வல்லமையில் புதிய பகுதி – மருத்துவ ஆலோசனை

2

அன்பு நண்பர்களே,

நம் வல்லமை இதழின் வாசகர்களாகிய தங்களின் பேராதரவுடன், நம் அடுத்தப் படியாக ‘மருத்துவ ஆலோசனை’ என்ற புதிய பகுதி துவங்குகிறோம். இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஸ்ரீதர் ரத்தினம், மனமுவந்து நம் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முன் வந்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன்.

டாக்டர் ஸ்ரீதர் ரத்தினம் FRCSEd FRCSEd(CTh),
Consultant Thoracic Surgeon, University Hospitals of Leicester, United Kingdom.


டாக்டர் ஸ்ரீதர் ரத்தினம் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் தம் இளநிலை மருத்துவம் பயின்று, பின்னர் சென்னை பொது மருத்துவமனையில் , முதுநிலை அறுவை சிகிச்சை மருத்துவம் பயின்றார்.பிரிட்டிஷ் கவுன்சில் பெல்லோஷிப் பெற்று இங்கிலாந்தில் மேல் பயிற்சிக்குச் சென்றார். எடின்பரோவில் FRCS பட்டம் பெற்று இருதய மற்றும் நெஞ்சக அறுவை சிகிச்சை பயிற்சியை மான்செஸ்டர், கிளாஸ்கோ மற்றும் பர்மின்காமில் பயின்று FRCS (CTh ) பட்டம் பெற்றார். நெஞ்சக புற்று நோய் அறுவை சிகிச்சையில் சிறப்பு பயிற்சி முடித்து தற்போது, லெஸ்டர் யுனிவர்சிட்டி மருத்துவமனையில் நெஞ்சக அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரிகிறார். தனது ஆய்வுக் கட்டுரைகளை பல மருத்துவ இதழ்களில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.. தமிழ் இலக்கியம் , மொழிபெயர்ப்பு, கல்வி மற்றும் பயிற்சியில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர்.

வாசகர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தங்களுடைய கேள்விகளை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி மருத்துவர் ஸ்ரீதர் ரத்தினம் அவர்களின் மேலான பதிலைப் பெறலாம்.

ஆசிரியர்

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “வல்லமையில் புதிய பகுதி – மருத்துவ ஆலோசனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.