மறவன்புலவு க.சச்சிதானந்தன்

Sachidanandan_Maravanpulavu1983 இனக் கலவரத்தைத் தொடர்ந்து கைதடி முகாமுக்கு வந்த மலையக அகதிகளுள் 101 குடும்பங்களின் மறுவாழ்வை தென்மராட்சியில் செயல்படும் அறவழிப் போராட்டக் குழு ஏற்றது.
மறவன்புலவில் 40 குடும்பங்களுக்கு புதுக் குடியேற்றத்துக்குக் காணிகளைப் பொது மக்களிடம் திரட்டிய நிதியில் வாங்கினர்.

கடந்த 25 ஆண்டுகளாக, 1983இல் வந்த மக்களுட் பலருக்குக் காணிக்கான ஆட்சி உறுதிகளை வழங்கவில்லை என்பதே தென்மராட்சியாரின் பெருந்தன்மை! ஆட்சி உறுதி கேட்டு வருபவர்களுக்கு அங்கு கண்ணிவெடி உண்டு என அச்சுறுத்தி அனுப்புவதும் தென்மராட்சியாரின் உயர்ந்த உள்ளமே.

ஏ.கே. இராமலிங்கம், வி.எசு. துரைராசா எம்.கே. சீவகதாசு ஆகிய மூவரின் பெயரில் அந்தக் காணி உறுதி. திடீரென 28.4.2010 தொடக்கம் அறவழிப் போராட்டக் குழுவின் பெயரில்!

அறவழிப் போராட்டக் குழுவில் ஊழலாம்? எதேச்சாதிகாரமாம்? கேட்பதற்கு எவரும் இல்லையாம்?

மறவன்புலவில் 1984இல் குடியேறியவர்களுள் ஒருவரின் வாக்குமூலத்தை இணைத்துள்ள காணொலியில் காண்க.

பகுதி 1

http://www.youtube.com/watch?v=_vn3yeMPVBQ

பகுதி 2

http://www.youtube.com/watch?v=f4uurJyNOVI

பார்த்த காட்சியைப் பகிர்க.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.