இங்கிலாந்தில் ஷேக்ஸ்பியர் பிறந்த ஸ்டிராட்போர்டு என்ற ஊரில் பாயும் ஏவன் நதியில் ஓர் இனிய படகுப் பயணம். அன்னப் பறவைகள் உடன்வர, காற்றில் புறாக்கள் கவிதை வரைய, சில்லென்ற காற்றில் சிலுசிலுத்தபடி தவழும் நதியலையின் தாலாட்டில் மிதந்தபடி, உலாப் போகலாம் வாருங்கள். படப்பதிவு – நவ்யா.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.