வனமின்றி போனால் நம் இனமின்றி போகும்
வனமின்றி போனால் நம் இனமின்றி போகும் என்பதை ஆழமாகச் சொல்லும் ஆர்.வெங்கட் மேட்டுப்பாளையம், கல்லார் சச்சிதானந்தப் பள்ளியின் பதினொன்றாம் வகுப்பு மாணவர். பள்ளியின் ஊடக மன்றத்தில் வாரந்தோறும் பயிலும் புகைப்படக் கலையைப் பயனுள்ளதாக மாற்றிட பறவைகள், விலங்குகள், என பதிவு செய்யப் புறப்பட்டிருக்கிறார். தனது தந்தையுடன் விடுமுறை நாட்களில் காடு நோக்கிப் பயணித்து எடுத்த புகைப்படங்கள் இவை. எதிர்காலத்தில் தான் ஒரு விவசாயி ஆக வேண்டும் என்பதே இவரது விருப்பம்.
ஆர்.வெங்கட்டுக்கு என் வாழ்த்து. அருமையான படங்கள். வனமின்றி போனால், முதலில் மானம் போகும். அடுத்து சனம் குறையும். இனமும் அழியும். படிப்புக்குக் குந்தகமில்லாமல், இந்த பணி தொடருக.