நல்ல கீரை எப்படி இருக்கும்? – கீரை வணிகர் பாலகிருஷ்ணன் நேர்காணல்

‘கீரேஏஏஏஏய்’ என உரத்த குரல் முதலில் கேட்கும். இருசக்கர வாகனத்தில் அவர் வருவார். அவர் பெயர் பாலகிருஷ்ணன். தாம்பரம் வீதிகளில் தினந்தோறும் இவரைப் பார்க்கலாம். சிறுகீரை, அரைக்கீரை, முளைக்கீரை, மணத்தக்காளி, பாலக் கீரை, பொன்னாங்கண்ணி, வெந்தயக் கீரை, பருப்புக் கீரை, பசலைக் கீரை, புளிச்ச கீரை, தூதுவளை, வல்லாரை, முடக்கத்தான் உள்ளிட்ட கீரைகளை இவரிடம் வாங்கலாம். நல்ல கீரை எப்படி இருக்கும்? எந்தப் பருவத்தில், யார் யார் எந்தெந்தக் கீரைகளை உண்ணலாம்? கீரை உண்பதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன? அவரது பதில்களைப் பார்த்துப் பயன்பெறுங்கள். நண்பர்களுடன் பகிருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)