சி. ஜெயபாரதன், கனடா

பிரபஞ்ச பெருவெடிப்பு
நியதி
பிழையாகப் போச்சு !
ஒற்றை முடத்துவ
முடிச்சு
தானாய் வெடித்து
விரியும்
பிரபஞ்ச பலூன்
பஞ்சர் ஆகிப் போச்சு !
நியூட்டன் விதிகள்
பிரபஞ்சத்தின் தோற்ற
நியதிகள்.
பெரு வெடிப்பு
ஊகிப்பில்
ஓசோன் ஓட்டைகள் !
பியூட்டி இழந்து போச்சு !

ஒற்றைத் திணிவை
உடைக்க
புற இயக்கி எங்கே ?
எற்றி எழுப்பத் தூண்டும்
பூட்டர் எங்கே ?
உள் வெடிப்பு உசுப்பிட
புற இயக்கி எங்கே ?
பிரபஞ்சம் உருவாக நூறுக்கும்
மேலான
மூலகங்கள் பிணைந்து, பல்கோடி
மூலக்கூறு
செங்கற்களாய்
கட்டமைக்க
அக இயக்கிகள் எங்கே ?
பாரினில் பயிரினம்
பல்கோடி உயிரினம் தோன்ற
உயிரியக்கி எங்கே ?

பிரபஞ்ச வினைப்பாடு
அனைத்துக்கும்
பேராற்றல்  ஊட்டும்
பிரமாண்ட
இயக்கி எங்கே ?
பெரு வெடிப்பு நியதிக்கு
வித்தில்லை,
ஆணி வேரில்லை  !
விரியும்
பிரபஞ்சத் தோற்றம், ஆட்டம்
அனைத்தும்
நியூட்டன் விதிகளால் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *