வலுவற்ற சூப்பர் வல்லரசு

0

சி. ஜெயபாரதன், கனடா

நாள் தோறும்
வாரந் தோறும், வருடந் தோறும்
நடக்குது
இரங்கல் கூட்டம்.
காரணம்!
சுட்டுக் கொல்லும் ஆயுதக்
கட்டுப்பாடு!
வரலாற்று முதலாக
இடுகாட்டில்
மரணப் புதைச் சின்னம்
காளான்கள் போல்
முளைக்கும்!

பாலர் வகுப்பில் படிக்கும்
பிள்ளைகள்,
கல்லூரி மாணவியர்,
கருப்பர்,
இசுலாமியரைக்,
குறி வைத்துச் சுடுவது,
அறிவித்து முன்னே
திட்ட மிட்டுச்
சுட்டுக் கொல்வது!
வெகுண்டு
வெள்ளை மாளிகை
சூப்பர் தளபதி,
செனட்டரைக் கெஞ்சுவார்!
துணைத் தளபதி
கமலா ஹாரிஸ் கண்ணீர்
வடித்தார்!

ஐம்பதாயிரம்
என்னாரே
துப்பாக்கி ஆரவாரக் கூட்டம்
அதே மாநிலத்தில்!
எதிரே
ஆயிரக் கணக்கில்
தாய்மார்
அமெரிக்க கொடி பிடித்து
தடை செய்கிறார்!
தனி அரங்கில் தந்தையார்
என்னாரே
துப்பாக்கி கொடி தூக்கி
டிரம்பை
வரவேற்பார்.

ஏன், ஏன், ஏன்
பள்ளிக்கூட வாசலில்
கண்காணிப்பு
காமிரா ஒன்றில்லை?
காவலுக்கு ஏன்
சேவகன் இல்லை?
செய்த கயவன்
சொல்லிச் செய்தான்.
காவல் துறை
வந்தது காலம் கடந்து!
அமெரிக்க ஆட்சி
என்னாரே
ஆதிக்க மாட்சி!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *