செய்திகள்

கமலஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு நற்பணிகள் – செய்திகள்

சென்னை: 7 நவம்பர் 2011.  நடிகர் பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்கள் இன்று 57வது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்.  இவரின் பிறந்தநாளை முன்னிட்டு கமலஹாசன் நற்பணி இயக்க உறுப்பினர்கள் மற்றும் ரசிகர்கள் இன்று சென்னையில் பல இடங்களில் இரத்த தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் ஆகிய நற்பணிகளில் ஈடுபட்டனர்.  நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த திருவாளர்கள் தங்கவேலு, ரமேஷ், சங்கர் மற்றும் ஏழுமலை ஆகியோர் உடன் இருந்தனர்.

சென்னையை சேர்ந்த ஓவியர் திரு ஏ.பி. ஸ்ரீதர் அவர்கள், கமலஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு, தான் வரைந்த சிறப்பு ஓவியங்களை இன்று திரு. கமலஹாசன் அவர்களை நேரில் சந்தித்து பிறந்தநாள் பரிசாக வழங்கினார்.

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க