சி. ஜெயபாரதன், கனடா
வானகம் எனக்கு போதி மரம்
வைர முத்துவின் ஞான ரதம்
வையகம் மானிட ஆதி வரம்
வள்ளுவம் நமக்கு வாழ்வு அறம்.
காலவெளி எனக்கு ஓர் நூலகம்
கடவுள் படைப்பி லக்கண நாடகம்
ஐன்ஸ்டீன் கண்ட இறைப் பீடகம்
அகரத்தில் தொடரும் மூல ஏடகம்.
கற்பது எனக்கு முதற்படி
காசினி அனுபவம் மேற்படி
நிற்பது வள்ளுவர் சொற்படி
நியூட்டன் இயக்க நூற்படி.
காலம் எனக்கோர் திசைகாட்டி
காவியம் எனக்கு சீர் வழிகாட்டி
ஞாலம் எனக்கோர் ஆலயம்
ஞானம் என்போர் ஆயுதம்.


Leave a Reply