பகைவனுக்கும் ஓர் உயிர்தான்

பாஸ்கர்

எதிரியை மனதில் வைத்து நேர்ந்து கொள்
கிடாவெட்டி மேலே தெளிக்கும் உதிரம் துடை
அரிவாளால் இனிப்பு வெட்டி வாயில் ஊட்டு
பரிவட்டம் கட்டி உடல் முழுதும் சந்தனம் பூசு
தினமும் வீரத்தை பார்ப்போருக்கு சொல்லிக்கொண்டிரு
வாளின் குருதி காயும் முன் அடுத்தவனை குறி வை
பயந்து கொண்டே வாழ் இரவும் பகலும்
வீரம் வன்மத்தின் ஜனிப்பல்ல -ஆனாலும்
நடுங்கி கொண்டே நிதமும் வன்மம் பழகு .
வாள் தூக்க முடியாமற் போகும் நாள் வரும்- அன்று புரியும் –
ஆயுதங்களுக்கு என்றுமே வன்முறை தெரியாதென்று .

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *