அமெரிக்கக் குடியுரிமை பெற்று, அந்நாட்டில் 25 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் நண்பர் பாஸ்டன் பாலா, தமது அமெரிக்க அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். கனவு தேசம் என வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் பல்வேறு முகங்களை இந்த நேர்காணல் வழியே நீங்கள் காணலாம்.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.