எனது பச்சைக் கூடை
தி.சுபாஷிணி
அது போய் முன்னால் இறங்கும்
ஆட்டோவிலிருந்து.
அப்பம் முதல் அன்று செய்த வடை
வத்தக் குழம்பும், பருப்பு உசிலி
மைசூர் ரசம், வடாம் பச்சடி
பால் பாயசம், கொழுக்கட்டை என்றும்,
கோகுலாஷ்டமி என்றால்
தட்டை, சீடை, தேன்குழல் என்றும்,
முந்திரி கேக், ஏழுகப் மில்க், அல்வா
என்று தீபாவளியாய்,
திருவாதிரைக் களியாய் கூட்டுமாய்..
முழங்கை நெய் வழிய
முந்திரி நிரம்ப,
பச்சைக் கற்பூரம் மணமணக்க
அப்பாவின் அருகில் உட்காரும்.
எலுமிச்சை தேங்காய்ச் சாதங்களும்,
கெட்டித் தயிர் சாதத்துடன்
உருளைக் கிழங்கு வறுவல் என்று,
ஆடிப் பண்டிகையாய்
அப்பாவைக் காண வந்தது
பச்சைக் கூடை.
இடம் தக்கர்பாபா அல்ல
அந்தோ!
என் என்பேன்!
அப்பாவையும் காணோம்!!
அந்தப்
பச்சைக் கூடையையும் தான்!
நான் எதிர்பாராத ஈற்றடி. போகட்டும். அதை மட்டும் மாற்றியமைத்தால், அருமையான குழந்தை இலக்கியம். நண்பர் தமிழ்த்தேனியிடம் சொல்லி, மழலையிதழிலும் மீள்பதிவு செய்யலாம்.