சி. ஜெயபாரதன், கனடா 

அன்று மாலைப் பொழுது
ஆறு மணி,
எனக்கு காலன் முன்னறித்த
எச்சரிப்பு தெரியாது !
நவம்பர் மாதம், நடுங்கும் குளிர்
ஒன்பதாம் நாள்,
9/11 மரணச் சங்கு
ஊதியது !
என்னுயிர்த் துணைவி
தன்னுயிர் பிறப்பி ணைப்பு
ஆன்மீகத்
தொப்புள் கொடி
அறுந்து,
மீளாத் துயிலில்
மருத்துவ மனையில்
மரித்து
தகன மாளிகையில் எரித்து
மண்ணாய் ஆவியாய்,
மாயமாகி
நான்கு ஆண்டுகள்
நழுவின.
பிரபஞ்சக் கருந்துளை
விழுங்கி
நிரந்தர இருள் மயத்தில்
ஒத்தடிப் பாதையில்  விடை பெறாமல்
சித்தம் இழந்தாள்.
நடமாடிய தீபம் அணைந்து
சுவரில்
படமாகத் தொங்கி விட்டது
மலர் மாலை யோடு.
மறு பிறப்பில் எங்கு நீ உள்ளாய் ?
அனுதினம்
உனை நான் நினைந்து
நினைந்துருகி
உறங்கா திருக்க இறை
ஏனோ  நீடிக்கிறது
என் ஆயுள் ?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.