மாவலி | வீர விளையாட்டு | தீப்பொறி வேடிக்கை
கார்த்திகைத் தீப நாளில் ‘மாவலி’ சுற்றுதல், தமிழகத்தின் பண்டைக் கால வீர விளையாட்டு.
பனம் பூக்கள் மலரும் காம்பை நன்கு காய வைத்து, தீயிட்டுக் கரியாக்கிவிடுவார்கள். பிறகு, அதை நன்கு அரைத்துச் சலித்து, பஞ்சால் ஆன துணியில் சுருட்டிக் கட்டுவார்கள். அடுத்து, பனை ஓலை மட்டைகள் மூன்றை எடுத்து அதன் நடுவில் கரித்தூள் சுருணையை வைத்துக் கட்டுவார்கள்.
பிறகு அதை உறியைப் போல் நீண்ட கயிற்றில் பிணைப்பார்கள். இதையடுத்து, துணிப்பந்தில் நெருப்பை வைத்துக் கனலை ஏற்படுத்துவர். கயிற்றைப் பிடித்து வட்டமாகவும் பக்கவாட்டிலும் சுற்றுவர். இருளில் அது தீப்பொறிகளைச் சிதறவிட்டு, எரி நட்சத்திரங்கள் பறப்பதுபோல் காட்சி தரும். மாவலிக்கு கார்த்திகைப்பொறி என்ற பெயரும் உண்டு.
இக்காலத்தில் பலரும் மறந்துவிட்ட இந்தத் தீப்பொறி வேடிக்கையை இதோ கண்டு களியுங்கள்.
காணொலி ஆக்கம்: ராஜ்குமார் நடராஜன்
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)