மலேசிய முஸ்லிம்கள் விழாவில் அறிஞர் அண்ணா பேச்சு
முஸ்லிம்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள் இல்லை. சில தலைமுறைகளுக்கு முன்பு சின்னச்சாமியாக இருந்தவர்கள் சிக்கந்தர் ஆகவும் இன்னாசிமுத்து ஆக இருந்தவர்கள் இப்ரஹீம் ஆகவும் மாறியவர்கள். இன்னொரு தப்பபிப்ராயம் இருக்கிறது. இஸ்லாத்தை வாளுடைய பலத்தைக் கொண்டு பரப்பியிருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். அப்படியானால், முகலாயர் ஆட்சியில் இந்தியா முழுவதும் முப்பது கோடிப் பேரும் முஸ்லிம்களாக ஆகியிருக்க வேண்டும். வாளோடு இருந்த காலத்தை விட, வாள் போன பிறகு தான் முஸ்லிம் சமுதாயம் வளர்ந்திருக்கிறது. எனவே இதுவும் பொருந்தாது.
1965ஆம் ஆண்டு இந்தியப் பாராளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்த அறிஞர் அண்ணா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, கம்போடியா, ஜப்பான் நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது, மலேசிய முஸ்லிம்கள் விழாவில் அவர் ஆற்றிய உரை.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)