ஸ்ரீதர் ரத்தினம்

டாக்டர் ஸ்ரீதர் ரத்தினம் FRCSEd FRCSEd(CTh), Consultant Thoracic Surgeon, University Hospitals of Leicester, United Kingdom. டாக்டர் ஸ்ரீதர் ரத்தினம் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் தம் இளநிலை மருத்துவம் பயின்று, பின்னர் சென்னை பொது மருத்துவமனையில் , முதுநிலை அறுவை சிகிச்சை மருத்துவம் பயின்றார்.பிரிட்டிஷ் கவுன்சில் பெல்லோஷிப் பெற்று இங்கிலாந்தில் மேல் பயிற்சிக்குச் சென்றார். எடின்பரோவில் FRCS பட்டம் பெற்று இருதய மற்றும் நெஞ்சக அறுவை சிகிச்சை பயிற்சியை மான்செஸ்டர், கிளாஸ்கோ மற்றும் பர்மின்காமில் பயின்று FRCS (CTh ) பட்டம் பெற்றார். நெஞ்சக புற்று நோய் அறுவை சிகிச்சையில் சிறப்பு பயிற்சி முடித்து தற்போது, லெஸ்டர் யுனிவர்சிட்டி மருத்துவமனையில் நெஞ்சக அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரிகிறார். தனது ஆய்வுக் கட்டுரைகளை பல மருத்துவ இதழ்களில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.. தமிழ் இலக்கியம் , மொழிபெயர்ப்பு, கல்வி மற்றும் பயிற்சியில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர். வாசகர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தங்களுடைய கேள்விகளை [email protected] என்ற முகவரிக்கு அனுப்பி மருத்துவர் ஸ்ரீதர் ரத்தினம் அவர்களின் மேலான பதிலைப் பெறலாம்.