சைனா அனுப்பிய முதல் செவ்வாய்த் தளவூர்தி வெற்றிகரமாக இறங்கிப் படம் அனுப்பியது

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
தியான்வென் விண்சிமிழில் தளநிலவி, தளவூர்தி கட்டமைப்பு
https://www.cbsnews.com/news/china-zhurong-rover-on-mars/
China successfully lands a rover on Mars
China has successfully landed a rover on Mars, joining the U.S. and the former Soviet Union as the only other countries to land on the red planet. CBSN contributor Isaac Stone Fish, the founder of Strategy Risks, spoke with Lana Zak about what this means for the future of space exploration.
Becoming the third country to land a spacecraft on Mars, China’s Zhurong rover has made history where attempts by other countries have failed.
The success of the Tianwen-1 mission makes China the third nation after the U.S. and Soviet Union to land on the red planet
சைனாவின் இரண்டாம்
விண்ணுளவி
சந்திரனைச் சுற்றியது !
மூன்றாம் விண்கப்பல்
முதலாக நிலவில் இறக்கிய
தளவுளவி பின்புறம் சோதிக்கிறது !
நகர்ந்த தளவூர்தி தகவல் அனுப்புது.
புதிய விண்வெளி நிலையம் கட்டுது.
சைனாவின் இரு தீரர்
அண்டவெளிப் பயணம் செய்தார்.
முதன்முதலாய் செவ்வாய்க் கோளில்
விண்சிமிழ் இறக்கி
தளவூர்தி தவழ்ந்து தகவல் அனுப்பும்
தரைப்படம் எடுத்து !
அமெரிக்காவின்
விண்வெளி வீரர்கள் போல்
விண்சிமிழில் ஏறி
வெண்ணிலவில் தடம் வைக்க
பயிற்சிகள் நடக்கும் !
நிலவைச் சுற்றி வந்து
மனிதரில்லா விண்சிமிழ் ஒன்று
புவிக்கு மீண்டது .
இன்னும்
ஐந்தாறு ஆண்டுகளில்
சாதனை யாகச் சைனத் தீரர்
பாதம் பதிப்பர்
நிலவின் களத்திலே
நீல் ஆர்ம்ஸ் டிராங் போல !
++++++++++++++++++++
இரண்டு வாரத்தில் சைனா வெற்றிகரமாய்ச் செய்து காட்டிய விண்வெளி வரலாற்றுச் சாதனைகள்
2021 பிப்ரவரி மாதத்தில் செவ்வாய்க் கோள் ஈர்ப்புவலையில் சிக்கி, மே 14 இல் சைனாவின் முதல் தியான்வென் -1 விண்வெளிச்சிமிழ்ச் சுற்றி,[Tianwhen -1 Orbiter] பாதுகாப்பாகத் தளவூர்தி சுராங்கை [Zhurong Rover] இறக்கி இப்போது தகவல் படங்கள் அனுப்பியுள்ளது. இந்தச் சிமிழை சைனா 2020 ஜூலை 23 இல் ஏவியது. இந்த அரிய சாதனை புரிந்து, உலக வரலாற்றில் செவ்வாயில் தவழ்ந்த மூன்றாம் நாடாகச் சைனா பெயர் பெற்றது. ரஷ்யா, அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளே முதன்முதலாக இந்தச் சாதனைகளைக் செய்து காட்டியுள்ளன. சமீபத்தில் அமெரிக்க நாசா தனது செவ்வாய் 2020 “விடாமுயற்சி” [Perseverence] தளவூர்தி ஒன்றை செவ்வாய்க் கோளுக்கு அனுப்பி, அதிலிருந்த சிறு காற்றாடி ஊர்தி பறந்து காட்டியது. சைனாவின் நிலவுத் தளவுளவி [Lunar Rover] ஏற்கனவே இறங்கி வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளது. சைன விண்வெளிப் பயண முயற்சிகளில் ரஷ்யாவின் தொழில் நுணுக்க உதவி காணப் படுகிறது.
செவ்வாய்க் கோளில் சைனாவின் தியாவென் தளவூர்தித் திட்டங்கள்
- செவ்வாய்க் கோள் தளவியல், சூழ்வெளி அமைப்பு ஆய்வது
- செவ்வாய்க் கோள் எரிமலை, பனிமேடு, துருவ ஆராய்ச்சி
- செவ்வாய்க் கீழ்தள நீர்ப்பனி, நீரோட்ட நிலை அறிவது.
- செவ்வாய் தனிம, உலோகவியல் இருப்புநிலை தெரிவது.
- செவ்வாய்ப் பருவ நிலை, கால நிலை, சூழ்வாயு நிலை அறிதல்.
-
2030 ஆண்டுக்குள் செவ்வாய் மண் மாதிரி எடுத்து பூமிக்குக் கொண்டு வந்து சோதிப்பு.
Cover Image: Illustration of China’s Tianwen-1 lander and accompanying Zhurong rover on the surface of Mars.
Credit: Xinhua News Agency Getty Images