கல்வி 4.0 முதல் கலந்துரையாடல் அழைப்பிதழ்
அனைவருக்கும் வணக்கம்
அண்மையில் நடந்த கல்வியியல் 2ம் மாநாட்டில் இணைந்த அனைந்து நிறுவங்களுக்கும் அதை நடத்தி வரும் நல்லுள்ளங்களுக்கும் இடையில் ஒரு நல்லுறவும், புரிந்துணர்வுமேற்பட்டு உள்ளது. இந்த உறவை நீடிக்கச் செய்யும் வகையிலும், இந்நிறுனங்களின் கூட்டு முயற்சி, நிறுவனங்களைச் சார்ந்துள்ள மாணவர்களும், சமுதாயமும் பலம் பெற்று தங்களுடைய சுயத்தையும் சுற்றுப்புறத்தையும் பாதுகாத்து, மாணவர்களுக்கு சுய வேலைவாய்ப்பை எற்படுத்திக் கொள்ள உதவி செய்யும்.
நான்காம் தொழிற்புரட்சி என்று சொல்லபடும் கணினிசார் பொருளாதாரம் 2030களில் கண்டிப்பாகத் தேவை என்று உலகப் பொருளாதார மையம் கூறியுள்ளது, இப்புரட்சியை நோக்கி நடை போடும் விதமாக “அனைவரையும் அரவணைத்துச் செல்லும் நீடித்து நிலைக்கக் கூடிய வளங்களையும் நாடுகளின் மீட்டெழுச்சித் திறனை ஊக்குவிக்கத் தகுந்த ஒரு பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும்” என்றக் குறிக்கோளோடு நிறுவனங்கள், சமுதாயப் பொறுப்புணர்ச்சியோடு தங்கள் நிறுவன செயல்பாடுகளை நடத்துவர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
நம் மாணவர்களின் திறன் சார் கல்வியை நாம் மேம்படுத்த உதவும் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையை நம் மாணவர்களுக்கு கொண்டு வருவதற்கான செயல் திட்டம் அவசியம். எனவே கல்வி 4.0 என்ற தலைப்பில் கல்வியாளர்களிடையே கலந்துரையாடல்கள் ஏற்பாடு செய்யப்படுள்ளன. இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியில் கல்வி மூலம் நமது கலாச்சாரம் மற்றும் மொழிக்கு ஒரு நிலைத்தன்மையைக் கொண்டு வருவதே இக்கூட்டத்தின் தலையாய நோக்கமாகும்.
இதன் முதல் கட்டமாக பார்வதீஸ் கலை அறிவியல் கல்லூரி, திண்டுக்கல், தமிழ்த்துறையும் தமிழ் அநிதம் (அமெரிக்கா)மும் இணைந்து 27.01.2022 இந்திய நேரம் மாலை 7 மணிக்கு, கல்வி 4.0 (இணையவழி) கலந்துரையாடல் கூட்டம் ஒன்றை நடத்துக்கின்றன.
இக்கூட்டத்தில் தமிழ்ச் சான்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்டு தங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களைத் தர உள்ளார்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
இணையவழி இணைப்பு: https://meet.google.com/ima-gzih-rws
அனைவரும் வருக; ஆக்கம் செப்புக