வல்லமையில் புதிய பகுதி – சட்ட ஆலோசனை

2

அன்பு நண்பர்களே,

முனைவர் நாக பூஷணம் , M.A., M.L., Ph.D. வழக்கறிஞர், ஓய்வு பெற்ற சட்டக் கல்வி பேராசிரியர், T.N. Dr. அம்பேத்கார் சட்டப் பல்கலைக் கழக முதல் துணை வேந்தர், எழுத்தாளர், ஆய்வாளர், வானொலி தொலைக்காட்சி பங்கேற்பாளர்,  மொழி பெயர்ப்பாளர் என பன் முகங்கள் கொண்ட பேரறிஞர்.

இவருடைய எழுத்துப் பணி : சட்டத் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் . முனைவர் ஆய்வுக் கட்டுரை ” Social Justice and Weaker Sections-Roll of Judiciary” என்ற நூல் வடிவம் பெற்றது.

law policy and perspective. Shastri Indo – Canadian awardee – ’94 – ’95 . வானொலி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பு.

மகளிர் , சிறார் உரிமை பாதுகாப்புச் சட்டங்கள், மனித உரிமை , அறிவு சார் சொத்துரிமை Intellectual property  right , consumer law – நுகர்வோர் சட்டம் ஆகியவற்றில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டுள்ளார். இலக்கிய மற்றும் சட்ட நூல்கள் மொழி பெயர்த்தலிலும் ஈடுபட்டுள்ளார். நம் வல்லமை இணைய இதழுக்கு சட்ட ஆலோசகராகவும், வாசகர்களின் சட்டக் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதற்கும் மனமுவந்து இணங்கியுள்ளார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். வாசகர்கள் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, சட்டம் சமபந்தமான தங்கள் வினாக்களை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

ஆசிரியர்.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “வல்லமையில் புதிய பகுதி – சட்ட ஆலோசனை

  1. I thank Smt. Suja Venkatesh for doing the neat work and the editorial board for this opportunity to share my views and play a role in this e-journal taking effort in legal awareness programme.

  2. முனைவர் நாகபூஷணத்துக்கு நல்வரவு கூறுகிறேன். நேற்று அரசு கட்டாய இலவச ஆரம்பக்கல்வி பற்றிய விதிகளை அறிவித்துள்ளது. மக்கள் எடுக்க வேண்டிய அடுத்த படிநிலைகளை பற்றி, உங்களுக்கு உரிய நேரத்தில், சொல்லுங்கள். நான் அது பற்றி இங்கு எழுதவதாக இருந்தேன். நீங்கள் வந்திருப்பது நல்லதாயிற்று. நான் இங்கு எழுத நினைத்தது, இன்னொரு இடத்தில் பதிவாகி இருக்கிறது. இடம்,பொருள்,ஏவல், கருதி, அதை உங்கள் பார்வைக்கு, இங்கு இணைக்கிறேன்.இன்னம்பூரான்16 11 2011* * * தண்டோரா!சாமியோவ்! தாய்க்குலமே! சின்னப்பசங்களா!டும்! டும்! டும்! அஞ்சு நிமிஷம் முன்னாலெ வந்த சேதி. விடிவு காலம் வந்துருச்சு. எல்லாரும் காது குடுத்துக் கேளுங்கோ. 62 வருஷங்களுக்கு முன்னாலெ, ஊர்லெ இருக்கற பெரியமனுஷா எல்லாரும் டில்லிலெ டேரா போட்டு, இந்திய மக்கள் ஆளும் குடியரசு அப்டீன்னு முதுகிலெ ஷொட்டுக்கொடுத்துண்டு இந்திய அரசியல் சாஸனத்தை விமரிசையாக பிரகடனம் பண்ணச்ச, இந்தியாவில் பிறந்த பசங்களுக்கு எல்லாம் ஆரம்ப கல்வி கட்டாயமா இலவசமா இருக்கணும்னு பேசிகிட்டாஹ. ஆனா, சாக்கிரதையா, அதை அடிப்படை சட்டமா போடாமா, மேலெழுந்தவாரியா, அப்டி ஆசைப்பட்றோம்னு சொல்லிப்போட்டாஹ. யாரும் கண்டுக்கலெ. காசும், பணமும், புரள, கல்விதந்தைகள் கல்வித்தாத்தாக்கள் ஆனாஹ. ஏழு தலமுறைக்கு சொத்து வச்சுட்டு, செத்தும் போனாஹ. ஏழை பாழை வீட்டு சின்னப்பசங்க பீடி சுத்தினாஹ, தீக்குச்சி அடுக்கினாஹ, முறுக்கு சுத்தினாஹ, கண்ணாடி வளையல் பண்ணாஹ, ஜமக்காளம் நெஞ்சாஹ, செங்கல் சூளைலெ  செத்து மடிஞ்சாஹ, கொத்தடிமைகளா. படிக்க மட்டுமில்லை. இப்டி நாலு தலமுறைக்கு, படிப்புக்கு தலை முழுகினாங்க. நம்ம தாத்தன், பாட்டி, மாமன், அத்தைக்காரி எல்லாரும் இந்திய மக்களின் உரிமையை இழந்து, படிக்காமலெ செத்துப்போய்ட்டாஙக. அவங்களுக்கு, அரசு, சமுதாயம், அப்பன், ஆத்தா, நீங்க, நான் எல்லாரும் தலை முழுகினோம், வெட்கம் கெட்டு.இரண்டு வருஷம் முன்னாலெ தான், Right of Children to Free and Compulsory Education Act, 2009 அப்டீன்னு, இலவச, கட்டாயக்கல்வி சின்னப்பசங்களுக்கு உரிமை அப்டீனு இந்த கும்பகர்ணங்க சட்டம் போட்டாஹ.  அதனாலே தம்பிடி ஆதாயமில்லை அப்பனே, அதற்கான விலாவாரியான விதிகளை பிரகடனம் செய்யும் வரை. ஆந்திரபிரதேஷ், மஹராஷ்ட்டிரா, ஒரிஸா, ராஜஸ்தான், டில்லி அப்டீனு 20 மாநிலங்களில் அந்த காரியம் நடந்தது. தமிழ் நாட்டில், தி.மு.க. அரசும், அதக்கப்றம் அ.தி.மு.க. அரசும் இன்று மாலை வரை (15 11 2011) ஏன் தூங்கி வழிஞ்சாங்கன்னு புரியல்லைங்க. 12ம்தேதி கெஜட்லெ போட்டாஹ. இன்னிக்கி பொது மன்றத்தில் வச்சாஹ. ஆன ஒரு பிரச்னைங்க. அந்த சட்டத்திலெ சொன்னமாதிரி அண்டை அயல் பசங்களுக்கு எப்டி இடம் பதிவு செய்யோணுங்கிறதை பத்தி ஒன்னும் சொல்லலைங்க. சண்டை போட்டு வாங்கணுங்க. புரியுதா/சாமியோவ்! தாய்க்குலமே! சின்னப்பசங்கள கொத்தடிமையா அனுப்பாதீங்க. பள்ளிக்கூடம் அனுப்புங்க. இல்லென்னு துரைத்தனத்தார் உங்களை தண்டிப்பாஹ. சொல்லிபோட்டேன். டும்! டும்! டும்!இன்னம்பூரான்14 11 2011

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *