இலக்கியம்கவிதைகள்

பூச்சி வளர்ப்பு

செண்பக ஜெகதீசன்

ஆசை வந்தது

பூச்சி வளர்க்க..

பட்டுப் பூச்சி-

கட்டுப்படியாகவில்லை,

விட்டுவிட்டேன்..

தேனீ..

சுவைதான் தேன்..சுகம்தான்!

எவன் வாங்குவது

ஏகமாய்க் கொட்டு?

விலகிவிட்டேன்..

அகப்பட்டது மின்மினி-

அது லாபம்தான்..

அரசியல் குளறுபடிகளில்

அதிகமாகும் அதன்தேவை..

‘அந்த நெருப்பு’

அணைவதில்லை…!

 

 படத்திற்கு நன்றி: http://afunnyanimal.blogspot.com/2011/10/insects-pictures-with-names-for-kids.html     

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க