2050ஆம் ஆண்டில் பூஜிய விஷ வாயுக்கள் உறுதியா?

சி. ஜெயபாரதன், கனடா

சூடேறிப் போச்சு நமது
பூகோளம்!
வீடேறி வந்திருச்சு பற்பல
சீர்கேடு!
நாடெங்கும் நோய்நொடி
பீடிப்பு!
பருவ காலநிலை மாறி
நீடிப்பு
உருமாறிப் போச்சு
உலகு!
தீக்கனல் வளையத்தில்*
நில நடுக்கம்,
பூகம்பம் நேருது!
குப்பென
எரிமலை வெடித்து
கரித்தூசி எங்கும் பொழியுது!
தீப்பிழம்பு
எரிமலைக் குழம்பு
ஆறுகளாய்ச்
சரிவுகளில் ஓடுது!

பூகம்பத்தால்
பூமியின்
சுழல் அச்சு சாயும்!
எரிமலைக்
குழம்பு வெளியேறுவதால்
ஈர்ப்பு மையம்
இடம் மாறி விடும்!
வட அமெரிக்காவில் சூறாவளி
பேய் மழை பெய்யும்!
வெப்பக் கனல் அடிப்பதால்
எங்கெங்கு
நோக்கினும் காடுகள்
தீப்பற்றி எரியும்!
புகை மூட்டம்
போர்த்திய
ஊர்கள், நகரங்களில்
மூச்செடுக்க முடியாது!
கண்ணெரிச்சல் மிகுந்திடும்,
எண்ணற்ற மாந்தர்,
எல்லாம் இழந்து
அனாதைகளாய் வேறிடப்
புலப்பெயர்ச்சி!

பூகோளச் சூடேற்றம்
நூறாண்டுப் போராட்டம்
அடுத்த 2100
நூற்றாண்டிலும்
காஸலீன் கார்கள் ஓடும்
விஷ வாயுக்கள்
கக்கும்!
புவித் தொழிற்சாலை போல்
பூமியும்
எரிமலைகள் வெடித்து
கரிச் சாம்பல்
விஷ வாயுக்கள்
தரணி எங்கும்
பரப்பும்!
2050ஆம் ஆண்டிலே எப்படி
பூஜிய வீச்சு உறுதி
அளிப்பர்
புவி மாந்தர்?

*Ring of Fire: VOLCANO ERUPTIONS

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க