நீட்டுவதா புட்டின் போரை நிறுத்துவதா?

சி. ஜெயபாரதன், கனடா. 

போரை நிறுத்துவீர் என்று
காப்பு வாகனத்தில் பவனி வந்தார்
போப்பாண்டவர்
பழக்க மான புறாக்களை,
பறக்க விட்டு !
அவை தூது போகாது,
அவர் தோள் மீதே
மீண்டும்
அமர்ந்து  கொண்டன !
ஒரு மாத தூக்கம் ஏன் ?ஏன் ?ஏன் ?
உக்ரேன்
உயிர்த்தெழ ஒரு நாடும்
முன்வர வில்லை.

நேட்டோ நாடுகள் ஒதுங்கி
நீட்டு போரை என்று
மேட்டில் நின்று ஆயுதம்
விற்றன !
வெள்ளை மாளிகை வேந்தர்
போலந்து வந்து
புட்டினைப்
புட்சர் என்று திட்டிக் கொண்டு
வண்டி, வண்டியாய்
பீரங்கி விற்றார் !
அண்டை தேசம் சைனா,
புட்டின்,
நண்பன் என்று ஆயுதம்
விற்றது.

உக்ரேன் நகர மாடி வீடுகள்,
மருத்துவ மனைகள்,
தொழிற் கூடங்கள், கல்வி அரங்கம்,
மின்சக்தி நிலையங்கள்
தகர்க்கப் பட்டன.
சின்னஞ்
சிறு பிள்ளைகள்
காயப் பட்டு
ஆயிரக் கணக்கிலே செத்து
மடிந்தன.
கணவனை இழந்த மனைவியர்
தந்தை இழந்த புத்திரர்
ஆயிரம், ஆயிரம்,
பல்லாயிரம்.
நாட்டு மக்கள் அகதிகளாய்
மில்லியன் கணக்கிலே
வெளியேறுகிறார் !
எவருக்கும்
வெற்றி இல்லை இந்த
ஒற்றை
வெறிப் போரிலே !
உக்ரேன் வெல்லாது !
உதவாதீர் ஆயுதம் !
உலகத்தீரே !
நீட்டுவதா, புட்டின் போரை
நிறுத்துவதா ?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.