவித்து சாரதிக்கும் மடல் எழுதினேன். இருப்பினும் நேரே வல்லமையில் வாழ்த்த தமிழில் கணினியை பயன்படுத்தி வாழ்த்துகிறேன்.
வாழ்க வல்லமை! வளர்க தமிழ்.
அன்பன்,
வடகரை.நா.விஜயராகவன்